search icon
என் மலர்tooltip icon

    உலக கோப்பைச்செய்திகள்

    லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
    பாகிஸ்தான் - தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் உலகக்கோப்பை தொடரின் 30-வது லீக் ஆட்டம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் மதியம் 3 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமது டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.
    உலகக்கோப்பை கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட்டுக்கள் வீழ்த்தி முகமது ஷமி சாதனைப் படைத்துள்ளார்.
    ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தவர் வேகப்பந்து வீரர் முகமது ஷமி. அவர் 9.5 ஓவர் வீசி 40 ரன் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார்.

    கடைசி ஓவரில் முகமது ஷமி அடுத்தடுத்து 3 விக்கெட் கைப்பற்றி ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தார். 3-வது பந்தில் முகமது நபி, 4- வது பந்தில் அப்தாப் ஆலம், 5-வது பந்தில் முஜீபுர் ரகுமான் ஆகியோரையும் அவர் ‘அவுட்’ செய்தார்.

    இதன் மூலம் உலகக்கோப்பை போட்டியில் ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்த 2-வது இந்தியர் என்ற சாதனையை முகமது ஷமி பெற்றார். இதற்கு முன்பு 1987-ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக சேட்டன் சர்மா ‘ஹாட்ரிக்’  நிகழ்த்தி இருந்தார். சர்வதேச அளவில் 9-வது வீரர் ஆவார்.

    உலகக்கோப்பையில் 10-வது ‘ஹாட்ரிக்’ நிகழ்வாகும். உலகக்கோப்பையில் ஹாட்ரிக் சாதனை படைத்த வீரர்கள் வருமாறு:-

    சேட்டன் சர்மா (இந்தியா)- நியூசிலாந்து- 1987
    சக்லைன் முஸ்தாக் (பாகிஸ்தான்) ஜிம்பாப்வே 1999
    சமிந்தா வாஸ் (இலங்கை) வங்காளதேசம் 2003
    பிரெட் லீ (ஆஸ்திரேலியா) தென்ஆப்பிரிக்கா 2003
    மலிங்கா    (இலங்கை) தென்ஆப்பிரிக்கா 2007
    கேமர் ரோச் (வெஸ்ட் இண்டீஸ்) நெதர்லாந்து 2011
    மலிங்கா    (இலங்கை) கென்யா 2011
    ஸ்டீவ்பின் (இங்கிலாந்து) ஆஸ்திரேலியா 2015
    டுமினி (தென்ஆப்பிரிக்கா) இலங்கை 2015
    முகமது ஷமி (இந்தியா) ஆப்கானிஸ்தான் 2019
    ஆப்கானிஸ்தானுக்கு எதிராக போராடி வென்றது முக்கியமானது என இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
    உலகக்கோப்பை போட்டியில் ஆப்கானிஸ்தானை கடும் போராட்டத்துக்கு பிறகு வீழ்த்தி இந்தியா 4-வது வெற்றியை பெற்றது. கடைசி ஒவரில்தான் இந்தியா வெற்றி பெற்றது. பும்ரா மற்றும் ஷமியின் கடைசி கட்ட ஓவர்கள் சிறப்பாக அமைந்ததால் வெற்றி கிட்டியது.

    இந்த வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூறுகையில் ‘‘அதிக ரன்களை குவிக்க வேண்டும் என்பதற்காக ‘டாஸ்’ வென்றதும் பேட்டிங்கை தேர்வு செய்தேன். ஆனால் அதன் பிறகுதான் ஆடுகளம் மெதுவாக இருந்தது தெரிய வந்தது. இதனால் 260 அல்லது 270 ரன்னை எடுத்தால் நல்ல ஸ்கோர் என்று கருதினேன்.

    ஒரு கட்டத்தில் எனது மனதில் என்ன நடக்குமோ? என்ற சந்தேகம் வந்துவிட்டது. பிட்சின் தன்மையை கருத்தில் கொண்டு ஒன்று, இரண்டு ரன்களை அடிக்க வேண்டும் என்பதை உணர்ந்தேன். ஆப்கானிஸ்தான் அணியில் 3 சிறந்த சுழற்பந்து வீரர்கள் இருந்தனர். எங்களது திட்டத்தை செயல்படுத்த முடியாத வகையில் அவர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள். முகமது நபி மிகவும் அபாரமாக வீசினார்.

    எங்களது பந்து வீச்சாளர்கள் அபாரமாக பந்து வீசி இந்த வெற்றியை பெற்று தந்தனர். பும்ரா எந்த நேரத்திலும் விக்கெட்டுகளை வீழ்த்தக்கூடியவர். இந்தப்போட்டியில் அவர் சிறப்பாக பந்து வீசினார். முகமது ஷமி கடைசி ஓவரை அபாரமாக வீசினார். விஜய் சங்கரும் பீல்டிங்கில் சிறப்பாக செயல்பட்டார்.



    ஆப்கானிஸ்தானுக்கு எதிராக கடுமையாக போராடி பெற்ற இந்த வெற்றி எங்களுக்கு மிகவும் முக்கியமானது. ஒவ்வொரு வீரரும் வாய்ப்புக்காக காத்திருக்கிறார்கள். உலகக்கோப்பையில் ஆடுவது ஒவ்வொரு வீரருக்கும் பெருமையானதாகும்’’ என்றார்.

    இந்திய அணி 6-வது ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸை வருகிற 27-ந்தேதி சந்திக்கிறது. ஆப்கானிஸ்தான் அணி தொடர்ந்து 6-வது தோல்வியை தழுவியது. அந்த அணி கடுமையாக போராடிதான் வெற்றியை பறிகொடுத்தது. போட்டியில் தோற்றாலும் ஆப்கானிஸ்தான் வீரர்கள் அனைவரது மனதிலும் இடம் பெற்றுவிட்டனர். அந்த அணி 7-வது ஆட்டத்தில் வங்காள தேசத்தை நாளை எதிர்கொள்கிறது.
    ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பெற்ற வெற்றி, உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா பெற்ற 50-வது வெற்றியாக அமைந்தது.
    லண்டன்:

    சவுத்தாம்டனில் நேற்று நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. முதலில் ஆடிய இந்தியா
    நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் எடுத்தது.

    தொடர்ந்து ஆடிய ஆப்கானிஸ்தான் 49.5 ஓவரில் 213 ரன்னுக்கு சுருண்டது. இறுதி ஓவரில் மொகமது ஷமி ஹாட்ரிக் விக்கெட் எடுத்து சாதனை படைத்தார். இந்தியா 11 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

    உலகக்கோப்பை அரங்கில் இந்திய அணிக்கு கிடைத்த 50-வது வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது. அதிக வெற்றிகள் பெற்ற அணிகள் வரிசையில் மூன்றாவது இடத்தில் நீடிக்கிறது. 67 வெற்றிகள் பெற்று ஆஸ்திரேலியா முதலிடத்திலும், 52 வெற்றிகளுடன் நியூசிலாந்து 2வது இடத்திலும் உள்ளது. 
    உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ள இன்றைய லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி தென்ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.
    லண்டன்:

    உலக கோப்பை கிரிக்கெட் திருவிழாவில் லண்டன் லார்ட்சில் இன்று நடக்கும் 30-வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான்-தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் நடப்பு தொடரில் நடக்கும் முதல் ஆட்டம் இது தான்.

    சர்ப்ராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் அணி 5 ஆட்டங்களில் விளையாடி ஒரு வெற்றி, 3 தோல்வி, ஒரு முடிவில்லை என்று 3 புள்ளியுடன் பட்டியலில் 9-வது இடம் வகிக்கிறது. இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 89 ரன் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்ததால் கடும் விமர்சனத்திற்குள்ளானது பாகிஸ்தான் அணி.

    அரையிறுதி வாய்ப்பில் நீடிக்க வேண்டுமெனில் இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் பாகிஸ்தான் அணி களமிறங்க உள்ளது. 

    பாகிஸ்தான் அணியின் பேட்டிங்கில் பஹார் ஜமான், இமாம் உல்-ஹக், பாபர் அசாம், முகமது ஹபீஸ் ஆகியோர் மட்டுமே நம்பிக்கை அளித்து வருகின்றனர். மூத்த வீரர் சோயிப் மாலிக் தொடர்ந்து சொதப்புவதால் அவருக்கு பதிலாக ஹாரிஸ் சோகைல் சேர்க்கப்படலாம். பந்துவீச்சில் முகமது அமிர் (13 விக்கெட்) தவிர மற்றவர்கள் தடுமாறுகிறார்கள்.



    பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான தென்ஆப்பிரிக்க அணி 6 ஆட்டங்களில் விளையாடி ஒரு வெற்றி, 4 தோல்வி, ஒரு முடிவில்லை என்று 3 புள்ளி மட்டுமே பெற்று இருக்கிறது. கிட்டத்தட்ட அடுத்து சுற்று வாய்ப்பை பறிகொடுத்து விட்ட தென்ஆப்பிரிக்க அணி, எஞ்சிய 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று ரன்ரேட்டில் ஏற்றமும், மற்ற ஆட்டங்களின் முடிவு எல்லா வகையில் சாதகமாகவும் அமைந்தால் ஒரு வேளை அதிர்ஷ்டம் அடிக்கலாம்.

    தென்ஆப்பிரிக்காவின் பந்து வீச்சு மிரட்டலாக இருந்தாலும், பேட்டிங்கில் ஒருங்கிணைப்பு இல்லை. ஒவ்வொரு ஆட்டத்திலும் ஒரு சிலரே கணிசமாக ரன்கள் எடுக்கிறார்கள். அந்த அணியில் எந்த ஒரு வீரரும் ஒரு சதம் கூட அடிக்கவில்லை என்பதே அவர்களின் பலவீனமாக தெரிகிறது.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    தென்ஆப்பிரிக்கா: குயின்டான் டி காக், அம்லா, பாப் டு பிளிஸ்சிஸ் (கேப்டன்), மார்க்ராம், வான்டெர் துஸ்சென், டேவிட் மில்லர், பெலக்வாயோ, கிறிஸ் மோரிஸ், ரபடா, இம்ரான் தாஹிர், நிகிடி.

    பாகிஸ்தான்: இமாம் உல்-ஹக், பஹார் ஜமான், பாபர் அசாம், முகமது ஹபீஸ், சர்ப்ராஸ் அகமது (கேப்டன்), ஹாரிஸ் சோகைல், இமாத் வாசிம், ஷதப் கான், ஹசன் அலி அல்லது ஷகீன் அப்ரிடி, வஹாப் ரியாஸ், முகமது அமிர்.

    இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
    உலக கோப்பை கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி திரில் வெற்றிபெற்றது.
    மான்செஸ்டர்:

    உலகக்கோப்பை தொடரின் 29-வது லீக் ஆட்டம்  மான்செஸ்டரில் தொடங்கியது. இதில் வெஸ்ட் இண்டீஸ்- நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஹோல்டர் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

    இதையடுத்து, நியூசிலாந்து அணியின் மார்டின் கப்தில், காலின் மன்ரோ தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர். வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஷெல்டன் காட்ரெல் முதல் ஓவரிலேயே இருவரையும் பெவிலியனுக்கு அனுப்பி அதிர்ச்சி வைத்தியம் அளித்தார். அடுத்து இறங்கிய கேப்டன் கேன் வில்லியம்சனுடன் ராஸ் டெய்லர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாகவும், பொறுப்புடனும் ஆடியது. டெய்லர் அரை சதமடித்து அசத்தினார்.



    160 ரன்கள் ஜோடி சேர்த்த நிலையில், டெய்லரை கெயில் அவுட்டாக்கினார். டெய்லர் 69 ரன்னில் அவுட்டானார். அடுத்து வந்த வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், கேன் வில்லியம்சன் சிறப்பாக விளையாடி சதமடித்தார். அவர் 148 ரன்கள் எடுத்த நிலையில் காட்ரெல் அவரை வெளியேற்றினார். இறுதியில், நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 291 ரன்களை எடுத்துள்ளது.

    வெஸ்ட் இண்டீஸ் சார்பில் காட்ரெல் 4 விக்கெட்டும், பிராத்வெயிட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 292 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கிறிஸ் கெய்ல் மற்றும் ஷாய் ஹோப் களம் இறங்கினர்.   இருவரும் ஜோடி சேர்ந்த நிலையில் ஆட்டத்தின் 2.4வது ஓவரில் ஷாய் ஹோப் 1 (3) ரன் எடுத்த நிலையில் அவுட்டானார்.  அடுத்ததாக களம் இறங்கயி நிகோலஸ் பூரன் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார்.  இதனையடுத்து ஹெட்மயர் களம் இறங்க, கிறிஸ் கெய்ல் இவருடன் ஜோடி சேர்ந்து அணியின் ரன்களை குவிக்க தொடங்கினர்.   கிறிஸ் கெல் மற்றும் ஹெட்மயர் இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சதத்தை கடந்தனர்.   இந்நிலையில் ஆட்டத்தின் 22.1 வது ஓவரில் ஹெட்மயர் 54 (45) ரன்கள் எடுத்து அவுட்டானார்.



    வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஜாசன் ஹோல்டர் ரன் ஏதும் எடுக்காமல் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி 152 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டத்தின் 23.6 வது ஓவரில் அதிரடி வீரர் கிறிஸ் கெல் 84 பந்துகளை சந்தித்து 87 ரன்கள் எடுத்திருந்த போது கிரான்ட்ஹோம் வீசிய பந்தில் அவுட்டானார்.   அஸ்லே நர்ஸ் 1(8) ரன்னும், இவின் லீவீஸ் (0) ரன் ஏதும் எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து களம் இறங்கிய  பிரித்வெய்ட்டுடன், கேமர் ரோச் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிலைத்து நின்று ஒரளவு ரன் சேர்த்திருந்தநிலையில் கேமர் ரோச் 14(31) ரன்களில் வெளியேறினார்.  அணிக்கான பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரித் வெய்ட் தனது அரைசதத்தை பதிவு செய்தார். அடுத்து களமிறங்கிய ஷெல்டன் கட்ரல் 15(25) ரன்களில் கேட்ச் ஆனார். தனி ஒருவனாக போராடிய பிரித்வெய்ட் தனது சதத்தை பதிவு செய்த நிலையில் 101(82) ரன்களில் ஆட்டமிழந்தார்.



    இறுதியில் தாமஸ் (0) ரன் ஏதும் எடுக்காமல் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். முடிவில் வெஸ்ட் இண்டிஸ் அணி 49 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 286 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

    நியூசிலாந்து  அணியின் சார்பில் அதிகபட்சமாக டிரண்ட் போல்ட் 4 விக்கெட்டுகளும், பர்குசன் 3 விக்கெட்டுகளும், நீஷம், ஹென்றி மற்றும் கிராண்ட்ஹோம் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்றது. 
    உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை 11 ரன் வித்தியாசத்தில் வென்றது இந்தியா.
    சவுத்தாம்டன்:  

    இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் உலகக்கோப்பை தொடரின் 28-வது லீக் ஆட்டம்  சவுத்தாம்டனில் இன்று மதியம் 3 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக லோகேஷ் ராகுலும்  ரோகித் சர்மாவும் களமிறங்கினர்.

    ரோகித் சர்மா ஒரு ரன்னில் வெளியேறி அதிர்ச்சி அளித்தார். ஆப்கானிஸ்தான் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினர். அதனால் இந்திய அணியின் ரன்வேகம் குறைந்தது. 

    ஆனாலும் விராட் கோலி, கேதார் ஜாதவ் ஆகியோர் ஓரளவு சிறப்பாக ஆடி அரை சதமடித்தனர். கோலி 67 ரன்னிலும், கேதார் ஜாதவ் 52 ரன்னிலும் அவுட்டாகினர். இறுதியில், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    ஆப்கானிஸ்தான் தரப்பில் குல்பதின் நயீப், ரஷித் கான் 2 விக்கெட் வீழ்த்தினர்.



    இதையடுத்து, 225 ரன்களை இலக்காக கொண்டு ஆப்கானிஸ்தான் அணி இறங்கியது. ஹஸ்மதுல்லா சசாயும், கேப்டன் குல்பதின் நயிபும் ஆடினர். நயிப் 27 ரன்னிலும், ரஹ்மத் ஷா 34 ரன்னிலும் ஹஸ்மதுல்லா ஷஹிதி 21 ரன்னிலும் அவுட்டாகினர். அடுத்து இறங்கிய மொகமது நபி ஓரளவு தாக்குப்பிடித்து அரை சதமடித்தார். இறுதி ஓவரில் 52 ரன் எடுத்து அவுட்டனார்.

    இறுதியில், ஆப்கானிஸ்தான் அணி 49.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 213 ரன்களை எடுத்து தோற்றது. இந்தியா 11 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இறுதி ஓவரில் ஷமி ஹாட்ரிக் விக்கெட் எடுத்து அசத்தினார்.

    இந்தியா சார்பில் ஷமி 4 விக்கெட்டும், பும்ரா, சாஹல், பாண்டியா ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
    உலகக்கோப்பை கிரிக்கெட்டில் மான்செஸ்டரில் நடந்த போட்டியில் கேன் வில்லியம்சனின் அபார சதத்தால் வெஸ்ட் இண்டீசுக்கு 292 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது நியூசிலாந்து.
    மான்செஸ்டர்:

    உலகக்கோப்பை தொடரின் 29-வது லீக் ஆட்டம்  மான்செஸ்டரில் இன்று மாலை 6 மணிக்கு தொடங்கியது. இதில் வெஸ்ட் இண்டீஸ்- நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஹோல்டர் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

    இதையடுத்து, நியூசிலாந்து அணியின் மார்டின் கப்தில், காலின் மன்ரோ தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.

    வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஷெல்டன் காட்ரெல் முதல் ஓவரிலேயே இருவரையும் பெவிலியனுக்கு அனுப்பி அதிர்ச்சி வைத்தியம் அளித்தார்.

    அடுத்து இறங்கிய கேப்டன் கேன் வில்லியம்சனுடன் ராஸ் டெய்லர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாகவும், பொறுப்புடனும் ஆடியது.
    டெய்லர் அரை சதமடித்து அசத்தினார். 



    160 ரன்கள் ஜோடி சேர்த்த நிலையில், டெய்லரை கெயில் அவுட்டாக்கினார். டெய்லர் 69 ரன்னில் அவுட்டானார். அடுத்து வந்த வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.

    ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், கேன் வில்லியம்சன் சிறப்பாக விளையாடி சதமடித்தார். அவர் 148 ரன்கள் எடுத்த நிலையில் காட்ரெல் அவரை வெளியேற்றினார்.

    இறுதியில், நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 291 ரன்களை எடுத்துள்ளது.

    வெஸ்ட் இண்டீஸ் சார்பில் காட்ரெல் 4 விக்கெட்டும், பிராத்வெயிட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, 292 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்க உள்ளது.
    உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானுக்கு 225 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா.
    சவுத்தாம்டன்:  

    இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் உலகக்கோப்பை தொடரின் 28-வது லீக் ஆட்டம்  சவுத்தாம்டனில் இன்று மதியம் 3 மணிக்கு நடக்கிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.  

    அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக லோகேஷ் ராகுலும்  ரோகித் சர்மாவும் களமிறங்கினர். ரோகித் சர்மா ஒரு ரன்னில் வெளியேறி அதிர்ச்சி அளித்தார்.

    ஆப்கானிஸ்தான் பந்துவீச்சில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தியது. விராட் கோலி, கேதார் ஜாதவ் ஆகியோர் ஓரளவு சிறப்பாக ஆடி அரை சதமடித்தனர். கோலி 67 ரன்னிலும், கேதார் ஜாதவ் 52 ரன்னிலும் அவுட்டாகினர்.

    இறுதியில், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    ஆப்கானிஸ்தான் தரப்பில் குல்பதின் நயீப், ரஷித் கான் 2 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து ஆப்கானிஸ்தான் அணிக்கு 225 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
    மான்செஸ்டரில் இன்று நடைபெறும் உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் நியூசிலாந்துக்கு எதிராக டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
    மான்செஸ்டர்:-

    வெஸ்ட் இண்டீஸ்- நியூசிலாந்து அணிகள் மோதும் உலகக்கோப்பை தொடரின் 29-வது லீக் ஆட்டம்  மான்செஸ்டரில் இன்று மாலை 6 மணிக்கு நடக்கிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஹோல்டர் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.  

    நியூசிலாந்து அணி இதுவரை 5 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிபட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. அதேசமயம் வெஸ்ட் இண்டீஸ்அணி இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிபட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது. 
    சவுத்தாம்டனில் இன்று நடைபெறும் உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
    சவுத்தாம்டன்:  


    இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் உலகக்கோப்பை தொடரின் 28-வது லீக் ஆட்டம்  சவுத்தாம்டனில் இன்று மதியம் 3 மணிக்கு நடக்கிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.  

    இந்திய அணி இதுவரை 4 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிபட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. அதேசமயம் ஆப்கானிஸ்தான் அணி இதுவரை விளையாடிய 5 போட்டிகளிலும் தோல்வியடைந்து புள்ளிபட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.   
    வீரர்களின் கூட்டு முயற்சியால் இங்கிலாந்து அணியை வீழ்த்தினோம் என்று கேப்டன் கருணாரத்னே கூறியுள்ளார்.

    லீட்ஸ்:

    உலக கோப்பை போட்டியில் இங்கிலாந்துக்கு அதிர்ச்சி கொடுத்து இலங்கை அணி 2-வது வெற்றியை பெற்றது.

    லீட்ஸ் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 232 ரன் எடுத்தது.

    முன்னாள் கேப்டன் மேத்யூஸ் 85 ரன்னும், பெர்ணாண்டோ 49 ரன்னும், மெண்டிஸ் 46 ரன்னும் எடுத்தனர். ஆர்ச்சர், மார்க்வுட் தலா 3 விக்கெட்டும், ஆதில் ரஷீத் 2 விக்கெட்டும், கிறிஸ் வோக்ஸ் 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    233 ரன் இலக்கை இங்கிலாந்து எளிதில் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் இலங்கை வீரர்களின் அபாரமான பந்து வீச்சால் அந்த அணி திணறியது. 47 ஓவர்களில் 212 ரன்னில் ‘ஆல்அவுட்’ ஆகி 20 ரன்னில் இங்கிலாந்து அதிர்ச்சிகரமாக தோற்றது.

    பென் ஸ்டோக்ஸ் கடைசிவரை போராடியும் பலன் இல்லாமல் போனது. 5-வது வீரராக களம் இறங்கிய அவர் 89 பந்தில் 82 ரன் (7 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். ஜோரூட் 57 ரன் எடுத்தார்.

    மலிங்கா 43 ரன் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். தனஞ்ஜெய டிசில்வா 3 விக்கெட்டும், உதனா 2 விக்கெட்டும், பிரதீப் 1 விக்கெட்டும் எடுத்தனர்.

    தர வரிசையில் முதல் இடத்தில் இருக்கும் இங்கிலாந்து அணி 2-வது தோல்வியை தழுவியது. ஏற்கனவே பாகிஸ்தானிடம் 14 ரன்னில் தோற்று இருந்தது.

    இலங்கையிடம் ஏற்பட்ட தோல்வி குறித்து அந்த அணியின் கேப்டனும், அதிரடி பேட்ஸ்மேனுமான மார்கன் கூறியதாவது:-

    எங்களது ஆட்டத்திறனை செயல்படுத்துவதில் கனிசமான அளவில் தவறுகள் செய்து விட்டோம். போதுமான அளவு திறமையை வெளிப்படுத்த வில்லை. எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும் போது இது மாதிரி ஒரு போட்டியில் தோல்வி ஏற்படும். இந்த ஆடுகளத்தில் பந்து வீச்சை எதிர்கொள்வது சவாலாக இருந்தது. நாங்கள் அடுத்தப் போட்டியில் எழுச்சி பெறுவோம். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆக்ரோ‌ஷமாக ஆடுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இலங்கை அணி பெற்ற 2-வது வெற்றி யாகும். ஏற்கனவே ஆப்கானிஸ்தானை 34 ரன்னில் தோற்கடித்து இருந்தது. இங்கிலாந்தை வீழ்த்தியது குறித்து அந்த அணி கேப்டன் கருணா ரத்னே கூறியதாவது:-

    வீரர்களின் கூட்டு முயற்சியால் இந்த வெற்றி கிடைத்தது. பேட்ஸ்மேன்களும், பந்து வீச்சாளர்களும் சிறப்பாக செயல்பட்டனர். இது மாதிரியான ஆடுகளத்தில் 300 ரன்களை குவிக்க முடியாது. இதனால் 250 முதல் 275 ரன் வரை விரும்பினோம். மேத்யூசின் பேட்டிங் அபாரமாக இருந்தது.

    232 ரன் எடுத்தாலும் பந்து வீச்சாளர்கள் நேர்த்தியாக செயல்பட்டு இங்கிலாந்தை கட்டுப்படுத்தினார்கள். குறிப்பாக மலிங்காவின் பந்து வீச்சு பிரமாதமாக இருந்தது. அவர் ஒரு சகாப்தம் இதே போல தனஞ்ஜெயா டிசில்வாவும் அபாரமாக வீசினார்.


    இவ்வாறு அவர் கூறினார்.

    இலங்கை அணி 7-வது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை வருகிற 28-ந்தேதி சந்திக்கிறது.

    இங்கிலாந்து அணி அடுத்தப் போட்டியில் ஆஸ்திரேலியாவை 25-ந் தேதி எதிர்கொள்கிறது. 

    ×