search icon
என் மலர்tooltip icon

    உடற்பயிற்சி

    தலைவலியில் இருந்து நிவாரணம் தரும் ஊர்த்வ பிராசாரித ஏக பாதாசனம்
    X

    தலைவலியில் இருந்து நிவாரணம் தரும் ஊர்த்வ பிராசாரித ஏக பாதாசனம்

    • மனதை அமைதிப்படுத்த உதவுகிறது.
    • தொடை எலும்பை நீட்சியடைய உதவுகிறது.

    யோகாவிலுள்ள ஊர்த்வ பிராசாரித ஏக பாதாசனம் என்ற ஆசனம் கல்லீரலையும் சிறு நீரகத்தையும் நன்றாக செயல்பட வைக்கிறது. அவற்றிற்கு பலம் தந்து, ரத்த உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும். அப்படிப்பட்ட ஆசனதை எப்படி செய்வது என பார்க்கலாம்

    செய்முறை

    முதலில் தடாசனத்தில் நில்லுங்கள். கால்கள் நேராக வைக்க வேண்டும். முதுகை வளைக்காமல் நிமிர்ந்து நில்லுங்கள். இப்போது மெதுவாகஇடது காலை மேலே தூக்குங்கள். மெதுவாக வலது பாதத்தை நோக்கி உடலை வளையுங்கள். கைகளால் தரையை தொட முயலுங்கள்.

    தரையை தொட முடியாவிட்டாலும், கால்களை பிடித்துக் கொள்ளலாம். இடது காலை மேலே நீட்டியபடி, வலது பக்கம் உடலை சாய்ந்தபடி சில நிமிடங்கள் இருங்கள். பின்னர் இயல்பு நிலைக்கு வரலாம். பின்னர் இப்போது இடது காலை ஊன்றி, வலது காலை தூக்கி இதே போல் செய்யுங்கள்.

    பலன்கள் :

    மன அமைதி தரும். தொடை, இடுப்பு வலு பெறும். கல்லீரல், சிறு நீரகம் செயல்கள் தூண்டப்படும். ஒருமுகப்படுத்துதல் அதிகரிக்கும்.தலைவலி குணமாகும்.

    மனதை அமைதிப்படுத்த உதவுகிறது. தொடை எலும்பை நீட்சியடைய உதவுகிறது. தொடைகள், முழங்கால் மற்றும் கணுக்கால்களை வலுப்படுத்த உதவுகிறது. கால்கள் மற்றும் இடுப்புகளை நீட்சியடைய உதவுகிறது. தலைவலியில் இருந்து நிவாரணம் அளிக்க உதவுகிறது.

    Next Story
    ×