search icon
என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    பிரசவ காலத்தில் பனிக்குட நீர் குறைவதை எப்படி அறிவது?
    X

    பிரசவ காலத்தில் பனிக்குட நீர் குறைவதை எப்படி அறிவது?

    • பனிக்குட நீரானது, குழந்தையை தொற்றுகளிலிருந்து காப்பாற்றுகிறது.
    • குழந்தையின் சுதந்திரமான அசைவுக்கும் உதவுகிறது.

    கருவிலுள்ள குழந்தையை சுற்றியுள்ள நீரையே நாம் பனிக்குட நீர் என்கிறோம். இந்த நீர் வற்றிப்போகும் நிலையை `ஆலிகோஹைட்ராமினியாஸ்' (Oligohydramnios) என்கிறோம்.


    குழந்தையின் சிறுநீரகங்கள், 16 வாரங்களுக்குப் பிறகு, சிறுநீரை உற்பத்தி செய்யத் தொடங்கும். இந்த பனிக்குட நீரானது தாயின் ரத்தம் மற்றும் கருவிலுள்ள சிசுவின் சிறுநீர் இரண்டும் சேர்ந்து உருவாவது.

    பனிக்குட நீரானது, குழந்தையை தொற்றுகளிலிருந்து காப்பாற்றுகிறது. வெளிப்புற அதிர்ச்சி உள்ளிட்டவற்றிலிருந்தும் கருவிலுள்ள குழந்தையைப் பாதுகாக்கிறது. குழந்தையின் சுதந்திரமான அசைவுக்கும் உதவுகிறது.

    கர்ப்ப காலத்தில் ஒரு பெண் பனிக்குட நீரை சரியான அளவில் வைத்திருந்து பிரசவக்காலம் நெருங்கும் போது நீரின் அளவு குறைந்தால் அதுவும் சிக்கலே.

    அப்போது கர்ப்பபைக்கு செயற்கையாக நீரை ஏற்றி சுகப்பிரசவத்துக்கு முயற்சி செய்வார்கள். அரிதாக சில குழந்தைகள் மலம் கழித்துவிடக்கூடும்.

    எனினும் குழந்தை மலத்தை விழுங்காமல் இருக்க இந்த அம்னியா இன்ஃப்யூஷன் செய்வதன் மூலம் தடுக்கலாம். இந்நிலையிலும் சிக்கல் தொடர்ந்தால் பாதுகாப்பான தாய் சேய் ஆரோக்கியத்துக்கு சிசேரியன் செய்வதற்கு மருத்துவர்கள் ஆலோசனை வழங்குவார்கள்.

    ஏனெனில் இது குழந்தைக்கு மூச்சுத்திணறலை உண்டாக்கும். சில பெண்கள் பனிக்குட நீர் வெளியேறுதலை சிறுநீர் கழிவதாக நினைத்து முழு நீரும் வெளியேறிய பிறகு வருவார்கள்.


    இவர்களுக்கு உடனடி சிசேரியன் அவசியமாகிறது. இந்த பனிக்குட நீர் குறைவாக பெற்றுள்ள குழந்தைகள் பிறந்த பிறகு அவர்களது நுரையீரல் வளர்ச்சி, சிறுநீரகம், மலம் போன்ற இயற்கை உபாதைகள் சீராக இருக்கிறதா என்ற பரிசோதனையும் செய்யப்படும்

    பனிக்குட நீர் குறைந்தால் என்ன செய்ய வேண்டும்?

    பனிக்குட நீர் குறைந்தால் மருத்துவர் சில வழிமுறைகளை பரிந்துரைப்பார்.

    பெண்கள் தண்ணீர் குடிப்பதை அதிகரிக்க செய்ய வேண்டும். கர்ப்பகாலத்தில் பனிக்குட நீர் குறைவாக கொண்டிருந்த பெண்கள் சிகிச்சையில் தண்ணீர் அதிகமாக குடித்த பெண்களை ஆய்வு செய்ததில் அவர்களது அம்னோடிக் திரவம் அதிகரித்தது கண்டறியப்பட்டது. இவர்கள் அதிக உடல் உழைப்பில்லாமல் சில காலம் ஓய்வில் இருக்க வேண்டும்.


    பனிக்குட நீர் அதிகரிக்கும் வரை உடல் செயல்பாடுகலை குறைக்க மருத்துவர் அறிவுறுத்துவர். அம்னியோஇன்ஃப்யூஷன் எனப்படும் செயல்முறையுடன் குறைந்த அளவு அம்னோடிக் திரவத்துக்கு சிகிச்சையளிக்கலாம்.

    இந்த சிகிச்சைக்கு திரவ அளவை அதிகரிக்க மருத்துவர் கருப்பை வாய் வழியாக அம்னோடிக் சாக்கில் உப்பு கரைசலை அறிமுகப்படுத்துவார்.

    கர்ப்பத்தின் இறுதி கட்டங்களில் அம்னோடிக் திரவம் மிக குறைவாக இருந்தால் மருத்துவர்கள் பிரசவத்தை பரிந்துரைக்கலாம். இதனால் பிரசவத்தின் போது ஏற்படக்கூடிய சிக்கல்களை தடுக்க உதவும்.

    ஒரு பெண் முதல்முறை கருத்தரிக்கும் போது கர்ப்பகால உடல் மாற்றம், உடலில் உண்டாகும் அறிகுறிகள், கவனமாக இருக்க வேண்டிய அறிகுறிகள் என அனைத்தையும் குறித்து மருத்துவர்களிடம் ஆலோசனை பெறுவது அவசியம்.

    குறிப்பிட்ட மாதங்களுக்கு மேல் குழந்தையின் அசைவு உணர்வீர்கள். குழந்தையின் அசைவு குறித்தும் விழிப்புணர்வு வேண்டும்.

    ஏனெனில் ஸ்கேன் பரிசோதனை தவிர்த்து குழந்தையின் அசைவை கொண்டு தான் பனிக்குட நீர் குறைவதை கண்டறியமுடியும் என்பதால் ஒவ்வொரு விஷயங்களிலும் கர்ப்பிணி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

    Next Story
    ×