search icon
என் மலர்tooltip icon

    அந்தமான் நிகோபார்

    • அந்தமான் நிகோபர் தீவில் இன்று நிலநடுக்கம் உணரப்பட்டது.
    • இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவாகி உள்ளது.

    போர்ட்பிளேர்:

    அந்தமான் நிகோபர் தீவில் இன்று அதிகாலை 5.07 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது.

    இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவாகி உள்ளது. இதனை மத்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழுள்ள தேசிய நிலநடுக்கவியல் மையம் அறிவித்துள்ளது.

    இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் வெளியாகவில்லை.

    • நேதாஜி நினைவு மண்டபத்தின் மாதிரியையும் திறந்துவைத்தார்.
    • ராணுவத்தில் வழங்கப்படும் மிக உயரிய விருது, ‘பரம்வீர் சக்ரா’ ஆகும்.
    • 1999-ம் ஆண்டுக்கு பிறகு ‘பரம்வீர் சக்ரா’ விருது வழங்கப்படவில்லை.

    போர்ட்பிளேர் :

    சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் 126-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி, அந்தமானில் உள்ள 21 தீவுகளுக்கு 'பரம்வீர் சக்ரா' விருது பெற்றவர்களின் பெயர்களை சூட்டும் நிகழ்ச்சியும், அந்தமானில் அமைய உள்ள நேதாஜி நினைவு மண்டபத்தின் மாதிரி வடிவத்தை திறந்து வைக்கும் நிகழ்ச்சியும் நடந்தது.

    ராணுவத்தில் வழங்கப்படும் மிக உயரிய விருது, 'பரம்வீர் சக்ரா' ஆகும். போர்க்காலங்களில் மிகவும் துணிச்சலுடன் செயல்படும் முப்படையினரின் வீரத்தை பாராட்டி இவ்விருது வழங்கப்படுகிறது.

    கடந்த 1950-ம் ஆண்டு ஜனவரி 26-ந் தேதி இந்த விருது தோற்றுவிக்கப்பட்டது. முதலாவதாக, ராணுவ மேஜர் சோம்நாத் சர்மா, 'பரம்வீர் சக்ரா' விருதை பெற்றார்.

    இதுவரை 21 பேர் இந்த விருதை பெற்றுள்ளனர். அவர்களில் 14 பேருக்கு மரணத்துக்கு பிந்தைய விருதாக வழங்கப்பட்டது. விருது பெற்றவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு பல்வேறு மாநில அரசுகளும், மத்திய அமைச்சகங்களும் உதவித்தொகைகளை வழங்கி வருகின்றன.

    கடந்த 1999-ம் ஆண்டுக்கு பிறகு 'பரம்வீர் சக்ரா' விருது வழங்கப்படவில்லை.

    இத்தகைய சிறப்புகள் வாய்ந்த 'பரம்வீர் சக்ரா' விருது பெற்ற 21 பேரின் பெயர்களை அந்தமானில் உள்ள 21 தீவுகளுக்கு பிரதமர் மோடி சூட்டினார். நேற்று காணொலி காட்சி மூலம் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று அவர் பெயர் சூட்டினார்.

    அவர்களில், முதலாவதாக விருது பெற்ற மேஜர் சோம்நாத் சர்மா மற்றும் மேஜர் தன்சிங் தாபா உள்ளிட்டோரின் பெயர்களும் அடங்கும்.

    இலங்கையில் விடுதலைப்புலிகளுடனான போரில் இறந்த 'மேஜர் ராமசாமி பரமேஸ்வரன் பெயரும் ஒரு தீவுக்கு' சூட்டப்பட்டது.

    அந்தமானில் உள்ள ரோஸ் தீவில் (2018-ம் ஆண்டு நேதாஜி பெயர் சூட்டப்பட்டது) நேதாஜி நினைவு மண்டபம் கட்டப்படுகிறது.

    அதில், அருங்காட்சியகம், ரோப்கார் வசதி, ஒலி-ஒளி காட்சி, குழந்தைகள் கேளிக்கை பூங்கா உள்ளிட்ட வசதிகள் இடம் பெறுகின்றன.

    இந்த நினைவு மண்டபத்தின் மாதிரி வடிவத்தை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

    இந்த மண், முதல் முறையாக 1943-ம் ஆண்டு நேதாஜி தேசிய கொடி ஏற்றிய மண். அத்தகைய அந்தமான் மக்களிடையே பேசுவது பெருமையாக இருக்கிறது.

    அந்தமான் தீவுகளுக்கு 'பரம்வீர் சக்ரா' விருது பெற்றவர்களின் பெயர்களை சூட்டி இருப்பது, இனிவரும் தலைமுறைகளுக்கு உத்வேகம் அளிக்கும். தேசபக்தி உணர்வை ஊட்டும்.

    சுதந்திர போராட்டத்தில் நேதாஜியின் பங்களிப்பை மறைக்க முயற்சிகள் நடந்தன. ஆனால், டெல்லி, வங்காளத்தில் இருந்து அந்தமான் வரை ஒட்டுமொத்த நாடும் நேதாஜிக்கு மரியாதை செலுத்துகிறது.

    நேதாஜி தொடர்பான ரகசிய கோப்புகளை பகிரங்கமாக வெளியிடுமாறு நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. ஆனால், எனது அரசுதான், இறுதியாக அந்த கோப்புகளை வெளியிட்டது.

    காலனி ஆட்சியை கடுமையாக எதிர்த்ததற்காக நேதாஜி என்றென்றும் நினைவு கூரப்படுவார். அவரது சிந்தனைகள் எனக்கு ஊக்கமளிக்கும். நேதாஜி நினைவு மண்டபமும் மக்களின் உள்ளங்களில் தேசபக்தியை உண்டாக்கும்.

    21 தீவுகளுக்கு பெயர் சூட்டிய நிகழ்வை 'ஒரே பாரதம் உன்னத பாரதம்' நிகழ்வாக ஒவ்வொருவரும் பார்க்க வேண்டும். இந்த தீவுகள், அடிமை சின்னத்தின் அடையாளங்களாக முன்பு பார்க்கப்பட்டன. அதனால்தான் பெயரை மாற்ற முடிவு செய்தோம்.

    கடந்த 8 ஆண்டுகளாக, அந்தமானில் சுற்றுலாவை வளர்ப்பதற்கான வாய்ப்புகளை அடையாளம் கண்டு வருகிறோம். உலகம் முழுவதும் எல்லா மக்களும் 'கட்டாயம் பார்க்க வேண்டிய இடம்' என்று கருதும் அளவுக்கு இதை உருவாக்க கடுமையாக உழைத்து வருகிறோம்.

    அந்தமானில், சிறப்பான இணைய வசதியை உருவாக்க கண்ணாடி இழைகள் பதித்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. வருங்காலத்தில் இன்னும் பல நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    அழகான கடற்கரைகளுக்காக மட்டுமின்றி, சுதந்திர போராட்ட வரலாற்றை தெரிந்து கொள்ளவும் தற்போது அந்தமானுக்கு மக்கள் செல்ல தொடங்கி உள்ளனர்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதற்கிடையே, 21 தீவுகளுக்கு 'பரம்வீர் சக்ரா' விருது பெற்றவர்கள் பெயர்களை சூட்டியதற்காக பிரதமர் மோடிக்கு இந்தி நடிகர்கள் அஜய் தேவ்கன், சுனில் ஷெட்டி, சித்தார்த் மல்ஹோத்ரா ஆகியோர் நன்றி தெரிவித்துள்ளனர்.

    • 7422 பேருக்கு வேளாண் கடன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.
    • 13,000 பேருக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

    போர்ட் பிளேர்:

    அந்தமான் நிக்கோபார் தீவு பகுதியில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை மந்திரி எல்.முருகன், போர்ட் பிளேரில் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியுள்ளதாவது:

    அந்தமான் நிக்கோபார் யூனியன் பிரதேசத்தில் பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் 1334 வீடுகள் கட்டப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. 7422 பேருக்கு வேளாண் கடன் அட்டைகள் வழங்கப்பட்டு, அதன் மூலம் சுமார் 20 கோடி ரூபாய் விவசாயக் கடன் வழங்கப்பட்டுள்ளது.

    பிரதமரின் விவசாயி நிதியுதவித் திட்டத்தின் கீழ் 15,500 பேருக்கு ரூ.6,000 நிதியுதவியும், உஜ்வாலா திட்டத்தின் கீழ் சுமார் 13,000 பேருக்கு இலவச எரிவாயு இணைப்பும் வழங்கப் பட்டுள்ளது. கிரேட் நிக்கோபார் பகுதிக்குட்பட்ட கேம்பல்பே-யில் ரூ. 75000 கோடி மதிப்பில் சரக்குப் பெட்டக முனையம் அமைக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • படகுகளை நிறுத்த வசதி போன்றவை செய்து தர மீனவர்கள் கோரிக்கை.
    • மீனவர்களின் கோரிக்கைகளை 3 மாதத்திற்குள் நிறைவேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவு.

    துர்காபூர்:

    அந்தமான் நிக்கோபார் தீவு பகுதிகளுக்கு பயணம் மேற் கொண்ட மத்திய மீனவளத்துறை இணை மந்திரி எல்.முருகன், மத்திய அந்தமான் மாவட்டத்திற்கு உட்பட்ட துர்காபூர் கிராமத்தில் மீன்பிடி இறங்கு தளத்தை பார்வையிட்டார். அப்பகுதி மீனவர்களுடன் கலந்துரையாடினார்.

    அப்போது மீன்பிடித் தளத்தில் தங்களுக்கு சுத்தமானக் குடிநீர், தெருவிளக்கு, பொதுக் கழிப்பிட வளாகம், சாலை வசதி, படகுகளை நிறுத்துவதற்கான வசதி போன்றவை செய்து தர வேண்டும் என்று அப்பகுதி மீனவர்கள் கேட்டுக் கொண்டனர். 


    அண்டை நாட்டு மீனவர்கள் நம் கடல் எல்லைப் பகுதியில் வந்து ஆழ்கடல் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருவதைத் தடுக்க வேண்டும் என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வைத்தனர். இதைக் கேட்டறிந்த மந்திரி முருகன், மீனவர்களின் கோரிக்கைகளை 3 மாதத்திற்குள் நிறைவேற்ற வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    தொடர்ந்து பேசிய அவர் கூறியுள்ளதாவது: நாட்டிலுள்ள மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பிரதமரின் மத்சய சம்படா திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மீன்வளம், மீன்பிடித் தளம் மற்றும் மீன்பிடி இறங்கு தளம், துறைமுகம் மேம்பாடு, ஆழ்கடல் மீன்பிடித் தொழில் மேம்பாடு போன்றவை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன‌.


    நீலப் புரட்சி திட்டத்திற்கு 5,000 கோடி, துறைமுகங்களை மேம்படுத்தி நவீனப்படுத்த 7,000 கோடி, பிரதமரின் மத்சய சம்படா திட்டத்திற்கு 20,000 கோடி என மொத்தம் 32,000 கோடி நிதி, மீனவர்களின் நலனுக்காக மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

    பாரம்பரிய மீன்பிடித் தொழிலை மேம்படுத்தல் உள்பட பல்வேறு பணிகளுக்காக 2022-23 ஆம் நிதியாண்டில் அந்தமானுக்கு ரூ.7.6 கோடி நிதி ஒதுக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்

    • அந்தமான் நிகோபர் தீவில் இன்று நிலநடுக்கம் உணரப்பட்டது.
    • இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகி உள்ளது.

    போர்ட்பிளேர்:

    அந்தமான் நிகோபர் தீவின் போர்ட்பிளேரின் தென்கிழக்கே இன்று அதிகாலை 2.29 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது.

    இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகி உள்ளது. இதனை மத்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழுள்ள தேசிய நிலநடுக்கவியல் மையம் அறிவித்துள்ளது.

    இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் வெளியாகவில்லை.

    • முப்படைகளின் வளர்ச்சியை அதிகரிப்பதற்கான வழிகள் குறித்து ஆலோசனை.
    • போர்த் திறனை மேம்படுத்துவது குறித்து மாநாட்டில் விவாதம்.

    போர்ட் பிளேயர்:

    முப்படைகளின் தளபதிகள் பங்கேற்ற 36-வது மாநாடு, அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளின் தலைநகர் போர்ட் ப்ளேயரில் நடைபெற்றது. இந்தியாவின் கடல்சார் சேவை, ஒருங்கிணைந்த சேவை, திறன்களின் கூட்டு பலத்தை அதிகரித்தல் உள்ளிட்டவற்றை நோக்கமாக கொண்டு இந்த மாநாடு நடைபெற்றது.

    இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த மாநாட்டில், அந்தமான், நிகோபார் கமான்ட் லெப்டினண்ட் தலைமை தளபதி ஜெனரல் அஜய் சிங், தெற்கு தீவின் லெப்டினண்ட் ஜெனரல் ஜேஎஸ். நைன், மேற்கு கடற்படை வைஸ் அட்மிரல் அஜேந்திர பகதூர் சிங், தெற்கு கடற்படை வைஸ் அட்மிரல் ஹம்பிஹோலி, தென்பிராந்திய விமானப்படை தளபதி ஏர் மார்ஷல் ஜே.சலபதி, கிழக்கு கடற்படை வைஸ் அட்மிரல் ஏ.டி.எம். சஞ்சய் வத்சயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இந்தியப் பெருங்கடல் பகுதியில் உள்கட்டமைப்பு, முப்படைகளின் பிராந்திய நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தல், முப்படைகளின் வளர்ச்சியை அதிகரிப்பதற்கான வழிகள் மற்றும் முப்படைகளின் தயார் நிலை குறித்தும் இந்த மாநாட்டில் ஆலோசிக்கப்பட்டது. மேலும் பாதுகாப்பில் கவனம் செலுத்துவது, போர்த் திறனை மேம்படுத்துவது, செயல்பாடுகளை மிகவும் பயனுள்ளதாக மாற்றுவதற்கான வழிகள் குறித்தும் இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.

    • அந்தமான் நிகோபர் தீவில் இன்று நிலநடுக்கம் உணரப்பட்டது.
    • இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.9 ஆக பதிவாகி உள்ளது.

    திக்லிபூர்:

    அந்தமான் நிகோபர் தீவில் திக்லிபூர் அருகே இன்று மதியம் 12.343 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது.

    இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.9 ஆக பதிவாகி உள்ளது. இதனை மத்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழுள்ள தேசிய நிலநடுக்கவியல் மையம் அறிவித்துள்ளது.

    நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் எதுவும் வெளிவரவில்லை.

    • அந்தமான் நிகோபார் தீவு போர்ட்பிளேயரில் இருந்து சுமார் 183 கிலோ மீட்டர் தூரத்தில் இன்று காலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • இந்த நிலநடுக்கத்தால் உயிர்சேதமோ பொருட்சேதமோ எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    போர்ட்பிளேயர்:

    அந்தமான் நிகோபார் தீவு போர்ட்பிளேயரில் இருந்து சுமார் 183 கிலோ மீட்டர் தூரத்தில் இன்று காலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் கட்டிடங்கள் குலுங்கியது.

    ரிக்டர் அளவுகோலில் இது 4.3 ஆக பதிவாகி இருந்தது. இந்த நிலநடுக்கத்தால் உயிர்சேதமோ பொருட்சேதமோ எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    ×