search icon
என் மலர்tooltip icon

    சமையல்

    இனிப்பு புளிப்பு சுவையில் கலக்கலான மாம்பழ சாம்பார்
    X

    இனிப்பு புளிப்பு சுவையில் கலக்கலான மாம்பழ சாம்பார்

    • மாம்பழத்தில் பல்வேறு சுவையான ரெசிபிகளை செய்யலாம்.
    • இன்று மாம்பழ சாம்பார் செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    தித்திப்பும் புளிப்புமான சிறிய மாம்பழங்கள் - 2,

    துவரம்பருப்பு - 3 கரண்டி,

    அரிசி மாவு - அரை டீஸ்பூன்,

    புளி - சிறு எலுமிச்சை அளவு,

    பச்சை மிளகாய் - ஒன்று,

    சாம்பார் பொடி - 2 டீஸ்பூன்,

    பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்,

    கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு,

    கொத்தமல்லி - சிறிதளவு,

    மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,

    கடுகு - கால் டீஸ்பூன்,

    காய்ந்த மிளகாய் - ஒன்று,

    உப்பு - தேவையான அளவு.

    செய்முறை:

    துவரம்பருப்பை நன்றாக கழுவி 1 மணிநேரம் ஊற வைத்த பின் வேக வைத்து மசித்து கொள்ளவும்..

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மாம்பழத்தை துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

    ப.மிளகாயை கீறிக்கொள்ளவும்.

    கடாயில் 2 கப் நீர் ஊற்றி அடுப்பில் வைத்து அதில் நறுக்கிய மாம்பழம், பச்சை மிளகாய், உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் சேர்த்து வேக விடவும்.

    பழத்துண்டுகள் வெந்ததும் புளியைக் கரைத்து விட்டு, கொதித்ததும் சாம்பார் பொடி சேர்க்கவும்.

    பச்சை வாசனை போனதும் வேக வைத்த பருப்பு சேர்த்து, அரிசி மாவை சிறிது தண்ணீரில் கரைத்து ஊற்றவும்.

    மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்து சாம்பாரில் சேர்க்கவும்.

    கடைசியாக கொத்தமல்லியைபோட்டு, சாம்பாரை கீழே இறக்கவும்.

    இப்போது சூப்பரான மாம்பழ சாம்பார் ரெடி.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    Next Story
    ×