search icon
என் மலர்tooltip icon

    சமையல்

    மரவள்ளிக்கிழங்கு முறுக்கு
    X

    மரவள்ளிக்கிழங்கு முறுக்கு

    • அருமையான தேநீர் நேர சிற்றுண்டி.
    • இந்த முறுக்கு செய்ய சில துண்டுகள் போதும்.

    அருமையான தேநீர் நேர சிற்றுண்டி. இந்த முறுக்கு செய்ய சில துண்டுகள் போதும், எனவே நீங்கள் மரவள்ளிக்கிழங்கு சமைக்கும் போது, சிறிது சேமித்து இந்த முறுக்கை முயற்சிக்கவும். மரவள்ளிக்கிழங்கை, கப்பா, குச்சி கிழங்கு என்றும் அழைக்கப்படுகிறது.

    தேவையான பொருட்கள்:

    மரவள்ளிக்கிழங்கு - 1/2 கிலோ

    பச்சரிசி மாவு - 1/4 கிலோ

    இஞ்சி - 1 அங்குல துண்டு

    பச்சை மிளகாய் - 10

    ஓமம் - 2 டீஸ்பூன்

    எண்ணெய் - தேவையான அளவு

    வெண்ணெய் - 100 கிராம்

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    இஞ்சி, பச்சை மிளகாய், ஓமம் இம்மூன்றையும் சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ள வேண்டும். மரவள்ளிக்கிழங்கை வேகவைத்து மேல் தோலை நீக்கிவிட்டு துருவிக்கொள்ள வேண்டும். ஒரு அகலமான பாத்திரத்தில் மரவள்ளிக்கிழங்கு, அரிசி மாவு, அரைத்த விழுது உப்பு, வெண்ணெய் ஆகியவற்றை சேர்த்து முறுக்கு மாவு பதத்திற்கு பிசைய வேண்டும்.

    அடுப்பில் வாணலியை வைத்து அதில் எண்ணெய்யை ஊற்றி சூடுபடுத்த வேண்டும். அதன்பிறகு முறுக்கு அச்சில் எண்ணெய் பூசி அதில் மாவைப்போட்டு முறுக்குகளாகப் பிழிந்து சிவக்கும் அளவுக்கு பொரித்து எடுக்க வேண்டும். இப்போது மொறுமொறுப்பான மரவள்ளிக்கிழங்கு முறுக்கு தயார்.

    குறிப்பு: கிழங்குகளை பயன்படுத்தி முறுக்கு தயாரிக்கும்போது. மாவு பிசைவதற்கு வெந்நீர் பயன்படுத்தலாம். இதனால் மாவு மென்மையாக இருப்பதுடன், எளிதில் பிசையவும் முடியும்.

    Next Story
    ×