search icon
என் மலர்tooltip icon

    உலக கோப்பைச்செய்திகள்

    உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலியா அணியில் இருந்து மிடில் ஆர்டர் இடது கை பேட்ஸ்மேனான ஷான் மார்ஷ் காயத்தால் விலகியுள்ளார்.
    உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அந்த அணியில் இடது கை பேட்ஸ்மேனான ஷான் மார்ஷ் இடம்பிடித்திருந்தார். அவர் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது பேட் கம்மின்ஸ் வீசிய பந்து கையை பலமாக தாக்கியது.

    இதனால் உடனடியாக மருத்துவசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். அதில் அவரது கையில் முறிவு ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. இதனால் உடனடியாக அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
    உலகக்கோப்பை கிரிக்கெட்டில் வங்காள தேசத்துக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
    லண்டன்:

    உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் லண்டன் லார்ட்சில் இன்று நடைபெறவுள்ள 43-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் பாகிஸ்தான் அணி, வங்காள தேசத்தை எதிர்கொள்கிறது.

    இரு அணி கேப்டன்கள் முன்னிலையில் டாஸ் சுண்டப்பட்டது. டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ் அகமது பேட்டிங் தேர்வு செய்துள்ளார். இதையடுத்து, பாகிஸ்தான் அணி களமிறங்க உள்ளது.
    ஆப்கானிஸ்தான் அணியை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.
    லீட்ஸ்:

    உலக கோப்பை கிரிக்கெட்டின் 42-வது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய கிறிஸ் கெய்ல் 7 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதையடுத்து ஷாய் ஹோப்புடன் இணைந்து விளையாடிய இவின் லீவிஸ் 58 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹெட்மயர் 39 ரன்களிலும், நிகோலஸ் பூரன் 58 ரன்களிலும், ஷாய் ஹோப் 77 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 

    இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 311 ரன்களை எடுத்தது. ஆப்கானிஸ்தான் அணியின் தவ்லத் ஜட்ரன் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இதனையடுத்து, 312 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர் குல்புதீன் நைப் 5 ரன்களில் வெளியேறினார். பின்னர் ரஹமத் ஷா உடன் ஜோடி சேர்ந்த இக்ராம் அலி அணியை சரிவிலிருந்து மீட்டனர். ஆனால் ரஹமத் ஷா 62 ரன்னிலும், இக்ராம் அலி 86 ரன்னிலும் அடுத்தடுத்து தங்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். 

    இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 288 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் ஆப்கானிஸ்தானை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில்  பிராத்வெட் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

    உலகக்கோப்பை தொடரில் பங்கேற்ற ஆப்கானிஸ்தான் அணி இதுவரை தான் விளையாடிய ஒரு போட்டியிலும் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
    உலகக்கோப்பை தொடரில் டோனி விதவிதமான பேட்களுடன் களமிறங்குவதற்கான சுவாரசியமான காரணம் தெரியவந்துள்ளது.
    இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா உள்பட பத்து நாடுகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. அதில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இந்திய அணியின் நட்சத்திர வீரர் டோனி தான் விளையாடும் ஒவ்வொரு போட்டியின் நடுவிலும் தனது பேட்டினை அடிக்கடி மாற்றம் செய்து ஆடுகிறார். ஒவ்வொரு முறையும் அவர் மாற்றும் பேட்டில் வெவ்வேறு நிறுவனத்தின் முத்திரைகள் பதிக்கப்பட்டதாக உள்ளது. இதற்கான காரணம் குறித்து ரசிகர்களிடையே பல்வேறு கருத்துகள் நிலவி வந்தன. இந்நிலையில் இது குறித்து டோனியின் மேலாளர் அருன் பாண்டே சுவாரசியமான தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். 

    டோனியின் மேலாளர் கூறியதாவது:

    டோனி மிகவும் பரந்த உள்ளம் கொண்டவர். போட்டிகளின் போது வெவ்வேறு நிறுவனங்களின் 'லோகோ’ பதித்த பேட்டுகளை கொண்டு விளையாடுவதன் மூலம் தனது கிரிக்கெட் வாழ்வில் பல்வேறு நிலைகளை கடந்து வந்தபோது தனக்கு உறுதுணையாக இருந்த பேட் நிறுவனங்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவே அவர் அடிக்கடி பேட்டினை மாற்றி விளையாடுகிறார். மேலும், பேட் பயன்படுத்தும் விளம்பரத்திற்காக டோனி எந்தவிதமான ஊதியத்தையும் வாங்கவில்லை.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். 

    டோனி நடைபெற்று கொண்டிருக்கும் உலகக்கோப்பை தொடருக்கு பின் தனது ஓய்வு அறிவிப்பை வெளியீடுவார் என பரவலாக செய்திகள் வெளியாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.    
    உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஆப்கானிஸ்தான் அணிக்கு 312 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது.
    லீட்ஸ்:

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 42-வது லீக் ஆட்டம் நடைபெற்று வருகிறது.

    இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து அணியின் தொடக்க வீரர்களாக  கிறிஸ் கெய்ல் மற்றும் இவின் லீவிஸ் களமிறங்கினர். இதில் கிறிஸ் கெய்ல் 7 ரன்னில் கேட்ச் ஆக, அடுத்து இணைந்த இவின் லீவிஸ் மற்றும் ஷாய் ஹோப் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் அரைசதம் அடித்த இவின் லீவிஸ் 58 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து வந்த ஹெட்மயர், ஷாய் ஹோப் உடன் கைகோர்க்க அணியின் ஸ்கோர் மேலும் உயர்ந்தது. இதில் சற்று அதிரடி காட்டிய ஹெட்மயர் 39 ரன்களிலும், தொடர்ந்து ஆடி அரைசதம் அடித்த ஷாய் ஹோப் 77 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்

    பின்னர் களமிறங்கிய  நிகோலஸ் பூரன் மற்றும் ஜாசன் ஹோல்டர் அணியின் ஸ்கோரை வேகமாக உயர்த்தினர். இதில் அரைசதம் அடித்த  நிகோலஸ் பூரன் 58 ரன்களிலும், ஜாசன் ஹோல்டர் 45 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

    இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 311 ரன்களை எடுத்துள்ளது. கடைசியில் பிராத்வெய்ட்  14 ரன்னுடனும், பாபியன் ஆலென் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.

    ஆப்கானிஸ்தான் அணியில் தவ்லத் ஜட்ரன் 2 விக்கெட்டுகளும், ரஷித்கான், முகமது நபி, சையத் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதனையடுத்து, 312 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி விளையாடி வருகிறது.
    வங்காள தேச அணிக்கெதிராக 10 ஓவர்கள் வீசிய ஹர்திக் பாண்டியாவை விராட் கோலி வெகுவாக பாராட்டியுள்ளார்.
    வங்காள தேச அணிக்கெதிராக அதிரடியாக விளையாட விரும்பிய இந்திய அணி கேஜர் ஜாதவை நீக்கிவிட்டு தினேஷ் கார்த்திக்கை அணியில் சேர்த்தது. விஜய் சங்கர் ஏற்கனவே அணியில் இருந்து விலகியதால் அவருக்குப் பதிலாக ரிஷப் பந்த் விளையாடி வருகிறார்.

    இதனால் இந்தியா பும்ரா, புவி, முகமது ஷமி, ஹர்திக் பாண்டியா, சாஹல் ஆகிய ஐந்து பந்து வீச்சாளர்களுடன்தான்  விளையாடியது. கூடுதல் பந்து வீச்சாளர்கள் இல்லாததால் ஐந்து பேரும் 10 ஓவர்களை நிறைவு செய்ய வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது.

    ஆல்-ரவுண்டரான ஹர்திக் பாண்டியா பெரும்பாலும் 10 ஓவர்களை நிறைவு செய்வதில்லை. நேற்றைய போட்டியில் கட்டாயமாக 10 ஓவர்கள் வீசியாக வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார். ஆனால் சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.

    சிறப்பாக பந்து வீசிய அவரை இந்திய அணி கேப்டன் விராட் கோலி வெகுவாக பாராட்டியுள்ளார். ஹர்திக் பாண்டியா குறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘ஹர்திக் பாண்டியாவுடன் நாங்கள் பழகியதை வைத்து பார்க்கும்போது அவர் மிகவும் நெருக்கடிக்குள் இருந்தார். தற்போது அதில் இருந்து மீண்டும் இந்தத் தொடரில் அபாரமாக விளையாடி வருகிறார்.

    ஹர்திக் பாண்டியா

    எப்படி ரன்கள் அடிக்க வேண்டும், விக்கெட் வீழ்த்துவது எப்படி என்ற வழியை கண்டுபிடித்துள்ளார். அணியின் வெற்றிக்கு தன்னுடைய பங்கு எப்படி இருக்க வேண்டும் என்பதை எதிர்பார்த்து கொண்டிருக்கிறார். இது அவருடைய கிரிக்கெட்டிற்க மிகவும் உதவிகரமாக இருக்கும்.

    ஹர்திக் பாண்டியா பந்து வீச வரும்போது, அவரை ஒரு பேட்ஸ்மேனாக நினைப்பார். பேட்ஸ்மேன் திணறும் வகையில் பந்து வீச விரும்புவார். ஏனென்றால், அவர்களின் உடல் அசைவுகளை அவரால் கணிக்க இயலும். இந்தியா அணிக்காக ஹர்திக் பாண்டியா சிறப்பாக பந்து வீசி கொண்டிருக்கிறார்’’ என்றார்.
    உலகக்கோப்பையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று கருதப்பட்ட கிறிஸ் கெய்லுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது.
    உலகக்கோப்பை தொடருக்கு முன் வெஸ்ட் இண்டீஸ் இங்கிலாந்துக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடியது.  இதில் கிறிஸ் கெய்ல் ருத்ர தாண்டவம் ஆடினார்.

    முதல் போட்டியில் 129 பந்தில் 135 ரன்கள் குவித்தார். 2-வது போட்டியில் 63 பந்தில் 50 ரன்கள் சேர்த்தார். 3-வது போட்டி கைவிடப்பட்டது. 4-வது போட்டியில் 97 பந்தில் 14 சிக்ஸ், 11 பவுண்டரியுடன் 162 ரன்கள் குவித்தார்.

    ஐந்தாவது போட்டியில் 27 பந்தில் 5 பவுண்டரி, 9 சிக்சருடன் 77 ரன்கள் குவித்தார். இவரது ஆட்டத்தில் 113 இலக்கை வெஸ்ட் இண்டீஸ் 12.1 ஓவரிலேயே எட்டியது.

    நான்கு போட்டிகளில்  424 ரன்கள் குவித்து அசத்தினார். இதனால் பேட்டிங் செய்வதற்கு சாதகமான ஆடுகளங்கள் அமைக்கப்பட்டுள்ள இங்கிலாந்தில்  உலகக்கோப்பை நடைபெற்றதால் கிறிஸ் கெய்ல் ருத்ரதாண்டவம் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    கிறிஸ் கெய்ல்

    இங்கிலாந்து தொடரின் பார்ம் உலகக்கோப்பை தொடரிலும் நீடிக்கும். இதனால் உச்சக்கட்ட புகழோடு ஓய்வு பெற்று விடலாம் என்று நினைத்த கெய்ல், ‘‘உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்தான் என்னுடைய கடைசி சர்வதேச போட்டியாக இருக்கும்’’ என்றார்.

    ஆனால் 9 போட்டிகள் கொண்ட ராபின் ரவுண்டில் கிறிஸ் கெய்லால் மிகப்பெரிய அளவில் சாதிக்க முடியவில்லை.  9 போட்டிகளில் 242 ரன்களே சேர்த்தார். சராசரி 30.25 ஆகும். இரண்டு அரைசதங்கள் மட்டுமே அடித்துள்ளார்.

    மிகவும் எதிர்பார்க்கப்பட்ட உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் தனது ஓய்வு முடிவை தள்ளிப்போட்டுள்ளார்.
    உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இதுவரை 25 சதங்கள் அடிக்கப்பட்டுள்ளன. இங்கிலாந்து அதிகபட்சமாக 7 சதங்கள் விளாசியுள்ளது.
    உலகக்கோப்பையில் நேற்றுடன் 41 ஆட்டங்கள் முடிந்து விட்டன. இதில் மொத்தம் 25 சதங்கள் அடிக்கப்பட்டுள்ளன. ஆடுகளங்கள் அனைத்தும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டது. ஆனால், தொடரின் முதல் பாதியில் மழைக் காரணமாக ஆடுகளங்கள் பந்து வீச்சுக்கு ஒத்துழைத்தன. இதனால் சதங்கள் சற்று குறைந்துள்ளன.

    பேர்ஸ்டோவ்

    இங்கிலாந்து அதிகபட்சமாக 7 சதங்கள் (பேர்ஸ்டோவ்-2, ஜோ ரூட் -2, ஜேசன் ராய், மோர்கன், பட்லர் தலா ஒன்று) விளாசியுள்ளது. ஐந்து சதங்களுடன் (ரோகித் சர்மா-4, தவான் -1) இந்தியா 2-வது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா நான்கு சதங்களும், வங்காள தேசம் மூன்று சதங்களும், நியூசிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இரண்டு சதங்களும், இலங்கை, பாகிஸ்தான் அணிகள் தலா ஒரு சதமும் அடித்துள்ளன.
    உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்தியா இங்கிலாந்திடம் மோத அதிக வாய்ப்புள்ளது. இல்லையென்றால் ஒருவேளை நியூசிலாந்தை சந்திக்கலாம்.
    12-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் கடந்த மே மாதம் 30-ந் தேதி தொடங்கியது. 10 நாடுகள் பங்கேற்ற இந்தப் போட்டியில் ‘லீக்’ ஆட்டங்கள் முடியும் தருவாயில் உள்ளது. நேற்றுடன் 41 ஆட்டங்கள் முடிந்து விட்டன. இன்னும் 4 ஆட்டங்கள் எஞ்சியுள்ளன.

    ஆஸ்திரேலியா முதல் அணியாகவும், இந்தியா 2-வது அணியாகவும், இங்கிலாந்து 3-வது அணியாகவும் அரையிறுதிக்கு தகுதி பெற்றன. 4-வது அணியாக நியூசிலாந்து அணி அரை இறுதிக்கு தகுதிபெற இருக்கிறது.

    நியூசிலாந்து அணி 5 வெற்றி, 3 தோல்வி, ஒரு முடிவு இல்லை ஆகியவற்றுடன் 11 புள்ளிகள் பெற்றுள்ளன. பாகிஸ்தான் அணி 4 வெற்றி, 3 தோல்வி, ஒரு முடிவு இல்லை ஆகியவற்றுடன் 9 புள்ளிகள் பெற்றுள்ளது.

    பாகிஸ்தான் அணி கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் வங்காளதேசத்தை நாளை (5-ந்தேதி) சந்திக்கிறது. இதில் பாகிஸ்தான் வெற்றி பெற்றால் அந்த அணியும், நியூசிலாந்தும் 11 புள்ளியுடன் சமநிலையில் இருக்கும். நிகர ரன் ரேட்டில் ஒரு அணி முன்னேறும்.

    நியூசிலாந்தின் ரன் ரேட் +1.75 ஆகும். பாகிஸ்தான் ரன் ரேட் -0.792 ஆகும். ரன் ரேட்டில் மிகவும் மோசமாக இருப்பதால் வங்காளதேசத்தை மிகப்பெரிய ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால்தான் பாகிஸ்தான் தகுதி பெற முடியும். இது மிகவும் இயலாத ஒன்றாகும்.

    பாகிஸ்தான் முதலில் விளையாடி 350 ரன் குவித்தால் 311 ரன் வித்தியாசத்தில் வெல்ல வேண்டும். 400 ரன் குவித்தால் 316 ரன்னிலும், 450 ரன் குவித்து 321 ரன் வித்தியாசத்திலும் வெல்ல வேண்டும்.

    வங்காள தேசம் முதலில் பேட்டிங் செய்தால் எந்த பலனும் இல்லை. இதனால் பாகிஸ்தான் அணி அரை இறுதிக்கு தகுதி பெற முடியாது. அந்த அணி வெளியேற்றப்படுகிறது. நியூசிலாந்து அரை இறுதிக்கு தகுதி பெறுகிறது.

    இலங்கை, வங்காளதேசம், தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் ஏற்கனவே வெளியேறி இருந்தன.

    ‘லீக்’ ஆட்டங்கள் 6-ந் தேதியுடன் முடிகிறது. முதல் அரை இறுதி ஆட்டம் 9-ந்தேதி மான்செஸ்டரிலும், 2-வது அரை இறுதி 11-ந்தேதி பர்மிங்காமிலும் நடக்கிறது.

    இங்கிலாந்து அணி

    புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தை பிடிக்கும் அணியும், 4-வது இடத்தை படிக்கும் அணியும் முதல் அரையிறுதியில் மோதும். 2-வது, 3-வது இடத்தை பிடிக்கும் அணிகள் 2-வது அரையிறுதியில் மோதும்.

    விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 6 வெற்றி, 1 தோல்வி, ஒரு முடிவு இல்லை ஆகியவற்றுடன் 13 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது.

    இந்திய அணி கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் இலங்கையுடன் 6-ந் தேதி மோதுகிறது. இதில் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய அணி கடைசி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவிடம் தோற்றால் இந்திய அணி முதல் இடத்தை பிடிக்கும்.

    அப்படி நடந்தால் இந்திய அணி அரை இறுதியில் நியூசிலாந்துடன் மோதும். ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தை சந்திக்கும்.

    நியூசிலாந்து அணி

    இந்திய அணி இலங்கையை வென்று, ஆஸ்திரேலிய அணி தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தினால் தற்போதுள்ள நிலமைப்படி ஆஸ்திரேலியா முதல் இடத்திலும், இந்தியா 2-வது இடத்திலும் 16 மற்றும் 15 புள்ளிகளுடன் அதே நிலையில் நீடிக்கும். அப்படி நிகழ்ந்தால் இந்திய அணி அரை இறுதியில் இங்கிலாந்தை சந்திக்கும். ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்தை எதிர் கொள்ளும்.

    ஒருவேளை இந்திய அணி இலங்கையிடம் தோற்றாலும் இங்கிலாந்தைதான் அரையிறுதியில் சந்திக்க வேண்டும்.
    நியூசிலாந்து அணியை 119 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து உலகக்கோப்பை அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
    செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்ஸ்:

    இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 41-வது லீக் செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்டில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. இங்கிலாந்து அணி கேப்டன் மோர்கன் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார்.

    அதன்படி இங்கிலாந்து அணியின் ஜேசன் ராய், பேர்ஸ்டோவ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இங்கிலாந்து 123 ரன்கள்  எடுத்திருக்கும் போது ஜேசன் ராய் 60 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.சிறப்பாக விளையாடிய பேர்ஸ்டோவ் சதம் அடித்து 106 ரன்கள் எடுத்திருந்து நிலையில் ஆட்டமிழந்தார். இறுதியில் இங்கிலாந்து 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 305 ரன்கள் சேர்த்துள்ளது. 

    306 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது.

    தொடக்க வீரர்கள் நிக்கோலஸ் ரன் எதுவும் எடுக்காமலும், மார்டின் கப்தில் 8 ரன்னிலும் தங்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அதன்பின் இறங்கிய கேப்டன் வில்லியம்சன் 27 ரன்களில் வெளியேறினார். சற்று நிலைத்து நின்று ஆடிய டாம் லாதம் அதிகபட்சமாக 57 ரன்கள் அடித்தார்.

    இறுதியில் நியூசிலாந்து அணி 45 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 186 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 119 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்து தரப்பில் அந்த அணியின் மார்க் உட் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

    நியூசிலாந்துக்கு ஏதிரான இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி உலகக்கோப்பை கிரிக்கெட்டின் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.
    உலகக்கோப்பை கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய நியூசிலாந்து வீரர்கள் பட்டியலில் டிரென்ட் போல்ட் முதலிடம் பிடித்துள்ளார்.
    இங்கிலாந்து - நியூசிலாந்து இடையிலான ஆட்டம் செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்டில் உள்ள மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 8 விக்கெட் இழப்பிற்கு 305 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட் 10 ஓவரில் 56 ரன்கள் விட்டுக்கொடுத்து ஜோஸ் பட்லர், ஜோ ரூட் ஆகியோரை வீழ்த்தினார்.

    இந்த இரண்டு விக்கெட்டுக்கள் மூலம் போல்ட் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் 37 விக்கெட்டுக்கள் கைப்பற்றி, அதிக விக்கெட் வீழ்த்திய நியூசிலாந்து வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

    இதற்கு முன் ஜேக்கப் ஓரம் 36 மற்றும் டேனியல் வெட்டோரி ஆகியோர் தலா 36 விக்கெட்டுக்களும், டிம் சவுத்தி 34 விக்கெட்டுக்களும், கிறிஸ் ஹாரிஸ் 32 விக்கெட்டுக்களும் வீழ்த்தியிருந்தனர்.
    பேர்ஸ்டோவ், ஜேசன் ராய் அதிரடி தொடக்கத்தால் நியூசிலாந்துக்கு 306 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இங்கிலாந்து.
    இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 41-வது லீக்  செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்டில் உள்ள மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து அணி கேப்டன் மோர்கன் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

    அதன்படி இங்கிலாந்து அணியின் ஜேசன் ராய், பேர்ஸ்டோவ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.

    முதல் பவர்பிளேயான 10 ஓவரில் இங்கிலாந்து விக்கெட் இழப்பின்றி 67 ரன்கள் குவித்தது. 14.4 ஓவரில் இங்கிலாந்து 100 ரன்னைத் தொட்டது. ஜேசன் ராய் 55 பந்தில் அரைசதமும், பேர்ஸ்டோவ் 46 பந்தில் அரைசதமும் அடித்தனர். இங்கிலாந்து 18.4 ஓவரில் 123 ரன்கள் எடுத்திருக்கும்போது ஜேசன் ராய் - பேர்ஸ்டோவ் ஜோடி பிரிந்தது. ராய் 61 பந்தில் 60 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

    சிறப்பாக விளையாடிய பேர்ஸ்டோவ் சதம் அடித்தார். இவர் இந்தியாவுக்கு எதிராகவும் சதம் அடித்திருந்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 106 ரன்கள் எடுத்திருந்து நிலையில் ஆட்டமிழந்தார். பேர்ஸ்டோவ் ஆட்டமிழக்கும்போது  இங்கிலாந்து 31.4 ஓவரில் 206 ரன்கள் எடுத்திருந்தது.

    ஜேசன் ராய்

    110 பந்துகளுடன் கைவசம் 7 விக்கெட் இருந்ததால் இங்கிலாந்து எளிதாக 300 ரன்களை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பட்லர் 11 ரன்னிலும், ஜோ ரூட் 24 ரன்னிலம், பென் ஸ்டோக்ஸ் 11 ரன்னிலும், மோர்கன் 42 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    கடைநிலை வீரர்களான ரஷித் 16 ரன்களும், பிளங்கெட் 15 ரன்களும் அடிக்க இங்கிலாந்து 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 305 ரன்கள் சேர்த்துள்ளது. 306 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து பேட்டிங் செய்து வருகிறது.
    ×