என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
பெண்கள் உலகம்
பெண்கள் விரும்பும் புதுமையான சமையலறை உபகரணங்கள்
- இப்பொழுது புதுமையான பல சமையலறை உபகரணங்கள் நேரத்தை மிச்சப்படுத்துவதற்காக வந்திருக்கின்றன.
- சாதத்தை வடித்து சாப்பிடுபவர்களுக்கென்றே கஞ்சியை தனியாக வடிப்பது போன்று குக்கர்களும் வந்திருக்கின்றன.
இன்றைய காலகட்டத்தில் பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்களும் வீட்டு வேலைகளில் பங்கெடுத்து செய்வதோடு வேலைகளை எளிதாக முடிக்க விருப்பப்படுகிறார்கள். இவர்களுக்காகவே இப்பொழுது புதுமையான பல சமையலறை உபகரணங்கள் நேரத்தை மிச்சப்படுத்துவதற்காக வந்திருக்கின்றன என்றால் சற்று யோசிக்கத் தோன்றுகிறது அல்லவா. என்னதான் சமையல் வேலைகளில் ஆண்கள் பங்கெடுத்தாலும் மாவு அரைப்பது, சப்பாத்தி போடுவது போன்ற வேலைகளை செய்யத் தயங்குவார்கள். அதுபோன்ற வேலைகளையும் எளிதாக செய்வதற்கென்றே புதுமையான உபகரணங்களை பல நிறுவனங்கள் அறிமுகப்படுத்தியுள்ளன…
* இப்பொழுது வந்திருக்கும் மாவு அரைக்கும் கிரைண்டர்கள் இடத்தையும், நேரத்தையும், பணத்தையும் மிச்சப்படுத்தும் விதத்தில் இருக்கின்றன என்றால் நம்ப முடிகின்றதா. ஆமாம்., இந்த புதுமையான கிரைண்டர்கள் இடத்தை அடைக்காதவாறு மிகச் சிறிய இடத்திலும் வைத்துக் கொள்வது போல் மோட்டருக்கு மேலேயே மாவரைக்கும் பாத்திரமானது இருப்பது போல் வடிவமைத்திருக்கிறார்கள்.. இதில் அரிசி மற்றும் உளுந்தைப் போட்டுவிட்டு தேவையான அளவு தண்ணீரை ஊற்றி மூடியை போட்டு மூடி கிரைண்டரை இயக்க வேண்டும்.. இடையில் தண்ணீர் தேவைப்பட்டால் மூடியின் மேற்புறத்தில் இருக்கும் சிறிய துளை வழியே தண்ணீரை ஊற்றிக் கொள்ளலாம். அதேபோல் மாவு அரைத்து முடித்தபிறகு நாம் கைகளால் மாவை அள்ள வேண்டிய அவசியமே இல்லை..
இந்த கிரைண்டரில் மாவரைக்கும் பாத்திரம் சுற்றாமல் அதன் உள்ளிருக்கும் கற்கள் மட்டும் சுற்றுவதுபோல் வடிவமைத்திருக்கிறார்கள்..இந்த தொழில்நுட்பத்தின் மூலம் அரைக்கும் மாவானது சூடாவது தவிர்க்கப்படுகின்றது..இதனால் இட்லி கூடுதல் மிருதுவாக வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்று கூறப்படுகின்றது..மாவரைக்கும் பாத்திரத்திலேயே கீழ்ப்புறத்தில் மாவு வெளியேறுவதற்காக ஒரு துளையானது கொடுக்கப்பட்டுள்ளது.. மாவு அரைத்து முடித்தபிறகு அந்த துளையின் மூடியை அகற்றி பாத்திரத்தில் இருக்கும் மாவை கைகளில் தொடாமலேயே மற்றொரு பாத்திரத்திற்கு மாற்றிவிட முடியும்.. அதேபோல் அந்த மாவு பாத்திரத்தை கழுவுவதற்கும் மேற்புறத்தில் தண்ணீரை ஊற்றி கிரைண்டரை இயக்கினால் அது நன்றாக சுத்தமாகி அந்த தண்ணீரும் துளை வழியாக வெளியேறிவிடும். சாதாரண கிரைண்டர்கள் இயங்கும் அந்த நேரத்திலேயே மிகவும் அருமையாக மாவை அரைத்துத் தரும் இந்த புதுமையான கிரைண்டரை விரும்பாதவர்கள் இருக்க முடியாது.ஆண்கள்,உடல்நிலை முடியாதவர்கள் மட்டுமல்லாது வயதானவர்களும் இந்த கிரைண்டரை எளிதாக உபயோகிக்கலாம்..
*சாதத்தை வடித்து சாப்பிடுபவர்களுக்கென்றே கஞ்சியை தனியாக வடிப்பது போன்று குக்கர்களும் வந்திருக்கின்றன.இந்த குக்கர் மூடியில் மேற்புறத்தில் தண்ணீர் குழாய் போன்று கொடுக்கப்பட்டுள்ளது. மூடியின் உட்புறம் நீளமான ஸ்ட்ரா போன்ற அமைப்பு இணைக்கப்பட்டுள்ளது.இதன் வழியாக சாதத்தில் இருக்கும் கஞ்சி மூடியின் வெளிப்புறம் கொடுக்கப்பட்டுள்ள குழாயின் வழியாக வெளியேறிவிடும். இந்தக் குழாயின் மேற்புறத்தில் ஒரு சிறிய திருகு மூடி ஒன்று இருக்கின்றது. இந்த திருமுடியை திறப்பதன் மூலம் சாதத்தில் இருக்கும் கஞ்சி வெளியேற்றப்படுகிறது.. நம் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டும் இந்த குக்கர்களை விரும்பாதவர்கள் இருக்கமாட்டார்கள்..
*வீட்டிலேயே நம் வசதிக்கேற்ப எண்ணையை அரைத்துக் கொடுக்கும் இயந்திரங்களும் மிகவும் கச்சிதமான அளவுகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன அரைக்கிலோ வேர்க்கடலையைக் கூட இந்த இயந்திரத்தில் போட்டு சுத்தமான எண்ணெயை எடுக்க முடியும் என்பதுதான் இதன் தனிச்சிறப்பு.. இந்த எண்ணெய் இயந்திரத்தின் மேற்புறத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் பாத்திரத்தில் அரைக்க வேண்டிய எள், வேர்க்கடலை,தேங்காய்,பாதாம், சூரியகாந்தி விதை என எவற்றை வேண்டுமானாலும் ஒருமுறை அரைப்பதற்கு அரை கிலோ என்ற அளவில் போடமுடியும்.இயந்திரத்தின் உள்ளே செல்லும் இவை எண்ணை தனியாகவும் சக்கை தனியாகவும் பிரித்து வெளியேற்றப்படுகின்றது.நம் கண்ணெதிரிலேயே மிகவும் சுத்தமாகவும் நமக்கு ஆரோக்கியத்தை அளிக்கக்கூடியதுமான இந்த எண்ணை அரைக்கும் இயந்திரம் ஒவ்வொருவரது சமையலறையிலும் இருக்கவேண்டிய தவிர்க்கமுடியாத உபகரணம் என்று சொல்லலாம்.வாரத்திற்கு ஒரு முறை நம் வீட்டிற்குத் தேவையான எண்ணெயை நாமே அரைத்துக் கொள்ளலாம். அழகான வடிவமைப்புடன் இருக்கும் இந்த இயந்திரம் இடத்தை அடைக்காமல் இருப்பதுபோல் கச்சிதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
*சாதாரண டேபிள் டாப் கிரைண்டரின் வடிவத்தில் சப்பாத்தி தேய்த்துக் கொடுக்கும் இயந்திரம் விற்பனையில் உள்ளது என்றால் நம்ப முடிகின்றதா? இந்த இயந்திரத்தில் சப்பாத்தி தேய்க்கும் கல் மற்றும் பூரிக்கட்டையும் கொடுக்கப்பட்டுள்ளது. சப்பாத்தி தேய்க்கும் கல்லின் மீது வட்ட வடிவில் உறுதியான, மெலிதான பிளாஸ்டிக் தாள்கள் இருக்கின்றன.சப்பாத்தி உருண்டையை உருட்டி இரண்டு பிளாஸ்டிக் தாள்களின் இடையில் வைத்து அதன்மீது பூரி கட்டையை பிரஸ் செய்து இந்த இயந்திரத்தை இயக்கினால் பூரி கட்டையில் இருக்கும் இரண்டு உருளைகளும் எதிரெதிர் திசையில் இயங்கி சப்பாத்தியை மிகவும் மெல்லியதாக திரட்டித் தருகின்றன..ஐந்து நபர்கள் வரை இருக்கும் குடும்பத்திற்கு இந்த சப்பாத்தி திரட்டும் இயந்திரம் மிகவும் உபயோகமானதாக இருக்கும்.இப்பொழுது சொல்லுங்கள் இந்த இயந்திரம் வீட்டில் இருந்தால் ஆண்களும் எளிதாக பூரி மற்றும் சப்பாத்தி செய்ய முடியும் தானே?
*சமையலறையில் சமைக்கும் பொழுது ஃபேனை இயக்கினால் கேஸ் அடுப்பு அணைந்து விடும்.. எனவே பெரும்பாலான நேரங்களில் வேர்த்து விறுவிறுத்து தான் எந்த ஒரு வேலையையும் செய்ய முடிகின்றது. இதனால் சீக்கிரமாகவே சோர்வு ஏற்பட்டு விடுகின்றது..இதுபோன்ற சோர்வு ஏற்படாமல் புத்துணர்ச்சியுடன் சமையலறையில் இருப்பதற்காகவே பிரத்தியேகமாக ஃபேன் களை வடிவமைத்திருக்கிறார்கள்.. இந்தப் ஃபேன்களை அடுப்பின் அருகிலேயே வைத்து இயக்கினாலும் அவை அடுப்பை அணைக்காமல் அதே நேரத்தில் நமக்கும் குளுமையான காற்றை தரக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றின் உயரத்தை நமக்கு ஏற்றவாறு ஏற்றி இறக்கிக் கொள்ள முடியும்.சீலிங் ஃபேனிற்கு மாற்றாக வந்திருக்கும் இந்த ஃபேன்களை சமையலறையில் மட்டுமல்ல எங்கு வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம்
* ஏசி பொருத்த முடியாத இடங்களிலும் வைத்துக் கொள்வது போல் போர்ட்டபிள் ஏசியை வடிவமைத்து விற்பனையில் சாதனை படைத்துக் கொண்டிருக்கிறார்கள்.. இந்த சிறிய வகை ஏசியை சமையலறை, படுக்கை அறை, அலுவலக அறை என எங்கு வேண்டுமானாலும் எந்த ஊருக்கு வேண்டுமானாலும் நம்முடனேயே எடுத்துச் செல்ல முடியும்.சிறிய ஏர் கூலர் வடிவில் இருக்கும் இந்த போர்ட்டபிள் ஏசி அதிகப்பட்ச குளிர்ச்சியை கொடுக்கின்றது.. இந்த ஏசியின் அடிப்புறத்தில் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர்த்திச் செல்வதற்கு வசதியாக சக்கரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்