search icon
என் மலர்tooltip icon

    சமையல்

    புரோட்டீன் மற்றும் நார்ச்சத்து நிறைந்த பட்டாணி கார சுண்டல்
    X

    புரோட்டீன் மற்றும் நார்ச்சத்து நிறைந்த பட்டாணி கார சுண்டல்

    • பச்சை பட்டாணியை தவறாமல் எடுத்துகொள்பவர்களுக்கு வயிற்று புற்றுநோய் வராது.
    • பட்டாணியை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு ரத்த சோகை பிரச்சனை ஏற்படாது.

    தேவையான பொருட்கள்

    பச்சை பட்டாணி - 1 கப்,

    கேரட் துருவல் - 3 டேபிள் ஸ்பூன்,

    தேங்காய்த்துருவல் - 3 டேபிள் ஸ்பூன்,

    உப்பு - தேவைக்கு.

    தாளிக்க

    எண்ணெய் - 2 டீஸ்பூன்,

    கடுகு - 1 டீஸ்பூன்,

    வெள்ளை உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்,

    பெருங்காயம் - 1/2 டீஸ்பூன்,

    வரமிளகாய் - 2, கறிவேப்பிலை - 6 இதழ்கள்.

    மேலே தூவுவதற்கு

    அரிந்த கொத்தமல்லித்தழை - 2 டேபிள் ஸ்பூன்.

    செய்முறை

    பச்சை பட்டாணியை அரை மணி நேரம் ஊற வைத்து உப்பு சேர்த்து குழையாமல் வேக விடவும்.

    வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி தாளிக்கக் கொடுத்தவற்றைத் தாளித்து வெந்த பட்டாணியைச் சேர்த்து வதக்கி கேரட் துருவல், தேங்காய்த்துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

    கொத்தமல்லித்தழை தூவி கலந்துவிடவும்.

    இப்போது சூப்பரான பட்டாணி கார சுண்டல் ரெடி.

    Next Story
    ×