search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    பேர்ஸ்டோவ்
    X
    பேர்ஸ்டோவ்

    பேர்ஸ்டோவ் சதத்தால் நியூசிலாந்துக்கு 306 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இங்கிலாந்து

    பேர்ஸ்டோவ், ஜேசன் ராய் அதிரடி தொடக்கத்தால் நியூசிலாந்துக்கு 306 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இங்கிலாந்து.
    இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 41-வது லீக்  செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்டில் உள்ள மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து அணி கேப்டன் மோர்கன் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

    அதன்படி இங்கிலாந்து அணியின் ஜேசன் ராய், பேர்ஸ்டோவ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.

    முதல் பவர்பிளேயான 10 ஓவரில் இங்கிலாந்து விக்கெட் இழப்பின்றி 67 ரன்கள் குவித்தது. 14.4 ஓவரில் இங்கிலாந்து 100 ரன்னைத் தொட்டது. ஜேசன் ராய் 55 பந்தில் அரைசதமும், பேர்ஸ்டோவ் 46 பந்தில் அரைசதமும் அடித்தனர். இங்கிலாந்து 18.4 ஓவரில் 123 ரன்கள் எடுத்திருக்கும்போது ஜேசன் ராய் - பேர்ஸ்டோவ் ஜோடி பிரிந்தது. ராய் 61 பந்தில் 60 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

    சிறப்பாக விளையாடிய பேர்ஸ்டோவ் சதம் அடித்தார். இவர் இந்தியாவுக்கு எதிராகவும் சதம் அடித்திருந்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 106 ரன்கள் எடுத்திருந்து நிலையில் ஆட்டமிழந்தார். பேர்ஸ்டோவ் ஆட்டமிழக்கும்போது  இங்கிலாந்து 31.4 ஓவரில் 206 ரன்கள் எடுத்திருந்தது.

    ஜேசன் ராய்

    110 பந்துகளுடன் கைவசம் 7 விக்கெட் இருந்ததால் இங்கிலாந்து எளிதாக 300 ரன்களை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பட்லர் 11 ரன்னிலும், ஜோ ரூட் 24 ரன்னிலம், பென் ஸ்டோக்ஸ் 11 ரன்னிலும், மோர்கன் 42 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    கடைநிலை வீரர்களான ரஷித் 16 ரன்களும், பிளங்கெட் 15 ரன்களும் அடிக்க இங்கிலாந்து 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 305 ரன்கள் சேர்த்துள்ளது. 306 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து பேட்டிங் செய்து வருகிறது.
    Next Story
    ×