search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    ரைஸ் ஸ்டிக்ஸ் வெஜிடபிள் உப்புமா
    X

    ரைஸ் ஸ்டிக்ஸ் வெஜிடபிள் உப்புமா

    ரைஸ் ஸ்டிக்ஸ் பலசரக்கு கடைகளில் கிடைக்கும். இன்று இந்த ரைஸ் ஸ்டிக்கை வைத்து சூப்பரான வெஜிடபிள் உப்புமா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    Rice sticks - ஒரு பாக்கெட்டில் பாதி
    சின்ன வெங்காயம் - 10
    பீன்ஸ் - 10,
    கேரட் - 1 சிறியது (நான் சேர்த்தது)
    பச்சை மிளகாய் - 1
    இஞ்சி - சிறு துண்டு
    உப்பு - தேவைக்கு
    எலுமிச்சை சாறு - சிறிது
    கொத்துமல்லி இலை - சிறிதளவு

    தாளிக்க :

    எண்ணெய்
    கடுகு
    உளுந்து
    கடலைப் பருப்பு
    முந்திரி
    பெருங்காயம்
    கறிவேப்பிலை



    செய்முறை :

    வெங்காயம், கொத்தமல்லி, பச்சைமிளகாய், இஞ்சி, பீன்ஸ், கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    Rice sticks ஐ மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி, சிறிது உப்பு சேர்த்து 20 நிமிடம் வைக்கவும். அப்போதுதான் ஊறி சாஃப்டாக இருக்கும். பிறகு நீரை வடித்துவிட்டு ஒரு இட்லிப் பாத்திரத்தில் இட்லி அவிப்பது போல் அவிக்கவும். சீக்கிரமே வெந்துவிடும். வெந்ததும் எடுத்து உதிர்த்துவிடவும். அல்லது ஊறிய Rice sticks ஐ அப்படியே கூட‌ சேர்க்கலாம்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும்.

    அடுத்து கேரட், பீன்ஸ் சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் சிறிது உப்பு சேர்த்து காய்கள் வேக சிறிது தண்ணீர் தெளித்து மூடி வைத்து வேக விடவும்.

    காய்கள் வெந்ததும் உதிர்த்து வைத்துள்ள Rice sticks ஐப் போட்டு forks ஐப் பயன்படுத்திக் கிளறி விடவும். எல்லாம் கலந்து ரைஸ் ஸ்டிக்ஸ் நன்றாக சூடேறியதும் எலுமிச்சை சாறு விட்டு, கொத்துமல்லி தூவி இறக்கவும்.

    சூப்பரான ரைஸ் ஸ்டிக்ஸ் வெஜிடபிள் உப்புமா ரெடி.

    தேங்காய் சட்னி, வெஜ் - நான்வெஜ் குருமா தொட்டு சாப்பிட சூப்பராக இருக்கும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×