search icon
என் மலர்tooltip icon

    சமையல்

    வீட்டிலேயே செய்யலாம் டிராகன் சிக்கன்
    X

    வீட்டிலேயே செய்யலாம் டிராகன் சிக்கன்

    • சைனீஸ் உணவுகளில் மிகவும் பிரபலமான ஒன்று டிராகன் சிக்கன்.
    • குழந்தைகளுக்கு இந்த சிக்கன் மிகவும் பிடிக்கும்.

    தேவையான பொருட்கள் :

    எலும்பில்லாத சிக்கன் - 1 கிலோ

    இஞ்சி - சிறிய துண்டு

    பூண்டு - 10 பல்

    சில்லி ப்ளேக்ஸ் - 1 1/2 டீஸ்பூன்

    தக்காளி சாஸ் - 2 டீஸ்பூன்

    சோயா சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்

    சர்க்கரை - 1/2 டீஸ்பூன்

    கொத்தமல்லி - 1 கையளவு

    வெங்காயம் - 1

    வெங்காயத் தாள் - சிறிதளவு

    வெஜிடேபிள் ஆயில் - தேவையான அளவு

    ஊற வைப்பதற்கு…

    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்

    மிளகுத் தூள் - 1 1/2 டீஸ்பூன்

    முட்டை - 1 (வெள்ளைக்கரு மட்டும்)

    சோள மாவு - 2 டேபிள் ஸ்பூன்

    செய்முறை

    இஞ்சி, பூண்டு, வெங்காயம், வெங்காயத்தாள், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சிக்கனை நன்றாக சுத்தம் செய்து சற்று நீளமாக வெட்டி கொள்ளவும்.

    ஒரு கிண்ணத்தில் எலும்பில்லாத சிக்கனை போட்டு அதில் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து நன்றாக பிரட்டி, தனியாக 1 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

    ஊறவைத்த சிக்கனை எண்ணெயில் போட்டு, பொன்னிறமாக பொரித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    நாண்ஸ்டிக் தவாவை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் இஞ்சி, பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்கி, சில்லி சாஸ் சேர்த்து கிளறி, தக்காளி சாஸ், சோயா சாஸ் மற்றும் சர்க்கரை சேர்த்து, கலவையை கொதிக்க விட வேண்டும்.

    கலவையானது கொதிக்க ஆரம்பித்ததும், தீயை மிதமான சூட்டில் வைத்து, அதில் பொரித்து வைத்துள்ள சிக்கனை சேர்த்து, மூடி வைத்து 5 நிமிடம் வேக வைத்து இறக்க வேண்டும்.

    இப்போது அருமையான டிராகன் சிக்கன் ரெடி!!!

    இதன் மேல் கொத்தமல்லி மற்றும் வெங்காயத் தாள் தூவி அலங்கரித்து பரிமாறலாம்.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    Next Story
    ×