search icon
என் மலர்tooltip icon

    உடற்பயிற்சி

    உடலும், மனதும் ஃபிட்டா இருக்க இதை ட்ரை பண்ணுங்க...!
    X

    உடலும், மனதும் ஃபிட்டா இருக்க இதை ட்ரை பண்ணுங்க...!

    • மனமும், உடலும் அமைதி பெற ஒரு நல்ல விஷயம் உண்டு என்றால் அது யோகாசனம்.
    • மனதை ஒருமுகப்படுத்துவதே தியானம்.

    எந்திரம் போல ஓடிக்கொண்டிருக்கும் இன்றைய வாழ்க்கை முறையில் மனமும், உடலும் ஒருசேர அமைதி பெற ஒரு நல்ல விஷயம் உண்டு என்றால் அது யோகாசனம் தான். கிட்டத்தட்ட 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவில் தோன்றியது தியான முறை யோகக் கலை.

    யோகாசனம் என்பது உடற்பயிற்சி மற்றும் ஆசனங்களைக் குறிப்பது. அனுதினமும் 30 நிமிடம் முதல் 1 மணி நேரம் வரை பயிற்சி செய்தாலே வெகு விரைவிலேயே நல்ல பலனை அடைய முடியும்.

    தியானம் நம்மை நாமே உணரச் செய்கிறது. மனதை ஒருமுகப்படுத்துவதே தியானம். சாதி, மதம், இனம், மொழி, நாடு, ஆண், பெண் வயது என எந்த வேறுபாடுமின்றி மனதோடு உடலை இணைத்து பயிற்சி செய்வதே யோகா.

    தியானத்தின் மூலம் பூரண மன அமைதி பெற முடியும். இதயத்தின் படபடப்பு குறைவதோடு, நினைவாற்றலும் அதிகரிக்கும். அமைதியான, ஆழ்ந்த தூக்கத்தை ஏற்படுத்துவதால் வேலை செய்யும் ஆற்றல் அதிகரிக்கும். ரத்த அழுத்தம், ஆத்துமா போன்ற அனைத்து நோய்களையும் குணப்படுத்த முடிவதோடு ஆயுளும் கூடும். எனவே ஏற்கனவே உள்ள நோயின் உபாதைகளை படிப்படியாகக் குறைத்து, அதனை கட்டுக்குள் வைக்க உதவுவதோடு, உடல் ஆரோக்கியமும் கூடும்.

    நரம்பு, ரத்த ஓட்டம், ஜீரணம் போன்ற உடலின் மண்டலங்கள் அனைத்தும் சீரடையும் வாய்ப்பு அதிகரிக்கும். இளமையும், நோய் எதிர்ப்பு சக்தியும் கூடும்.

    உடற்பயிற்சி

    தினமும் 30 நிமிடங்களுக்கு உடற்பயிற்சி செய்தால், உடலும் மனதும் ஆரோக்கியமாக இருக்கும். ஜிம்மிற்கு சென்றுதான் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. நீச்சல், சைக்கிளிங், ஜூம்பா, கார்டியோஸ், யோகா போன்றவற்றில் உங்களுக்கு பிடித்ததை செய்யலாம்.

    தூக்கம்

    தினமும் 7 முதல் 8 மணி நேர தூக்கம் மிக மிக அவசியம். சரியாக தூங்கவில்லையென்றால், எந்த விஷயத்தில் கவனம் செலுத்த முடியாது. அன்றாட வாழ்வில் தெளிவான முடிவையும் எடுக்க முடியாது. தினமும் நன்றாக தூங்கி எழுந்துக்கொள்வதை உறுதி செய்யுங்கள்.

    டயட் உணவு:

    கார்போஹைட்ரேட்ஸ், புரதம், வைட்டமின், மினரல்ஸ் என அனைத்து வகையான சத்துக்களை கொண்ட உணவுகளை எடுத்துக்கொள்வதை உறுதி செய்து கொள்ள வேண்டும்

    சமூகத்துடன் இணைந்து இருங்கள்:

    எப்போதும் தனியாக இருக்காமல், குடும்பம், நண்பர்கள், பக்கத்து வீட்டினர் என அனைவருடன் நல்லுறவை பாராட்டுங்கள். உங்களால் முடிந்த அளவிற்கு மற்றவர்களுக்கு உதவுங்கள். இப்படி செய்தால் மனதிற்கு ஒருவிதமான நிம்மதி கிடைக்கும்.

    எந்தவொரு வேலை செய்தாலும், முழுமனதுடனும் கவனத்துடனும் இருக்க வேண்டும். ஏதோ நினைத்துக்கொண்டு எதையோ செய்யக்கூடாது.

    கவுன்ஸ்லிங்:

    உங்களால் தாங்க முடியாத பிரச்சினைகள் இருந்தால் மருத்துவர் அல்லது மனநல நிபுணரின் உதவியை பெற்றுக்கொண்டு தீர்வு காணலாம்.

    Next Story
    ×