search icon
என் மலர்tooltip icon

    சமையல்

    தக்காளி பூண்டு தொக்கு செய்யலாம் வாங்க...
    X

    தக்காளி பூண்டு தொக்கு செய்யலாம் வாங்க...

    • இட்லி, தோசை, சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள சூப்பராக இருக்கும்.
    • இந்த தொக்கு 2 நாட்கள் வரை கெட்டு போகாது.

    தேவையான பொருட்கள் :

    நாட்டுத் தக்காளி - கால் கிலோ (பொடியாக நறுக்கவும்)

    உரித்த மலைப்பூண்டு - 15 பற்கள்,

    இளம் இஞ்சி - 25 கிராம்,

    மிளகாய்த்தூள் - 4 டீஸ்பூன்,

    கடுகு - ஒரு டீஸ்பூன்,

    வெந்தயம் - அரை டீஸ்பூன்,

    நல்லெண்ணெய் - 100 கிராம்,

    உப்பு - தேவையான அளவு.

    செய்முறை:

    தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    இஞ்சியை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.

    அடுப்பில் கடாயை வைத்து நல்லெண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, வெந்தயம் போட்டு தாளித்த பின்னர் பூண்டு, துருவிய இஞ்சி சேர்த்து வதக்கவும்.

    இஞ்சி பூண்டு சற்று வதங்கியதும் நறுக்கிய தக்காளி, உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு கிளறவும். அடிக்கடி கிளறி விட்டுக்கொண்டே இருக்கவும். இல்லையெனில் அடி பிடித்து விடும்.

    தொக்கு திரண்டு, எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    Next Story
    ×