என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சமையல்
வறுத்து அரைத்த சிக்கன் குழம்பு
- இந்த குழம்பு சாதத்துடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.
- தோசை, சப்பாத்தி, இட்லியுடனும் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
சிக்கன் - 1 கிலோ
சின்ன வெங்காயம் - 30
தக்காளி - 4-
பச்சை மிளகாய் - 2
இஞ்சி பூண்டு விழுது - 2 டேபிள் ஸ்பூன்
உருளைக்கிழங்கு - 1
உப்பு - சுவைக்கேற்ப
கறிவேப்பிலை - சிறிது
தேங்காய் எண்ணெய் - 1/4 கப்
தாளிப்பதற்கு...
சோம்பு - 2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
பிரியாணி இலை - 1
ஏலக்காய் - 5
கிராம்பு - 5
பட்டை - 1 துண்டு
வறுத்து அரைப்பதற்கு...
வரமிளகாய் - 10-12
மல்லி விதைகள் - 4 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 2 டீஸ்பூன்
மிளகு - 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கையளவு
அரைப்பதற்கு...
துருவிய தேங்காய் - 1 கப்
பொட்டுக்கடலை - 1 டேபிள் ஸ்பூன்
சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* ப.மிளகாயை நீளவாக்கில் வெட்டிகொள்ளவும்.
* உருளைக்கிழங்கை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 'வறுத்து அரைப்பதற்கு' கொடுத்துள்ள பொருட்களை போட்டு பொன்னிறமாக வறுத்து இறக்கி, மிக்சர் ஜாரில் போட்டு, நீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து தனியாக ஒரு பௌலில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அதே மிக்சர் ஜாரில் தேங்காய், சோம்பு, பொட்டுக்கடலை சேர்த்து, சிறிது நீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* ஒரு அகலமான வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்த பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாவ வதக்கி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பிறகு அதில் தக்காளி மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் சிக்கனை கழுவிப் போட்டு, 5-6 நிமிடம் நன்கு சிக்கனை வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் வறுத்து அரைத்த மசாலா மற்றும் நீரை ஊற்றி கிளறி, அதை குக்கரில் ஊற்றி அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதில் உருளைக்கிழங்குகளை போட்டு, பின் அரைத்த தேங்காய் மசாலா சேர்த்து அடுப்பில் வைத்து, 10-15 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான வறுத்தரைச்ச சிக்கன் குழம்பு தயார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்