என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சமையல்
பத்தே நிமிடத்தில் செட்டிநாடு முட்டை பொடிமாஸ் செய்யலாம் வாங்க...
- தினமும் ஒரு முட்டை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
- முட்டையில் அதிகளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.
தேவையான பொருட்கள்:
முட்டை - 5
பச்சை மிளகாய் - 2
வெங்காயம் - 1
சீரகம் - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
* ஒரு பௌலில் முட்டைகளை உடைத்து ஊற்றி, அதில் சிறிது உப்பு சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.
* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகத்தைப் போட்டு தாளித்த, பின் கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
* பிறகு வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
* வெங்காயம் சற்று வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகுத் தூள், கரம் மசாலா சேர்த்து நன்கு வதக்கவும்.
* அடுத்து அதில் அடித்து வைத்துள்ள முட்டையை ஊற்றி, நன்கு கிளறி விட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி விடவும்.
* முட்டை நன்கு வெந்ததும், கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான செட்டிநாடு முட்டை பொடிமாஸ் தயார்.