என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
அசாம்
- கனமழையால் 29 மாவட்டங்களில் 21.13 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- 194 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
அசாம்... இந்த வருடம் கனமழைக்கு மிகப்பெரிய அளவில் இந்தியாவில் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக திகழ்கிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக திடீர் கனமழையால் அசாம் மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டன.
இந்திய ராணுவ வீரர்கள் களத்தில் இறங்கி மீட்புப்பணியை மேற்கொண்டனர். துண்டிக்கட்ட கிராமங்களை செயற்கை பாலங்கள் உருவாக்கி மீட்டனர். இதனால் மக்கள் விரைவாக பழைய நிலைக்கு திரும்ப முடிந்தது. இந்த நிலையில் தற்போது 2-வது முறையாக கனமழை பெய்து வருகிறது.
இந்த கனமழையால் 29 மாவட்டங்களில் 21.13 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 194 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மேலும் மழை வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 52-ஆக உயர்ந்துள்ளது என்று மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
- கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி வருகிறது.
- பிரம்மபுத்திரா உள்ளிட்ட முக்கிய ஆறுகளில் வெள்ளம் அபாய கட்டத்தை தாண்டியுள்ளது.
அசாம்... இந்த வருடம் கனமழைக்கு மிகப்பெரிய அளவில் இந்தியாவில் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக திகழ்கிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக திடீர் கனமழையால் அசாம் மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டன. இந்திய ராணுவ வீரர்கள் களத்தில் இறங்கி மீட்புப்பணியை மேற்கொண்டனர். துண்டிக்கட்ட கிராமங்களை செயற்கை பாலங்கள் உருவாக்கி மீட்டனர். இதனால் மக்கள் விரைவாக பழைய நிலைக்கு திரும்ப முடிந்தது.
இந்த நிலையில் தற்போது 2-வது முறையாக கனமழை பெய்து வருகிறது. அசாம் மாநிலத்தில் ஓடும் பிரம்மபுத்திரா உள்ளிட்ட 13 முக்கிய ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இன்னும் கனமழை பெய்யும் என பல மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை விடுத்தள்ளது.
இந்த கனமழையால் 20 மாவட்டங்களில் 6.71 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். திப்பர்காரின் சார் (சந்த்பார்) பகுதியில் சிக்கித் தவித்த 13 மீனவர்களை விமானப்படையினர் மீட்டுள்ளனர். அசாம் மாநில தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் வேண்டுகோளை ஏற்று விமானப்படை மீட்பு பணியில் ஈடுபட்டது.
தேமாஜி மாவட்டத்தில் நேற்று வெள்ளத்தில் சிக்கிய 7 மாநில தேசிய பேரிடர் மீட்புக்குழுவினரையும், வருவாய்த்துறை அதிகாரி ஒருவரையும் இந்திய விமானப்படை மீட்டுள்ளது.
தற்போது கனமழையால் திப்ருகார் மாவட்டம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுளளது. அசாமின் மேற்பகுதியில் உள்ள முக்கிய நகரங்கள் கூட இந்த ஆறுநாள் கனமழையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
பிஸ்வானத், கசார், சராய்டியோ, தராங், சிராங், தெமாஜி, திப்ருகார், கோலாகத், ஜோர்ஹத், கம்ருப், லகிம்பூர், சிவசாகர், சோனிட்புர், மோரிகயோன், நயகோன், மஜுலி, கரிம்கஞ்ச், தமுல்புர், தின்சுகியா, நல்பாரி மாவட்டங்களில் 6,71,167 மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மழைக்கு ஒருவர் உயிரிழந்துள்ளார். மழை வெள்ளம், புயல், நிலச்சரிவில் சிக்கி இதுவரை 46 பேர் உயிரிழந்துள்ளனர். ஜொர்காத், சோனிட்புர், கம்ருப், துப்ரி மாவட்டங்களில் பிரம்மபுத்திரா ஆற்றில் வெள்ளம் அபாய கட்டத்தை தாண்டி ஓடுகிறது.
72 முகாம்களில் 8,142 மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 54 இடங்களில் 614 மாநில தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் குவிக்கப்பட்டுள்ளனர். புகழ்பெற்ற கசிரங்கா தேசிய பூங்காவில் 233 வன முகாம்களில் 95 வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
- மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
- 13 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அசாமில் பெய்து வரும் கனமழைக்கு பல மாவட்டங்களில் 4 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கோபிலி, பாராக், குஷியாரா உள்ளிட்ட பல முக்கிய ஆறுகளில் அபாய அளவைத் தாண்டியுள்ளது.
மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனிடையே, அசாமின் திப்ருகர் நகரின் பல பகுதிகளில் பெய்த கனமழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, 13 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளதால் வெள்ள பாதிப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
- யானைக்கூட்டம் ஒன்று நீந்திக் கடக்கும் அபூர்வ வீடியோ.
- பிரம்மபுத்திரா ஆற்றில் டிரோன் உதவியுடன் படமாக்கப்பட்டுள்ளது.
ஆழமான ஆற்றை யானைக்கூட்டம் ஒன்று நீந்திக் கடக்கும் அபூர்வ வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாகி உள்ளது. அது அசாமின் நிமதி கட் வனப்பகுதியில் பிரம்மபுத்திரா ஆற்றில் டிரோன் உதவியுடன் படமாக்கப்பட்டுள்ளது. புகைப்பட கலைஞர் சச்சின் பரலி இந்த அரிய காட்சியை படமாக்கி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார்.
யானைக்கூட்டம் பொதுவாக காடுகளை கடந்து செல்வதை பார்த்து இருக்கலாம். நீர்நிலைகளுக்கு அருகில்கூட அவை பெருங்கூட்டமாக வந்து நீர்அருந்தி கடந்து செல்லும். ஆனால் அதிக எடையுடைய யானைகள் நீர்நிலைகளை அவ்வளவு எளிதில் நீந்தி கடக்க முயலாது என்று பலரும் எண்ணிக் கொண்டிருக்கிறோம்.
அந்த எண்ணத்தை மாற்றும் விதமாக, ஆழமான ஆற்றையும் அசாதரணமாக எங்களால் கடக்க முடியும் என்பதைப்போல, ௮௦-க்கும் மேற்பட்ட யானைகள் பெருங்கூட்டமாக பிரமாண்டமான பிரம்மபுத்திராவை நீந்திக்கடக்கின்றன. அவற்றின் முதுகு பகுதிகள் மட்டுமே மேலே தெரியும் அளவில் ஆழமான இடத்தில் அவை நீந்தி செல்லும் காட்சி பார்ப்பவர்களை வியக்க வைக்கிறது.
வழக்கமாக காட்டு மாடுகள்தான் நூற்றுக்கணக்கில் இப்படி மந்தையாக ஆற்றைக்கடக்கும் காட்சியை பார்க்க முடியும். அதுபோல அதிக எண்ணிக்கையிலான யானைக்கூட்டம் நீந்தும்காட்சி அரிதாக படம்பிடிக்கப்பட்டு இருப்பது புகைப்படக் கலைஞருக்கு பாராட்டுகளை குவித்துள்ளது. இந்த காட்சி வலைத்தளத்தில் 42 லட்சத்துக்கும் மேலானவர்களால் ரசிக்கப்பட்டு உள்ளது. 3.5 லட்சம் பேரின் விருப்பங்களை பெற்றுள்ளது.
- பஜாலி, பக்சா, கரீம்கஞ்ச் உள்ளிட்ட 19 மாவட்டங்களை வெள்ள நீா் சூழ்ந்துள்ளது.
- கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் கரீம்கஞ்சில் வசிக்கும் 2.5 லட்சம் பேர் பாதிப்புக்குள்ளாயினா்.
புதுடெல்லி:
நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெப்ப அலையின் தாக்கம் நீட்டித்து வரும் நிலையில், கடந்த மாா்ச் 1-ந் தேதி முதல் ஜூன் 20-ந் தேதி வரையிலான காலகட்டத்தில் 'வெப்பவாதம்' காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 143-ஆக உயா்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
இருப்பினும், வெப்பவாதத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதுதொடா்பான முழுமையாக தகவல்களை மாநிலங்கள் வழங்காததால் தேசிய நோய்க் கட்டுப்பாட்டு மையத்தால் (என்சி.டி.சி.) வெளியிடப்படும் அறிக்கையில் அதிகாரபூா்வ உயிரிழப்புகள் குறித்த இறுதி தகவல்கள் இடம் பெறவில்லை. அதேபோல் சில சுகாதார மையங்களும் வெப்பவாதத்தால் உயிரிழந்தோா் குறித்த எண்ணிக்கையை முழுமையாக வெளியிடவில்லை.
வெப்பவாதத்தால் ஜூன் 20-ந் தேதி மட்டுமே 14 போ் உயிரிழந்ததாக அதிகாரப்பூா்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 9 போ் இதே காரணத்தால் உயிரிழந்திருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படும் நிலையில் மாா்ச் 1 முதல் ஜூன் 20 வரையிலான காலகட்டத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 114-யில் இருந்து 143-ஆக அதிகரித்தது.
அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் 35 பேரும் டெல்லியில் 21 பேரும் பீகாா் மற்றும் ராஜஸ்தானில் தலா 17 பேரும் உயிரிழந்தனா். வெப்பவாதத்தால் 41,000-க்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ளனா்.
- கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் கரீம்கஞ்சில் வசிக்கும் 2.5 லட்சம் பேர் பாதிப்புக்குள்ளாயினா்.
- பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக 100-க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கவுகாத்தி:
அசாமில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளத்தில் சிக்கி 4 லட்சம் போ் பாதிக்கப்பட்டுள்ளனா். அந்த மாநிலத்தில் உள்ள கோபிலி, பராக், குஷியாரா ஆகிய முக்கிய நதிகளில் நீரோட்டத்தின் அளவு அபாய கட்டத்தை தாண்டி பாய்கின்றன. அசாம் மாநிலத்தில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து, பஜாலி, பக்சா, கரீம்கஞ்ச் உள்ளிட்ட 19 மாவட்டங்களை வெள்ள நீா் சூழ்ந்துள்ளது. அதில் சிக்கி 4 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.
அந்த மாவட்டங்களில் உள்ள சாலைகள், பாலங்கள் உள்ளிட்டவை பெருமளவில் சேதமடைந்துள்ளன. இதனால் அங்கு அத்தியாவசிய சேவைகள் முற்றிலுமாக முடங்கியுள்ளன. மேலும், அங்கு அடுத்த சில நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் கரீம்கஞ்சில் வசிக்கும் 2.5 லட்சம் பேர் பாதிப்புக்குள்ளாயினா். இந்த ஆண்டு கனமழை, வெள்ளம், இடி மின்னல் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 36-ஆக உயா்ந்துள்ளதாக அந்த மாநில அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக 100-க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில், 14,000-க்கும் மேற்பட்ட மக்கள் தங்கி உள்ளனா்.
- ஹைலகண்டி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஒருவர் வெள்ள நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
- நேற்று இரவு ஏற்பட்ட நிலச்சரிவில் 3 சிறுவர்கள் உள்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
அசாம் மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தில் இடைவிடாத மழை பெய்து வருகிறது. அசாமில் கடந்த 4 நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கில் 15 மாவட்டங்களில் 1.61 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளனர். அசாமில் வெள்ள நிலைமை இன்னும் மோசமாக உள்ளது.
அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் அறிக்கையின்படி, ஹைலகண்டி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஒருவர் வெள்ள நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
அசாம் மாநிலம் கரீம்கஞ்ச் படர்பூர் பகுதியில் தொடர் மழை காரணமாக நேற்று இரவு ஏற்பட்ட நிலச்சரிவில் 3 சிறுவர்கள் உள்பட 5 பேர் உயிரிழந்துள்ளதாக கரீம்கஞ்ச் காவல் துறை கண்காணிப்பாளர் பார்த்த ப்ரோதிம் தாஸ் தெரிவித்துள்ளார்.
Assam | Five persons including three minors died in a landslide in the Badarpur area Karimganj, yesterday night: Partha Protim Das, Superintendent of Police, Karimganj pic.twitter.com/kZLggWRTrc
— ANI (@ANI) June 19, 2024
- இரண்டு நடவடிக்கைகளிலும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- வாகனத்தில் இருந்து சுமார் 4.6 கிலோ எடையுள்ள ஹெராயின் அடங்கிய 399 சோப் கேஸ்களை மீட்கப்பட்டுள்ளன.
அசாம் மாநிலத்தில் சிவசாகர் மற்றும் கர்பி அங்லாங் மாவட்டத்தில் போலீசாரின் இருவேறு நடவடிக்கைகளில் ரூ.48 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த இரண்டு நடவடிக்கைகளிலும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சோதனையின்போது, வாகனத்தில் இருந்து சுமார் 4.6 கிலோ எடையுள்ள ஹெராயின் அடங்கிய 399 சோப் கேஸ்களை மீட்டுள்ளதாக மூத்த போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
- சாந்திபூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஆயுதங்களை அவர்கள் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.
- வீட்டில் இருந்து இருந்து ஒரு ஏகே56 துப்பாக்கி, தோட்டாக்களை ஸ்டோர் செய்துகொள்ளும் மெகசின் மற்றும் 668 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அசாம் மாநிலத்தில் சாந்திபூர் கிராமத்தில் சட்டவிரோதமாக ஆயுதங்களை விற்க முயன்ற 2 பேரை உதல்குரி போலீசார் கைது செய்தனர். கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில், சாந்திபூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஆயுதங்களை அவர்கள் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.
அந்த வீட்டில் இருந்து இருந்து ஒரு ஏகே56 துப்பாக்கி, தோட்டாக்களை ஸ்டோர் செய்துகொள்ளும் மெகசின் மற்றும் 668 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக உதல்குரி எஸ்பி புஷ்கின் ஜெயின் தெரிவித்தார்.
- நானும், தலைமைச் செயலாளரும் வரும் ஜூலை 1-ந்தேதி முதல் எங்கள் மின் கட்டணத்தை செலுத்தத் தொடங்குவோம்.
- ஜூலை 2024 முதல், அனைத்து அரசு ஊழியர்களும் அவர்களின் மின்சார நுகர்வுக்கான கட்டணத்தை செலுத்துங்கள்.
அசாம் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசாங்க ஊழியர்களும் வரும் ஜூலை மாதம் முதல் தங்கள் மின்சார கட்டணத்தை தாங்களே செலுத்த வேண்டும் என்று அம்மாநில முதல் மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா அறிவித்துள்ளார்.
முதல் மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மாவும் அவரது தலைமைச் செயலாளரும் தங்கள் குடியிருப்பு மின் கட்டணத்தை வரும் ஜூலை மாதம் 1-ந்தேதி செலுத்த தொடங்குவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வரி செலுத்துவோரின் பணத்தை பயன்படுத்தி அரசு அதிகாரிகளுக்கு மின்கட்டணம் செலுத்தும் 75 ஆண்டு கால விஐபி கலாச்சார விதியை நாங்கள் முடிவுக்குக் கொண்டு வருகிறோம்.
அதற்கு முன்னுதாரணமாகி நானும், தலைமைச் செயலாளரும் வரும் ஜூலை 1-ந்தேதி முதல் எங்கள் மின் கட்டணத்தை செலுத்தத் தொடங்குவோம். ஜூலை 2024 முதல், அனைத்து அரசு ஊழியர்களும் அவர்களின் மின்சார நுகர்வுக்கான கட்டணத்தை செலுத்துங்கள்" என்று ஹிமந்தா பிஸ்வா சர்மா தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில் கூறி உள்ளார்.
- நெடுஞ்சாலைத்துறை மந்திரியாக நிதின் கட்கரி உள்ளார்.
- சாலைகள் மோசமாக இருக்கும் நிலையில், கட்டணம் வசூலிப்பது சரியா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலையில் பல இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வருகின்றன. பெரும்பாலானோர் இந்த சுங்கச்சாவடிகளை நீக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். சில நேரங்களில் சாலைகள் மிகவும் மோசமாக இருக்கும் நிலையில் கட்டணம் வசூலிக்கப்படுவதாக வாகன ஓட்டிகள் விமர்சனம் செய்வதும் உண்டு.
நீதிமன்றங்களும் அடிக்கடி சாலையை சரிசெய்யும்வரை கட்டணம் வசூலிக்கக் கூடாது எனத் தெரிவித்துள்ளன.
Toll Road of 37 National Highway..@nitin_gadkari sir , please deactivate Raha Toll Gate until the Road is Tollable pic.twitter.com/o5kvN9kk6l
— Mrinal Saikia (From Upper Assam) (@Mrinal_MLA) June 13, 2024
இந்த நிலையில் அசாம் மாநிலத்தில் மிகவும் மோசமான சாலையை படம் பிடித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட எம்எல்ஏ மரினால் சைகியா "சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும் 37 தேசிய நெடுஞ்சாலை... கட்கரி சார், தயது செய்து சாலையை சரிசெய்யும் வரை, ராஹா டோல் கேட்டின் செயல்பாட்டை நிறுத்தி வையுங்கள்" எனத் தெரிவித்துள்ளார்.
நிதின் கட்கரி சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மத்திய மந்திரியாக உள்ளார். ஏற்கனவே மோடியின் 2.0 அமைச்சரவையில் இதே துறையின் மந்திரியாக இருந்தார். தற்போதும் அதே துறையின் மந்திரயாக பதவி ஏற்றுள்ளார்.
- ஆறுகளில் அபாய அளவை தாண்டி தண்ணீர் ஓடுகின்றன.
- 10 மாவட்டங்களில் 6 லட்சம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கவுகாத்தி:
அசாம் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பெய்த பலத்த மழையால் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. கோபிலி, பராக், குஷியாரா ஆகிய ஆறுகளில் அபாய அளவை தாண்டி தண்ணீர் ஓடுகின்றன. அங்குள்ள 10 மாவட்டங்களில் 6 லட்சம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப் பட்டுள்ளனர்.
நாகோன் மாவட்டத்தில் அதிகபட்சமாக 2.79 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 40 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அசாமில் வெள்ளம் மற்றும் புயலில் இதுவரை 15 பேர் பலியாகி உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்