search icon
என் மலர்tooltip icon

    அசாம்

    • அசாமில் ஹிமந்த பிஸ்வா சார்மா தலைமையில் பாஜக ஆட்சி நடக்கிறது.
    • வருடத்திற்கு சராசரியாக 80 யானைகளுக்கும் அதிகமாக சாகின்றன.

    கவுகாத்தி:

    அசாமில் ஹிமந்த பிஸ்வா சார்மா தலைமையில் பாஜக ஆட்சி நடக்கிறது.

    சட்டசபை விவாதத்தின்போது அந்த மாநில வனத்துறை மந்திரி, "மக்கள்தொகை அதிகரிப்பின் காரணமாக யானைகளின் இருப்பிடங்களை ஆக்கிரமிக்கப்படுவது அதிகரித்துள்ளது. இதனால் உணவை தேடி மனித குடியிருப்புக்குள் புகும் யானைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல் உருவாகிறது. இந்த காரணத்தினால் வருடத்திற்கு சராசரியாக 80 யானைகளுக்கும் அதிகமாக சாகின்றன. மேலும் 70 மனித உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.

    கடந்த 12 ஆண்டுகளில் 1330 யானைகள் உயிரிழந்துள்ளன" என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மணமேடைக்கு மணமகன் குடிபோதையில் வந்துள்ளார்.
    • மணப்பெண்ணின் குடும்பத்தினர் மணமகன் வீட்டார் மீது போலீஸ் நிலையத்திலும் புகார் அளித்தனர்.

    அசாம் மாநிலத்தின் நல்வாரி மாவட்டத்தில் உள்ள பர்கனாஜன் பகுதியை சேர்ந்தவர் பிரசென்ஜித் ஹலோய். இவருக்கும் அப்பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு விழா ஏற்பாடுகள் நடந்தது.

    அப்போது மணமேடைக்கு மணமகன் குடிபோதையில் வந்துள்ளார். ஒரு வழியாக தட்டுத்தடுமாறி மேடையில் அமர்ந்த அவர் புரோகிதர் கூறிய மந்திரங்களை உச்சரிக்க முடியாமல் தூங்கி வழிந்தார். அவரது அருகே உறவுக்காரர் ஒருவர் உதவியாக இருந்த போதிலும் மணமகன் தனது திருமண சடங்குகளை செய்வதற்கும் சிரமப்பட்டார். இதுகுறித்து மணமகனின் பெற்றோரிடம் புகார் செய்ய முற்பட்ட போது மணமகனின் தந்தையும் போதையில் இருப்பது தெரியவந்தது.

    இதனை பார்த்த மணமகள் அதிர்ச்சியடைந்தார். உடனே அவர் தனது திருமணத்தை ரத்து செய்வதாக அறிவித்தார். அவரது முடிவுக்கு அந்த கிராமத்தின் தலைவர் மற்றும் உள்ளூர் மக்கள் ஆதரவு தெரிவித்தனர். ஆனாலும் தனது மகளின் திருமணம் நின்றதால் மணமகளின் தந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் மணப்பெண்ணின் குடும்பத்தினர் மணமகன் வீட்டார் மீது போலீஸ் நிலையத்திலும் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • அசாமில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து வருகிறது.
    • அசாமில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து வருகிறது.

    கவுகாத்தி:

    அசாமில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து வருகிறது. இன்று பொது அறிவியல் தேர்வு நடைபெற இருந்தது. இந்த நிலையில் பொது அறிவியல் வினாத்தாள் திடீரென கசிந்தது. இது தொடர்பாக நேற்று இரவு இடைநிலை கல்வி வாரியத்துக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்று நடைபெற இருந்த பொது அறிவியல் தேர்வு ரத்து செய்யப்பட்டது.

    வினாத்தாள் கசிந்த விவகாரம் தொடர்பாக போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அம்மாநில கல்வி மந்திரி ரனோஜ் பெகு தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். போலீசாரின் விரிவான விசாரணையில் வினாத்தாள் கசிவுக்கு யார் காரணம்? அதன் பின்னணியில் யார்-யார் உள்ளனர் என்பது தெரியவரும். வினாத்தாள்கள் போலீஸ் நிலையத்தில் வைக்கப்பட்டு, தேர்வு நாளின் காலையில் மட்டுமே தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன" என்றார்.

    • பாகிஸ்தான் உளவாளிகளுக்கு வினியோகித்து வருவதாக அசாம் போலீசாருக்கு உளவுத்தகவல்கள் கிடைத்தன.
    • ஒரு வெளிநாட்டு தூதரகத்துடன் பகிர்ந்து கொள்ள பயன்படுத்திய செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டது.

    கவுகாத்தி:

    அசாம் மாநிலத்தில் நகோன், மோரிகோன் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 10 பேர், மோசடியாக சிம்கார்டுகளை பெற்று, அவற்றை பாகிஸ்தான் உளவாளிகளுக்கு வினியோகித்து வருவதாக அசாம் போலீசாருக்கு உளவுத்தகவல்கள் கிடைத்தன.

    இதையடுத்து, 2 மாவட்டங்களிலும் அதிரடி சோதனை நடத்தினர். அதில், 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களது பெயர்கள், ஆஷிகுல் இஸ்லாம், போடார் உத்தின், மிஜனுர் ரகுமான், வஹிதுஸ் சமான், பஹருல் இஸ்லாம் ஆகும். மீதி 5 பேர் தலைமறைவாகி விட்டனர். இருப்பினும், கைதானவர்களிடமும், தலைமறைவானவர்களின் வீடுகளிலும் மொத்தம் 18 செல்போன்கள், 136 சிம்கார்டுகள், விரல் ரேகை ஸ்கேன் கருவி மற்றும் உயர்தொழில்நுட்ப சி.பி.யு., பிறப்பு சான்றிதழ், பாஸ்புக், புகைப்படம் போன்ற ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. ஆஷிகுல் இ்ஸ்லாம், பாதுகாப்பு தகவல்களை ஒரு வெளிநாட்டு தூதரகத்துடன் பகிர்ந்து கொள்ள பயன்படுத்திய செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டது.

    • கணவரை காணவில்லை என கடந்த 7 மாதங்களுக்கு முன்பு போலீசில் புகார் செய்தார்.
    • உடல் பாகங்களை அசாமில் இருந்து மேகாலயாவுக்கு கொண்டு சென்று பள்ளத்தாக்கில் வீசியது தெரியவந்தது.

    கவுகாத்தி:

    அசாம் மாநிலம் கவுகாத்தியில் ஒரு பெண் தனது கணவர் மற்றும் மாமியாரை கொன்று சிறு துண்டுகளாக வெட்டி பாலிதீன் பைகளில் அடைத்து மேகாலயா கொண்டு சென்று வீசியுள்ளார்.

    அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள சந்த்மாரி மற்றும் நரேங்கி ஆகிய இடங்களில் வெவ்வேறு வீடுகளில் இந்த சம்பவம் நடந்தது. கொலையுண்டவர்கள் அமரேந்திர தே மற்றும் அவரது தாயார் சங்கரி தே ஆவார்கள்.

    அமரேந்திர தேயை காணவில்லை என்று அவரது மனைவி கடந்த 7 மாதங்களுக்கு முன்பு போலீசில் புகார் செய்தார். அதேபோல் சங்கரி தேயை காணவில்லை என்று அவரது உறவினர் புகார் செய்தார்.

    இதையடுத்து அமரேந்திர தேயின் மனைவிமீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை பிடித்து விசாரித்த போது தனது காதலன் மற்றும் குழந்தைப்பருவ நண்பருடன் சேர்ந்து கணவரையும், மாமியாரையும் கொலை செய்ததாக தெரிவித்தார்.

    அவர்களின் உடல்களை சிறு சிறு துண்டுகளாக வெட்டி பாலிதீன் பையில் அடைத்துள்ளார். பின்னர் அசாமில் இருந்து மேகாலயாவுக்கு கொண்டு சென்று பள்ளத்தாக்கில் வீசியது தெரியவந்தது.

    இதையடுத்து அவர்களின் உடல் பாகங்களை போலீசார் மீட்டு வருகிறார்கள். இதுதொடர்பாக ஜான்மதி போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். 7 மாதங்களுக்கு பிறகு இந்த கொலையில் துப்பு துலங்கியுள்ளது.

    • ரிக்டர் அளவுகோலில் 3.8 புள்ளிகளாக பதிவானது.
    • மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து வீதிகளில் சிறிது நேரம் தஞ்சம் அடைந்தனர்.

    கவுகாத்தி :

    புவித்தட்டுகள் ஒன்றுடன் ஒன்று மோதி, மேற்பரப்பில் அதிர்வுகள் உண்டாவது உண்டு. இதுதான் நில நடுக்கம்.

    நமது நாட்டைப் பொறுத்தமட்டில், வடகிழக்கு பகுதி, அதிகபட்சம் நில நடுக்கம் ஏற்படுகிற மண்டலத்தில் அமைந்துள்ளது. எனவே அங்கே அடிக்கடி நில நடுக்கம் ஏற்படுகிற வாய்ப்பு இருக்கிறது.

    இந்த நிலையில் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாசலபிரதேசத்தில் நேற்று மதியம் 12.12 மணிக்கு திடீரென நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.8 புள்ளிகளாக பதிவானது.

    நில நடுக்கமானது, பூடான் எல்லை அருகே அமைந்துள்ள மேற்கு காமெங்கில் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்தது.

    இந்த நில நடுக்கத்தின் தாக்கம் மத்திய வடக்கு அசாமில் பல இடங்களில் உணரப்பட்டது.

    இதே போன்று பூடானின் கிழக்கு பகுதியிலும் இந்த நில நடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    வட மாநிலமான மத்திய பிரதேச மாநிலத்தின் மேற்கு மாவட்டங்கள் சிலவற்றிலும் நேற்று மதியம் 12.54 மணிக்கு நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3 புள்ளிகளாக பதிவானது.

    இந்த நில நடுக்கம் இந்தூருக்கு 151 கி.மீ. தென்மேற்கில் மையம் கொண்டிருந்தது.

    இந்த நில நடுக்கம், பர்வானி, அலிராஜ்பூர், தார், ஜாபுவா, கார்கான், இந்தூர் மாவட்டங்களில் உணரப்பட்டது.

    துருக்கியிலும், சிரியாவிலும் சமீபத்தில் நில நடுக்கம் ஏற்பட்டு பல்லாயிரக்கணக்கான் மக்கள் உயிரிழந்த நிலையில், வட மாநிலங்களில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் மக்கள் பதற்றத்தில் தவித்தனர்.

    நில நடுக்க பாதிப்புக்குள்ளான இடங்களில் பெரும்பாலான மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து வீதிகளில் சிறிது நேரம் தஞ்சம் அடைந்தனர்.

    அதே நேரத்தில் இந்த நில நடுக்கத்தால் பெரிய அளவில் பாதிப்புகள் எதுவும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.

    • கடைகள் நெரிசலாக இருந்ததால் ஒரு கடையில் பிடித்த தீ மற்ற கடைகளுக்கும் பரவியது.
    • மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.

    அசாம் மாநிலம் ஜோர்ஹாட் நகரின் மையப் பகுதியில் உள்ள சவுக் பஜார் மார்க்கெட்டில் நேற்று இரவு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் கடைகள் நெரிசலாக இருந்ததால் ஒரு கடையில் பிடித்த தீ மற்ற கடைகளுக்கும் பரவியது. இதில் 150 கடைகள் எரிந்து நாசமானது. தகவல் அறிந்ததும் 25 தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    சாலைகள் குறுகலாக இருந்ததால் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டது. ஆனால் வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இரவில் கடை உரிமையாளர்கள் கடைகளை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டதால் உயிர் சேதம் ஏற்படவில்லை.

    இந்த தீ விபத்தில் துணி, மளிகை பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன. சேத மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.

    • அசாம் மாநிலம், நகான் என்ற பகுதியில் லேசான நில அதிர்வு.
    • நில நடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை.

    அசாம் மாநிலம், நகான் என்ற பகுதியில் இன்று மாலை 4.20 மணியளவில் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 4ஆக பதிவாகி உள்ளதாக புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    இந்த நிலநடுக்கம் பூமியில் அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

    இதனால் பீதியடைந்த மக்கள் பீதியடைந்துள்ளனர். மேலும், இந்த நில நடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை.

    • தேசிய அளவில் குழந்தை திருமண சராசரி 6.8 சதவீதமாக இருந்து வருகிறது. ஆனால் அசாமில் இந்த இது 11.7 சதவீதமாக உள்ளது.
    • 2026-ம் ஆண்டுக்குள் அசாமில் குழந்தை திருமணத்தை முற்றிலும் ஒழிப்பதற்காக திட்டமிடப்பட்டுள்ளது.

    கவுகாத்தி:

    வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் கடந்த 2019-2020-ம் ஆண்டுகளில் மத்திய அரசு மேற்கொண்ட தேசிய குடும்ப நல ஆய்வில் அசாமில் குழந்தை திருமணங்கள் மிக அதிகமாக இருப்பது தெரிய வந்தது.

    தேசிய அளவில் குழந்தை திருமண சராசரி 6.8 சதவீதமாக இருந்து வருகிறது. ஆனால் அசாமில் இந்த இது 11.7 சதவீதமாக உள்ளது. இதனால் அசாமில் அதிகளவில் குழந்தை திருமணங்கள் நடப்பதும், இதன் காரணமாக அதிக குழந்தைகள் இறப்புக்கு முக்கிய காரணமாக இருப்பதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியது.

    இந்த அறிக்கையை மையமாக கொண்டு அசாமில் குழந்தை திருமணங்களை தடுக்க மாநில அரசு அதிரடி நடவடிக்கையில் இறங்கியது.

    அம்மாநிலத்தில் 2026-ம் ஆண்டுக்குள் அசாமில் குழந்தை திருமணத்தை முற்றிலும் ஒழிப்பதற்காக திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையில் அமைச்சரவை கூட்டம் கடந்த 23-ந் தேதி நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து குழந்தை திருமணங்கள் செய்தவர்கள் மீது அடுத்தடுத்து வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 14 வயதுக்கு கீழ் உள்ள சிறுமிகளை திருமணம் செய்தவர்கள் மீது போக்சோ வழக்கு, 14 முதல் 18 வயதுடைய சிறுமிகளை திருமணம் செய்தவர்கள் மீது குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    அந்த வகையில் கடந்த 15 நாட்களில் மட்டும் 4 ஆயிரத்து 74 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், இதுதொடர்பாக கடந்த 3 நாட்களில் மட்டும் 2,273 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் திருமணம் செய்து வைத்த மத குருமார்கள் 51 பேர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதற்கிடையே கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அசாமில் பல்வேறு இடங்களில் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களின் கணவன்மார்களை கைது செய்ததால் குடும்பத்தை நடத்த வருமானம் இல்லை எனக்கூறி இளம் பெண்கள் பலர் தங்களது குழந்தைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என சில இடங்களில் போலீஸ் நிலையங்களை முற்றுகையிட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் ஐதராபாத் எம்.பி.யும், ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவருமான அசாதுதீன் ஓவைசி அளித்த பேட்டியில், அசாம் அரசின் இந்த நடவடிக்கையை சாடி உள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், திருமணம் செய்து கொண்ட பெண்களின் நிலை என்ன? அவர்களை யார் கவனித்து கொள்வார்கள்? 4 ஆயிரம் வழக்குகளை அசாம் அரசு பதிவு செய்துள்ளது. அவர்கள் ஏன் புதிய பள்ளிகளை திறப்பது இல்லை? அசாமில் உள்ள பா.ஜனதா அரசு முஸ்லீம்களுக்கு எதிராக பாரபட்சமாக செயல்படுகிறது.

    மேல் அசாமில் உள்ள நிலம் இல்லா மக்களுக்கு இலவச நிலங்களை கொடுக்கின்றனர். ஆனால் கீழ் அசாமில் உள்ள மக்களுக்கு இந்த சலுகை வழங்கப்படவில்லை என்றார்.

    இந்தநிலையில் முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா கூறுகையில், குழந்தை திருமண தடுப்பு நடவடிக்கையில் பின்வாங்க போவதில்லை. பிற்போக்கு நடைமுறையான குழந்தை திருமணங்களை தடுக்கும் 5 ஆண்டு நடவடிக்கைகளில் ஒரு பகுதி இது ஆகும். 2026-ம் ஆண்டுக்குள் மாநிலத்தில் குழந்தை திருமணத்தை முற்றிலும் ஒழிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    குழந்தை திருமணத்தில் இருந்து லட்சக்கணக்கான 19 வயதிற்குட்பட்ட சிறுமிகளை காப்பாற்றவும், இந்த தலைமுறையை துன்பத்தில் இருந்து காப்பாற்றவும் குழந்தை திருமணத்திற்கு எதிரான நடவடிக்கை தொடரும். அனுதாபம் என்ற கேள்விக்கே இங்கு இடமில்லை. அசாமில் குழந்தை திருமணங்கள் நிறுத்தப்பட வேண்டும் என்றார்.

    • அசாமில் காண்டாமிருகம் தாக்கியதில் 4 பேர் படுகாயமடைந்தனர்.
    • காண்டாமிருகம் தாக்கி பொதுமக்கள் காயமடைந்தது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

    கவுகாத்தி:

    அசாம் மாநிலத்தின் கோலகட் மாவட்டத்தில் கஜிரங்கா தேசிய பூங்கா செயல்பட்டு வருகிறது.

    கடந்த சில தினங்களுக்கு முன் பூங்காவில் உள்ள காண்டாமிருகம் ஒன்று வெளியேறியது. மோஹிமா காவோன் என்ற இடத்திற்கு வந்த காண்டாமிருகம் அங்கிருந்த கூட்டத்தினரை தாக்கியது. இதனால் அச்சமடைந்த அவர்கள் அலறியபடி ஓடினர்.

    காண்டாமிருகம் தாக்கியதில் படுகாயம் அடைந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் வனத்துறை அலுவலர்களும் அடங்குவர்.

    தகவலறிந்த வனத்துறையினர் அங்கு விரைந்து சென்று காட்டுப்பகுதியில் தஞ்சமடைந்துள்ள காண்டாமிருகத்தைத் தேடி வருகின்றனர்.

    காண்டாமிருகம் தாக்கியதில் பொதுமக்கள் காயமடைந்துள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • போலீசாரின் கைது நடவடிக்கையால் ஆத்திரமடைந்த பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • துப்ரி மாவட்டத்தில் காவல் நிலையம் முன்பு நடந்த போராட்டத்தின்போது போலீசார் தடியடி நடத்தினர்.

    கவுகாத்தி:

    அசாமில் குழந்தை திருமணம் அதிகரித்து வருவதை தடுக்க, மாநில அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. குழந்தை திருமணத்தில் ஈடுபடுவோர், திருமணத்தை நடத்தி வைப்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் என முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா அறிவித்தார். அதன்படி போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

    கடந்த 2 நாட்களில் மட்டும் மேற்கொள்ளப்பட்ட அதிரடி நடவடிக்கையில் 4004 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, 2,257 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 51 நபர்கள் மத குருக்கள் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    போலீசாரின் கைது நடவடிக்கையால் ஆத்திரமடைந்த பெண்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். கைது செய்யப்பட்ட கணவன் மற்றும் மகன்களை விடுவிக்க வலியுறுத்தி முழக்கமிட்டனர். துப்ரி மாவட்டத்தில் காவல் நிலையம் முன்பு நடந்த போராட்டத்தின்போது, பெண்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதனால் அங்கு பதற்றம் உருவானது.

    அடுத்த 6 நாட்களுக்கு இந்த அதிரடி நடவடிக்கை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 8000 பேர் குழந்தை திருமணம் தொடர்பாக குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டிருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

    • ஒரே நாளில் 1,800 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    • குழந்தை திருமணம் சட்ட விரோதம்.

    கவுகாத்தி :

    நமது நாட்டில் ஆண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயது 21, பெண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயது 18. இந்த வயதுக்கு கீழே உள்ள ஆண்கள், பெண்கள் திருமணம் செய்வது குழந்தை திருமணம் ஆகும். இந்த குழந்தை திருமணம் சட்ட விரோதம். அப்படி செய்வது தண்டனைக்குரிய குற்றம் ஆகும்.

    அசாம் மாநிலத்தில் சட்ட விரோதமாக குழந்தை திருமணங்கள் நடைபெறுவது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

    குழந்தை திருமணங்களை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் அதிரடி நடவடிக்கை எடுப்பது, குற்றவாளிகளை கைது செய்வது, விரிவான வகையில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்வது என்று கடந்த 23-ந் தேதி முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையில் கூடிய மாநில மந்திரிசபை முடிவு எடுத்தது.

    இதுபற்றி முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா சில கடுமையான அறிவிப்புகளை வெளியிட்டார். அவை:-

    * 14 வயதுக்குட்பட்ட சிறுமிகளை திருமணம் செய்வோர் மீது போக்சோ சட்டம் பாயும், 14-18 வயது பிரிவு சிறுமிகளை திருமணம் செய்கிறவர்கள் மீது குழந்தை திருமண தடை சட்டம், 2016 பாயும். இந்த திருமணங்கள் செய்வோர் கைது செய்யப்படுவார்கள், அவர்களது திருமணங்கள் சட்டவிரோதமானவை என அறிவிக்கப்படும்.

    * 14 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் திருமணம் செய்தால் அவர்கள் மீது கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து விசாரணை நடத்த முடியாது என்ற நிலையில், சீர்திருத்த இல்லத்துக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

    * இப்படிப்பட்ட திருமணங்களை நடத்தி வைக்கிற மத குருமார்கள், குடும்பத்தினர் மீதும் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் அறிவித்தார்.

    இந்த நிலையில் குழந்தை திருமண விவகாரத்தில் அசாம் போலீசார் நேற்று ஒரே நாளில் 1,800-க்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ளதாக முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறுகையில், " மாநிலம் முழுவதும் குழந்தை திருமண தடுப்பு நடவடிக்கை முடக்கி விடப்பட்டு, கைது செய்யும் படலம் அதிகாலை முதல் தொடங்கி விட்டது. இந்த நடவடிக்கை இன்னும் 3 அல்லது 4 நாட்களுக்கு தொடரும்" என குறிப்பிட்டார்.

    இந்த மாநிலத்தில் குழந்தை திருமணங்கள் தொடர்பாக 4 ஆயிரத்து 4 வழக்குகள் 15 நாட்களுக்குள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    அதிகபட்சமாக தூப்ரியில் 370 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 136 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இதையொட்டி முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா டுவிட்டரில் நேற்று ஒரு பதிவு வெளியிட்டார்.

    அந்தப் பதிவில் அவர், " மாநிலத்தில் குழந்தை திருமண அச்சுறுத்தலை முடிவுக்கு கொண்டு வருவதில் அரசு உறுதியாக உள்ளது. இதுவரை அசாம் போலீஸ் மாநிலம் முழுவதும் 4 ஆயிரத்து 4 வழக்குகள் (குழந்தை திருமணம்) பதிவு செய்துள்ளது. இனி வரும் நாட்களில் போலீஸ் நடவடிக்கை எடுக்கப்படும். வழக்குகள் மீதான நடவடிக்கை 3-ந் தேதி முதல் (நேற்று) தொடங்கும். அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்" என கூறி உள்ளார்.

    ×