search icon
என் மலர்tooltip icon

    சமையல்

    கொரியன் ஸ்டைல் ஸ்பைசி ரைஸ் கேக்
    X

    கொரியன் ஸ்டைல் ஸ்பைசி ரைஸ் கேக்

    • இந்த ரெசிபி இனிப்பு மற்றும் காரசாரமான சுவையில் இருக்கும்.
    • இந்த ரெசிபியை செய்வது மிகவும் சுபலம்.

    தேவையான பொருட்கள்

    அரிசி மாவு - 2 கப்

    ப.மிளகாய் - 2

    பூண்டு - 5 பல்

    வறுத்த வெள்ளை எள் - 1 டீஸ்பூன்

    இஞ்சி - சிறிய துண்டு

    குடைமிளகாய் - 1

    வெங்காயம் - 1

    கொத்தமல்லி - சிறிதளவு

    செஸ்வான் சாஸ் - 2 டீஸ்பூன்

    எள் - 2 டீஸ்பூன்

    எண்ணெய் - 1 டீஸ்பூன்

    தக்காளி கெட்சப் - 2 டீஸ்பூன்

    சோயா சாஸ் - 1 டீஸ்பூன்

    காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

    மிளகு தூள் - அரை டீஸ்பூன்

    வினிகர் - 1 டீஸ்பூன்

    சர்க்கரை 1 டீஸ்பூன்

    உப்பு - 1/2 + 1/2

    செய்முறை

    ஒரு பாத்திரத்தில் அரிசி மாவை போட்டு அதனுடன் அரை டீஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும். அடுத்து அதில் சூடான தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து கொழுக்கட்டை மாவு பதத்தில் கலக்கவும்.

    பிசைந்த மாவை மெலிதாக விரல் வடிவில் உருளையாக தேய்க்கவும். தேய்த்த மாவை 1 இஞ்ச் அளவில் வெட்டிக்கொள்ளவும். மாவு அனைத்தையும் இவ்வாறு செய்ய வேண்டும்.

    அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து தண்ணீர் ஊற்றி கொதிக்க ஆரம்பித்ததும் செய்து வைத்ததை போட்டு 10 முதல் 15 நிமிடங்கள் வேக வைக்கவும், பின்னர் அதனை குளிர்ந்த நீரில் போட்டு வைக்கவும். அப்போது தான் ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் இருக்கும்.

    வெங்காயம், கொத்தமல்லி, இஞ்சி, பூண்டு, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    குடைமிளகாயை நீளவாக்கில் மெல்லிதாக வெட்டிக்கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் எள்ளை போட்டு பொரிந்த பின்னர் பூண்டு, இஞ்சி போட்டு வதக்கவும்.

    அடுத்து வெங்காயம், ப.மிளகாய், குடைமிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.

    பின்னர் அரை கப் தண்ணீர் ஊற்றவும். அடுத்து அதில் செஸ்வான் சாஸ், தக்காளி கெட்சப், சோயா சாஸ் , காஷ்மீரி மிளகாய் தூள், மிளகு தூள், வினிகர், சர்க்கரை, உப்பு அரை டீஸ்பூன் சேர்த்து கலக்கவும். பச்சை வாசனை போனதும் அதில் வேக வைத்துள்ள ஸ்டிக்கை போட்டு 1 நிமிடம் நன்றாக கிளறவும்.

    இப்போது மசாலா நன்றாக சைஸ் ஸ்டிக்கில் சேர்ந்திருக்கும்.

    கடைசியாக மேலே கொத்தமல்லி தழை, வறுத்த எள் தூவி பரிமாறவும்.

    Next Story
    ×