search icon
என் மலர்tooltip icon

    சமையல்

    சப்பாத்தி மீந்து போயிடுச்சா...? சுவையான லட்டு செஞ்சு கொடுங்க...
    X

    சப்பாத்தி மீந்து போயிடுச்சா...? சுவையான லட்டு செஞ்சு கொடுங்க...

    • சப்பாத்தியை வைத்து சூப்பரா ஒரு லட்டு செய்யலாம்.
    • நட்ஸ் வகைகளையும் நெய்யில் வறுத்து சேர்த்துக் கொள்ளலாம்.

    நம்முடைய பிரதான உணவுகளாக இட்லி, தோசையுடன் சேர்ந்து சப்பாத்தியும் முதன்மை உணவாக மாறிவிட்டது. இந்த சப்பாத்தியை வைத்து சூப்பரா ஒரு லட்டு செய்ய முடியும். செய்து சாப்பிட்டு பார்க்கலாமா? வாங்க பார்ப்போம்.

    தேவையான பொருட்கள்:

    சப்பாத்தி - 6

    நெய் - 4 ஸ்பூன்,

    பால் - 4 ஸ்பூன்,

    பால் பவுடர் - 3 ஸ்பூன்,

    நாட்டுச் சர்க்கரை - கால் கப்,

    ஏலக்காய் பொடி - அரை ஸ்பூன்,

    செய்முறை:

    முதலில் சப்பாத்தியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிக்சியில் சேர்த்து பொடித்து எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு கடாயில் 2 ஸ்பூன் நெய்யை சேர்த்து அதில் பொடித்த சப்பாத்தியை சேர்த்து வதக்க வேண்டும். இதில் எடுத்து வைத்திருக்கும் பாலை தெளித்து கொஞ்சம் ஈரமாக்கிக் கொள்ள வேண்டும்.

    அடுத்ததாக பால் பவுடரையும், நாட்டுச் சர்க்கரை மற்றும் ஏலக்காய் பொடி ஆகியவற்றையும் சேர்த்து நன்கு கிளறி இறக்கி வையுங்கள். இதோடு நீங்கள் நட்ஸ் வகைகளையும் நெய்யில் வறுத்து சேர்த்துக் கொள்ளலாம். மீதமுள்ள நெய்யையும் சூடாக்கி இந்த கலவையில் சேர்த்து கை பொறுக்கும் சூட்டில் சிறு சிறு உருண்டைகளாக பிடித்தால் சுவையான சப்பாத்தி லட்டு ரெடி.

    Next Story
    ×