search icon
என் மலர்tooltip icon

    உலக கோப்பைச்செய்திகள்

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-இந்தியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
    லண்டன்:

    இங்கிலாந்தில் நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் இன்று லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறும் 14-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, முன்னாள் சாம்பியனான இந்திய அணியை எதிர்கொள்கிறது. ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானையும், அடுத்த ஆட்டத்தில் 15 ரன் வித்தியாசத்தில் வெஸ்ட்இண்டீசையும் வீழ்த்தி வலுவான நிலையில் உள்ளது. வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான ஆட்டத்தில் சரிவில் இருந்து மீண்டு வந்து ஆஸ்திரேலியா அசத்தியது.

    கடந்த ஆண்டு பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கிய பிறகு தடுமாறிய ஆஸ்திரேலிய அணி, கடந்த சில மாதங்களாக ஒருங்கிணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. டேவிட் வார்னர், ஸ்டீவன் சுமித் அணிக்கு திரும்பி இருப்பது 5 முறை உலக சாம்பியனான ஆஸ்திரேலியாவை மேலும் பலப்படுத்தி இருக்கிறது. ஆஸ்திரேலிய அணி தனது கடைசி 10 ஒரு நாள் போட்டிகளில் தோல்வியே சந்திக்காமல் கம்பீரமாக பீடு நடை போடுகிறது.

    வேகப்பந்து வீச்சு மற்றும் பேட்டிங்கில் எந்த அணிக்கும் சவால் அளிக்கும் வகையில் வலுவாக விளங்கும் ஆஸ்திரேலிய அணி, இந்திய அணியின் திறனை நிச்சயம் பரிசோதிக்கும். கடந்த மார்ச் மாதம் நடந்த இந்திய பயணத்தில் ஆஸ்திரேலிய அணி ஒரு நாள் போட்டி தொடரை 3-2 என்ற கணக்கில் தனதாக்கியது. அந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் மணிக்கட்டை அதிகம் பயன்படுத்தி பந்து வீசும் யுஸ்வேந்திர சாஹல், குல்தீல் யாதவ் ஆகியோரின் மாயாஜால பந்து வீச்சை திறம்பட சமாளித்தனர். அந்த வெற்றி தங்களது நம்பிக்கையை அதிகப்படுத்தி இருப்பதாக அந்த அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார்.


    விராட்கோலி தலைமையிலான இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது. அந்த ஆட்டத்தில் ரோகித் சர்மா 122 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் பெரிய அளவில் ஜொலிக்கவில்லை. பந்து வீச்சில் யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர்குமார், குல்தீப் யாதவ் ஆகியோர் நன்றாக செயல்பட்டனர்.

    ஆஸ்திரேலிய அணியினர் ‘ஷாட் பிட்ச்’ பந்து வீச்சு மூலம் இந்திய பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை விரைவில் வீழ்த்த முயற்சிப்பார்கள். மிட்செல் ஸ்டார்க், கம்மின்ஸ் உள்ளிட்டோரின் ஆக்ரோஷமான வேகப்பந்து வீச்சை நமது வீரர்கள் எந்த அளவுக்கு சிறப்பாக கையாளுகிறார்களோ? அதற்கு தகுந்தபடியே ஆட்டத்தின் போக்கு அமையும். இரு அணிகளும் தங்களது வெற்றிப்பயணத்தை தொடர மல்லுக்கட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

    வானிலையை பொறுத்தவரை இங்கு பிற்பகலில் லேசாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மற்றபடி வெயில் அடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த போட்டி தொடரில் ஓவல் மைதானத்தில் சேசிங் செய்வது கடினமானதாக இருந்து வருகிறது. எனவே இந்த ஆட்டத்தில் ‘டாஸ்’ முக்கிய பங்கு வகிக்கும்.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), உஸ்மான் கவாஜா, ஸ்டீவன் சுமித், மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், அலெக்ஸ் கேரி, நாதன் கவுல்டர் நிலே, கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா.

    இந்தியா: ஷிகர் தவான், ரோகித் சர்மா, விராட்கோலி (கேப்டன்), லோகேஷ் ராகுல், டோனி, ஹர்திக் பாண்ட்யா, கேதர் ஜாதவ், புவனேஷ்வர்குமார் அல்லது குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி.

    இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. 
    உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    டான்டன்:

    இங்கிலாந்தில் நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் திருவிழாவில் டான்டனில் நடைபெற்ற 12-வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.

    இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்தது.

    ஆப்கானிஸ்தான் அணி முதல் விக்கெட்டுக்கு 66 ரன்கள் சேர்த்த நிலையில் தொடக்க ஆட்டக்காரர்களான ஹஸ்ரதல்லாஹ் ஜஜாய் 34 ரன்களுக்கும், நூர் அலி ஸத்ரான் 31 ரன்களுக்கும் தங்கள் விக்கெட்டுகளை இழந்தனர்.



    அடுத்து களமிறங்கிய பேட்ஸ்மேன்களும் நியூசிலாந்து பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இருப்பினும் மறு முனையில் சிறப்பாக ஆடிய நூர் அலி ஸத்ரான் அரை சதம் அடித்தார்.

    41.1 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 172 ரன்கள் சேர்த்தது. அதிக பட்சமாக நூர் அலி ஸத்ரான் 59 ரன்கள் குவித்தனர்.

    நியூசிலாந்து அணி சார்பில் ஜேம்ஸ் நீஷம் 5 விக்கெட்டும், பெர்குசன் 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    இதையடுத்து 173 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களம் இறங்கியது.  தொடக்க ஆட்டக்காரர்களாக மார்ட்டின் கப்தில், காலின் முன்ரோ களம் இறங்கினர்.  ஆட்டத்தின் முதல் ஓவர் முதல் பந்தில் ஆலம் வீசிய பந்து வீச்சில் மார்ட்டின் கப்தில் அவுட்டானார்.  அடுத்ததாக களம் இறங்கிய அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் தனக்கான சிறப்பான பாணியில் களம் இறங்கி ரன்களை குவிக்க தொடங்கினார்.  இதனிடைய ஆட்டத்தின் 7.5 வது ஓவரில் காலின் முன்ரோ 22 (24) எடுத்திருந்த நிலையில் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.  3வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கேன் வில்லியம்சன் மற்றும் ராஸ் டெய்லர்  இருவரும் இணைந்து ரன்களை குவிக்க தொடங்கினர்.  



    ஆட்டத்தின் 25.4 வது ஓவரில் ஆலம் வீசிய பந்தில் ராஸ் டெய்லர் 52 பந்துகளை சந்தித்து 48 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட்டனார்.  இறுதியில்  ஆட்டத்தின் 32.1 ஓவரில்   173 ரன்கள் எடுத்து நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.  இதன் மூலம் ஆப்கான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாத்தில் வெற்றி பெற்றது.  

    நியூசிலாந்து அணி சார்பாக அணியின் கேப்டன் கடைசி வரை களத்தில் பொறுப்புடன் விளையாடி 79  ரன்கள் எடுத்தார்.

    ஆப்கானிஸ்தான் அணியின் சார்பாக அப்டாப் ஆலம் 3 விக்கெட்களை வீழ்த்தினார். 
    உலக கோப்பை கிரிக்கெட்டில் வங்காளதேசத்தை எளிதில் வீழ்த்தி இங்கிலாந்து அணி 2-வது வெற்றியை ருசித்தது.

    12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த கிரிக்கெட் திருவிழாவில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

    இந்த நிலையில் கார்டிப்பில் உள்ள சோபியா கார்டனில் நேற்று நடந்த 12-வது லீக் ஆட்டத்தில் ‘நம்பர் ஒன்’ அணியான இங்கிலாந்து, வங்காளதேசத்தை எதிர்கொண்டது. இங்கிலாந்து அணியில் ஒரே ஒரு மாற்றமாக மொயீன் அலிக்கு பதிலாக பிளங்கெட் சேர்க்கப்பட்டார்.

    ‘டாஸ்’ ஜெயித்த வங்காளதேச கேப்டன் மோர்தசா பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி இங்கிலாந்து அணியின் இன்னிங்சை ஜானி பேர்ஸ்டோவும், ஜாசன் ராயும் தொடங்கினர். சில ஓவர்கள் நிதானம் காட்டிய இவர்கள் அதன் பிறகு வங்காளதேச பந்து வீச்சை அடித்து நொறுக்கினர். ஓவருக்கு குறைந்தது ஒரு பவுண்டரி, அதன் பிறகு ஒன்று, இரண்டு ரன்கள் வீதம் ஓடி எடுப்பது என்ற திட்டமிடலுடன் அருமையாக ஆடிய இங்கிலாந்து வீரர்கள் 15-வது ஓவரில் 100 ரன்களை எட்ட வைத்தனர்.



    இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 128 ரன்கள் (19.1 ஓவர்) சேர்த்து பிரிந்தது. பேர்ஸ்டோ 51 ரன்களில் (50 பந்து, 6 பவுண்டரி) கேட்ச் ஆனார். அடுத்து ஜோ ரூட் வந்தார். மறுமுனையில் அபாரமாக ஆடிய ஜாசன் ராய் 92 பந்துகளில் தனது 9-வது சதத்தை நிறைவு செய்தார். இந்த உலக கோப்பையில் பதிவான 4-வது சதம் இதுவாகும். செஞ்சுரிக்கு பிறகு சிறிது நேரமே நின்றாலும் வாணவேடிக்கை காட்டினார். ஷகிப் அல்-ஹசனின் ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் சாத்தினார். மற்றொரு சுழற்பந்து வீச்சாளர் மெஹிதி ஹசனின் பந்து வீச்சில் ‘ஹாட்ரிக்’ சிக்சர் பறக்கவிட்டு உள்ளூர் ரசிகர்களுக்கு விருந்து படைத்த ஜாசன் ராய் மேலும் ஒரு சிக்சருக்கு பந்தை தூக்கிய போது கேட்ச் ஆகிப்போனார். ஜாசன் ராய் 153 ரன்கள் (121 பந்து, 14 பவுண்டரி, 5 சிக்சர்) எடுத்தார். இதற்கிடையே ஜோ ரூட் 21 ரன்னில் வெளியேறினார்.

    இதைத் தொடர்ந்து ஜோஸ் பட்லரும், கேப்டன் மோர்கனும் இணைந்து உத்வேகம் குறையாமல் ஸ்கோரை எகிற வைத்தனர். வங்காளதேசத்தின் பந்து வீச்சில் துல்லியம் இல்லை, பீல்டிங்கிலும் ஏகப்பட்ட ஓட்டை. இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட இங்கிலாந்து வீரர்கள், எதிரணியை கதறடித்தனர். பட்லர் தூக்கியடித்த ஒரு பந்து மைதானத்திற்கு வெளியே காணாமல் போனது.

    இமாலய ஸ்கோரை நோக்கி பயணிக்க வைத்த பட்லர் தனது பங்குக்கு 64 ரன்களும் (44 பந்து, 2 பவுண்டரி, 4 சிக்சர்), மோர்கன் 35 ரன்களும் (33 பந்து, ஒரு பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்து பெவிலியன் திரும்பினர். அடுத்து வந்த வீரர்களும் குறிப்பாக கிறிஸ் வோக்ஸ் 2 சிக்சருடன் 18 ரன்களும், பிளங்கெட் 4 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 27 ரன்களும் (9 பந்து) விளாசி அசத்தினர்.

    இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 386 ரன்கள் குவித்தது. இந்த அணி பேட்ஸ்மேன்கள் கடைசி 10 ஓவர்களில் மட்டும் 111 ரன்களை திரட்டினர்.

    அடுத்து 387 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மெகா இலக்கை நோக்கி ஆடிய வங்காளதேச அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன. ஒரு கட்டத்தில் இலக்கை நெருங்க முடியாது என்பதை உணர்ந்த வங்காளதேச பேட்ஸ்மேன்கள் ரன்ரேட் அவசியம் என்பதால் அதற்காக ஆடினர். ஷகிப் அல்-ஹசன் (121 ரன், 119 பந்து, 12 பவுண்டரி, ஒரு சிக்சர்) சதம் அடித்தது மட்டுமே வங்காளதேசத்திற்கு கிடைத்த ஒரே ஆறுதல் ஆகும்.

    அந்த அணி 48.5 ஓவர்களில் 280 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 3-வது லீக்கில் ஆடிய இங்கிலாந்து அணிக்கு இது 2-வது வெற்றியாகும். அத்துடன் 2015-ம் ஆண்டு உலக கோப்பை தொடரில் வங்காளதேசத்திடம் அடைந்த தோல்விக்கும் இங்கிலாந்து பழிதீர்த்துக் கொண்டது. வங்காளதேச அணிக்கு இது 2-வது தோல்வியாகும்.

    உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி, நியூசிலாந்து அணிக்கு 173 ரன்களை இலக்காக நிர்ணயித்து உள்ளது.
    டான்டன்:

    இங்கிலாந்தில் நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் திருவிழாவில் இன்று டான்டனில் நடைபெறும் 12-வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடுகின்றன.

    இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்தது.

    ஆப்கானிஸ்தான் அணி முதல் விக்கெட்டுக்கு 66 ரன்கள் சேர்த்த நிலையில் தொடக்க ஆட்டக்காரர்களான ஹஸ்ரதல்லாஹ் ஜஜாய் 34 ரன்களுக்கும், நூர் அலி ஸத்ரான் 31 ரன்களுக்கும் தங்கள் விக்கெட்டுகளை இழந்தனர்.

    அடுத்து களமிறங்கிய பேட்ஸ்மேன்களும் நியூசிலாந்து பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இருப்பினும் மறு முனையில் சிறப்பாக ஆடிய நூர் அலி ஸத்ரான் அரை சதம் அடித்தார். 

    41.1 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 172 ரன்கள் சேர்த்தது. அதிக பட்சமாக நூர் அலி ஸத்ரான் 59 ரன்கள் குவித்தனர்.

    நியூசிலாந்து அணி சார்பில் ஜேம்ஸ் நீஷம் 5 விக்கெட்டும், பெர்குசன் 3 விக்கெட்டும் கைப்பற்றினர். இதையடுத்து 173 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி விளையாடி வருகிறது.
    ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ச்சியாக அதிகமுறை 300 ரன்களை கடந்த அணிகள் சாதனையில் ஆஸ்திரேலியாவை பின்னுக்குத் தள்ளியது இங்கிலாந்து.
    இங்கிலாந்து அணி கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்குப்பின் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக சொந்த மைதானத்தில் அதிரடியாக ரன்கள் குவித்து வருகிறது. இதனால் சொந்த மைதானத்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பையை அந்த அணி வெல்லுவதற்கு வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.

    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் 311 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது ஆட்டத்தில் 334 ரன்கள் சேர்த்து தோல்வியைத் தழுவியது. இன்று வங்காள தேசத்திற்கு எதிராக 386 ரன்கள் குவித்துள்ளது. ஏற்கனவே ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான நான்கு போட்டிகளில் தொடர்ச்சியாக 300 ரன்களுக்கு மேல் குவித்தது.



    இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 7 முறை தொடர்ச்சியாக 300 ரன்களுக்கு மேல் குவித்த ஒரே அணி என்ற சாதனையை இங்கிலாந்து படைத்துள்ளது. இதற்கு முன் ஆஸ்திரேலியா தொடர்ச்சியாக 6 முறைக்கு மேல் 300 ரன்கள் அடித்து சாதனை புரிந்திருந்தது. தற்போது அதை இங்கிலாந்து முறியடித்துள்ளது.
    ஜேசன் ராய், ஜோஸ் பட்லர், பேர்ஸ்டோவ் அதிரடியால் வங்காள தேசத்திற்கு 386 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இங்கிலாந்து.
    இங்கிலாந்து - வங்காள தேசம் அணிகளுக்கு இடையிலான 12-வது உலகக்கோப்பை லீக் ஆட்டம் கார்டிபில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வங்காளதேசம் பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.

    ஜேசன் ராய் மற்றும் பேர்ஸ்டோவ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அணியின் ஸ்கோர் 19.1 ஓவரில் 128 ரன்னாக இருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. பேர்ஸ்டோவ் 50 பந்தில் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஜோ ரூட் 21 ரன்னில் ஏமாற்றம் அடைந்தார்.


    ஜேசன் ராய்

    3-வது விக்கெட்டுக்கு ஜேசன் ராய் உடன் ஜோஸ் பட்லர் ஜோடி சேர்ந்தார். மறுமுனையில் விளையாடிய ஜேசன் ராய் 92 பந்தில் தனது 9-வது சதத்தை பூர்த்தி செய்தார். சதம் அடித்தபின் ஜேசன் ராய் ஆக்ரோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மெஹிதி ஹசன் வீசிய 35-வது ஓவரில் முதல் மூன்று பந்தை சிக்சருக்கு தூக்கிய ஜேசன் ராய், 4-வது பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 121 பந்தில் 14 பவுண்டரி, 5 சிக்சருடன் 153 ரன்கள் குவித்தார்.

    ஜேசன் ராய் ஆட்டமிழந்ததும் ஜோஸ் பட்லர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இங்கிலாந்து 42.1 ஓவரில் 300 ரன்னைக் கடந்தது. 33 பந்தில் அரைசதம் அடித்த ஜோஸ் பட்லர் 44 பந்தில் 64 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனார். பட்லர் ஆட்மிழக்கும்போது இங்கிலாந்து 45.2 ஓவரில் 330 ரன்கள் குவித்திருந்தது.


    பட்லர்

    5-வது விக்கெட்டுக்கு மோர்கன் உடன் பென் ஸ்டோக்ஸ் ஜோடி சேர்ந்தார். மோர்கன் 33 பந்தில் 35 ரன்களும், பென் ஸ்டோக்ஸ் 6 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். கிறிஸ் வோக்ஸ் 8 பந்தில் 18 ரன்களும், பிளங்கெட் 9 பந்தில் 27 ரன்களும் விளாச இங்கிலாந்து 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 386 ரன்கள் குவித்துள்ளது.

    பின்னர் 387 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காள தேசம் பேட்டிங் செய்து வருகிறது.
    உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ராணுவ முத்திரை பதித்த கையுறை அணிந்து விளையாடிய டோனிக்கு ஆதரவாக கவுதம் காம்பீர் கருத்து தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    இங்கிலாந்தில் நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் விளையாடுகையில் இந்திய அணியின் சீனியர் வீரரான டோனி ராணுவ முத்திரை பதித்த விக்கெட் கீப்பிங் கையுறையுடன் விளையாடினார். இந்த காட்சி டெலிவி‌‌ஷனில் ஒளிபரப்பானதை தொடர்ந்து அவருக்கு பாராட்டும், எதிர்ப்பும் ஒரு சேர கிளம்பியது. இந்திய ராணுவத்தில் கவுரவ பதவி வகிக்கும் டோனி துணை ராணுவ சிறப்பு படையினரின் பாலிதான் (தியாகத்தை குறிக்கும் அடையாளம்) என்ற முத்திரையை தனது கையுறையில் (கிளவ்ஸ்) பதித்து இருந்தார்.

    ஐசிசி விதிப்படி அரசியல், மதம், ராணுவம் சார்ந்த குறியீடுகளை வீரர்கள் எந்த வகையிலும் களத்தில் பயன்படுத்தக்கூடாது. அதனால் டோனியின் விக்கெட் கீப்பிங் கையுறையிலிருந்து அந்த குறியீட்டை நீக்க டோனிக்கு அறிவுறுத்துமாறு பிசிசிஐ-க்கு ஐசிசி அறிவுறுத்தியிருந்தது. இந்த விஷயத்தில் பல ரசிகர்களும் பிரபலங்களும் டோனிக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். 

    இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து பேசியுள்ள முன்னாள் வீரரும் தற்போதைய எம்பி-யுமான கவுதம் காம்பீர், “போட்டிகளை சிறப்பான முறையில் நடத்த வேண்டியதுதான் ஐசிசி-யின் வேலையே தவிர, யார் என்ன லோகோ பயன்படுத்துகிறார்கள் என்று பார்ப்பதல்ல. எனவே அந்த வேலையை சரியாக பார்க்க வேண்டுமே தவிர, இதுபோன்ற முக்கியத்துவம் இல்லாத விஷயத்தை பெரிதாக்கக்கூடாது” என தெரிவித்துள்ளார். 
    உலகக்கோப்பை தொடரின் 12-வது லீக்கில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நியூசிலாந்து டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
    உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. 2-வது ஆட்டத்தில் நியூசிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடுகின்றன. 

    இந்திய நேரப்படி மாலை 6 மணிக்கு டான்டனில் நடக்கும் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டதில் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
    வங்காள தேச அணிக்கெதிரான ஆட்டத்தில் ஜேசன் ராய் அதிரடி சதம் விளாசியதுடன், சாதனைப் பட்டியலிலும் இணைந்துள்ளார்.
    இங்கிலாந்து - வங்காள தேசம் அணிகளுக்கு இடையிலான 12-வது உலகக்கோப்பை லீக் ஆட்டம் கார்டிபில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வங்காளதேசம் பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.

    ஜேசன் ராய் மற்றும் பேர்ஸ்டோவ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அணியின் ஸ்கோர் 19.1 ஓவரில் 128 ரன்னாக இருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. பேர்ஸ்டோவ் 50 பந்தில் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    மறுமுனையில் விளையாடிய ஜேசன் ராய் 92 பந்தில் தனது 9-வது சதத்தை பூர்த்தி செய்தார். அத்துடன் 77 இன்னிங்சில் 9 சதங்கள் அடித்ததன் மூலம் விரைவாக 9 சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார். அம்லா (52)), டி காக் (53), பாபர் ஆசம் (61), தவான் (72), முதல் நான்கு இடத்தில் உள்ளனர்.
    இரண்டு போட்டிகளில் விக்கெட் ஏதும் வீழ்த்தாததால் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இடம் கிடைக்குமா? என்பது சந்தேகம் என நாதன் கவுல்டர் நைல் தெரிவித்துள்ளார்.
    உலகக்கோப்பை கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் நாட்டிங்காமில் நடந்த வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா ஒரு கட்டத்தில் 5 விக்கெட்டுக்கு 79 ரன்களுடன் தட்டுத்தடுமாறிய நிலையில் பவுலரான நாதன் கவுல்டர் நைல் 92 ரன்கள் (8 பவுண்டரி, 4 சிக்சர்) குவித்து வியப்பூட்டினார்.

    அவரது அதிரடி உதவியுடன் ஆஸ்திரேலியா நிர்ணயித்த 289 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியால் 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 273 ரன்களே எடுக்க முடிந்தது. வெற்றிக்கு பிறகு ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்ட ஆஸ்திரேலிய வீரர் நாதன் கவுல்டர் நைல் கூறியதாவது:-

    நான் இவ்வளவு ரன்கள் எடுப்பேன் என்று எதிர்பார்க்கவே இல்லை. ஒரு சில அவுட் வாய்ப்புகளில் இருந்து தப்பினேன். இந்த வகையில் எனக்கு அதிர்ஷ்டமும் துணை நின்றது. ஆனால் நான் ஒரு வேகப்பந்து வீச்சாளர். விக்கெட் வீழ்த்துவதுதான் எனது பணி. ரன்கள் எடுப்பதற்காக அணியில் நான் சேர்க்கப்படவில்லை. அதை டாப் வரிசை வீரர்கள் செய்வார்கள் என்று நம்புகிறேன்.



    உலகக்கோப்பை கிரிக்கெட்டில் முதல் 2 ஆட்டங்களிலும் எனக்கு விக்கெட் கிடைக்கவில்லை. இதனால் இந்தியாவுக்கு எதிரான அடுத்த ஆட்டத்தில் (ஜூன் 9-ந்தேதி) எனக்கு வாய்ப்பு அளிக்கப்படுமா? என்பது தெரியவில்லை. என்னை நீக்கினாலும் ஆச்சரியப்படமாட்டேன். உலகத்தரம் வாய்ந்த இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் (ஜேசன் பெரேண்டர்ப் மற்றும் கேன் ரிச்சர்ட்சன்) வாய்ப்பின்றி வெளியில் உள்ளனர்.

    இவ்வாறு கவுல்டர் நைல் கூறினார்.
    நடுவர்கள் முடிவு குறித்து விமர்சனங்கள் செய்யும்போது நியாயமானதாக இருக்கட்டும் என்று வர்ணனையாளர்களுக்கு ஐசிசி வேண்டுகோள் விடுத்துள்ளது.
    உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் நடைபெற்று வருகிறது. பொதுவாக மிகப்பெரிய தொடர் நடைபெறும்போது நடுவர்கள் செய்யும் தவறுகள் மிகப்பெரியதாக பேசப்படும். அதேபோல்தான் ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான போட்டியின்போது நடுவர்களின் செயல்பாடு மிகப்பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    கெய்ல் பேட்டிங் செய்யும்போது ஸ்டார்க் வீசியது நோ-பால் என்று தெளிவாக தெரிந்த பின்பும் நடுவர் நோ-பால் என்று அறிவிக்கவில்லை. அதற்கு அடுத்த பந்தில் கெய்ல் எல்பிடபிள்யூ ஆனார். ஒருவேளை நோ-பால் கொடுத்திருந்தால் கெய்ல் ஆட்டமிழந்திருக்கமாட்டார் என்ற விவாதம் எழும்பியது.

    மேலும், ஆஸ்திரேலியா அப்பீல் கேட்டதற்கு சாதகமான வகையில் நடுவர்கள் நடந்து கொண்டதாக சர்ச்சை எழும்பியது. பிராத்வைட் மற்றும் ஜேசன் ஹோல்டர் வெளிப்படையாக விமர்சனம் வைத்தனர்.



    உலகக்கோப்பையில் வர்ணனையாளராக இருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரரான மைக்கேல் ஹோல்டிங், ‘‘நான் மிகவும் வருந்துகிறேன். ஆனால், இந்த போட்டியில் நடுவர்களின் முடிவுகள் கொடூரமாக இருந்தன’’ என்றார்.

    இந்நிலையில் வர்ணனையாளர்கள் மிகவும் கடினமான பணியைச் செய்யும் நடுவர்கள் குறித்து பாராட்டவில்லை என்றாலும், விமர்சனங்கள் நியாயமானதாக இருக்கட்டும் என்று ஐசிசி வேண்டுகோள் விடுத்துள்ளது.
    கார்டிபில் நடக்கும் 12-வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணிக்கெதிராக வங்காள தேசம் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
    உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 12-வது லீக் ஆட்டம் கார்டிபில் இன்று மதியம் 3 மணிக்கு தொடங்குகிறது. இதில் போட்டியை நடத்தும் இங்கிலாந்து வங்காளதேசத்தை எதிர்கொள்கிறது.

    இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில் வங்காள தேச அணி கேப்டன் மோர்தசா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். இரு அணிகளும் தலா இரண்டு போட்டிகளில் விளையாடி தலா ஒரு வெற்றி பெற்றுள்ளன.
    ×