search icon
என் மலர்tooltip icon

    சமையல்

    சூப்பரான ஸ்நாக்ஸ் சிக்கன் டென்டெர்ஸ்
    X

    சூப்பரான ஸ்நாக்ஸ் சிக்கன் டென்டெர்ஸ்

    • சிக்கனில் பல்வேறு ருசியான ரெசிபிகளை செய்யலாம்.
    • குழந்தைகளுக்கு சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும்.

    தேவையான பொருட்கள்

    எலும்பில்லாத சிக்கன் - 300 கிராம்

    பிரெட் - 1 துண்டு

    இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி

    வால்நட் - 1/2 கப்

    மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி

    சீரக தூள் - 1 தேக்கரண்டி

    இட்டாலியன் சீசனிங் - 1 1/2 தேக்கரண்டி

    எலுமிச்சைபழச்சாறு - 1/2 பழத்தின் சாறு

    சில்லி பிளேக்ஸ் - 1 தேக்கரண்டி

    மிளகு தூள் - 1/4 தேக்கரண்டி

    சோளமாவு - 1/4 கப்

    மைதா - 1/4 கப்

    தண்ணீர்

    உப்பு - 1/4 தேக்கரண்டி

    எண்ணெய் - பொரிப்பதற்கு

    செய்முறை:

    * சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    * பிரெட்டை துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த சிக்கனை போட்டு அதனுடன் உப்பு, மிளகு தூள், மிளகாய் தூள், சீரக தூள், இட்டாலியன் சீசனிங், எலுமிச்சை பழச்சாறு, இஞ்சி பூண்டு விழுது, எண்ணெய் 2 டீஸ்பூன் சேர்த்து கலந்து 30 நிமிடம் ஊறவிடவும்.

    * மிக்ஸியில் நறுக்கிய பிரெட் துண்டு, வால்நட், சில்லி பிளேக்ஸ், உப்பு, மிளகு தூள், இட்டாலியன் சீசனிங் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.

    * ஒரு கிண்ணத்தில் மைதா, சோளமாவை போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்.

    * ஊற வைத்த சிக்கனை மாவில் தோய்த்து பிறகு வால்நட் பிரெட் தூளில் பிரட்டி வைத்து கொள்ளவும். இவ்வாறு அனைத்து சிக்கன் துண்டுகளையும் செய்து வைக்கவும்.

    * கடாயில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து சிக்கன் துண்டுகளை சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

    * சூப்பரான சிக்கன் டென்டெர்ஸ் தயார்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    Next Story
    ×