search icon
என் மலர்tooltip icon

    அழகுக் குறிப்புகள்

    கூந்தல் நலன் காக்கும் எண்ணெய்கள்
    X

    கூந்தல் நலன் காக்கும் எண்ணெய்கள்

    • ஒவ்வொரு எண்ணெய்யும் ஒவ்வொருவிதமான பண்புகளை கொண்டிருக்கின்றன.
    • உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது.

    பெண்கள் சரும பராமரிப்புக்கு அடுத்தபடியாக கூந்தல் நலனை பேணுவதற்குத்தான் முன்னுரிமை கொடுப்பார்கள். கூந்தல் முடி நீளமாக வளர வேண்டும் என்பதுதான் அவர்களின் விருப்பமாக இருக்கும். ஆனால் அதற்கு மாறாக முடி உதிர்வு பிரச்சினையை பலரும் எதிர்கொள்கிறார்கள்.

    இந்த பிரச்சனைகளுக்கு எண்ணெய்கள் தீர்வாக அமைகின்றன. ஒவ்வொரு எண்ணெய்யும் ஒவ்வொருவிதமான பண்புகளை கொண்டிருக்கின்றன. அவற்றின் பயன்பாடு பற்றி பார்ப்போம்.

    தேங்காய் எண்ணெய்

    தேங்காய் எண்ணெய்யில் கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. அவை உச்சந்தலைக்கு ஊட்டமளிக்கக்கூடியவை. மயிர்க்கால்களையும் பலப்படுத்தும். முடி வளர்ச்சியையும் ஊக்குவிக்கும். கூந்தலுக்கு மிருது தன்மையையும், பொலிவையும் ஏற்படுத்திக்கொடுக்கும். பொடுகு பிரச்சினையையும் போக்கும்.

    ஆமணக்கு எண்ணெய்

    ரிசினோலிக் அமிலம் ஆமணக்கு எண்ணெய்யில் அதிகம் உள்ளது. அது உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. முடி மீண்டும் வளர ஊக்குவிக்கிறது.

    ஆலிவ் எண்ணெய்

    ஆலிவ் எண்ணெய்யில் ஆன்டி ஆக்சிடென்டுகள் மற்றும் வைட்டமின் ஈ நிரம்பியுள்ளன. அவை உச்சந்தலையில் ஈரப்பதத்தை தக்கவைக்க துணை புரியும். முடி உதிர்வதையும் குறைக்கும்.

    மிளகுக்கீரை எண்ணெய்

    உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தைத் தூண்டுவதற்கு மிளகுக்கீரை எண்ணெய் உதவும். முடி வளர்ச்சியையும் ஊக்குவிக்கும். முடி உதிர்வதை தடுக்கும்.

    ஜொஜோபா எண்ணெய்

    உச்சந்தலையின் நலன் காக்க இந்த எண்ணெய் உதவும். ஈரப்பதத்தை தக்க வைப்பதில் இதன் பங்களிப்பு முக்கியமானது. முடி வளர்ச்சிக்கும் பயன்படும்.

    நெல்லிக்காய் எண்ணெய்

    வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்சிடென்டுகள் நிறைந்த நெல்லிக்காய் எண்ணெய் முடியின் வேர்களை பலப்படுத்தும். முடி வளர்ச்சிக்கும் உதவிடும்.

    டீ ட்ரீ எண்ணெய்

    இந்த எண்ணெய் பூஞ்சை மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை கொண்டது. உச்சந்தலை ஆரோக்கியத்தை காக்கும். முடி வளர்ச்சியையும் ஊக்குவிக்கும்.

    லாவெண்டர் எண்ணெய்

    இது அமைதியான பண்புகளுக்கு பெயர் பெற்றது. அதாவது மன அழுத்தத்தை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. முடி வளர்ச்சியை அதிகரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

    ரோஸ்மேரி எண்ணெய்

    இந்த எண்ணெய்யில் இருக்கும் கார்னோசிக் அமிலம் உச்சந்தலையை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். முன்கூட்டியே முடி நரைப்பதையும், முடிஉதிர்வதையும் தடுக்கும். முடி வளர்ச்சியையும் ஊக்குவிக்கும்.

    ஆர்கன் எண்ணெய்

    மொரோக்கோ நாட்டில் வளரும் ஆர்கன் மரத்தின் பழங்களில் இருந்து ஆர்கன் எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. இதனை திரவ தங்கம் என்றும் அழைக்கிறார்கள். இந்த எண்ணெய்யில் இருக்கும் அமிலங்கள் தலைமுடியை வறட்சியில் இருந்து காக்கும். முடிக்கு மென்மைத்தன்மையை அதிகரிக்கச் செய்யும். கூந்தலின் நுனிப்பகுதியில் பிளவு ஏற்படுவதையும் தடுக்கும். முடி வளர்ச்சியையும் ஊக்குவிக்கும்.

    Next Story
    ×