என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
அழகுக் குறிப்புகள்
பெண்கள் விரும்பும் வெள்ளிப்பொருள்கள்...
- கோயில்களில் கடவுளுக்கு படைக்கும் நகைகளில் வெள்ளியும் ஒன்று.
- பெண்கள் அணியும் கொலுசு, மெட்டி, மோதிரம், காதணி அனைத்திலும் வெள்ளி முக்கிய பங்கு வைக்கிறது.
வெள்ளி என்பது ஒரு வகை உலோகம். இது குளிர்ச்சியான உலோகம். நன்கு சுத்திகரிக்கப்பட்ட பின்பு தான் வெள்ளி தேவையான பொருள்களாக உருமாறுகிறது.
பண்டைய காலத்தில் குழந்தைகளுக்கு அதிகமாக உபயோகிக்கும் உலோகம் வெள்ளி. வெள்ளியில் கிண்ணம் ஸ்பூன் டம்ளர், ஸ்ட்ரா டம்ளர் கொலுசு, காப்பு, காதணிகள், கழுத்தில் அணியும் மாலைகள், பூஜை பொருட்கள், தட்டு என்று பலவித பொருட்கள் தயாரிக்கப்படுகிறது.
பிறந்த குழந்தைகளுக்கு வெள்ளி கிண்ணம் ஸ்பூன் தட்டு என்று பயன்படுத்துகிறார்கள். இது குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது. பிறந்த குழந்தைகளுக்கு வெள்ளியில் கால் தண்டை அணிவதும் மிகச் சிறப்பான ஒன்றாகும். வெள்ளி உலோகம் நச்சு தன்மையை அழித்து நன்மை அளிக்கிறது. வெள்ளி தூய்மையான உலோகம் என்று கருதப்படுகிறது. வெள்ளியில் உள்ள தாதுக்கள் பருவ மாற்றத்திற்கு ஏற்ப வரும் நோய்களுக்கு எதிர்ப்பு சக்தியை தருகிறது.
வெள்ளியில் கூஜா, செம்பு, பெரிய தட்டுக்கள், குங்குமச்சிமிழ், வெள்ளி விளக்கு என திருமணங்களில் பெண் வீட்டு சீர் வரிசையில் வெள்ளி பாத்திரங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. திருமணப் பெண்ணுக்கு வெள்ளியில் மெட்டி அணிவதும் திருமணங்களில் மிக முக்கியமான விசேஷம் ஆகும்.
பூஜை பொருட்கள் வெள்ளியில் சூட தட்டு, சாம்பிராணி தட்டு, வெள்ளி விளக்கு, தட்டு, சந்தனக் கும்பா, குங்குமச்சிமிழ் என பல வகை உண்டு. திருமண வைபோகங்களில் வெள்ளியில் பரிசளிப்பது ஆதிகாலம் முதலே வழக்கமான ஒன்றாகும்.
சில வீடுகளில் பூஜை அறையில் வெள்ளியிலான விநாயகர் சிலை, அன்னபூரணி சிலை போன்ற பல கடவுளின் உருவச் சிலைகள் இருக்கும். வெள்ளி முலாம் பூசப்பட்ட சிலைகளும் உருவப் படங்களும் பிரசித்தி பெற்றவையாகும்.
கோயில்களில் கடவுளுக்கு படைக்கும் நகைகளில் வெள்ளியும் ஒன்று. வெள்ளி மூக்குத்தி, சூலாயுதம், வேல் என வெள்ளி அலங்கார பொருட்கள் என பலவகையான வெள்ளிப் பொருள்கள் கோயில்களில் பயன்படுத்தப்படுகிறது. கோயில் மற்றும் கோயிலில் நடக்கும் பூசையில் வெள்ளியின் பங்களிப்பு அதிகமாக உள்ளது. எல்லா விசேஷங்களிலும் வெள்ளி நாணயம் பரிசளிக்கும் பொருளாகவும் பயன்படுகிறது. பெண்களுக்கு நிகராக ஆண்களும் இன்றைய காலங்களில் கைகளில் வெள்ளியில் காப்பு போன்று அணிகிறார்கள்.
மற்ற உலோகங்களை ஒப்பிடும் பொழுது வெள்ளி மலிவான விலையில் கிடைக்கிறது. ஆதலால் வெள்ளி அதிக அளவில் பயன்பாட்டில் உள்ளது.வெள்ளி வெப்பத்தை தணிக்கும் உலோகம் என்பதால் அன்றாட வாழ்க்கையில் அதிக பயன்பாட்டில் உள்ளது. பெண்கள் அணியும் கொலுசு, மெட்டி, மோதிரம், காதணி கழுத்து மாலை அனைத்திலும் வெள்ளி முக்கிய பங்கு வைக்கிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்