search icon
என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    புதுமண தம்பதியா நீங்கள்...? மகிழ்ச்சியான மண வாழ்க்கைக்கு  தேவையான `8 அம்சங்கள்
    X

    புதுமண தம்பதியா நீங்கள்...? மகிழ்ச்சியான மண வாழ்க்கைக்கு தேவையான `8 அம்சங்கள்'

    • துணையின் தேவைகளுக்கு முன்னுரிமை கொடுங்கள்.
    • துணையுடன் பொறுப்புகளை பகிர்ந்து கொள்ள வேண்டும்.

    இதிகாச காவியான மகாபாரதத்தின் ஒரு அங்கமான பகவத்கீதையில் நாம் வாழ்க்கையில் சந்திக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வை முன்வைக்கும் சாராம்சங்கள் இடம் பெற்றிருக்கின்றன. கிருஷ்ணர் கூறிய அந்த போதனைகளில் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்கு வித்திடும் அம்சங்களும் கூறப்பட்டுள்ளன. அவை...

    1. தன்னலமற்றவராக இருங்கள்

    திருமணமான தம்பதியர் தங்கள் உறவு வலுவாக நீடித்திருக்க, துணையின் தேவைகளுக்கு முன்னுரிமை கொடுங்கள். துணையின் ஒவ்வொரு தேவைகளையும் கேட்டறிந்து நிறைவேற்றுங்கள். அவரின் மகிழ்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுங்கள். அன்பை பொழிவதில் தன்னலமற்றவராக இருங்கள்.


    2. பொறுமையை கடைப்பிடியுங்கள்

    சவால்களை எதிர்கொள்ளும்போது, அஞ்சாமல் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும். இந்த பொறுமை குடும்ப வாழ்விலும் தொடர வேண்டும். துணையிடத்தில் பொறுமையாகவும், அன்பாகவும் இருக்க வேண்டும். இது தேவையற்ற சண்டைகள் மற்றும் தவறான புரிதல்களை தடுக்கவும், பிரச்சனைகளை சமாளிக்கவும் உதவும்.


    3. ஈகோவை விட்டொழியுங்கள்

    வாழ்க்கையில் அடிக்கடி பிரச்சனைகள் எழுவதற்கு வழிவகுக்கும் அகங்காரத்தை விட்டுவிடுமாறு கிருஷ்ணர் அறிவுறுத்துகிறார். திருமணமானவர்களிடையே ஈகோ எட்டிப்பார்த்தால் அது அடிக்கடி மோதல்களுக்கு வழிவகுக்கும். துணையுடனான உறவை பாதிக்கலாம். அதனால் ஈகோவை விட்டொழியுங்கள்.

    4. சமநிலையை பேணுங்கள்

    வாழ்க்கையில் சமநிலையை பின்பற்றுவதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதிலும் திருமண வாழ்க்கையில் ஆரோக்கியமான சமநிலையை நிலைநிறுத்த பாடுபட வேண்டும். அதற்கு துணையுடன் பொறுப்புகளை பகிர்ந்து கொள்ள வேண்டும்.

    5. விசுவாசமாக இருங்கள்

    எப்போதும் நேர்மையாக மட்டுமின்றி தர்மத்தின் பாதையின் வழியே நடக்க வேண்டும். துணைக்கு விசுவாசமாகவும், நேர்மையாகவும் இருக்க வேண்டும். மேலும் வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகளை சந்திக்கும்போது துணைக்கு ஆதரவாக இருக்க வேண்டும்.


    6. அன்புடன் இருங்கள்

    பரமாத்மாவுக்கு அர்ப்பணிப்புடன் இருப்பதை பற்றி கிருஷ்ணர் அடிக்கடி கூறுகிறார். இந்த பாடத்தை உறவுகளுக்கும், வாழ்க்கைக்கும் பின்பற்ற வேண்டும். அத்தகைய அர்ப்பணிப்பு, ஒருவருக்கொருவர் அன்புடன் இருக்க வழிகாட்டும்.

    7. மன்னியுங்கள்

    துணை செய்யும் சின்ன சின்ன தவறுகளை மன்னியுங்கள். அது திருமண உறவுக்கு அவசியமானது, அடிப்படையானதும் கூட. தவறுகளை மன்னித்து அதனை திருத்திக்கொள்வதற்கு வழிகாட்டியாகவும் இருக்க வேண்டும்.


    8. நேர்மையாக இருங்கள்

    எந்தவொரு சூழ்நிலையிலும் உண்மையாக, நேர்மையாக இருக்க கற்றுக்கொள்ளுங்கள். குறிப்பாக துணையிடத்தில் வெளிப்படையாகவும், நேர்மையாகவும் இருக்க வேண்டும். இது துணையுடனான நம்பிக்கை மற்றும் புரிதலை வளர்த்தெடுக்க துணைபுரியும்.

    Next Story
    ×