search icon
என் மலர்tooltip icon

    உலக கோப்பைச்செய்திகள்

    நாட்டிங்காம் ட்ரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெறும் வங்காள தேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
    ஆஸ்திரேலியா - வங்காள தேச அணிகள் மோதும் உலகக்கோப்பை தொடரின் 26-வது லீக் ஆட்டம் நாட்டிங்காம் ட்ரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் மதியம் 3 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் ஆஸ்திரேலியா கேப்டன் ஆரோன் பிஞ்ச் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.
    காயம் காரணமாக ஷிகர் தவான் விலகியுள்ள நிலையில், ரிஷப் பந்தை மாற்று வீரராக சேர்த்துக் கொள்ள இந்திய அணிக்கு ஐசிசி அனுமதி அளித்துள்ளது.
    உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் ஷிகர் தவான் இடம்பிடித்திருந்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தின்போது அவருக்கு இடது கை பெருவிரலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை.

    மூன்று வாரத்திற்குள் காயம் குணமடைந்து விடும் என ஆணி நிர்வாகம் நம்பிக்கையில் இருந்தது. ஆனால், காயம் குணமடைய அவர்கள் எதிர்பார்த்ததை விட கூடுதல் நாட்கள் ஆகும் என டாக்டர்கள் கூறியதால் இந்திய அணியில் இருந்து தவான் விலகியுள்ளார்.

    அவருக்குப் பதிலாக ரிஷப் பந்தை அணியில் சேர்த்துக் கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என்று பிசிசிஐ, உலகக்கோப்பை போட்டிக்கான தொழில்நுட்ப கமிட்டியிடம் அனுமதி கோரியிருந்தது.



    அக்குழு தவானின் காயம் குறித்த அறிக்கையை நன்கு ஆராய்ந்து, மாற்று வீரராக ரிஷப் பந்தை சேர்த்துக் கொள்ளலாம் என அனுமதி அளித்துள்ளது. இதனால் ரிஷப் பந்த் 15 பேர் கொண்ட இந்திய அணியில் இடம்பிடித்து, வீரர்கள் அறைகளில் உலாவருவார். ஆனால், ஆடும் லெவன் அணியில் இடம் பிடிப்பாரா? என்பது கேள்விக்குறியே?.
    பர்மிங்காமில் நடைபெற்ற தென்ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
    பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டனில் நியூசிலாந்து - தென்ஆப்பிரிக்கா இடையிலான ஆட்டம் நடைபெற்றது. அவுட்பீல்டு ஈரப்பதமாக இருந்ததால் ஆட்டம் தாமதமாக தொடங்கப்பட்டது. இதனால் ஆட்டம் 49-வது ஓவராக குறைக்கப்பட்டது.

    டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி தென்ஆப்பிரிக்கா அணியின் குயின்டன் டி காக், ஹசிம் அம்லா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார். டி காக் 5 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.



    அடுத்து வந்த டு பிளிசிஸ் 23 ரன்களும், மார்கிராம் 38 ரன்களும் சேர்த்தனர். ஹசிம் அம்லா 55 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். டேவிட் மில்லர் 37 பந்தில் 36 ரன்களும், வான் டெர் டஸ்ஸன் 64 பந்தில் 67 ரன்கள் எடுக்கவும் தென்ஆப்பிரிக்கா 49 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்கள் எடுத்துள்ளது. இதனால் நியூசிலாந்தின் வெற்றிக்கு 242 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

    இதனையடுத்து 242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந் அணி வீரர்கள் மார்ட்டின் கப்தில், காலின் முன்ரோ களம் இறங்கினர்.  ஆட்டத்தின் தொடக்கத்திலே நியூசிலாந்து அணி வீரர் காலின் முன்ரோ 9 (5) ரன்கள் எடுத்திருந்த போது ரபடா வீசிய பந்தில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அடுத்ததாக நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் களம் இறங்கினார்.  கப்தில் மற்றும் வில்லியம்சன் இணைந்து நின்று ரன்களை உயர்த்த தொடங்கினர்.  இவர்களின் ஜோடியை பிரிக்க நினைத்த தென்ஆப்பிரிக்கா வீரர் பெலக்வாயோ ஆட்டத்தின் 14.6 வது ஓவரில் குப்தில் 35 (59) விக்கெட்டை எடுத்தார். 




    அடுத்து களம் இறங்கிய ராஸ் டெய்லர் 1 (2), டாம் லாதம் 1 (4), ஜேம்ஸ் நீஷம்  23 (34) வந்த வேகத்தில் அவுட்டாகினர்.   தென் ஆப்பிரிக்கா வீரர் கிறிஸ் மோரிஸ் தொடர்ந்து அடுத்தடுத்த ஓவரிரில் நியூசிலாந்து அணியின்  3 விக்கெட்களையும் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.  அதனை தொடர்ந்து கிரான்ட்ஹோம் களம் இறங்கினர்.  கிரான்ட்ஹோம் மற்றும் அணியின் கேப்டன் வில்லியம்சன் இருவரும் இணைந்து பொறுப்புடன் விளையாடி அணியின் ரன்களை உயர்த்த தொடங்கினர்.   இதனிடையே 14 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் நியூசிலாந்து வீரர் கிரான்ட்ஹோம் 60 (47) ரன்கள் எடுத்திருந்த போது நிகிடி வீசிய பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.   ஆட்டத்தின் கடைசி ஓவரில் 6 பந்துகளுக்கு 8 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் நியூசிலாந்து அணி விளையாடியது.   ஆட்டத்தின் 48.1வது ஓவரில் ஒரு ரன்கள் எடுத்தது.  அடுத்ததாக அணியின் கேப்டன் வில்லியம்சன் 48.2 வது ஓவரில் சிக்சர் அடித்து தனது சதத்தை பதிவு செய்தார்.  இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 48.3 ஓவர் முடிவில் நியூசிலாந்து 6 விக்கெட் இழப்பிற்கு 245 ரன்கள் எடுத்தது.  இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    நியூசிலாந்து அணி வீரர் மிட்செல் சான்ட்னெர் மற்றும் வில்லியம்சன் இருவரும் களத்தில் கடைசி வரை நின்று விளையாடினர்.

    நியூசிலாந்து அணி தரப்பில் மார்ட்டின் கப்தில் 35 ரன்களும், கிரான்ட்ஹோம்  60 ரன்களும்,  கேப்டன் வில்லியம்சன்  106 ரன்களும் எடுத்தனர்.

    தென்ஆப்பிரிக்கா தரப்பில் கிறிஸ் மோரிஸ் 3 விக்கெட், பெலக்வாயோ, ரபடா மற்றும்  நிகிடி ஆகியோர் தலா ஒரு விக்கெட்களை எடுத்தனர்.
    பர்மிங்காமில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் நியூசிலாந்துக்கு 242 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது தென்ஆப்பிரிக்கா.
    பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டனில் நியூசிலாந்து - தென்ஆப்பிரிக்கா இடையிலான ஆட்டம் நடைபெற்று வருகிறது. அவுட்பீல்டு ஈரப்பதமாக இருந்ததால் ஆட்டம் தாமதமாக தொடங்கப்பட்டது. இதனால் ஆட்டம் 49-வது ஓவராக குறைக்கப்பட்டது.

    டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி தென்ஆப்பிரிக்கா அணியின் குயின்டன் டி காக், ஹசிம் அம்லா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார். டி காக் 5 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.



    அடுத்து வந்த டு பிளிசிஸ் 23 ரன்களும், மார்கிராம் 38 ரன்களும் சேர்த்தனர். ஹசிம் அம்லா 55 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். டேவிட் மில்லர் 37 பந்தில் 36 ரன்களும், வான் டெர் டஸ்ஸன் 64 பந்தில் 67 ரன்கள் எடுக்கவும் தென்ஆப்பிரிக்கா 49 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்கள் எடுத்துள்ளது. இதனால் நியூசிலாந்தின் வெற்றிக்கு 242 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
    இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்த ஹர்பஜன் சிங், தற்போதைய உலகக்கோப்பைக்கான இந்திய அணிக்கு தன்னுடைய அட்வைஸை வழங்கியுள்ளார்.
    உலகக்கோப்பை தொடரில் இந்தியா இதுவரை தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக விளையாடியுள்ளது. இதில் நியூசிலாந்து அணிக்கெதிரான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.

    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் சுழற்பந்து வீச்சாளரான சாஹல் 51 ரன்கள் விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுக்கள் கைப்பற்றினார். பாகிஸ்தானுக்கு எதிராக குல்தீப் யாதவ் முக்கியமான கட்டத்தில் இரண்டு விக்கெட்டுக்களை கைப்பற்றி திருப்புமுனை ஏற்படுத்தினார்.

    இதற்கிடையில் இந்தியா இரண்டு பந்து வீச்சாளர்களுடன் விளையாட வேண்டுமா?. குல்தீப் யாதவுக்குப் பதிலாக முகமது ஷமியை தேர்வு செய்யலாம் என்ற கேள்விகள் ஒரு பக்கத்தில் இருந்து எழுகின்றன. இந்நிலையில் இந்தியா குல்தீப் யாதவ் மற்றும் சாஹல் ஆகியோருடன்தான் இந்தியா விளையாட வேண்டும் என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஹர்பஜன் சிங் கூறுகையில் ‘‘தற்போதைய அணி சூப்பர் காம்பினேசன். கடந்த இரண்டரை ஆண்டுகளாக இந்தியா பெற்றுள்ள முடிவுகளுக்கான சிறப்பை இந்த வீரர்களுக்கும் கொடுத்தாக வேண்டும்.



    அவர்கள் இரண்டு பேரும் இணைந்து விளையாட வேண்டும் என்று நான் பார்க்கிறேன். ஏனென்றால், மற்ற எந்த அணியும் இரண்டு ஸ்பின்னர்களுடன் விளையாடவில்லை. அவர்கள் மிடில் ஆர்டர் ஓவர்களில் சுழற்பந்து வீச்சாளர்களை கையாண்ட பழக்கம் கிடையாது.

    இங்கிலீஷ் கண்டிசனில் கூட இந்தியாவுக்கு இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் என்பது வொர்க்காகியுள்ளது. ஏனென்றால், இரண்டு பேரும் ரிஸ்ட் ஸ்பின்னர்கள். இந்தியா சிறந்த லெவன் அணியை பற்றி சிந்தித்தால், அதில் இரண்டு பேருக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும்’’ என்றார்.
    உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இருந்து காயம் காரணமாக ஷிகர் தவான் நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக ரிஷப் பந்த் அணியில் இடம் பெறுகிறார்.
    உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் ஷிகர் தவான் இடம்பிடித்திருந்தார். கடந்த 9-ந்தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஆட்டத்தில் தவான் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். இவரது சதத்தால் இந்தியா 352 ரன்கள் குவித்ததோடு, 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியின்போது தவானின் பெருவிரலில் ஹேர்லைன் அளவிற்கு எழும்பு முறிவு ஏற்பட்டது. இந்தக் காயம் குணமடைய மூன்று வாரங்கள் ஆகும் என இந்திய அணியின் டாக்டர் குழு மதிப்பிட்டிருந்தனர். மூன்று வாரம் என்பதால் ஜூலை 1-ந்தேதிக்குள் உடற்தகுதி பெற்று விடுவார். அதுவரை லோகேஷ் ராகுலை தொடக்க வீரராக களம் இறக்கிக் கொள்ளலாம் என நிர்வாகம் முடிவு செய்தது.

    தவான் காயம் குறித்து இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூறுகையில் ‘‘தவான் உலகக்கோப்பையில் விளையாடுவதற்கு மிகவும் ஆவலாக உள்ளார். அவரது காயம் குணமடைந்து விடும். அரையிறுதிக்குள் தயாராகி விடுவார்’’ என்று கூறியிருந்தார்.



    இந்நிலையில் அவரது காயம் குணமடைய மேலும் சில வாரங்கள் ஆகும் என்று தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இருந்து அவர் விலகியுள்ளார்.

    இதுகுறித்து பிசிசிஐ ‘‘தவான் காயம் காரணமாக இந்திய அணியில் இருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக ரிஷப் பந்தை அணியில் சேர்க்க அனுமதியளிக்க வேண்டும்’’ என்று ஐசிசிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதனால் தவானில் 2019 உலகக்கோப்பை கனவு இரண்டு போட்டிகளுடன் முடிவுக்கு வந்துள்ளது.
    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக நியூசிலாந்து டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது. ஆட்டம் 49 ஓவராக குறைக்கப்பட்டுள்ளது.
    நியூசிலாந்து - தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 25-வது லீக் ஆட்டம் பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டனில் இன்று மதியம் 3 மணிக்கு தொடங்குவதாக இருந்தது. ஆனால், பர்மிங்காமில் ஏற்கனவே மழை பெய்ததால், பவுண்டரி லைன் அருகே (Outfield) ஈரப்பதமாக இருந்ததால் டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.



    பின்னர் போட்டி இந்திய நேரப்படி 4.30 மணிக்கும் தொடங்கும் என்றும், 4 மணிக்கு டாஸ் சுண்டப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதன்படி டாஸ் சுண்டப்பட்டதில் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். ஒன்றரை மணி நேரம் வீணாகியுள்ளதால் ஆட்டம் 49 ஓவராக குறைக்கப்பட்டுள்ளது.
    அம்மாவின் மனது காயம்பட்டு விடக்கூடாது என்பதற்காக பந்து ஹெல்மெட்டை பலமாக தாக்கியபோதிலும் தொடர்ந்து பேட்டிங் செய்தேன் என ஆப்கானிஸ்தான் வீரர் தெரிவித்துள்ளார்.
    இங்கிலாந்து - ஆப்கானிஸ்தான் இடையிலான ஆட்டம் மான்செஸ்டரில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 397 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய ஆப்கானிஸ்தான் 247 ரன்கள் சேர்த்தது.

    4-வது வீரராக களம் இறங்கிய ஹஸ்மதுல்லா ஷாகிதி 100 பந்தில் 76 ரன்கள் சேர்த்தார். 24 ரன்கள் எடுத்திருக்கும்போது 140 கி.மீட்டர் வேகத்தில் மார்க் வுட் வீசிய பந்து ஷாகிதியின் ஹெல்மெட்டை பலமாக தாக்கியது. இதனால் நிலைகுலைந்த அவர் மைதானத்தில் தடுமாறி விழுந்தார்.

    உடனடியாக ஆப்கானிஸ்தான் அணியின் பிசியோ மற்றும் ஐசிசி டாக்டர் அவரை பரிசோதித்தனர். அப்போது ஓய்வு எடுக்க வேண்டும். நீங்கள் வெளியேறுங்கள் என்று வலியுறுத்தினர். ஆனால், ஷாகிதி வெளியேற விருப்பம் இல்லாமல் தொடர்ந்து பேட்டிங் செய்கிறேன் என்றார். இதனால் புது ஹெல்மெட் உடன் ஷாகிதி தொடர்ந்து பேட்டிங் செய்தார். அதன்பின் 52 ரன்கள் அடித்தார்.



    போட்டிக்குப்பின் இதுகுறித்து ஷாகிதி கூறுகையில் ‘‘நான் உடனடியாக எழுந்து விளையாட விரும்பியது என அம்மாவிற்காகத்தான். கடந்த வருடம் நான் எனது தந்தையை இழந்தேன். அதனால் எனது அம்மாவின் மனதை கஷ்டப்படுத்த விரும்பவில்லை.

    என்னுடைய குடும்பத்தில் உள்ள எல்லோரும் பேட்டியை கண்டு ரசித்தனர். எனது மூத்த அண்ணன் மைதானத்திற்கு நேரடியாக வந்து போட்டியை ரசித்தார். எனக்காக அவர்களை கவலைப்பட வைக்க விரும்பவில்லை’’ என்றார்.
    பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் அவுட் பீல்டு ஈரப்பதமாக இருப்பதால் நியூசிலாந்து - தென்ஆப்பிரிக்கா ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
    நியூசிலாந்து - தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 25-வது லீக் ஆட்டம் பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டனில் இன்று மதியம் 3 மணிக்கு தொடங்குவதாக இருந்தது.

    ஆனால், பர்மிங்காமில் ஏற்கனவே மழை பெய்ததால், பவுண்டரி லைன் அருகே (Outfield) ஈரப்பதமாக இருப்பதால் டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது,
    உலகக்கோப்பை கிரிக்கெட்டில் மான்செஸ்டரில் நடைபெற்ற போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை 150 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது இங்கிலாந்து.
    மான்செஸ்டர்:

    இங்கிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் உலகக்கோப்பை தொடரின் 24-வது லீக் ஆட்டம் மான்செஸ்டரில் இன்று நடைபெற்றது. 
    டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் பேர்ஸ்டோவ், ஜேம்ஸ் வின்ஸ் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

    வின்ஸ் 26 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து பேர்ஸ்டோவ் உடன் ஜோ ரூட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமாக விளையாடியது. பேர்ஸ்டோவ் 99 பந்தில் 90 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    மூன்றாவது விக்கெட்டுக்கு ஜோ ரூட் உடன் கேப்டன் மோர்கன் ஜோடி சேர்ந்தார். மோர்கன் முதலில் இருந்தே சரவெடியாக வெடித்தார். இதனால் இங்கிலாந்தின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. ஜோ ரூட் 88 ரன்னிலும், மோர்கன் 71 பந்தில் 4 பவுண்டரி, 17 சிக்சருடன் 148 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.



    இறுதியில், இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 397 ரன்கள் குவித்துள்ளது. 

    அதன்பின், 398 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் ஆப்கானிஸ்தான் களமிறங்கியது. குல்பதின் நயீப் 37 ரன்னிலும், ரஹமத் ஷா 46 ரன்னிலும், அஸ்கர் ஆப்கன் 44 ரன்னிலும் அவுட்டாகினர்.

    ஆப்கானிஸ்தானின் ஹஷ்மத்துல்லா ஷஹிடி ஓரளவு தாக்குப்பிடித்து 76 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

    இறுதியில், ஆப்கானிஸ்தான் அணி 247 ரன்களை மட்டுமே எடுத்தது. இதையடுத்து, இங்கிலாந்து அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இங்கிலாந்து சார்பில் அடில் ரஷித், ஜோப்ரா ஆர்ச்சர் தலா 3 விக்கெட்டும், மார்க் வுட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
    இங்கிலாந்துக்கு எதிராக 9 ஓவரில் 110 ரன்கள் வாரி வழங்கியதன் மூலம் சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் ரஷித் கான் மோசமான சாதனையை பதிவு செய்துள்ளார்.
    இங்கிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து ஈவு இரக்கமின்றி ஆப்கானிஸ்தான் பந்து வீச்சை துவம்சம் செய்தது. உலகத்தரம் வாய்ந்த ரஷித் கான் பந்தை சிக்சராக பறக்க விட்டனர்.

    அவர் 9 ஓவர்களில் 100 ரன்கள் வாரி வழங்கினார். இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக அளவு ரன்கள் விட்டுக்கொடுத்த பந்து வீச்சாளர்கள் வரிசையில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் வஹாப் ரியாஸ் உடன் 2-வது இடத்தை பிடித்துள்ளார். மேலும் அதிக ரன்கள் விட்டுக்கொடுத்த சுழற்பந்து வீச்சாளர் என்ற மோசமான சாதனையையும் படைத்துள்ளார்.



    ஆஸ்திரேலிய வீரர் மைக் லிவிஸ் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 113 ரன்கள் விட்டுக்கொடுத்ததே அதிகபட்சமாக இருந்து வருகிறது. வஹாப் ரியாஸ் இங்கிலாந்துக்கு எதிராக 10 ஓவரில் 110 ரன்கள் வாரி வழங்கியுள்ளார்.
    ஒருநாள் போட்டியில் அதிக சிக்ஸ் அடித்த வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மா, ஏபி டி வில்லியர்ஸ், கிறிஸ் கெய்லை பின்னுக்குத் தள்ளினார் மோர்கன்.
    இங்கிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 397 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து கேப்டன் ருத்ர தாண்டவத்தால்தான் இவ்வளவு ரன்கள் குவிக்க முடிந்தது. அவர் 71 பந்தில் 4 பவுண்டரி, 17 சிக்சர்களுடன் 148 ரன்கள் விளாசினார்.

    17 சிக்சர்கள் அடித்ததன் மூலம் ஒரு போட்டியில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர்கள் என்ற சாதனையைப் படைத்துள்ளார். இதற்கு முன் ஹிட்மேன் ரோகித் சர்மா ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 16 சிக்சர்களும், 360 டிகிரி என்று அழைக்கப்படும் ஏபி டி வில்லியர்ஸ் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக 16 சிக்சர்களும், யுனிவர்ஸ் பாஸ் என்று அழைக்கப்படும் கிறிஸ் கெய்ல் ஜிம்பாப்வேவுக்கு எதிராக 16 சிக்சர்களும் விளாசியிருந்தனர். தற்போது மூன்று ஜாம்பவான்களின் சாதனையை மோர்கள் உடைத்தெறிந்துள்ளார்.
    ×