என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
அசாம்
- விபத்து நடப்பதற்கு முந்தின நாள், பெண் சப்-இன்ஸ்பெக்டர் ஜூன்மோனி ரபா மீது லஞ்சம் வாங்கியதாக நகோன் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
- பெண் சப்-இன்ஸ்பெக்டர் ஜூன்மோனி ரபா சென்ற கார் மீது மோதிய கண்டெய்னர் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அசாம் மாநில காவல்துறையில் பெண் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் ஜூன்மோனி ரபா.
பணிபுரிந்த அனைத்து பகுதிகளிலும் பொதுமக்களின் புகார்களை விசாரித்து நடவடிக்கை எடுப்பதில் கெட்டிக்காரர். மேலும் எந்த சவாலையும் சமாளித்து, குற்றவாளிகளை துணிச்சலாக பிடித்து அவர்களுக்கு தண்டனை வாங்கி கொடுப்பார்.
இதனால் அசாம் காவல்துறையில் இவரை லேடி சிங்கம் என்றும் இந்தி படத்தில் வருவது போல தபாங் காப் என்றும் பொதுமக்களால் அழைக்கப்பட்டார்.
இதனால் பெண் சப்-இன்ஸ்பெக்டர் ஜூன்மோனி ரபாவிற்கு கிடைக்கும் பாராட்டு உயர் அதிகாரிகள் சிலருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் ஜூன்மோனி ரபா நேற்று அதிகாலை ஒரு காரில் அப்பர் அசாம் நோக்கி சென்றார்.
அப்போது அந்த வழியாக வந்த கண்டெய்னர் லாரி, கார் மீது மோதியது. இதில் காரில் இருந்த பெண் சப்-இன்ஸ்பெக்டர் ஜூன்மோனி ரபா, உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். இதுபற்றிய தகவல் அறிந்து போலீசார் அங்கு சென்று பெண் சப்-இன்ஸ்பெக்டர் ஜூன்மோனி ரபாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதில் பெண் சப்-இன்ஸ்பெக்டர் ஜூன்மோனி ரபா சென்ற கார் மீது மோதிய கண்டெய்னர் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த லாரி உத்தரபிரதேச மாநில பதிவெண் கொண்டது. அதனை ஓட்டி வந்த டிரைவர் விபத்து நடந்ததும், கண்டெய்னரை நிறுத்தி விட்டு தப்பியோடி விட்டான். அவனை போலீசார் தேடி வருகிறார்கள்.
இதற்கிடையே விபத்து நடப்பதற்கு முந்தின நாள், பெண் சப்-இன்ஸ்பெக்டர் ஜூன்மோனி ரபா மீது லஞ்சம் வாங்கியதாக நகோன் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அவரது வீட்டுக்கு சோதனைக்கு சென்ற போலீசார், வீட்டில் இருந்த ரூ.1 லட்சம் பணத்தை கைப்பற்றியதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.
இதுபற்றி பெண் சப்-இன்ஸ்பெக்டர் ஜூன்மோனி ரபாவின் உறவினர்கள் கூறும்போது, ஜூன்மோனி ரபாவின் சாவில் மர்மம் உள்ளது. அவர் கார் மீது கண்டெய்னரை ஏற்றி கொலை செய்துள்ளனர். மேலும் அவர் மீது வேண்டுமென்றே லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
வீட்டில் இருந்த பணத்துக்கு உரிய கணக்கு உள்ளது. அதனை போலீசார் ஏற்கவில்லை. மாறாக அவர் மீது வேண்டுமென்றே வழக்கு பதிவு செய்துள்ளனர். எனவே இந்த வழக்கை நேர்மையாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என கோரியுள்ளனர்.
இதுபற்றி அசாம் முதல்-மந்திரி ஹிமாந்த் பிஸ்வசுக்கும் உறவினர்கள் மனு அனுப்பி உள்ளனர்.
- குடும்பத்திற்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரையில் பணமில்லா மருத்துவ சிகிச்சை.
- முதல் கட்டமாக சுமார் 26 லட்சம் குடும்பங்களை உள்ளடக்கும் மற்றும் படிப்படியாக எண்ணிக்கை 32 லட்சமாக உயர்த்தப்படும்.
அசாம் மாநிலத்தில் பொது மக்கள் பயனடையும் வகையில் இலவச சுகாதார திட்டத்தை அம்மாநில அரசு அறிமுகம் செய்துள்ளது. முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தனது அரசாங்கம் இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, நேற்று 'ஆயுஷ்மான் அசோம் - முக்ய மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா' திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
இந்த திட்டம் குடும்பத்திற்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரையில் பணமில்லா மருத்துவ சிகிச்சை பெறும் வகையில் வகுக்கப்பட்டுள்ளது.
ரொக்கமில்லா மருத்துவ சிகிச்சை திட்டத்தில், "முதல் கட்டமாக சுமார் 26 லட்சம் குடும்பங்களை உள்ளடக்கும் மற்றும் படிப்படியாக எண்ணிக்கை 32 லட்சமாக உயர்த்தப்படும்" என்று அரசு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், திட்ட தொடக்க நிகழ்ச்சியில் உரையாற்றிய முதல்வர் ஹிமந்த சர்மா கூறியதாவது:-
சமூகத்தில் கடைசி நபரின் எழுச்சி மற்றும் மேம்பாட்டை உறுதி செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடியின் இடைவிடாத 'அந்தியோதயா' நாட்டமே 'முக்ய மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா'க்கு ஊக்கமளிக்கும் காரணியாக அமைந்துள்ளது. சில வரம்புகள் காரணமாக, பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த பல குடும்பங்கள் 'பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா' திட்டத்தில் இருந்து வெளியேறிவிட்டன. இது பணமில்லா மருத்துவ சிகிச்சை அளிக்க வழி வழங்குகிறது.
புதிய திட்டமானது, விடுபட்ட குடும்பங்களுக்கும் இதேபோன்ற பணமில்லா சுகாதாரப் பலன்களையும் உறுதி செய்யும். சுகாதாரத் துறையை மேம்படுத்துவது தனது அரசாங்கத்தின் முன்னுரிமைகளில் ஒன்று. ஆகஸ்ட் 15 முதல் அசாம் அரசு ஊழியர்களுக்கு 'முக்யா மந்திரி லோக் சேவா ஆரோக்கிய யோஜனா' திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இமாச்சல பிரதேசத்தில் உள்ள மண்டி மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் சந்தீப் குமாருக்கு மனைவி மற்றும் ஒரு வயது மகன் உள்ளனர்.
- சம்பவம் குறித்த உண்மைகளை கண்டறிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அசாம் மாநிலம் தர்ராங் களத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியபோது குண்டுவெடித்து சந்தீப் குமார் என்கிற ராணுவ வீரர் உயிரிழந்தார். நேற்று ரேஞ்சில் காவல் பணியில் அவர் ஈடுபட்டிருந்தபோது இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
குண்டுவெடி விபத்தில் சந்தீப் குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டதையடுத்து, ரேஞ்சில் இருந்த மருத்துவ அதிகாரி மூலம் அவருக்கு உடனடியாக மருத்துவ முதல் உதவி வழங்கப்பட்டது.
பின்னர் அவர் குவாஹாட்டியில் உள்ள மருத்துவமனைக்கு விமானத்தில் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அங்கு சந்தீப் குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இமாச்சல பிரதேசத்தில் உள்ள மண்டி மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் சந்தீப் குமாருக்கு மனைவி மற்றும் ஒரு வயது மகன் உள்ளனர்.
ராணுவ வீரரை இழந்து வாடும் குடும்பத்தினருடன் உறுதுணையாக இருப்பதாகவும், சம்பவம் குறித்த உண்மைகளை கண்டறிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- 37 நாட்களுக்கு பிறகு தலைமறைவாக இருந்த அம்ரித்பால் சிங்கை பஞ்சாப் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
- ஜெயிலில் உள்ளேயும் வெளியேயும் அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.
கவுகாத்தி:
காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பு தலைவர் அம்ரித்பால் சிங் நேற்று பஞ்சாப் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
'வாரிஸ் பஞ்சாப் டி' என்ற அமைப்பின் தலைவரான அம்ரித்பால் சிங் மீது பல வழக்குகள் இருந்தது. கடந்த மாதம் 18-ந்தேதியில் இருந்து அவரை பிடிக்க தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. அவருக்கு நெருக்கமானவர்கள் 8 பேர் கைதாகி இருந்த நிலையில் அவர் தொடர்ந்து தலைமறைவாக இருந்தார்.
மாறுவேடத்தில் சுற்றி திரிந்த அவர் போலீசுக்கு கடும் சவாலாக திகழ்ந்தார்.
37 நாட்களுக்கு பிறகு தலைமறைவாக இருந்த அம்ரித்பால் சிங்கை பஞ்சாப் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
அம்ரித்பால் சிங் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து அவர் சிறப்பு விமானம் மூலம் பதிண்டாவில் இருந்து அசாம் மாநிலத்துக்கு அழைத்து செல்லப்பட்டார். பின்னர் திப்ரூசர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
விமான நிலையத்தில் இருந்து மத்திய சிறை வரையிலான 15 கிலோ மீட்டர் தொலைவுக்கு சிறையை சுற்றிலும் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. அவருக்கு நெருக்கமான 9 பேர் இதே ஜெயிலில்தான் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் அம்ரித்பால் சிங் அடைக்கப்பட்டுள்ள திப்ரூதர் சிறையில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வெளி நபர்கள் யாரும் நுழைந்து விடாமல் இருக்கும் வகையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. ஜெயிலில் உள்ளேயும் வெளியேயும் அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.
பல உயர்மட்ட விளக்குகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் சிறை கண்காணிப்பில் உள்ளது.
திப்ரூதர் ஜெயில் அசாமில் உள்ள 2-வது பழமை வாய்ந்த ஜெயிலாகும். 1857-ம் ஆண்டு இந்த சிறைச்சாலை கட்டப்பட்டது.
- பல்வேறு திட்டங்களைத் தொடங்கிவைக்க பிரதமர் மோடி அசாம் மாநிலம் சென்றார்.
- கவுகாத்தி எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.
கவுகாத்தி:
பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு திட்டங்களைத் தொடங்கிவைக்க இன்று அசாம் மாநிலத்திற்குச் சென்றார்.
இந்நிலையில், கவுகாத்தியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம் (எய்ம்ஸ்) மருத்துவமனையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
கவுகாத்தி எய்ம்ஸ் மருத்துவமனை கடந்த 2017-ம் ஆண்டு பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டு ரூ.1,120 கோடியில் கட்டி முடிக்கப்பட்டது. இந்த மருத்துவமனையானது அசாமில் உள்ள மக்களுக்கு மட்டுமின்றி, மற்ற வடகிழக்கு மாநிலங்களுக்கும் மருத்துவ சேவையை வழங்கும்.
இதனை தொடர்ந்து நல்பாரி, கோக்ரஜார் மற்றும் நாகோன் மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரியையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார். 3 மருத்துவக் கல்லூரிகளும் சுமார் ரூ.615 கோடி, ரூ.600 கோடி மற்றும் ரூ.535 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது.
- அசாம் முதல் மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா மற்றும் பல்வேறு முக்கிய பிரமுகர்களும் பங்கேற்றனர்.
- அரங்கம் அதிரும் வகையில், நடன கலைஞர்களை சுற்றி இசை வாத்தியங்கள் முழங்கியபடியே இருந்தது.
கவுகாத்தி:
அசாமிய கலாச்சாரத்தின் ஒரு முக்கிய அம்சமாக விளங்கும் போஹா பிஹூதிருவிழாவில் பிஹூ நடனம் இடம்பெறுவது வழக்கம்.
இந்நிலையில் பிஹூ நடனத்தை உலக அரங்கிற்கு எடுத்து செல்லும் வகையிலும், இதனை உலகம் முழுவதும் அறிந்து கொள்ளும் வகையிலும் மிக பெரிய அளவில் இசை மற்றும் நடன நிகழ்ச்சி நடத்துவதற்கு மாநில அரசு ஏற்பாடு செய்தது.
இதற்காக அசாம் மாநிலம் முழுவதும் ஆடிஷன்கள் நடத்தப்பட்டு, 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்புற கலைஞர்கள், இசைக் கலைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.தொடர்ந்து சில நாட்களாகவே நாட்டுப்புற கலைஞர்கள் ஒத்திகையிலும் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் நேற்று மாலை அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள சருசஜாய் மைதானத்தில் பிஹூ நடன நிகழ்ச்சி நடந்தது.
இதில் அசாம் முதல் மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா மற்றும் பல்வேறு முக்கிய பிரமுகர்களும் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்புற கலைஞர்கள், இசைக்கலைஞர்கள் ஒரே இடத்தில் திரண்டனர்.
அவர்கள் தங்கள் மாநிலத்தின் பாரம்பரிய நடனமான பிஹூ நடனத்தை ஆடினர். சுமார் 15 நிமிடங்களுக்கும் மேலாக நடனம் நீடித்தது. அப்போது அரங்கம் அதிரும் வகையில், நடன கலைஞர்களை சுற்றி இசை வாத்தியங்கள் முழங்கியபடியே இருந்தது.
இது மைதானத்தில் திரண்டிருந்த பொதுமக்களை மிகவும் கவர்ந்திழுத்தது. இது அந்த மாநிலத்தில் உள்ள ஊடகங்களிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இதுகுறித்து முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறும்போது, மாநிலத்தின் பாரம்பரிய நடனமான பிஹூ நடனத்தை உலகம் முழுவதும் தெரியப்படுத்தும் வகையிலேயே இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்த நிகழ்வு அசாமின் கலாசார வரலாற்றை உலக முழுவதும் அறிய வைத்துள்ளதில் பெருமை அடைகிறோம் என்றார்.
- பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க 300-க்கு மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வரும்.
- மோடி தொடர்ந்து 3-வது முறையாக பிரதமர் ஆவார்.
அருணாசலபிரதேசம் சென்றிருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அங்கிருந்து அசாம் மாநிலத்துக்கு சென்றார். அங்கு திப்ருகரில், பா.ஜ.க அலுவலகத்துக்கு அடிக்கல் நாட்டினார்.
பின்னர் நடந்த பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
ஒரு காலத்தில் வடகிழக்கு மாநிலங்கள், காங்கிரசின் கோட்டையாக இருந்தன. ஆனால், சமீபத்தில் ராகுல்காந்தி பாதயாத்திரை சென்றபோதிலும், 3 வடகிழக்கு மாநில தேர்தல்களில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது.
ராகுல்காந்தி, வெளிநாட்டு மண்ணில் இந்தியாவை இழிவுபடுத்தினார். அவர் தொடர்ந்து இதேபோல் பொய்களால் இந்தியாவையும், அரசையும் இழிவுபடுத்தினால், வடகிழக்கு மாநிலங்களில் துடைத்து எறியப்பட்டதுபோல், நாடு முழுவதும் இருந்து காங்கிரஸ் விரட்டி அடிக்கப்பட்டு விடும்.
அவர்கள் எவ்வளவுக்கு எவ்வளவு பிரதமர் மோடியை மோசமாக விமர்சிக்கிறார்களோ, அந்த அளவுக்கு பா.ஜ.க வளரும். மோடி பிரதமர் அடுத்த ஆண்டு நடக்கும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க 300-க்கு மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வரும். மோடி தொடர்ந்து 3-வது முறையாக பிரதமர் ஆவார்.
முன்பெல்லாம் அசாம் என்றாலே போராட்டம், பயங்கரவாதம்தான் நினைவுக்கு வரும். ஆனால், இப்போது அமைதி தவழ்கிறது. அதனால், மக்கள் இசைக்கேற்ப நடனம் ஆடுகிறார்கள். அசாம் மாநிலத்தின் 70 சதவீத பகுதிகளில், ஆயுதப்படைகள் சிறப்பு அதிகார சட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. அண்டைமாநிலங்களுடனான எல்லை பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
- டேவிட் வார்னர் ஐ.பி.எல். தொடரில் 6,000 ரன்களை கடந்தார்.
- 6 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வெளிநாட்டு வீரர் என்ற சாதனை படைத்தார்.
கவுகாத்தி:
ஐபிஎல் தொடரில் இன்று மாலை 3.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின.
முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி டெல்லியின் பந்துவீச்சை திறம்பட சமாளித்து 199 ரன்கள் குவித்தது.
ராஜஸ்தான் தரப்பில் பட்லர் 79 ரன்னும், ஜெய்ஸ்வால் 60 ரன்னும் எடுத்தனர்.
இதையடுத்து, 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 142 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது.
இந்நிலையில், இந்த போட்டியில் டெல்லியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய டேவிட் வார்னர் 26 ரன்கள் எடுத்திருந்த போது ஐ.பி.எல். தொடரில் 6,000 ரன்களைக் கடந்த முதல் வெளிநாட்டு வீரர் என்ற சாதனையை படைத்தார்.
அதுமட்டுமின்றி, ஐ.பி.எல். தொடரில் குறைந்த இன்னிங்சில் (165) 6,000 ரன்களைக் கடந்த வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்திருக்கிறார்.
இந்தப் பட்டியலில் விராட் கோலி (188 இன்னிங்ஸ்), ஷிகர் தவான் (199) அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
- முதலில் ஆடிய ராஜஸ்தான் 199 ரன்கள் குவித்தது.
- அடுத்து ஆடிய டெல்லி 142 ரன்கள் மட்டுமே எடுத்தது.
கவுகாத்தி:
16-வது ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன.
இன்று நடைபெற்ற 11-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 199 ரன்களை குவித்தது. ஜாஸ் பட்லர் 51 பந்தில் 71 ரன்னும். ஜெய்ஸ்வால் 31 பந்தில் 60 ரன்னும் எடுத்தனர். கடைசி கட்டத்தில் ஹெட்மயர் 4 சிக்சர் உள்பட 39 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து, 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. தொடக்கத்திலேயே டெல்லி ரன் கணக்கை தொடங்குவதற்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது. பிரிதிவ் ஷா, மணீஷ் பாண்டே டக் அவுட்டாகினர். ரூசோவ் 14 ரன்னும், அக்சர் படேல் 2ரன்னும், ரோவ்மென் பாவெல் 2 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். லலித் யாதவ் 38 ரன்கள் எடுத்தார்.
தொடக்க ஆட்டக்காரர் வார்னர் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 65 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இறுதியில், டெல்லி அணி 142 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் ராஜஸ்தான் 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ராஜஸ்தான் அணி சார்பில் போல்ட், சஹல் தலா 3 விக்கெட்டும், அஸ்வின் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின.
- முதலில் ஆடிய ராஜஸ்தான் 199 ரன்கள் குவித்தது.
கவுகாத்தி:
16-வது ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன.
இன்று நடைபெறும் 11-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதுகின்றன. டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, ராஜஸ்தான் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஜெய்ஸ்வால், ஜாஸ் பட்லர் அதிரடியில் மிரட்டினர்.
இருவரும் அரை சதமடித்து அசத்தினர்.
முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 98 ரன்களை சேர்த்த்து. ஜாஸ் பட்லர் 51 பந்தில் 71 ரன்னும். ஜெய்ஸ்வால் 31 பந்தில் 60 ரன்னும் எடுத்தனர். கடைசி கட்டத்தில் ஹெட்மயர் சிக்சர்களாக விளாசினார். ஹெட்மயர் 4 சிக்சர் உள்பட 39 ரன்கள் எடுத்தார்.
இறுதியில், ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 199 ரன்களை குவித்தது. இதையடுத்து, 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி விளையாடுகிறது.
- சட்டமன்ற உறுப்பினர்கள் சார்பில் வாழ்த்து செய்தியை சபாநாயகர் பிஸ்வஜித் வாசித்தார்.
- நம் வாழ்நாளில் நாம் செய்ய முடியாத சாதனையை லவ்லினா செய்திருப்பதாக முதல்வர் பாராட்டினார்
கவுகாத்தி:
டெல்லியில் நடைபெற்று வரும் பெண்களுக்கான உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் அசாம் மாநில வீராங்கனை லவ்லினா போர்கோஹைன் தங்கம் வென்று சாதனை படைத்தார். 75 கிலோ எடைப்பிரிவினருக்கான இறுதிச்சுற்றில் ஆஸ்திரேலிய வீராங்கனை கெய்த்லின் பார்க்கரை 5-2 என லவ்லினா வீழ்த்தி தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.
இந்நிலையில், உலக சாம்பியன் பட்டம் வென்ற லவ்லினாவுக்கு அசாம் மாநில சட்டசபையில் இன்று பாராட்டு தெரிவிக்கப்பட்டது. உறுப்பினர்கள் சார்பில் வாழ்த்து செய்தியை சபாநாயகர் பிஸ்வஜித் வாசித்தார்.
பின்னர் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா பேசுகையில், 'மாநிலத்தின் விளையாட்டுக் கொள்கையின் அடிப்படையில், குத்துச்சண்டை உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற லவ்னினாவுக்கு ரூ.50 லட்சம் பரிசு வழங்கப்படும்' என்று அறிவித்தார்.
முதல்வர் மேலும் பேசுகையில், "நாம் புதிய லவ்லினா மற்றும் ஹிமா தாசை (தடகள வீராங்கனை) உருவாக்க வேண்டும். அவர்கள் ஏற்கனவே மாநிலத்திற்கு பெருமை சேர்ப்பதற்கான பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள். லவ்லினா பங்கேற்கும் அடுத்த போட்டியின் முடிவு எப்படி இருக்கும்? என்பதை இப்போது நாம் ஆராய வேண்டாம். நம் வாழ்நாளில் நாம் செய்ய முடியாத சாதனையை அவர் செய்திருக்கிறார்" என பாராட்டினார்.
- எம்எல்ஏக்கள், ராகுல் காந்திக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பினர்
- காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இன்று கருப்பு சட்டை அணிந்து சட்டசபைக்கு வந்தனர்.
கவுகாத்தி:
அசாம் சட்டசபையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இன்று அமளியில் ஈடுபட்டனர். ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது தொடர்பாக ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். இந்த தீர்மானத்தை சபாநாயகர் நிராகரித்தார்.
காங்கிரஸ் எம்எல்ஏக்கள், ராகுல் காந்திக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பியதோடு, பதாகைகளை ஏந்தியபடி நின்றனர். எம்எல்ஏக்களின் அமளியால் அவை 2 முறை ஒத்திவைக்கப்பட்டது. சட்டசபையில் அமளியில் ஈடுபட்ட 3 எம்.எல்.ஏ.க்கள் நாள் முழுவதும் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். இதில் இருவர் காங்கிரசை சேர்ந்தவர்கள். ஒருவர் சுயேட்சை எம்.எல்.ஏ. ஆவார்.
ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இன்று கருப்பு சட்டை அணிந்து சட்டசபைக்கு வந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்