search icon
என் மலர்tooltip icon

    சமையல்

    ரெஸ்டாரெண்ட் ஸ்டைல் தாய் பேசில் சில்லி பிரான்
    X

    ரெஸ்டாரெண்ட் ஸ்டைல் தாய் பேசில் சில்லி பிரான்

    • கடல் உணவுகளில் எப்போதுமே சத்துக்கள் அதிகம்.
    • சாச்சுரேட் கொழுப்பு மீன் உணவுகளில் உள்ளதால் உடல் எடையை அதிகரிக்காது.

    அனைத்து அசைவ உணவுகளைவிட, கடல் உணவுகளில் எப்போதுமே சத்துக்கள் அதிகம். காரணம், சாச்சுரேட் கொழுப்பு இந்த மீன்களில் உள்ளதால் உடல் எடையை அதிகரிக்காது.

    மீன் உணவு வகைகளை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் வயதான பெண்களுக்கு ஏற்படும் இதயநோய் அபாயம் குறைகிறது.

    நரம்புத் தளர்ச்சி நோயும் நீங்குகிறது. மீன் உணவு சாப்பிட்டால் மன அழுத்த நோய் வராமல் தடுக்கலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். இறால் மீனில் உள்ள சத்துக்கள் அபரிமிதமானவை.

    இறாலில் அயோடின் சத்து நிறைய உள்ளதால், உடலில் தைராய்டு ஹார்மோன்கள் சுரக்க பேருதவி புரிகின்றன. இந்த ஹார்மோன்கள் குழந்தை பருவத்திலும், கர்ப்பமாக இருக்கும் நேரத்திலும், மூளையின் வளர்ச்சிக்காக தேவைப்படுகிறது.

    இறாலில் புரதம், கால்சியம், பொட்டாசியம் மற்றும் பல வைட்டமின்கள் உள்ளன. பல வகை புற்று நோய்களில் இருந்து காப்பதுடன், நுரையீரல் புற்றுநோய்க்கு எதிராக போராடும்.

    தேவையான பொருட்கள்:

    இறால் - 250 கிராம்

    மைதா - 1 டேபிள் ஸ்பூன்

    முட்டை - 1

    உப்பு, எண்ணெய் - தேவைக்கு ஏற்ப

    பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1

    நசுக்கிய பூண்டு - 5 பல்

    நசுக்கிய இஞ்சி - 1 துண்டு

    பச்சை மிளகாய்- 1

    வெங்காயத்தாள் - 1 கப்

    மிளகுத்தூள் - 1/4 டீஸ்பூன்

    சில்லி சாஸ் - 2 டேபிள் ஸ்பூன்

    உப்பு, எண்ணெய், - தேவைக்கு ஏற்ப

    கார்ன்ஃப்ளார் - 1 டீஸ்பூன்

    சர்க்கரை - 1/4 டீஸ்பூன்

    டொமேட்டோ சாஸ்

    தாய் சில்லி பேஸ்ட்- ஒரு ஸ்பூன்

    துளசி இலைகள்- 10

    செய்முறை:

    ஒரு பவுலில் சுத்தம் செய்து வைத்துள்ள இறால்களை சேர்க்க வேண்டும். இதில் உப்பு, கார்ன்பிளார் மாவு, முட்டை, மிளகுத்தூள் சேர்த்து கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

    பின்னர் அடுப்பில் வாணலி வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்தது. அதில் கலந்து வைத்துள்ள இறாலை பொறித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    அதன்பிறகு மீண்டும் வாணலியை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பொடியாக நறுக்கி வைத்துள்ள பூண்டு, இஞ்சி, பச்சைமிளகாய், வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பின்னர் குடைமிளகாயை சேர்த்து வதக்க வேண்டும்.

    இந்த கலவையில் சில்லி சாஸ், தக்காளி சாஸ், தாய் சில்லி பேஸ்ட் சேர்த்து வதக்க வேண்டும். இதில் துளசி இலைகளை சேர்த்து நன்றாக வதக்கி எடுத்தால் சுவையான தாய் பேசில் சில்லி பிரான் தயார். நீங்களும் உங்கள் வீட்டில் செய்து பாருங்கள்.

    Next Story
    ×