search icon
என் மலர்tooltip icon

    அழகுக் குறிப்புகள்

    சருமத்தை அழகாக்க வினிகரை எப்படி பயன்படுத்தலாம்...
    X

    சருமத்தை அழகாக்க வினிகரை எப்படி பயன்படுத்தலாம்...

    • சருமத்திற்கு இயற்கைப் பொருட்களை பின்பற்றுவதே மிகவும் சிறந்தது.
    • வினிகர் சமைப்பதற்கு மட்டுமின்றி, அழகைப் பராமரிக்கவும் உதவுகிறது.

    சருமத்தை அழகாக பராமரிப்பதற்கு நிறைய பொருட்கள் உள்ளன. அவற்றில் வினிகரும் ஒன்று. வினிகர் சமைப்பதற்கு மட்டுமின்றி, அழகைப் பராமரிக்க உதவும் பொருட்களுள் ஒன்றாகவும் உள்ளது. வினிரை சருமத்திற்கு பயன்படுத்தினால், முகம் பொலிவாததோடு, பருக்கள், வறட்சி, கரும்புள்ளிகள் போன்றவற்றை போக்கிவிடும்.

    எனவே சருமத்தை அழகாக்க வேண்டும் என்று முயற்சிப்பவர்கள், வினிகரைப் பயன்படுத்தினால், நல்ல பலன் கிடைக்கும். இரசாயனப் பொருட்கள் கலந்த க்ரீம்கள் பயன்படுத்துவதற்கு பதிலாக, இயற்கைப் பொருட்களை பின்பற்றுவதே மிகவும் சிறந்தது.

    ஒரு சிறிய கப் வினிகரை குளிக்கும் நீரில் கலந்து குளித்தால், உடல் துர்நாற்றமானது நீங்கும்.

    ஒரு சிறிய டேபிள் ஸ்பூன் வினிகரை, முகம் கழுவும் போதோ அல்லது குளிக்கும் போதோ நீரில் கலந்து செய்தால், சருமம் நன்கு மென்மையாவதோடு, பொலிவோடும் இருக்கும்.

    எண்ணெய் பசை சருமத்தினருக்கு, சருமத்தில் அதிகப்படியான எண்ணெயானது இருக்கும். எனவே ஒரு கப் நீரில் பாதிக்கு பாதி வினிகர் மற்றும் தண்ணீரை கலந்து கழுவி வந்தால், சருமத்திலிருந்து வெளிவரும் அதிகப்படியான எண்ணெய் பசையானது நீங்கி, முகம் அழகாக அளவான எண்ணெயோடு வறட்சியின்றி காணப்படும்.

    அதிகப்படியான வெயிலால் சருமத்தில் ஏற்படும் வேனிற்கட்டியை போக்குவதில் வினிகர் உதவியாக உள்ளது. மேலும் வினிகர் சருமத்தில் பிஎச் தன்மையை சீராக தக்க வைத்து, சருமத்தை குளிர்ச்சியுடன் வைக்கிறது.

    குதிகால் வெடிப்பால் அவஸ்தைப்படுபவர்கள், மெருகேற்ற உதவும் கல் கொண்டு, பாதங்களை தேய்த்து, பின் வினிகர் நீரில் பாதங்களை ஊற வைக்க வேண்டும். இதனால் பாத வறட்சி நீங்கி, குதிகால் வெடிப்பும் போய்விடும்.

    கைகள் அழுக்கோடு, மென்மையிழந்து இருக்கிறதா? அப்படியெனில் கைகளில் உள்ள கிருமிகளை போக்குவதற்கு, வினிகர் கலந்த நீரில், கைகளை கழுவ வேண்டும். இதனால் கிருமிகள் நீங்குவது மட்டுமின்றி, கைகளும் மென்மையாகும்.

    3 ஸ்ட்ராபெர்ரியை மசித்து, அதில் சிறிது ஆப்பிள் சீடர் வினிகரை ஊற்றி கலந்து, 2 மணிநேரம் ஊற வைத்து, இரவில் தூங்கும் முன் கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி ஊற வைத்து, காலையில் கழுவினால், கரும்புள்ளிகள் அறவே போய்விடும்.

    முதுமை தோற்றத்தை வெளிப்படுத்தும் புள்ளிகளை போக்குவதற்கு, வெங்காயச் சாற்றில் சிறிது வினிகர் சேர்த்து கலந்து தடவி, ஊற வைத்து கழுவ வேண்டும். இந்த முறையை தொடர்ந்து செய்தால், அவற்றை முற்றிலும் போக்கிவிடுவதோடு, வராமல் தடுக்கலாம்.

    Next Story
    ×