search icon
என் மலர்tooltip icon

    சமையல்

    வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம் பட்டர் நாண்
    X

    வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம் பட்டர் நாண்

    • நாணை நாம் வீட்டில் செய்திருக்கமாட்டோம்.
    • இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    மைதா மாவு - 2 கப்

    ட்ரை ஈஸ்ட் - 1 டீஸ்பூன் (டிபார்ட்மென்டல் ஸ்டோர்களில் 'டிரை ஈஸ்ட்' என்று கேட்டால் பாக்கெட்டாக கிடைக்கும்)

    வெண்ணெய் - 5 டேபிள் ஸ்பூன்

    சர்க்கரை - 1 டீஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    தயிர் - 2 டேபிள் ஸ்பூன்

    தண்ணீர் - 2/3 கப்

    செய்முறை

    * முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, வெதுவெதுப்பாக சூடேற்றி, அதில் ட்ரை ஈஸ்ட் மற்றும் சர்க்கரை சேர்த்து கரைய வைக்க வேண்டும்.

    * மற்றொரு பாத்திரத்தில் மைதா மாவு, உப்பு, தயிர், பாதி வெண்ணெய் சேர்த்து கலந்து, ஈஸ்ட் மற்றும் சர்க்கரை கலந்த நீரை ஊற்றி, நன்கு மென்மையாக சப்பாத்தி மாவு போல் பிசைய வேண்டும்.

    * பிசைந்த மாவை 1-2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். இப்போது பார்த்தால், மாவு நன்கு உப்பியிருக்கும். அதனால் மீண்டும் அதனை ஒரு முறை பிசைந்து, சிறு உருண்டைகளாக உருட்டி, சப்பாத்திப் போன்று சற்று மொத்தமாக தேய்த்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

    * பின் அடுப்பை பற்ற வைத்து, தீயை குறைவில் வைத்து, அதன் மேல் தேய்த்து வைத்துள்ளதை வைக்க வேண்டும்.

    * நாணானது நன்கு உப்பி மேலே வரும் போது, அதன் மேல் வெண்ணெயை தடவி, மறுபக்கம் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்க வேண்டும். இதேப் போல் அனைத்து மாவையும் செய்ய வேண்டும்.

    * இப்போது சுவையான பட்டர் நாண் ரெடி!!!

    இதனை கிரேவியுடன் தொட்டு சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.

    குறிப்பு: இதனை தோசைக்கல் அல்லது தவாவில் சாதாரண சப்பாத்தி போன்று வெண்ணெய் மட்டும் அதிகமாக தடவி, சுட்டு எடுக்க வேண்டும்.

    Next Story
    ×