search icon
என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    • பெண்கள் எதிர்காலத்தில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம்.
    • மூன்று ஆண்டுகள் கழித்து இயற்கையான கர்ப்பத்திற்கு திட்டமிடலாம்.

    தாய் மற்றும் குழந்தையின் உயிரை காப்பாற்ற மருத்துவர்கள் சிசேரியன் செய்து குழந்தையை வெளியே எடுக்கிறார்கள்.

    நிபுணர்களின் கருத்துபடி சிசேரியன் வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையில் இல்லை. ஆனால் பெண்களுக்கு 3 சிசேரியனுக்கு மேல் இருக்கக்கூடாது. இது பெண்ணின் ஆரோக்கியத்துக்கு தீங்கு விளைவிக்கும்.

    இருந்த போதிலும் சிசேரியனில் சில சிக்கல்கள் உள்ளன. பெண்கள் எதிர்காலத்தில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடையலாம் மற்றும் நோயில் இருந்து மீள்வதற்கும் நேரம் எடுக்கும்.


    ஆனாலும் இது ஒவ்வொரு பெண்ணின் உடலுடன் ஒப்பிடும் போது வேறுபட்டது. ஒவ்வொரு வகை சிகிச்சைக்கும் உடல் வித்தியாசமாக செயல்படும். சில பெண்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட சிசேரியன்கள் ஆபத்தானதாக இருக்கலாம். சில பெண்களுக்கு 3 சிசேரியன் செய்தாலும் ஆரோக்கியமாக இருப்பார்கள்.

    பொதுவாக இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் கழித்து இயற்கையான கர்ப்பத்திற்கு திட்டமிடலாம் என்று டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர். இது குழந்தை மற்றும் தாயின் மனநிலையை மனதில் வைத்து கூறப்படுகிறது.

    இருப்பினும் இயற்கையான கர்ப்பத்திற்கு பிறகு சில பெண்கள் 6 மாதங்களில் இரண்டாவது முறையாக கருத்தரித்து ஆரோக்கியமாக குழந்தையை பெற்றெடுப்பவர்களும் இருக்கிறார்கள்.


    ஆனால் சிசேரியன் செய்த ஒரு பெண் முக்கியமாக உடலை நன்கு கவனித்துக்கொள்ள வேண்டும். நிபுணர்களின் கூற்றுபடி சிசேரியனுக்கு பிறகு 18 முதல் 24 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும். அதற்கு பிறகு இரண்டாவது முறை கருத்தரிப்பது பற்றி சிந்திக்கலாம். 

    • பெண்களுக்கு அதிகளவிலான பாதிப்புகளைக் கொடுக்கின்றன.
    • கர்ப்பப்பை புற்றுநோய், பலவீனமான கரு நீரிழிவுக்கு காரணமாக இருக்கிறது.

    இந்தியாவில் 64 சதவீத பெண்கள் சானிட்டரி நாப்கின்களை பயன்படுத்துவதாக புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. ஒரு மாதத்திற்கு 1 பில்லியன் நாப்கின்களும், ஆண்டுக்கு சராசரி 12.3 பில்லியன் நாப்கின்களும் பயன்படுத்தப்படுகின்றன.


    பிளாஸ்டிக்கை அடிப்படையாகக் கொண்ட பல்வேறு வேதிப்பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்படும் தற்கால சானிட்டரி நாப்கின்கள் பெண்களுக்கு அதிகளவிலான பாதிப்புகளைக் கொடுக்கின்றன.

    மாதவிடாய் சமயங்களில் பயன்படுத்தப்படும் நாப்கின்கள் மரக்கூழ், பிளாஸ்டிக் மற்றும் பாலிஎத்திலீன் கொண்டுதான் தயாரிக்கப்படுகின்றன. அதிலும் குறிப்பாக அதிக ஈரத்தை உறிஞ்சும் தன்மை கொண்டதால் பாலிமர் ஜெல் எனப்படும் ரசாயனம் சேர்க்கப்படுகிறது. ஆனால் இது இயற்கைக்கு மட்டுமல்லாது உடல்நலத்திற்கும் கேடு விளைவிக்கக் கூடியது.

    எனவே 1980-களிலேயே SAP என்ற ரசாயனத்தை, அமெரிக்கா தடை செய்துள்ளது. ஆனால் தற்போது பெண்கள் பயன்படுத்தும் நாப்கின்களில் இதே ரசாயனம் சேர்க்கப்படுவதாக நிறுவன அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த ரசாயனம் கர்ப்பப்பை புற்றுநோய், பலவீனமான கரு உருவாவது மற்றும் நீரிழிவுக்கு காரணமாக இருக்கிறது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

    சானிட்டரி நாப்கின்களினால் ஏற்படும் பாதிப்புகள்:

    * பேடுகளில் உறிஞ்சி வைக்கப்படும் ரத்தமானது நுண்ணுயிரிகள் வளர்வதற்கு ஏற்றதாக உள்ளதால் பாக்டீரியா தொற்றும், பூஞ்சைத் தொற்றும் ஏற்படும் வாய்ப்புகள் மிக மிக அதிகம். எனவே 4 மணிநேரத்திற்கு ஒருமுறை கண்டிப்பாக பேடுகளை மாற்ற வேண்டும்.

    நாப்கின்களினால் தொற்று ஏற்பட்டு பிறப்புறுப்பு பகுதியில் எரிச்சல், அரிப்பு, சிறுநீர் வெளியேறும் போது வலி போன்றவை இருந்தால் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகளை பாதிக்கப்பட்ட இடங்களில் தடவலாம்.


    நாப்கின்களை எப்படி பயன்படுத்த வேண்டும்:

    மாதவிடாய் நாட்களில் 6 மணிநேரத்துக்கு ஒருமுறை மாற்ற வேண்டும். ரத்தப்போக்கு அதிகம் உள்ள நாட்களில் 3 அல்லது 4 மணிநேரத்துக்கு ஒரு முறை மாற்ற வேண்டும்.

    துணியாக இருந்தால் சுத்தமான பருத்தியினால் ஆனதாக இருக்க வேண்டும். உபயோகித்த துணிகளை சோப்பு போட்டு சுடுநீரில் அலசி வெயிலில் காய வைக்க வேண்டும். பிறகு மடித்து ஒரு பையில் வைத்து காற்றோட்டமான இடத்தில் பத்திரப்படுத்துங்கள்.

    காயவைத்த நாப்கின் துணிகளை அயர்ன் செய்வதும் கிருமிகள் பரவுவதை தடுக்கும். பாதுகாக்கப்பட்ட துணியாக இருந்தாலும் 2 அல்லது 3 மாதத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.


    நாப்கின்களை எப்படி அப்புறப்படுத்த வேண்டும்:

    நாப்கின்களை பொறுத்தவரை அதனை பயன்படுத்துபவர்களை விட மற்றவர்களுக்கு ஏற்படுத்தும் விளைவுகள் தான் அதிகம்.

    ஒரு பெண் உபயோகப்படுத்தி தூக்கி எறியும் நாப்கின் கழிவுகள் சராசரியாக ஒரு வருடத்துக்கு 150 கிலோ கிராம் என்கிறது ஆய்வு. இதில் உள்ள பிளாஸ்டி அடுக்குகள் மண்ணில் இருந்து முற்றிலுமாக மறைய சுமார் 800 வருடங்கள் ஆகலாம் என்று கணக்கிட்டுள்ளனர்.

    நாப்கின்களை செய்தித்தாள்களில் சுற்றி குப்பையில் எறியும் போது அதை குப்பையில் இருந்து பிரித்தெடுக்கும் சுகாதார ஊழியர்களுக்கு ரத்தத்தினால் ஏற்படக்கூடிய தொற்றுக்கான `ஹெப்பட்டைட்டிஸ் பி', `ஹெப்பட்டைட்டிஸ் சி' போன்ற பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே உபயோகித்த நாப்கின்களை நன்கு அலசி பின்னர் பேப்பரில் சுற்றி வீசுவது நல்லது.

    முடிந்த அளவுக்கு நாப்கின்களை `இன்சினிரேஷன்' என்று சொல்லக்கூடிய முறையில் எரித்து சாம்பலாக்கி அப்புறப்படுத்துவது சுற்றுச்சூழல் பாதிப்பை குறைக்கும்.

    • பருத்தியால் செய்த உள்ளாடைகளை வாங்கி அணியுங்கள்.
    • மாய்ஸ்சரைசிங் க்லென்சிங் லோஷனை பயன்படுத்துங்கள்.

    கர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்கள், பல விதமான உடல் மற்றும் மன ரீதியான மாற்றங்களை சந்திப்பார்கள். கர்ப்பத்தோடு சம்பந்தப்பட்டுள்ள ஹார்மோன்களின் ஏற்ற இறக்கங்களின் காரணமாகவே இவ்வகை மாற்றங்கள் ஏற்படுகிறது.

    கர்ப்ப காலத்தில் நீங்கள் ஆரோக்கியமாகவும் சந்தோஷமாகவும் இருந்திட இவ்வகை ஹார்மோன் மாற்றங்கள் அவசியமான ஒன்றே. ஆனால் அதே நேரம், கர்ப்ப காலத்தில் சில கஷ்டங்களையும் நீங்கள் அனுபவித்து தான் ஆக வேண்டும்.

    குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதற்கு உங்கள் உடல் தயாராகிக் கொண்டிருக்கும். இதற்கு சம்பந்தமான உடல் மற்றும் ஹார்மோன் மாற்றங்கள், மார்பக காம்புகளிலும் மாற்றங்களை ஏற்படுத்தும்.

    மார்பக காம்புகளின் அளவு பெரிதாவது அல்லது மிகவும் மென்மையாக மாறுவது போன்றவைகளே மார்பக காம்புகளில் ஏற்படும் முக்கிய மாற்றங்கள்.

    பிரசவ நேரம் நெருங்கும் வேளையில், உங்கள் மார்பக காம்புகள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியின் உருவத்திலும் அளவிலும் மாற்றங்கள் ஏற்படும்.

    சில நேரம் காம்பிலிருந்து கடும்புப்பால் எனப்படும் மஞ்சள் நிற திரவம் வெளியேறும். உங்கள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டிய நேரம் நெருங்குவதற்கான அறிகுறிகளே இவைகள்.

    கர்ப்ப காலத்தில் கஷ்டப்படாமல் இருக்க மார்பக காம்புகளை பராமரிக்க வேண்டியது மிகவும் முக்கியமானதாகும்.

    கர்ப்பமாக இருக்கும் போது மார்பக காம்புகளை எப்படி பராமரிக்க வேண்டும் என்ற கவலை தேவையில்லை.

    கர்ப்பமாக இருக்கும் போது மார்பக காம்புகளை பரமாரிக்க சில டிப்ஸ்களை பின்பற்றினாலே போதுமானது. அவ்வாறான சில ஐடியாக்களை பற்றி இப்போது பார்க்கலாமா?


    வசதியான உள்ளாடைகளை அணியுங்கள். கர்ப்ப காலத்தில் சரியான உள்ளாடை தேர்வு செய்வது மிகவும் அவசியம். அதற்கு காரணம் இந்நேரத்தில் உங்கள் மார்பகங்களின் அளவு பெரிதாகியிருக்கும்.

    மென்மையான பருத்தியால் செய்த உள்ளாடைகளை வாங்கி அணியுங்கள். இதனால் மார்பக காம்புகளில் ஏற்படும் வலியை தணிக்கும்.

    கர்ப்ப காலத்தில் மார்பக காம்புகளை பராமரிக்கும் வேளையில் பேடெட் பிராவை தவிர்க்கவும். ஆலிவ் எண்ணெய் பயன்படுத்துங்கள் ஆலிவ் எண்ணெய்யை கொண்டு சிறிது நேரம் மசாஜ் செய்வது கர்ப்ப காலத்தில் மார்பக காம்புகள் பராமரிப்புக்கு சிறந்த ஐடியாவாகும். இப்படி செய்வதால் சருமத்தில் ஈரப்பதம் நீடித்து நிற்க உதவும்.

    மேலும் கர்ப்ப காலத்தில் ஏற்படும் பொதுவான பிரச்சனையான வறண்ட சருமத்தால் உண்டாகும் பல பிரச்சனைகளையும் அது தடுக்கும். காம்புகளின் மீது சோப்பு கூடாது மார்பக காம்புகளின் மீது சோப் பயன்படுத்தாதீர்கள். அப்படி செய்தால் காம்புகள் வறண்டு போய் விடும். அளவுக்கு அதிகமாக வறண்டு போகும் போது வெடிப்புகள் உண்டாகி விடும்.


    அதனால் வாசனையுள்ள சோப்புக்கு பதிலாக நல்லொதொரு மாய்ஸ்சரைசிங் க்லென்சிங் லோஷனை பயன்படுத்துங்கள். கர்ப்ப காலத்தில் மார்பக காம்புகளை பரமாரிக்கும் போது நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய முக்கியமான டிப்ஸ்....

    மாய்ஸ்சுரைசிங் க்ரீம் மார்பக காம்புகள் வறட்சியாக இருந்தால் நல்லதொரு மாய்ஸ்சுரைசிங் க்ரீம் அல்லது லோஷனை பயன்படுத்துங்கள். இதனால் உங்கள் மார்பக காம்புகள் ஈரப்பதத்துடன் இருக்கும்.

    இவ்வகையான கிரீம்கள் மற்றும் லோஷன்கள், முக்கியமாக கர்ப்ப காலத்தில் மார்பக காம்புகளுக்கு தடவுவதற்காகவே சந்தையில் விற்கப்படுகிறது

    காம்புகளை பாதுகாக்கும் பொருட்கள் மார்பக காம்புகளை பாதுகாக்கும் பொருட்கள் சந்தையில் கிடைக்கிறது. இது காம்புகளில் ஏற்படும் வலியை நீக்கும். கர்ப்ப காலத்தில் மார்பக காம்புகளில் வலியெடுக்கும் பெண்களுக்கு இது பெரிதும் உதவியாக விளங்கும். 

    • குறைவாகப் பேசுபவர்கள் படைப்பாற்றல் மிக்கவர்கள்.
    • வார்த்தைகள் அதிக சக்தி வாய்ந்தவை.

    மனிதர்களின் மனநிலை மற்றும் குணாதிசியங்கள் ஒரே மாதிரியானது அல்ல. குறிப்பாக பேச்சு விஷயத்தில், சிலர் ரெயில் பயணத்தில் பேசி, பேசியே பிரெண்ட்ஸ் பிடித்து விடுவார்கள். சிலரோ பல ஆண்டுகளாக வேலை பார்க்கும் அலுவலகங்களில் பக்கத்து இருக்கையில் இருப்பவரோடு கூட அளவாகத் தான் பேசுவார்கள்.


    அப்படி ஒரு சில வார்த்தைகள் மட்டுமே பேசுபவர்களைப் பார்த்து "உம்மணா மூச்சி", "திமிர் பிடிச்சவர்", "பயந்தாங்கொள்ளி" என இஷ்டத்திற்கு பட்டப்பெயர் வைத்து அவமதிப்பார்கள்.

    ஆனால் உண்மை என்னவென்றால், அளவாக பேசுபவர்கள் அதிக திறமைகளைத் தங்களுக்குள் ஒளித்து வைத்திருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். அது என்னவென்று விரிவாக பார்க்கலாம்.

    குறைவாகப் பேசுபவர்கள் தங்களைப் பற்றிய நேர்மறையான அம்சங்களைப் பற்றி அதிகம் அறிந்திருப்பார்கள். இது அவர்களுக்கு முடிவுகளை சிறப்பாக எடுக்கவும், வேலைகளை சுலபமாக முடிக்கவும் உதவும்.

    மற்றவர்களை விட குறைவாகப் பேசுபவர்கள் படைப்பாற்றல் மிக்கவர்கள். ஏனெனில் குறைவாக பேசுவது தனிமை, கற்பனை மற்றும் படைப்பாற்றலை மேலும் வளர்க்க உதவுகிறது. இது அவர்களை மற்றவர்களை விட ஆக்கப்பூர்வமாக்குகிறது.

    அதேபோல குறைவாக பேசுபவர்களின், வார்த்தைகள் அதிக சக்தி வாய்ந்தவை. பாயிண்ட் டு பாயிண்ட் அடித்து பேசுவார்கள்.


    குறைவாகப் பேசுபவர்களை கவனித்தால், அவர்கள் அதிகமாகக் கேட்கிறார்கள். நீங்கள் ஏதாவது சொல்ல விரும்பினால், அதை அவர்களிடம் சொல்லலாம். அவர்கள் அனைத்து விவரங்களையும் கூர்ந்து கவனிப்பதோடு, புரிந்தும் கொள்வார்கள். அதன் பின்னரே உங்களுக்கான தெளிவான பதிலைத் தருவார்கள்.

    குறைவாக பேசுபவர்களுக்கு பொறுமை அதிகம். ஏதேனும் தவறுகள் நடப்பதற்கு முன்பே அதனைக் கண்டறிந்து சரி செய்யக்கூடிய திறன் படைத்தவர்கள். அவர்கள் மற்றவர்களுடன் தொடர்பு கொள்ள மாட்டார்கள். ஆனால் அவர்களுடன் இணைந்திருப்பார்கள்.

    • பெண்களுக்கு பிடித்தான புடவை என்றால் அது பட்டு புடவை தான்.
    • பட்டுப்புடவை கட்டினாலே பெண்களுக்கு ஏற்படும் மகிழ்ச்சியே அலாதிதான்.

    விதவிதமான பல சேலைகள் இருந்தாலும் பெண்களுக்கு பிடித்தான புடவை என்றால் அது பட்டு புடவை தான். பண்டிகை நாட்கள் மற்றும் விஷேச நாட்களில் பட்டுப்புடவை கட்டினாலே பெண்களுக்கு ஏற்படும் மகிழ்ச்சியே அலாதிதான்.

    உலக அளவில் பல பெண்களும் அணிய விரும்பும் சேலையாக பட்டு சேலை உள்ளது. பட்டு சேலையின் மென்மை தன்மையும், பளபளப்பும் பெண்களின் அழகை அதிகப்படுத்தி காட்டுகின்றன.

    பட்டு சேலையை வீட்டில் துவைப்பதைவிட டிரைவாஷ் கொடுப்பது உத்தமமானது. அதுபோல் பட்டு சேலையை அயர்ன் மடிப்புடன் நீண்டநாள் வைத்திருக்க கூடாது. பிறகு பட்டு புடவை எடுக்கும் போது மடிப்புபடிப்பாய் இழைவிட்டு விடும். பட்டு புடவையை அவ்வப்போது திருப்பி திருப்பி மடித்து வைக்க வேண்டும்.

    அதுபோல் இதமான வெயிலில் அவ்வப்போது காயவைத்து பாதுகாக்க வேண்டும். பட்டு சேலையின் மீது ஏதும் கறை படிந்தால் உடனே சாதாரண தண்ணீர் கொண்டே துடைத்து விடவும். அதிக கறை எனில் டூத்பேஸ்ட் கொண்டு துடைத்து விடலாம். பட்டு சேலை பளபளப்புடன் திகழ சிறந்த பராமரிப்பும் அவசியம்.

    விலை அதிகம் கொடுத்து வாங்கும் பட்டுச் சேலையை தரமாகப் பராமரிக்க வேண்டும். விசேங்களுக்கு சென்று வந்தவுடன் பட்டு சேலையை களைந்து உடனே மடித்து வைக்ககூடாது.

    நிழலில் காற்றாட 2, 3 மணி நேரம் உலர விட வேண்டும். அல்லது கையினால் அழுத்தித் தேய்த்து மடித்து வைக்கவும்.

    எக்காரணம் கொண்டும் பட்டுச்சேலையை சூரிய ஒளியில் வைக்கக்கூடாது, சோப்போ அல்லது சோப் பவுடரோ உபயோகித்து துவைக்கக் கூடாது. வெறும் தண்ணீர் விட்டு அலசினாலே போதுமானது.

    ஏதாவது கறை பட்டுவிட்டால் உடனே தண்ணீர் விட்டு அலச வேண்டும். எண்ணெய் கறையாக இருந்தால் அந்த இடத்தில் மட்டும் விபூதியை தடவி 5,10 நிமிடங்கள் வைத்திருந்து பின்பு தண்ணீர் விட்டு அலச வேண்டு.

    பட்டுப்புடவைகளை வருடக்கணக்கில் தண்ணீரில் நனைக்காமல் வைக்கக்கூடாது. 3 மாதத்திற்கு ஒரு முறையாவது தண்ணீரில் அலசி நிழலில் உலர விட்டு அயர்ன் செய்து வைக்க வேண்டும்.


    அயர்ன் செய்யும் போது ஜரிகையைத் திருப்பி அதன் மேல் மெல்லிய துணி விரித்து அயர்ன் செய்ய வேண்டும். நேரடியாக அயர்ன் செய்ய கூடாது.

    பட்டுச் சேலையை கடையிலிருந்து வாங்கி வந்தபடி அட்டை பையில் வைக்காமல் துணி பையில் வைக்கலாம்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அடர்த்தியான கண் புருவங்கள், கண் இமைகள் முகத்தை அழகாக காட்டுகிறது.
    • கண் இமைக்கு தேங்காய் எண்ணெய் ஒரு சிறந்த வீட்டு வைத்தியப் பொருள்.

    இன்று பலரும் நீண்ட அடர்த்தியான புருவங்கள், இமை போன்றவற்றை வைத்துக் கொள்ள விரும்புவர். நீண்ட அடர்த்தியான கண் புருவங்கள் மற்றும் கண் இமைகள் முகத்தை அழகாக காட்டுகிறது. இதனை இயற்கையாகவே வீட்டு வைத்தியங்களை பயன்படுத்தி செய்யலாம். இதனால் எந்த பக்கவிளைவுகளும் இருக்காது.


    கற்றாழை

    கற்றாழை ஜெல்லில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளது. இந்த ஊட்டச்சத்தானது கண் இமை வளர்ச்சியை தூண்ட உதவுகிறது. இதற்கு கற்றாழை ஜெல்லை எடுத்து அதனை இரவில் கண் இமைகளில் தடவ வேண்டும். பின்னர் காலையில் கழுவும் போது இமைகளை நீரேற்றமாக வைத்து ஊட்டச்சத்துகளை அதிகரிக்க உதவுகிறது.


    தேங்காய் எண்ணெய்:

    கண் இமைக்கு தேங்காய் எண்ணெய் ஒரு சிறந்த வீட்டு வைத்தியப் பொருளாக அமைகிறது. மேலும் கண்களை அழகாக வைத்திருப்பதற்கு உதவுகிறது. இதன் ஊட்டமளிக்கும் பண்புகள் முடியின் புரதங்களை பாதுகாக்கிறது. இதற்கு தூங்குவதற்கு முன்பு தேங்காய் எண்ணெயை மஸ்காராவை பயன்படுத்தி கண் இமைகளில் லேசாக தடவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வரும் போது இமை முடி தடிமனாகவும், வலுவாகவும் வளர்வதை பார்க்கலாம்.


    வைட்டமின் ஈ:

    வைட்டமின் ஈ எண்ணெயைப் பயன்படுத்துவது இமைகளை வலுப்படுத்துவதுடன், அவை உடைவதைத் தடுக்க உதவுகிறது. இதற்கு சுத்தமான தூரிகை அல்லது விரலை பயன்படுத்தி சில துளிகள் வைட்டமின் ஈ எண்ணெயை கண்களில் தடவ வேண்டும். இது கண் இமை வளர்ச்சியை ஊக்குவிப்பது மட்டுமல்லாமல், கண் இமைகளை ஈரப்பதமாக மற்றும் பளபளப்பாக வைக்க உதவுகிறது.


    ஆமணக்கு எண்ணெய்:

    முடி ஆரோக்கியத்திற்கு ஆமணக்கு எண்ணெய் மிகவும் சிறந்த தேர்வாக அமைகிறது. முடி வளர்ச்சியை ஊக்குவிக்க விரும்புபவர்களுக்கு ஆமணக்கு எண்ணெய் ஒரு சிறந்த விஷயமாகும். ஆமணக்கு எண்ணெயில் கொழுப்பு அமிலங்கள் நிறைந்து காணப்படுகிறது. இது வேர்களிலிருந்து கண் இமைகளுக்கு ஊட்டமளிக்கவும், வலுப்படுத்தவும் உதவுகிறது.

    மேலும் இது முழுமையான தோற்றத்தைத் தருகிறது. ஒரு சத்தான மஸ்காரா அல்லது பருத்தி துணியை எண்ணெயில் தோய்த்து, படுக்கைக்கு முன்னதாக கண் இமையில் தடவ வேண்டும். பிறகு இதை காலையில் கழுவி விடலாம். இப்போது தடிமனான, ஆரோக்கியமான கண் இமைகளைப் பெறலாம்.

    • கர்ப்ப காலத்தில் செரிமானம் மெதுவாகக் கூடும்.
    • செரிமானப் பிரச்சனை இருக்கும் பெண்கள் உணவை பிரித்து எடுத்துக்கொள்வது நல்லது.

    கர்ப்ப காலத்தில் ஒவ்வொரு கர்ப்பிணி பெண்களும் மலச்சிக்கல் பிரச்சனையை சந்தித்திருப்பார்கள். கர்ப்ப காலத்தில் ஹார்மோன் மாற்றங்கள், கர்ப்பப்பை அழுத்தம், இரும்புச்சத்து போன்றவையே இதற்கு காரணம்.

    கர்ப்ப காலத்தில் புரோஜெஸ்ட்ரான் ஹார்மோன் அதிகரிக்கத்தொடங்கும் இதனால் செரிமானம் மெதுவாகக் கூடும். இதனால் தான் தொடர்ந்து மலச்சிக்கல் உண்டாகிறது.


    கர்ப்ப காலத்தில் செரிமானப் பிரச்சனை இருக்கும் பெண்கள் உணவை பிரித்து எடுத்துக்கொள்வது நல்லது. தினசரி 3 வேளை உணவை 6 வேளையாக பிரித்து எடுத்துக்கொள்ளலாம்.

    அதிக அளவு உணவு ஒரே நேரத்தில் எடுத்துக்கொள்ளும் போது வயிற்றுக்கு சுமை கூடும். இது செரிமானத்தை கடினமாக்கும். நீங்கள் எடுத்துக்கொள்ளும், உணவும் மலச்சிக்கலை உண்டாக்கும்.

    நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகள் மலச்சிக்கலை தடுக்க உதவும். கர்ப்பிணிகளுக்கு வைட்டமின்கள் மற்றும் ஆக்சிஜனேற்றங்களை இவை அளிக்கிறது.

    நார்ச்சத்து அதிகம் உள்ள காய்கறிகள், கீரைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். காய்கறிகள், பீன்ஸ், பட்டாணி, பயறு வகைகள், தானியங்கள் மற்றும் பழங்களில் ஆப்பிள், வாழைப்பழங்கள், அத்திப்பழம், ரோஸ்பெர்ரி போன்றவை எடுத்துக் கொள்ளலாம்.


    கர்ப்ப காலத்தில் நாள் ஒன்றுக்கு 8 முதல் 12 டம்ளர் வரை தண்ணீர் குடிப்பது அவசியம். உடலில் போதுமான அளவு தண்ணீர் இருந்தால் அது குடலை மென்மையாகவும், செரிமான பாதையை சீராக்கவும் செய்ய உதவும்.

    கால்சியம் நிறைந்த உணவு, அதாவது பால் பொருட்களை அதிகம் சேர்க்கும் போது மலச்சிக்கல் உண்டாகலாம் எனவே அதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.

    கர்ப்பிணி பெண்கள் இயன்றவரை மலச்சிக்கலுக்கு மருந்துகள் எடுத்துக்கொள்வதை தவிர்ப்பதே நல்லது. அதேநேரம் அதிக மலச்சிக்கலை சந்திக்கும் போது மலம் இளகி வெளியேற மருந்துகளை டாக்டர்கள் பரிந்துரைப்பார்கள்.


    இவை குடலை இயக்கி மலத்தை இளக்கி எளிதாக வெளியேற்ற உதவும். ஆனாலும் தொடர்ச்சியாக மருந்துகள் மூலமே மலத்தை வெளியேற்ற முயலக்கூடாது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

    கர்ப்ப கால மலச்சிக்கலுக்கு தீர்வு மருந்துகள் தான் என்றில்லாமல் கர்ப்ப காலத்தில் மலச்சிக்கலை தவிர்க்க சிறந்த வழிகள் உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறை என்பதை மனதில் கொள்ளுங்கள். 

    • வாரம் இருமுறை சாப்பிட்டு வரலாம்.
    • வலிகளை நீக்கும் இயல்பு முடக்கறுத்தானுக்கு உண்டு.

    மூட்டுகளை முடக்கி வைக்கும் வாதநோயை அகற்றுவதால் இக்கீரைக்கு 'முடக்கறுத்தான்' (முடக்கு + அறுத்தான் எனப்பெயர் வந்தது. முடக்கு நோயை அகற்றும் தன்மை மிக்க இக்கீரை ஒரு கொடி வகையை சார்ந்தது. வேலிகளில் பற்றி செழிப்பாக படர்ந்து வளரும்.

    நாற்பது வயது கடந்த பலருக்கு மூட்டுகளில் நீர் கோர்த்து தாங்கமுடியாத வலி ஏற்படும். தோள்பட்டை வலி, முதுகு வலி, இடுப்பு வலி என பலவகையான வலிகளை நீக்கும் இயல்பு முடக்கறுத்தானுக்கு உண்டு.

    உடல்வலி, மூட்டுகளில் வீக்கம், உடல் கனத்து வலி தோன்றும் பொழுது, இரண்டு கைபிடி முடக்கறுத்தான் கீரையை 200 மி.லி. நீரில் இட்டு, ஒரு தேக்கரண்டி சீரகமும் கலந்து கொதிக்க வைத்து அருந்த உடல் வலி நீங்கும். இவ்வாறு வாரம் இருமுறை சாப்பிட்டு வரலாம்.

    பெண்களுக்கு சூதகவலி, மற்றும் சூதக தடை, மாதவிடாய் சமயம் தோன்றும் வலிக்கு இரண்டு கைபிடி முடக்கறுத்தான் இலை, ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகம் கலந்து 200 மிலி நீரில் கொதிக்க வைத்து அருந்த வயிறு மற்றும் தொடை, இடுப்பு பக்கங்களில் உண்டாகும் வலி நீங்கும். தோல் நோய்களுக்கு முடக்கறுத்தான் இலைகளை அரைத்து பூசி குளித்து வரலாம்.

    முடக்கறுத்தான் கீரை சாப்பிடும் பொழுது சிலருக்கு பேதி உண்டாகும். அதனால் முதலில் சாப்பிடும் பொழுது ஒரு விடுமுறை நாளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது நல்லது.

    தேவையான பொருட்கள்:

    முடக்கறுத்தான் இலை- 2 கை பிடி அளவு

    பூண்டு- 5 பல் அரைப்பதற்கு

    துவரம் பருப்பு- 1 ஸ்பூன்

    மிளகு- ½ ஸ்பூன்

    சீரகம்- 1 ஸ்பூன்

    (மேற்கண்ட துவரம் பருப்பு, மிளகு, சீரகம் போன்றவற்றை வறுத்து பொடி செய்து கொள்ளவும்)

    காய்ந்த மிளகாய்- 2

    புளி- நெல்லிக்காய் அளவு (200 மி.லி. நீரில் கரைத்து கொள்ளவும்)

    தக்காளி-1 பொடிதாக அரிந்து கொள்ளவும்

    நெய்- 3 ஸ்பூன்

    கடுகு- 1 ஸ்பூன்

    செய்முறை:

    ஒரு வாணலியில் அடுப்பில் வைத்து முடக்கறுத் தான் கீரை மற்றும் பூண்டை ஒரு தேக்கரண்டி நெய் இட்டு லேசாக வதக்கி சற்று ஆறிய பின் அரைத்து வைத்துக் கொள்ளவும். புளி தண்ணீரை தக்காளி கலந்து கொதிக்க வைக்க வேண்டும்.

    நன்கு கொதிக்கும் பொழுது அரைத்து வைத்துள்ள பொடியை கலந்து கொதிக்க விடவும்.

    இறுதியாக அரைத்து வைத்துள்ள முடக்கறுத்தான் பூண்டு கலவையை இட்டு கொதிக்க வைத்து, ஒரு தேக்கரண்டி நெய்யில் சிறிது கடுகு தாளித்து இறக்கி கொள்ளவும்.

    இதை சூப்பாகவும், சூடான சாதத்துடன் கலந்து ரசம் ஆகவும் பயன்படுத்தலாம். வயிற்று உப்புசம், மலச்சிக்கல், மூட்டுவலி, அடிவயிற்று வலிக்கு இந்த ரசம் செய்து பயன்படுத்தலாம். மூல நோய் வள்ளவர்களுக்கு தொடைப்பகுதியில் வலி ஏற்படும். அப்பொழுது இந்த ரசம் 100 மி.லி. சாப்பிட வலி குறையும்.

    • உயர் ரத்த அழுத்தத்தை சரி செய்கிறது.
    • ஆண்மை குறைபாட்டை சரி செய்து உடலுக்கு வலிமையை கொடுக்கிறது.

    உடலில் உஷ்ணம் அதிகரிக்கும்போது உள் உறுப்புகளில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என்று மரபு மருத்துவம் முதல் நவீன மருத்துவம் வரை கூறுகின்றன. இதனை நன்கு அறிந்துதான் எண்ணெய் குளியல் என்ற வழக்கத்தை நம் முன்னோர் உருவாக்கி வைத்தனர்.

    பொதுவாக, வாரம் இருமுறை உடலுக்கு எண்ணெய் தேய்த்து குளித்து வந்தால் ஏற்படும் பலன்கள் குறித்து பாரம்பரிய மருத்துவம் கூறும் பலன்களை காணலாம்.


    உடலில் நல்லெண்ணெயை தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் உயர் ரத்த அழுத்தத்தை சரி செய்கிறது. செரிமானத்தை சரி செய்கிறது. இனப்பெருக்க உறுப்புகளின் அதீத சூட்டை தணித்து ஆண்மை குறைபாட்டை சரி செய்து உடலுக்கு வலிமையை கொடுக்கிறது.

    தலையில் அதிகரிக்கும் வெப்பம் காரணமாக முடி உதிர்தல், இளநரை, வழுக்கை ஆகிய பாதிப்பு ஏற்படுகிறது. எண்ணெய் குளியல் இந்த பிரச்சினைகளை சரிசெய்கிறது.

    கவலை, மன உளைச்சல், துக்கம், பயம், கோபம், தாழ்வு மனப்பான்மை, ஏமாற்றம், விரக்தி போன்ற உணர்வுகள் உடலில் பித்த அமில நிலையை அதிகரிக்கிறது.

    எண்ணெய் உடலின் சூட்டை சமநிலைக்கு கொண்டு வருவதால் உடலுக்கு கேடு விளைவிக்கும் உணர்ச்சிகள், கொதிப்பு நிலை குறைகிறது.

    உமிழ் நீர், எச்சில், நிணநீர், கணைய நீர் (இன்சுலின்), சளி, கோழை, சிறுநீர், விந்து, மாத விடாய், வெள்ளைப்படுதல், வியர்வை ஆகியவற்றை சரியான அளவில் வைத்து உடலை பராமரிக்கிறது.


    வாரம் ஒரு முறை அல்லது இரு முறை நல்லெண்ணெய் தேய்த்து அதிகாலை 4 மணி முதல் காலை 8 மணிக்குள் குளிக்க வேண்டும் என சித்த மருத்துவ நூல்களில் கூறப்பட்டுள்ளது.

    ஆண்கள் புதன் மற்றும் சனிக்கிழமைகளிலும் பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும் எண்ணெய்க் குளியல் எடுப்பது நல்லது. 

    • 5 நட்சத்திர மதிப்பிடப்பட்ட மின் சாதனங்களைப் பயன்படுத்தவும்.
    • சோலார் பேனல்கள் இருந்தால் மின்சாரத்தை இலவசமாகப் பெற முடியும்.

    வீட்டு மின்சார கட்டணத்தை எவ்வாறு குறைப்பது என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். உங்கள் மின்சார மீட்டரில் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை எடுக்கப்பட்ட ரீடிங்கிலிருந்து மின்சார பில்கள் கணக்கிடப்படுகின்றன.

    மின்சார மீட்டர் எவ்வளவு அளவு உபயோகிக்கப் படுத்தப்பட்டுள்ளது என்பதை அளவிடுவது நீர் மீட்டர் போன்றது. நீரின் அளவைப் போலவே, மின்சாரத்திற்கான அளவீடு பொதுவாக மின்சாரத்தில் 'அலகு' என்று குறிப்பிடப்படும் 'கிலோவாட்-மணிநேரம்' என்று அழைக்கப்படுகிறது.

    மின்சார செலவை அதிக அளவில் ஆக்குவது முக்கியமாக ஏசி (ஏர் கண்டிஷனர்கள்), மற்றும் மின்சார கெட்டில்கள், குளிர்சாதனப் பெட்டி உள்ளிட்ட அதிக மின்சார நுகரும் சாதனங்களைப் பயன்படுத்துவதாகும்.

    இதனால் உங்கள் மின்சார கட்டணத்தை குறைக்க முதலில் செய்ய வேண்டியது மின்சார வெப்ப சாதனங்களை பயன்படுத்துவதைத் தவிர்ப்பது. அதிக மின்சார கட்டணத்தை செலுத்துவதை விட கேஸ் அடுப்புகளை பயன்படுத்துவது மிகவும் மலிவானது.

    ஏசி மற்றும் குளிர்சாதன பெட்டியைப் பொறுத்தவரை திறமையான இன்வெர்ட்டர்களைப் பயன்படுத்துங்கள்.

    மின்சாரம் எவ்வாறு அளவிடப்படுகிறது என்று அறிய ஒரு உதாரணத்தை பார்க்கலாம்.10 மணி நேரம் வேலை செய்யும் 100 வாட்களின் உச்சவரம்பு விசிறியை கற்பனை செய்து பாருங்கள்.


    இந்த விசிறியால் நுகரப்படும் மின்சாரம் அது இயங்கும் நேரத்தால் பெருக்கப்படும். விசிறி வாட்ஸ் 100 வாட்ஸ் x 10 மணிநேரம் = 1000 வாட் மணிநேரம். 1000 வாட்ஸ் 1 கிலோவாட், எனவே 1000 வாட் மணிநேரம் 1 கிலோவாட் மணிநேரம் அல்லது 1 யூனிட் மின்சாரத்திற்கு சமமாக இருக்கும்.

    இந்த விசிறி தினமும் 30 நாட்கள் அல்லது ஒரு மாதத்திற்கு 10 மணி நேரம் வேலை செய்தால், விசிறிக்கான மாதாந்திர மின்சார பில் ஒரு நாளைக்கு 30 நாட்கள் x 1 யூனிட் = ஒரு மாதத்தில் 30 யூனிட்.

    மின்சாரத்தின் ஒரு யூனிட் ,ரூ .5 என்றால் இந்த விசிறிக்கான மாதாந்திர மின்சார பில் மாதத்திற்கு 30 x 5 = ரூ.150- ஆக இருக்கும்.

    அதிக மின்சாரம் எடுக்கும் மின்சார உபகரணங்களைப் பயன்படுத்துவதும், அலங்கார விளக்குகள் போன்றவற்றைப் பயன்படுத்துவதும் அதிக மின்சார கட்டணத்தை உருவாக்குகிறது.

    வீட்டில் மின்சார பயன்பாட்டைச் சேமிக்கவும், அதன் மூலம் வீட்டின் மின்சார கட்டணத்தை குறைப்பதற்கும் எல்.ஈ.டி பல்புகள் போன்ற குறைந்த வாட் மின் பல்புகளைப் பயன்படுத்துங்கள், அவை ஒரே ஒளி வெளியீட்டைக் கொடுக்கும், ஆனால் குறைந்த வாட்களை பயன்படுத்துகின்றன.

    மின்விசிறி போன்ற மின் சாதனங்களை இயக்கும் நேரத்தைக் குறைக்கவும். ஃப்ரிட்ஜ், ஏ.சி. போன்ற பொருட்களில் 5 நட்சத்திர மதிப்பிடப்பட்ட மின் சாதனங்களைப் பயன்படுத்தவும்.

    சமைப்பதற்கு மின்சார அடுப்பை பயன்படுத்தாமல் கேஸ் அடுப்பு பயன்படுத்துங்கள். குளியலறையில் சாதாரண மின்சார நீர் ஹீட்டர்கள் ஒரு மணி நேரத்திற்கு 2 முதல் 2.5 யூனிட் மின்சாரத்தை பயன்படுத்துகின்றன. சூரிய நீர் ஹீட்டரின் பயன்பாடு சிறிது பணத்தை மிச்சப்படுத்தும்.


    உங்கள் வீட்டில் சோலார் பேனல்கள் அமைப்பதற்கான வாய்ப்பு இருந்தால், மாதாந்திர மின்சார பில் இல்லாமல் உங்கள் மின்சாரத்தை இலவசமாகப் பெற முடியும்.

    4 கிலோவாட் சோலார் மின் அமைப்பு 16 சோலார் பேனல்கள் அரசாங்க மின்சார வாரிய கட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.

    இரவில் தினமும் ஏசியை பயன்படுத்தினாலும், மின்சார பில் மிகக் குறைவாகவே வரும் எனவே அதிக மின்சார பில்களுக்கு சோலார் பேனல்கள் இணைக்கப்பட்ட அமைப்பு சிறந்த தீர்வாகும்.

    • எலும்புகளுக்கு நல்ல உறுதி அளிக்கக் கூடியது.
    • 'ஆஸ்டியோபிளாஸ்ட்' என்ற எலும்பு செல்களை உற்பத்தி செய்வதற்கு உதவி புரிகிறது.

    சாதாரணமாக தரிசு நிலங்களில் படர்ந்து கிடக்கும் பிரண்டை ஒரு கொடி வகையைச் சார்ந்தது. சதைப்பற்றுள்ள நாற் கோண வடிவுடன் இருக்கும். காரத்தன்மை உள்ளது. இதற்கு நிறைய மருத்துவக் குணங்கள் உள்ளன.

    முக்கியமாக, எலும்புகளுக்கு நல்ல உறுதி அளிக்கக் கூடியது. அதனால் இதற்கு 'வச்சிரவல்லி' என்ற வேறு பெயரும் உண்டு.


    பிரண்டை எலும்பு மஜ்ஜை யில் 'ஆஸ்டியோபிளாஸ்ட்' என்ற எலும்பு செல்களை உற்பத்தி செய்வதற்கு உதவி புரிகிறது. எலும்புக்கு அடர்த்தியையும், உறுதியையும் அளிக்கிறது.

    பிரண்டையில் வைட்டமின் சி, கால்சியம் மற்றும் கரோட் டினின் போன்ற சத்துகள் உள்ளன. இதில் உள்ள அனபாலிக் ஸ்பூராய்டு (இயற்கையான தாவர ஊக்கி) தசைகளில் வலி, வீக்கங்களைக் குறைக்க உதவுகிறது.

    பெண்களுக்கு நாற்பது வயதுக்கு மேல் மாதவிடாய் நிற்கும் சமயம் ஈஸ்டிரோஜன் ஹார்மோன் குறைபாடு காரணமாகத் தோன்றும் சூதகத் தடை, வயிற்று உப்புசம், அதிக உதிரப்போக்கு, முக்கியமாக எலும்பின் உறுதி குறைவதால் தோன்றும் மூட்டுவலி, அடர்த்தி குறைவதால் தோன்றும் எலும்பு தேய்மானம், முதுகு, இடுப்பு வலி, முதுகுத் தண்டுவட தேய்மானத்துக்கு பிரண்டை மிகச் சிறந்த மருந்து.

    தேவையான பொருட்கள்

    பிரண்டை (தோல் சீவிய துண்டுகள்)- 100 கிராம்

    உரித்த பூண்டு பற்கள்- 50 கிராம்

    மிளகாய்த் தூள்- 4 தேக்கரண்டி

    கடுகு- 1 தேக்கரண்டி

    வெந்தயம் - 1 தேக்கரண்டி

    புளி- எலுமிச்சை அளவு

    உப்பு- சுவைக்கேற்ப

    நல்லெண்ணெய்- 50 மி.லி.


    செய்முறை:

    ஒரு வாணலியில் அடுப்பில் வைத்து அதில் 3 தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி, பிரண்டைத் துண்டுகள், புளி மற்றும் பூண்டை போட்டு நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.

    பின்னர் கடுகு மற்றும் வெந்தயத்தை வறுத்து பொடித்துக்கொள்ள வேண்டும்.

    அதன்பிறகு வதக்கி வைத்துள்ள பிரண்டை மற்றும் பூண்டினை மிக்சி ஜாரில் போட்டு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, பெருங்காயம் தாளித்து அதில் வதக்கிய பிரண்டை மற்றும் மிளகாய் தூள், வறுத்து பொடித்து வைத்துள்ள கடுகு, வெந்தயப்பொடி மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.

    எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கி பின்னர் ஆற வைத்து பறிமாறலாம். ஈரமில்லாத பாட்டிலில் எடுத்துக் வைத்துக்கொண்டு பயன் படுத்தலாம். பல மாதங்களுக்கு கெட்டுப்போகாது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சுய பாதுகாப்பை முன்னிறுத்தி மன வலிமையுடன் எதிர்கொள்ளுங்கள்.
    • ஸ்மார்ட் பூட்டுகளை கொண்ட கதவுகள் வந்துவிட்டன.

    படிப்பு, பணி நிமித்தமாகவோ அல்லது குடும்ப சூழ்நிலை காரணமாகவோ நகர் பகுதிகளில் தனியாக வசிக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    அதற்கேற்ப இன்றைய நவீன தொழில்நுட்பம் பாதுகாப்பு அரணாக அமைந்திருப்பதால் பலரும் தனிமை சூழலில் வாழ பழகிக்கொண்டிருக்கிறார்கள்.

    எனினும் ஒருசில விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்துவது பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கு உதவும். அதற்கு வித்திடும் வழிமுறைகள் சில...


    சுய பாதுகாப்பு

    பெண் தனியாக வாழ்வது ஆபத்தானது என்ற மாயை தோற்றத்தில் இருந்து விடுபடுங்கள். அதுவே பயத்தையும், பீதியையும் அதிகரிக்கச் செய்யும். சுய பாதுகாப்பை முன்னிறுத்தி மன வலிமையுடன் எத்தகைய சவாலையும் எதிர்கொள்ளுங்கள்.

    பாதுகாப்பு என்பது கூட்டுப் பொறுப்பு. அனைவருக்கும் பாதுகாப்பான சூழலை உருவாக்க சமூகம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது அவசியமானது.


    வீட்டு பாதுகாப்பு

    வாடகை வீட்டில் வசிக்கிறீர்கள் என்றால் வீட்டு உரிமையாளர் நிறுவியுள்ள பாதுகாப்பு கட்டமைப்புகளை நம்ப வேண்டாம். கதவுகள் வலுவாக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இல்லாவிட்டால் அவற்றை மாற்றிவிடுங்கள்.

    கதவின் பக்கவாட்டில் இரும்பிலான கிரில் கதவுகளை நிறுவுங்கள். அத்துடன் கதவில் 'லென்ஸ்' பொருத்துங்கள். அது வீட்டுக்கு யார் வந்திருக்கிறார் என்பதை கதவை திறக்காமலே தெரிந்து கொள்ள உதவும்.

    இப்போது பாதுகாப்பை பலப்படுத்தும் அம்சங்களை கொண்ட ஸ்மார்ட் பூட்டுகளை கொண்ட கதவுகள் வந்துவிட்டன. 'பாஸ்வேர்ட்' அல்லது 'பயோமெட்ரிக்' மூலம் கைரேகை, கருவிழி மூலம் இயங்கும் டிஜிட்டல் சாதனங்களை பொருத்துவது, காலிங் பெல் மற்றும் வீட்டின் முகப்பு பகுதியில் பாதுகாப்பு கேமரா பொருத்துவது என பாதுகாப்பை பலப்படுத்திக்கொள்ளுங்கள்.

    யாராவது கதவின் முன்பு நடமாடினாலோ, பூட்டை பரிசோதித்தாலோ உங்களுக்கு தகவல் தெரிவிக்கும் படியான சாதனங்களாக அவை அமைந்திருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

    இத்தனை பாதுகாப்புக்கு மத்தியிலும் நாய் வளர்ப்பது மன ரீதியாகவும் உங்களின் பாதுகாப்பை அதிகரிக்க செய்துவிடும்.


    தற்காப்பு பயிற்சி பெறுங்கள்

    பாதுகாப்பு விஷயத்தில் பெண்கள் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளக்கூடாது. பாதுகாப்பையும், துணிச்சலையும் பெற்றுத்தரும் தற்காப்பு பயிற்சிகளை கற்றுக்கொள்வது அவசியமானது. அவை ஆபத்தான சூழ்நிலைகளில் உதவிடும்.

    அடிப்படை பயிற்சிகளையாவது கற்றுக்கொள்ள தற்காப்பு பயிற்சி வகுப்புகளில் சேருவது நல்லது. 'பெப்பர் ஸ்பிரே', 'ஊக்கு' உள்ளிட்ட சாதனங்களை எப்போதும் உடன் வைத்திருங்கள். எத்தகைய அச்சுறுத்தல்களை எதிர்கொண்டாலும் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் நம்பிக்கையுடனும், தைரியத்துடனும் அணுகுங்கள்.


    சுற்றுப்புறங்களை கவனத்தில் கொள்ளுங்கள்

    அண்டை வீட்டார் உள்பட சமூகத்துடன் ஒன்றிணைந்து வாழ்வது பாதுகாப்பாக தோன்றினாலும் சுற்றுப்புறத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    பாதுகாப்பான பகுதி எது? பாதுகாப்பற்ற பகுதி எது? என்பதை வரைமுறைப்படுத்த வேண்டும். அதில் பாதுகாப்பான பகுதியை உறுதி செய்து கொண்டுவிட்டு நடமாட வேண்டும்.

    குறிப்பாக ஆள் நடமாட்டமில்லாத தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இரவு நேரத்தில் தனியாக நடப்பதையும், இரவு நேரத்தில் தனியாக பயணிப்பதையும் தவிர்க்க வேண்டும்.

    தவிர்க்க முடியாத பயணமாக இருந்தால் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து அவர்கள் மூலம் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

    நீங்கள் தனியாக வசிக்கிறீர்கள் என்ற விவரத்தை புதியவர்கள் யாருக்கும் தெரியப்படுத்தக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதுபோல் தங்களுக்கு தெரியாத நபர்கள், ஓட்டுநர்கள், டெலிவரி செய்பவர்கள் போன்றவர்களிடமும் தெரியப்படுத்தக்கூடாது.


    தொடர்பில் இணைந்திருங்கள்

    ஒவ்வொரு முறையும் வீட்டை விட்டு வெளியே செல்லும்போதும், யாராவது உங்களை சந்திக்க வரும்போதும் அது பற்றிய தகவலை உங்கள் நெருங்கிய நண்பர்கள், உறவினர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

    உங்கள் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்களிடத்தில் உங்கள் நிரந்தர முகவரி, தற்போதைய முகவரி, தொடர்பு எண்கள் உள்ளிட்ட விவரங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

    அவசர காவல் உதவி எண் (100), பெண்கள் உதவி எண் (181) உள்ளிட்டவற்றை செல்போனில் பதிவு செய்து வையுங்கள். அது அவசர தேவையின்போது பதற்றமில்லாமல் அணுகுவதற்கு வழிவகை செய்யும். அண்டை வீட்டாருடன் வலுவான பந்தத்தையும் ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.

    அவசர உதவி தேவைப்படும் சமயங்களில் பக்கபலமாக இருப்பார்கள். உள்ளூர் மகளிர் சுய உதவிக் குழுக்களுடனும் இணைய முயற்சியுங்கள். அவர்களின் உதவியும் வழிகாட்டுதலும் பயனுள்ளதாக அமையும்.


    சமூக ஊடகங்களில் கவனமாக இருங்கள்

    சமூக ஊடகங்களில் ஆர்வம் காட்டினாலும் நீங்கள் பதிவிடும் பதிவுகள், புகைப்படங்கள் வாயிலாக தனியாக வாழ்கிறீர்கள் என்ற விஷயத்தை குறிப்பிடக்கூடாது என்பதில் கவனமாக இருங்கள்.

    மேலும், வசிப்பிடம், விரிவான முகவரி போன்ற எந்தவொரு தனிப்பட்ட விவரங்களையும் இணையத்தில் பதிவிடுவதை தவிருங்கள்.

    ×