search icon
என் மலர்tooltip icon

    உடற்பயிற்சி

    யோகா மன அழுத்தத்தை எவ்வாறு போக்குகிறது
    X

    யோகா மன அழுத்தத்தை எவ்வாறு போக்குகிறது

    • மனஅழுத்தம் என்பது சிக்கலான சூழல்களில் உங்கள் உடலும் மனமும் எதிர்வினையாற்றும் முறையாகும்.
    • யோகாசனம் பயில்வதால் மனதில் அமைதி ஏற்படுகிறது.

    மன அழுத்தம், தன்மை, சூழல், அளவுக்கு ஏற்ப நேர்மறை மற்றும் எதிர்மறை விளைவுகளைத் தரக் கூடியது. மனிதன் தோன்றிய காலம் முதலே stress மனிதனில் இயல்பாக இருந்திருக்கும். வேட்டையாடி சமூகத்தின் சூழல் தரும் சவால்களில் மன அழுத்தம் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்திருக்கும். மனிதனின் பரிணாம வளர்ச்சியோடு மன அழுத்தத்தின் தன்மையும், விளைவுகளும் மாற்றம் அடைந்து வந்திருக்கிறது.

    ஆனால், மன அழுத்தம் பல்வேறு எதிர்மறை பாதிப்புகளை அளிக்கக் கூடியதாக, சமூகத்தில் பரவலாக பலரையும் பாதிக்கக் கூடியதான ஒன்றாக ஆனது சமீபத்திய வருடங்களில்தான். 1950 மற்றும் 1960-களின் காலக்கட்டத்தில் மன அழுத்தத்தின் காரணமாக ஏற்படும் மனச்சோர்வு என்பது அபூர்வமனதாக இருந்தது போய் 21-ம் நூற்றாண்டிலே, மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வு, உடல் பாதிப்புகளை ஏற்படுத்தும் முக்கிய நோய்களின் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறது.

    Stress என்பது சிக்கலான சூழல்களில் உங்கள் உடலும் மனமும் எதிர்வினையாற்றும் முறையாகும். ஒரு சிக்கலான சூழலில், stress hormones வெளிவருவதால் உங்களின் இருதயத் துடிப்பும் இரத்த அழுத்தமும் அதிகரிக்கிறது. இதன் விளைவாக உடலில் பிராணவாயு ஓட்டம் அதிகரிக்கிறது, உங்கள் நோய் எதிர்க்கும் திறன் தூண்டப்பட்டு உங்கள் உடலையும் மனதையும் சிக்கலை துணிவாக எதிர்கொள்ளவும் வெல்லவும் வைக்கிறது.

    யோகாசனம் நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்துகிறது. உணர்வுகளின் தாக்கத்தால் ஏற்படும் விளைவுகளைக் கட்டுக்குள் கொண்டு வருவதோடு உணர்வுகளைக் கையாளும் திறனை மேம்படுத்துகிறது.

    யோகப்பயிற்சி செய்வதால் ஒருவர் தாம் செய்யும் வேலையில் மனதை ஈடுபடுத்துவதற்கு மனதைப் பழக்க முடியும். இதை ஆங்கிலத்தில் 'being in the moment' அல்லது 'mindfulness' என்று குறிப்பிடலாம். எப்பொழுது மனம், செய்யும் வேலையில் ஈடுபடுத்தப்படுகிறதோ, அப்பொழுதே மன அழுத்தத்தை உருவாக்கும் காரணங்களிலிருந்து மனம் விலகி விடுகிறது.

    யோகாசனம் பயில்வதால் மனதில் அமைதி ஏற்படுகிறது. சிந்தனையில் தெளிவு பிறக்கிறது.

    யோகப்பயிற்சி தூக்கமின்மையைப் போக்குகிறது. உடல், மன நலத்துக்கு தூக்கத்தின் இன்றியமையாமையைப் பற்றி சொல்ல வேண்டியதே இல்லை. மன அழுத்தத்தின் விளைவுகளில் ஒன்றான தூக்கமின்மை, மன அழுத்தத்தை மேலும் அதிகப்படுத்துவதாகி விடும். தொடர்ந்து யோகாசன பயிற்சி செய்து வர தூக்கமின்மை நீங்கும் என்று பல்வேறு ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

    யோகா மற்றும் பிராணாயாமப் பயிற்சிகள் மூச்சு விடும் முறைகளை செம்மையாக்குகிறது. தன்னிச்சையாக மூச்சு விடுவதைப் போல் அல்லாமல் பிராணாயாமத்தில் கவனத்தைக் குவித்து மூச்சை நிதானமாக இழுத்து விடும் சில பிராணாயாம வகைகள் parasympathetic nervous system-ஐ தூண்டுகின்றன. Sympathetic nervous system உடலை fight or flight mode-ற்குத் தயார் செய்கிறது என்றால் parasympathetic nervous system உடல் ஓய்வு கொள்ள உதவுகிறது. இது தூண்டப் பெறுவதன் மூலம் உடலும் மனமும் அமைதி நிலையை அடைகிறது.

    பிராணாயாம முறைகளில் ஆழ்ந்த மூச்சு விடும் பொழுது சஞ்சாரி நரம்பு (vagus nerve) தூண்டப்பெறுகிறது. சஞ்சாரி நரம்பு தூண்டப்படுவதால் மனநிலை மாற்றங்கள் (mood swings) மற்றும் மன அழுத்தம் குணமடைகின்றன.

    Next Story
    ×