என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உடற்பயிற்சி
கண்களில் நீர் வருதல், கண் பார்வை மங்குதல் பிரச்சனைகளை தீர்க்கும் யோகா முத்திரை
- லிவர் நன்கு சக்தி பெற்று இயங்கினால் தான் கண் நரம்புகள், கண் நன்றாக இயங்கும்.
- பல மணி நேரம் கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்களுக்கு கண்களில் பிரச்சினை ஏற்படும்.
கண் நரம்புகள் வலி, கண்களில் நீர் வருதல், கண்களில் கட்டி வருதல், கண் பார்வை மங்குதல், இதுபோன்ற பிரச்சினைகள் வராமல் தடுக்கும் யோகா முத்திரை பயிற்சிகள் மூலம் தீர்வு உண்டு.
முதலில் நாம் வாழ்வில் சில ஒழுக்க முறைகளை கடைபிடிக்க வேண்டும். லிவர் நன்கு சக்தி பெற்று இயங்கினால் தான் கண் நரம்புகள், கண் நன்றாக இயங்கும். ஒவ்வொரு மனிதனுக்கும் இரவு 10 மணி முதல் காலை 3 மணி முறை ஆழ்ந்த தூக்கம் இருக்க வேண்டும். அப்படி தூக்கமில்லாமல் இரவு நேரம் விழித்திருப்பவர்களுக்கு லிவர் சக்தி ஓட்டம் குறைகின்றது. கண்களில் பிரச்சினைகள் ஏற்படும்.
தொடர்ந்து பல மணி நேரம் செல்போன் பார்ப்பவர்களுக்கு கண்களில் பிராண சக்தி குறைந்து பிரச்சினை ஏற்படும். பல மணி நேரம் கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்களுக்கு கண்களில் பிரச்சினை ஏற்படும். எனவே முதலில் இதை சரி செய்ய வேண்டும்.
இப்பொழுது கண்களில் ஏற்படும் பிரச்சினையை சரி செய்யும் முத்திரை பிராண முத்திரை. இதன் செயல்முறை விளக்கத்தை காண்போம்.
பிராண முத்திரையும் கண் ஒளியும்
விரிப்பில் நிமிர்ந்து அமரவும். தரையில் அமர முடியாதவர்கள் ஒரு நாற்காலியில் அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை பத்து வினாடிகள் கவனிக்கவும். பின் மோதிரவிரல், சுண்டு விரலை மடக்கி அதன் மையத்தில் கட்டை விரலை தொடவும். இரு கைகளிலும் செய்யவும். இரண்டு நிமிடங்கள் முதல் ஐந்து நிமிடங்கள் காலை, மதியம், மாலை சாப்பிடும் முன் பயிற்சி செய்யவும். கண்கள் நன்கு தெரியும், கண் வலி, கண்களில் கட்டி, நீர் வடிதல் போன்ற பிரச்சினைகள் வராமல் வாழலாம்.
உணவு
தினமும் பச்சை கேரட் இரண்டு சாப்பிடவும். மலை வாழைப்பழம் தினமும் ஒன்று சாப்பிடவும். மஞ்சள் கரிசலாங்கண்ணி கீரை உணவில் எடுத்துக் கொள்ளவும். கருப்பு திராட்சை பழம் சாப்பிடவும். கொய்யாப்பழம், மாதுளம் பழம் சாப்பிடவும். அரைக்கீரை, பொன்னாங்கண்ணி கீரை உணவில் அடிக்கடி எடுத்து கொள்ளவும்.
பசிக்கும் பொழுது பசியறிந்து உணவு உண்ணுங்கள். நன்கு மென்று கூழாக்கி சாப்பிடுங்கள். முடிந்த அளவு மாமிசம் உண்பதை தவிர்க்கவும். உடலுக்கு சரியான ஓய்வு, குறிப்பாக இரவு 10 மணி முதல் காலை 3 மணி வரை ஆழ்ந்த தூக்கம் அவசியம். இந்த பிராண முத்திரை இரவு படுக்கும் முன் இரண்டு நிமிடம் செய்துவிட்டு படுங்கள். நல்ல நித்திரை கை கூடும்
குளிக்கும் பொழுது சுத்தமான தண்ணீரை கைகளில் ஊற்றி லேசாக கண்களில் படும்படி தெளிக்கவும். கண்களை பாதுகாக்க திருமணமானவர்கள் மாதம் இருமுறை 15 நாட்களுக்கு ஒருமுறை சேரவும், உயிர் சக்தி அதிகம் விரயமானால் கண்கள் பாதிக்கும்.
பெ.கிருஷ்ணன்பாலாஜி, M.A.(Yoga)
63699 40440
pathanjaliyogam@gmail.com
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்