search icon
என் மலர்tooltip icon

    உலக கோப்பைச்செய்திகள்

    உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் லீக் சுற்றோடு வெளியேறியதால், தலைமை பயிற்சியாளரை நீக்கியது வங்காள தேச கிரிக்கெட் போர்டு.
    இங்கிலாந்தில் நடந்து வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் 10 அணிகள் பங்கேற்றன. இதில் வங்காளதேச அணி 9 போட்டிகளில் 3 வெற்றி, 5 தோல்வி பெற்றது. 1 ஆட்டம் முடிவு இல்லை. தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளை வீழ்த்தியது. அந்த அணி 7 புள்ளிகளுடன் 8-வது இடத்தை பிடித்து போட்டி தொடரில் இருந்து வெளியேறியது.

    இந்த நிலையில் உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டதால் வங்காளதேச அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீவ் ரோட்சை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அதிரடியாக நீக்கம் செய்தது.

    இதுதொடர்பாக வங்காள தேச கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி நிஜாமுதீன் கூறும்போது, ‘‘தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து ஸ்டீவ் ரோட்சை விலக்குவதாக ஒருமனதாக முடிவு செய்து இருக்கிறோம். இந்த முடிவு உடனடியாக அமலுக்கு வருகிறது’’ என்றார்.

    உலகக்கோப்பையில் பங்கேற்ற வங்காளதேச அணி சொந்த நாட்டுக்கு திரும்பிய மறுநாளே பயிற்சியாளர் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    வங்காளதேச அணிக்கு தலைமை பயிற்சியாளராக ஸ்டீவ் ரோட்ஸ் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நியமனம் செய்யப்பட்டார். அவரது பதவி காலம் அடுத்த ஆண்டு நடைபெறும் 20 ஓவர் உலககோப்பை வரை உள்ளது. ஆனால் 50 ஓவர் உலககோப்பையில் ஸ்டீவ் ரோட்சின் பங்களிப்பு திருப்தி தராததால் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    இந்த மாதம் இறுதியில் வங்காளதேச அணி இலங்கைகு சுற்றுப் பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதற்கு விரைவில் இடைக்கால பயிற்சியாளர் நியமிக்கப்படுவார் என்று நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
    தற்போதைய நிலையில் விளையாட முடியாத அளவிற்கு பும்ராதான் மிகவும் அச்சுறுத்தலான பந்து வீச்சாளர் என்று வெட்டோரி தெரிவித்துள்ளார்.
    இந்தியா - நியூசிலாந்து அணிகள் நாளை அரையிறுதி போட்டியில் பலப்பரீட்சை நடத்துகின்றன. உலகக்கோப்பையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான பும்ரா அபாரமாக பந்து வீசி வருகிறார். 17 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ள அவர், 8 மெய்டன் ஓவர்கள் வீசியதுடன் ஓவருக்கு தலா 4.48 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்துள்ளார்.

    இதனால் பும்ரா நியூசிலாந்து அணிக்கு மிகவும் அச்சுறுத்தலாக இருப்பார் என்று முன்னாள் நியூசிலாந்து வீரர் வெட்டோரி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘தற்போதைய நிலையில் விளையாட முடியாத அளவிற்கு மிகவும் அச்சுறுத்தலாக இருப்பவர் பும்ரா. இங்கிலாந்துக்கு எதிராகக் கூட அவர் வழக்கமான ரன் விகிதத்தில் ரன்கள் விட்டுக்கொடுத்தார்.

    பும்ரா

    இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் மற்ற எல்லா பந்து வீச்சாளர்களையும் டார்கெட் செய்தனர். அவர்கள் சுழற்பந்து வீச்சாளர்கள், ஹர்திக் பாண்டியா, டெத் ஓவர்களில் முகமது ஷமி பந்து வீச்சை துவம்சம் செய்தனர். ஆனால் பும்ரா சிறப்பாக பந்து வீசினார்.

    நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் ஷமி அணியில் இடம் பிடிப்பார். இந்த வருட தொடக்கத்தில் அவர் நியூசிலாந்துக்கு எதிராக அபாரமாக பந்து வீசினார்’’ என்றார்.
    உலகக்கோப்பையில் தொடர்ச்சியாக ஐந்து அரைசதங்கள் விளாசிய போதிலும், சதம் அடிக்காததற்கு இதுதான் காரணம் என விராட் கோலி தெரிவித்துள்ளார்.
    ரன் மெஷின் என்று அழைக்கப்படும் விராட் கோலி உலகக்கோப்பையில் தொடர்ச்சியாக ஐந்து அரைசதங்கள் விளாசிய போதிலும், ஒரு சதம் கூட அடிக்கவில்லை. அதே சமயத்தில் துணைக் கேப்டனான ரோகித் சர்மா ஐந்து சதங்கள் விளாசியுள்ளார்.

    ரோகித் சர்மா ஐந்து சதங்கள் அடித்தது மிக மிக சந்தோசம், இந்த உலகக்கோப்பையில் என்னுடைய ரோல் மாறுபட்டது என்று இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘இந்த உலகக்கோப்பையில் நான் மாறுபட்ட ரோலில் விளையாடி வருகிறேன். உலகக்கோப்பை தொடரில் கேப்டனாக இருக்கும் நான், எந்தவிதமான ரோலாக இருந்தாலும் அணிக்கு அது தேவையென்றால் செய்தாக வேண்டும்.

    தொடர்ச்சியாக ரோகித் சர்மா சதம் அடிப்பது சந்தோசமான விஷயம்.  போட்டியில் சுமார் 20 ஓவர்களுக்குப் பின் மாறுபட்ட ரோலில் விளையாட வேண்டும். மிடில் ஓவர்களை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொண்டு ஹர்திக் பாண்டியா, கேதர் ஜாதவ், எம்எஸ் டோனி போன்ற வீரர்கள் அதிரடியாக விளையாட வைக்க வேண்டும். தற்போது ரிஷப் அணியில் இடம் பிடித்து அவரது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார்.

    ரோகித் சர்மா

    நான் தற்போது செய்து கொண்டிருக்கும் ரோல் ஒருநாள் போட்டியில் மாறுபட்டது என்பதை புரிந்து கொண்டேன். மேலும், ஆட்டத்தின் சூழ்நிலை எவ்வாறு செல்கிறதோ? அதற்கு ஏற்றபடி பேட்டிங் செய்ய வேண்டும். ஒரு பக்கம் நிலைத்து நின்று மறுபக்கத்தில் விளையாடும் வீரர்கள் ஸ்டிரைக் ரேட் 150, 160 அல்லது 200 ஆக இருக்கும்போது மிக சந்தோசமாக இருக்கிறது. தேவைப்பட்டால் மறுபக்கத்தில் நான் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவேன்.

    ஆடுகளத்தில் நீண்ட நேரம் நின்று விளையாடியதன் மூலம் இந்த உலகக்கோப்பையில் நான் அதிக விஷயங்களை கற்றுக் கொண்டேன். இதுதான் நமது ரோல் என்பதால், அதற்கு எற்படி விளையாட வேண்டும்’’ என்றார்.
    நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் விளையாடும் இந்திய லெவன் அணி குறித்து விராட் கோலிக்கு சச்சின் தெண்டுல்கர் சின்ன அட்வைஸ் ஒன்றை வழங்கியுள்ளது.
    உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா - நியூசிலாந்து இடையிலான முதல் அரையிறுதி ஆட்டம் நாளை மதியம் 3 மணிக்கு மான்செஸ்டர் ஓல்டுடிராபோர்டில் நடக்கிறது. இந்த போட்டியில் இந்தியாவின் ஆடும் லெவன் அணியில் இடம் பெற வேண்டிய வீரர்கள் குறித்து சச்சின் தெண்டுல்கர் விராட் கோலிக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

    இதுகுறித்து சச்சின் தெண்டுல்கர் கூறுகையில் ‘‘ஜடேஜா என்னுடைய முதல் தேர்வு. இதுகுறித்து நான் அணி நிர்வாகத்தில் நிச்சயம் எழுப்புவேன். தினேஷ் கார்த்திக் 7-வது இடத்தில் களம் இறக்கப்பட்டால், அவருக்குப் பதிலாக ஜடேஜாவுக்கு கட்டாயம் இடம் கொடுக்க வேண்டும். இடது கை சுழற்பந்து வீச்சு பணியை அவர் பார்த்துக் கொள்வார்.

    ஐந்து பந்து வீச்சாளர்களுடன் விளையாடும்போது, இக்கட்டான சூழ்நிலையில் ஈடுகட்டும் நிலையில் மாற்று பந்து வீச்சாளர் தேவை. முகமது ஷமியை மீண்டும் அணிக்கு கொண்டு வர வேண்டும். இதே மைதானத்தில் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக சிறப்பாக பந்து வீசினார். ஓல்டுடிராபோர்டில் அவருக்கு சிறந்த அனுபவம் உள்ளது. அணிக்கு மீண்டும் திரும்பி விக்கெட்டுக்கள் கைப்பற்றினார். அதனால் ஷமி மீண்டும் அணிக்கு கொண்டு வருவதில் நான் உறுதியாக உள்ளேன்’’ என்றார்.
    200 மீட்டர் ஓட்டப் பந்தையத்தில் இந்திய வீராங்கனை ஹீமா தாஸ் ஒரே வாரத்தில் இரண்டு தங்கப் பதக்கத்தை வென்று அசத்தியுள்ளார்.
    இந்தியாவின் முன்னணி தடகள வீராங்கனை ஹீமா தாஸ். 200 மீட்டர் ஓட்டப் பந்தையத்தில் பல்வேறு சாதனைகள் படைத்துள்ளார். கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை போலந்தில் நடைபெற்ற போஸ்னன் தடகள கிராண்ட் பிரிக்ஸில் தங்கம் வென்றார்.

    இந்நிலையில் நேற்று நடைபெற்ற குட்னோ தடகள போட்டியில் கலந்து கொண்டார். இதில் 23.97 வினாடிகளில் பந்தைய தூரத்தை கடந்து தங்கப் பதக்கம் வென்றார் ஹீமா தாஸ். விகே விஸ்மயா 24.06 வினாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

    ஆண்கள் பிரிவில் முகமது அனாஸ் 20 மீட்டரை 21.18 வினாடிகளில் கடந்து தங்கப்பதக்கம் வென்றார். எம்பி ஜபிர் ஆண்களுக்கான 400 மீட்டர் தடைதாண்டும் ஓட்டப்பந்தையத்தில் தங்கப்பதக்கம் வென்றார்.
    2020 டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரை தென்ஆப்பிரிக்க அணியின் கேப்டனாக நீடிக்கலாம் என டு பிளிசிஸ் தெரிவித்துள்ளார்.
    உலகக்கோப்பைக்கான தென்ஆப்பிரிக்கா அணியில் விளையாடிய இம்ரான் தாஹிர், டுமினி, கேப்டன் டு பிளிசிஸ் ஆகியோர் இந்தத் தொடருக்குப்பின் ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். அதன்படி டுமினி, இம்ரான் தாஹிர் ஆகியோர் தங்களது ஓய்வு முடிவை வெளியிட்டு ஓய்வு பெற்றுள்ளனர்.

    ஆனால், டு பிளிசிஸ் இன்னும் ஓய்வு முடிவை அறிவிக்கவில்லை. தென்ஆப்பிரிக்கா அணி 2023 உலகக்கோப்பையில் சிறப்பாக விளையாட வேண்டுமென்றால் அணியை சீரமைப்பு செய்ய வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் வலியுறுதி வருகின்றனர்.

    இந்நிலையில் இளம் வீரர் ஒருவரை கேப்டனாக உருவாக்கப்பட வேண்டும் என்றால் அவருக்கு அனுபவ மிக்க ஒருவர் தேவை. இதனால் அடுத்த வருடம் நடைபெறும் 2020 டி20 உலகக்கோப்பை தொடர் வரை விளையாட வாய்ப்புள்ளதாக டு பிளிசிஸ் தெரிவித்துள்ளார்.
    2008-ம் ஆண்டு நடைபெற்ற 19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் அரையிறுதியில் விராட் கோலி - கேன் வில்லியம்சன் நேருக்குநேர் மோதியுள்ளனர்.
    இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை முதல் அரையிறுதி ஆட்டம் நடைபெறுகிறது. மான்செஸ்டரில் நடக்கும் இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்தியா - கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இந்த ஆட்டம் 2008-ம் ஆண்டு நடைபெற்ற 19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியை நியாபகப்படுத்துகிறது.

    மலேசியாவில் 2008-ல் நடைபெற்ற 19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்தியா - கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணிகள் மோதின.

    நியூசிலாந்து அணியில் கேன் வில்லியம்சன், டிரென்ட் போல்ட், டிம் சவுத்தி ஆகியோர் இடம் பிடித்திருந்தனர். இந்திய அணியில் விராட் கோலி, ஜடேஜா ஆகியோர் இடம் பிடித்திருந்தனர். இவர்கள் தற்போது நடைபெற இருக்கும் அரையிறுதி போட்டிக்கான அணியில் இடம் பிடித்துள்ளனர்.

    விராட் கோலி கேன் வில்லியம்சன்

    முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் சேர்த்தது. மழைக்காரணமாக இந்தியாவுக்கு 43 ஓவரில் 191 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்தியா 41.3 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் அடித்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    2008-ம் ஆண்டு நடைபெற்ற அரையிறுதி ஆட்டம் தற்போது நடைபெற இருக்கும் அரையிறுதி ஆட்டத்தை நியாபகப் படுத்துகிறது. அதில் இந்தியா வெற்றி பெற்றதுபோல், தற்போதும் வெற்றி பெறும் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.
    நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இந்தியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
    உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. 9 லீக் ஆட்டத்தில் 7-ல் வெற்றி, ஒரு முடிவு இல்லை ஆகியவற்றின் மூலம் நம்பர் ஒன் இடத்தை பிடித்தது.

    நாளை மான்செஸ்டர் ஓல்டுடிராபோர்டில் நடைபெறும் முதல் அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. மான்செஸ்டர் ஓல்டுடிராபோர்டு பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான ஆடுகளமாகும். இந்த ஆடுகளத்தில் இந்தியா இரண்டு போட்டிகளில் விளையாடி இரண்டிலும் வெற்றி பெற்றுள்ளது.

    மேலும் மான்செஸ்டரில் நடைபெற்ற ஐந்து போட்டிகளிலும் முதலில் பேட்டிங் செய்த அணியே வெற்றி வாகை சூடியுள்ளது. இந்திய அணி தொடக்கத்தில் பும்ரா, புவனேஷ்வர் குமார் ஆகிய இரண்டு முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கியது. புவிக்கு காயம் ஏற்பட்டபோது ஷமி அணியில் சேர்க்கப்பட்டார். அவர் ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக அபாரமாக பந்து வீசினார்.

    இங்கிலாந்துக்கு எதிராக ஐந்து விக்கெட்டுக்கள் கைப்பற்றினாலும் கடைசி இரண்டு  ஓவர்களில் 32 ரன்கள் விட்டுக்கொடுத்தார். வங்காள தேச அணிக்கு எதிராக பும்ரா, புவி, ஷமி ஆகியோர் இடம் பிடித்திருந்தனர். இந்த ஆட்டத்தில் முதல் 6 ஓவரில் 33 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்திருந்தார். அதன்பின் 3 ஓவரில் 35 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.

    இதனால் இலங்கை அணிக்கெதிராக ஷமி இடம் பெறவில்லை. பும்ரா, புவி, ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், ஜடேஜா ஆகிய ஐந்து பந்து வீச்சாளர்களுடன் விளையாடியது. ஹர்திக் பாண்டியா கடைசி இரண்டு போட்டிகளிலும் 10 ஓவர்கள் பந்து வீசினார். இதுவரை பகுதி நேர பந்து வீச்சாளராக பயன்படுத்தப்பட்ட அவர், தற்போது முழு நேர பந்து வீச்சாளராக இந்தியா பயன்படுத்துகிறது.

    ஷமிக்கு பதில் ஜடேஜா களம் இறக்கப்பட்டார். இலங்கைக்கு எதிராக ஜடேஜா சிறப்பாக பந்து வீசினார். அரையிறுதியில் நியூசிலாந்துக்கு எதிராக ஆடும் லெவன் அணியை தேர்வு செய்வதில் இந்தியாவுக்கு பெரிய தலைவலி உள்ளது.

    உலகக்கோப்பை தொடர் தொடங்கும்போது மழை பெய்ததால் பெரும்பாலான ஆட்டங்கள் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்தது. ஆனால் மான்செஸ்டரில் நான்கு அணிகள் 300 ரன்களுக்கு மேல் அடித்துள்ளது.

    முகமது ஷமி

    நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் இதுவரை சோபிக்கவில்லை. மான்செஸ்டர் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதால்   இந்தியா பும்ரா, புவி, (ஜடேஜா சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோரில் இருவர்), ஹர்திக் பாண்டியா ஆகியோருடன் களம் இறங்கினால் ஒருவேளை பும்ரா மற்றும் புவி பந்துகளை அடித்துவிட்டால், அதன்பின் நேர்த்தியாக பந்து வீச முன்னணி பந்து வீச்சாளர்கள் இல்லை.

    ஷமி அணியில் இடம்பிடித்தால் வேகப்பந்து வீச்சு இன்னும் கூடுதல் பலம் பெறும். ஆனால் புதுப்பந்தில் சிறப்பாக பந்து வீசும் ஷமி, டெத் ஓவரில் அதிக ரன்கள் விட்டுக்கொடுக்கிறார். யார்க்கர், ஸ்லோ ஒன், கட்டர் பால்கள் அவருக்கு பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது.

    முகமது ஷமி அணியில் இடம் பெறாவிடில் ஜடேஜா அல்லது குல்தீப் யாதவ் அல்லது தினேஷ் கார்த்திக் ஆகியோரில் இருவர் சேர்க்கப்படலாம்.
    உலகக்கோப்பை போட்டியில் அதிக ரன்கள் எடுத்த சச்சின் சாதனையை இந்திய அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா முறியடிக்கலாம் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர்.
    மான்செஸ்டர்:

    12-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் 10 நாடுகள் பங்கேற்றன. நேற்று முன்தினத்துடன் ‘லீக்‘ ஆட்டங்கள் முடிந்தன.

    ‘லீக்’ முடிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய அணிகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்து அரை இறுதிக்கு தகுதி பெற்றன.

    2 நாட்கள் ஓய்வுக்கு பிறகு ‘நாக்அவுட்’ போட்டிகள் நாளை (9-ந்தேதி) தொடங்குகிறது. இதில் விராட்கோலி தலைமையிலான இந்தியா- வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

    இந்நிலையில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரும், துணை கேப்டனுமான ரோகித் சர்மா புதிய சாதனையை படைக்க உள்ளார். அவர் இன்னும் 27 ரன்கள் எடுத்தால் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த சச்சின் தெண்டுல்கர் சாதனையை முறியடிப்பார்.     

    உலக கோப்பை தொடரில் சச்சின் தெண்டுல்கர் 2003 ஆம் ஆண்டு 673 ரன்கள் எடுத்திருந்தார். 2007 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த மேத்யூ கெய்டன் 659 ரன்கள் எடுத்திருந்தார்.

    தற்போது நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரில் ரோகித்சர்மா 5 சதம், ஒரு அரை சதத்துடன் 647 ரன் குவித்து முதல் இடத்தில் உள்ளார். அவரை தொடர்ந்து டேவிட் வார்னர் 2-வது இடத்தில் உள்ளார்.

    டேவிட் வார்னர்


    2019 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த டாப் 10 பேட்ஸ்மேன்கள் விபரம்:-

    ரோகித் சர்மா 647 ரன்கள் - 5 சதம், 1 அரை சதம் (8 ஆட்டங்கள்)
    டேவிட் வார்னர் 638 ரன்கள் - 3 சதம், 3 அரை சதம் (9 ஆட்டங்கள்)
    சகிப் அல்ஹசன் 606 ரன்கள் - 2 சதம், 5 அரை சதம் (8 ஆட்டங்கள்)
    ஆரோன் பிஞ்ச் 507 ரன்கள் - 2 சதம், 3 அரை சதம் (9 ஆட்டங்கள்)
    ஜோ ரூட் 500 - 2 சதம், 3 அரை சதம் (9 ஆட்டங்கள்)
    கனே வில்லியம்சன் 481 ரன்கள் - 2 சதம், 1 அரை சதம் (8 ஆட்டங்கள்)
    பாபர் ஆசம் 474 ரன்கள் - 1 சதம், 3 அரை சதம் (8 ஆட்டங்கள்)
    பிரிஸ்டோவ் 462 ரன்கள் - 2 சதம், 2 அரை சதம் (9 ஆட்டங்கள்)
    விராட் கோலி 441 ரன்கள் - 5 அரை சதம் (8 ஆட்டங்கள்)
    விராட் கோலி

    டு பிளிசிஸ் 387 ரன்கள் - 1 சதம், 3 அரை சதம் (8 ஆட்டங்கள்)
    ஆஸ்திரேலியாவை நாங்கள் வீழ்த்தியதால் இந்தியா சந்தோசம் அடைந்திருக்கும் என தென்ஆப்பிரிக்கா கேப்டன் டு பிளிசிஸ் தெரிவித்துள்ளார்.
    உலகக்கோப்பைக்கான லீக் ஆட்டங்கள் நேற்றுடன் முடிவடைந்தது. நேற்று இந்தியா - இலங்கை, தென்ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆட்டங்கள் நடைபெற்றன.

    தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றால் இந்தியா அரையிறுதியில் இங்கிலாந்துடன் மோதுவதை தவிர்த்து, நியூசிலாந்தை எதிர்கொள்ளும் நிலை இருந்தது.

    அதேபோல் தென்ஆப்பிரிக்கா 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் புள்ளிகள் பட்டியலில் இந்தியா முதல் இடம் பிடித்தது. இதனால் முதல் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

    இந்நிலையில் நாங்கள் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதால் இந்தியா சந்தோசம் அடைந்திருக்கும் என தென்ஆப்பிரிக்கா அணி கேப்டன் டு பிளிசிஸ் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து டு பிளிசிஸ் கூறுகையில் ‘‘நாங்கள் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதால் இந்தியா நிச்சயம் சந்தோசம் அடைந்திருக்கும் என நினைக்கிறேன். ஏனென்றால், நியூசிலாந்து கடைசி மூன்று போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியடைந்துள்ளது. இந்தியா - இங்கிலாந்து அணிகள் இறுதிப் போட்டிகளில் விளையாட வாய்ப்புள்ளது’’ என்றார்.
    உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் இருந்து மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் கவாஜா விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக மேத்யூ வடே சேர்க்கப்பட்டுள்ளார்.
    உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலிய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரையிறுதிக்கு முன்னேறியது. இந்தியா மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு எதிரான ஆட்டத்தில் மட்டுமே தோல்வியடைந்தது.

    அந்த அணியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் உஸ்மான் கவாஜா இடம்பிடித்திருந்தார். தற்போது அவருக்கு ஹாம்ஸ்டிரிங் (தொடைப்பகுதியில்) இன்ஜூரி ஏற்பட்டுள்ளதால் அணியில் இருந்து விலகியுள்ளார்.

    அவருக்குப் பதிலாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான மேத்யூ வடேவை மாற்று வீரராக தேர்வு செய்துள்ளது ஆஸ்திரேலியா. மேலும், மார்கஸ் ஸ்டாய்னிஸ்க்கும் காயம் ஏற்பட்டிருப்பதாகவும், அவருக்குப் பதிலாக மிட்செல் மார்ஷ் சேர்க்கப்படலாம் எனவும் தகவல் தெரிவிக்கின்றன.
    உலகக்கோப்பை ஆசிய கண்டத்திற்கே கிடைக்க வேண்டும், இந்தியா உறுதியாக இறுதிப் போட்டியில் வெல்லும் என சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.
    இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டங்கள் நேற்றுடன் முடிவடைந்தன. இதில் புள்ளிகள் அடிப்படையில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் முறையே ஒன்று முதல் நான்கு இடங்களை பிடித்துள்ளது.

    ஒரு அரையிறுதியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் இநு்தியா வெற்றி பெறும் என சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சோயிப் அக்தர் கூறுகையில் ‘‘இந்தியா - நியூசிலாந்து இடையிலான முதல் அரையிறுதியில் நியூசிலாந்துக்கு நெருக்கடி கிடையாது. இந்த முறை அவர்கள் மோசமான வகையில்  விளையாடமாட்டார்கள் என நம்புகிறேன்.

    ஆனால், உலகக்கோப்பை ஆசியக் கண்டத்தில்தான் இருக்க ஆசைப்படுகிறேன். அந்த வகையில் எனது ஆதரவு இந்தியாவுக்கே’’ என்றார்.
    ×