search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல் (Health)

    சிறுதானிய அடை செய்வது எப்படி
    X

    சிறுதானிய அடை செய்வது எப்படி

    சிறுதானிய உணவுகள் உடலுக்குச் சக்தியையும், நோயற்ற வாழ்வையும் அள்ளித் தருபவை. எளிதில் செரிமானமாகும் சிறுதானியங்களைக் கொண்டு செய்யும் அடை சாப்பிடுவதன் மூலம், உடலில் சத்துக்களைக் கூட்டலாம்.
    தேவையான பொருட்கள் :

    கம்பு - கால் கிலோ
    கேழ்வரகு - கால் கிலோ 
    சோளம் - கால் கிலோ
    கொள்ளு - கால் கிலோ
    பாசிப் பயறு - கால் கிலோ
    குதிரைவாலி - கால் கிலோ
    சாமை அரிசி - கால் கிலோ
    வரகரிசி - கால் கிலோ
    முழு கறுப்பு உளுத்தம்பருப்பு - 4 டீஸ்பூன்
    கொண்டைக்கடலை - 4 டீஸ்பூன்
    வெங்காயம் - 1
    இஞ்சி - சிறிய துண்டு
    பூண்டு - 10 பல்
    உப்பு - சுவைக்கு
    எண்ணெய் - சிறிதளவு
    முருங்கை கீரை - 2 கைப்பிடி

    செய்முறை :

    * வெங்காயம், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
     
    * கம்பு, கேழ்வரகு, சோளம், கொள்ளு, பாசிப் பயறு, குதிரைவாலி, சாமை அரிசி, வரகரிசி, முழு கறுப்பு உளுத்தம்பருப்பு, கொண்டைக்கடலை அனைத்தையும் காலை முதல் மாலை வரை தண்ணீரில் ஊறவைக்கவும்.  நன்றாக ஊறியதும், தண்ணீரை வடித்து, இரவு, ஒரு வெள்ளைத் துணியில் கட்டிவைக்கவும். காலையில் முளை கட்டி இருக்கும்.
     
    * இதனுடன், நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு, உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.

    * அரைத்த மாவை உப்பு, முருங்கை கீரை போட்டு நன்றாக கரைத்து கொள்ளவும்.

    * தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் விட்டு அடையாகத் ஊற்றி, அதன் மேல் சிறிது எண்ணெய் ஊற்றி இருபுறமும் சுட்டு எடுத்தால், சுவையான அடை தயார்.
     
    Next Story
    ×