search icon
என் மலர்tooltip icon

    சமையல்

    வாழைக்காய் சேனைக்கிழங்கு எரிசேரி
    X

    வாழைக்காய் சேனைக்கிழங்கு எரிசேரி

    • வித விதமான உணவு வகைகளையே அனைவரும் விரும்புவர்.
    • சைவ உணவில் வெரைட்டியான ரெசிபிகளை செய்யலாம்.

    தேவையான பொருட்கள்

    வாழைக்காய் - 1

    சேனைக்கிழங்கு -1/2

    மிளகு - 1/2 தேக்கரண்டி

    மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி

    மஞ்சள் தூள் -1/4 தேக்கரண்டி

    தேங்காய் துருவல் - 1 கப்

    மிளகாய் வற்றல் - 2

    சீரகம் - 1/4 தேக்கரண்டி

    கடுகு - 1/4 தேக்கரண்டி

    உளுத்தம் பருப்பு - 1/4 தேக்கரண்டி

    தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு

    கறிவேப்பிலை - சிறிதளவு

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை

    வாழைக்காய் மற்றும் சேனைக்கிழங்கை தோல் நீக்கி நன்றாக கழுவி ஒரு பாத்திரத்தில் போட்டு மஞ்சள் மற்றும் மிளகு தூள் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக விட வேண்டும்.

    முக்கால் கப் தேங்காய் துருவல், சீரகம் சேர்த்து அரைத்து கொள்ளவும்.

    நன்கு வெந்து வந்த சேனை மற்றும் வாழைக்காயில், அரைத்த விழுதுகளை சேர்த்து மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக கிளறி கொள்ளவும்.

    தேங்காய் கலவை மற்றும் காய்கள் ஒன்றோடு ஒன்று நன்கு சேருமாறு வரும் வரையில் மிதமான தீயில் வைத்து கொதிக்க விட வேண்டும்.

    பிறகு, ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அதில் மீதமுள்ள தேங்காய் துருவலை சேர்த்து கொண்டு சிவக்க வறுக்க வேண்டும்.

    வறுத்தெடுத்த இந்த தாளிப்பு கலவையை குழம்பு உடன் சேர்த்து கொள்ளவும்.

    பிறகு நன்றாக கிளறி கொண்டு அடுப்பை அணைத்து விடவும்.

    தற்போது சுவையான வாழைக்காய் சேனைக்கிழங்கு எரிசேரி தயார்.

    Next Story
    ×