என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சத்தீஸ்கர்
- காங்கிரஸ் கட்சி என்றால் அழிவு, ஊழல், சுரண்டல் என்று அர்த்தம்.
- காங்கிரஸ் என்றால் கொள்ளை, ஏமாற்றுதல் என்று அர்த்தம்.
பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி. நட்டா சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது, "பா.ஜனதா என்றால் வளர்ச்சி என்று அர்த்தம். காங்கிரஸ் கட்சி என்றால் அழிவு, ஊழல், சுரண்டல் என்று அர்த்தம்.
பா.ஜனதா என்றால் வளர்ச்சிக்கான அரசு, பெண்களுக்கான அதிகாரம், விவசாயிகளின் உரிமைகளை பாதுகாப்பவர் என்று அர்த்தம். காங்கிரஸ் என்றால் கொள்ளை, ஏமாற்றுதல் என்று அர்த்தம்" என்றார்.
90 தொகுதிகளை கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல் கட்டமாக கடந்த 7-ந்தேதி 20 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. நாளைமறுநாள் (நவம்பர் 17-ந்தேதி) 70 தொகுதிகளுக்கு 2-ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.
இன்றுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைந்தது.
- தற்போது ஆட்சியில் இருந்து வெளியேறும் நேரம் என்பதை காங்கிரஸ் புரிந்து கொண்டுள்ளது.
- காங்கிரஸ் மோடியை வெறுக்கிறது. மோடி சமூகத்தினரை கூட வெறுக்க ஆரம்பித்து விட்டார்கள்.
90 தொகுதிகளை கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. 20 தொகுதிகளுக்கான முதற்கட்ட தேர்தல் ஏற்கனவே கடந்த 7-ந்தேதி முடிவடைந்தது. 70 தொகுதிகளுக்கான 2-வது கட்ட தேர்தல் வருகிற 17-ந்தேதி நடைபெற இருக்கிறது.
இதனையொட்டி பிரதமர் மோடி சத்தீஸ்கரில் தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
அவர் இன்று மதியம் முங்கெலி மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாகவது:-
தற்போது ஆட்சியில் இருந்து வெளியேறும் நேரம் என்பதை காங்கிரஸ் புரிந்து கொண்டுள்ளது. டெல்லியில் இருந்து சில பத்திரிகையாளர் நண்பர்கள், அரசியல் ஆய்வாளர்கள் என்னிடம் சத்தீஸ்கர் முதல்வர் பாகேல் அவர் தொகுதியிலேயே தோற்கடிக்கபடுவார் என்று தெரிவித்தனர்.
காங்கிரஸ் மோடியை வெறுக்கிறது. மோடி சமூகத்தினரையும் கூட வெறுக்க ஆரம்பித்து விட்டார்கள். மோடி பெயர் கொண்ட சமூகத்தினரை கடந்த பல மாதங்களாக அவர்கள் துஷ்பிரயோகம் செய்து வருகிறார்கள். நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும்கூட, அவர்கள் மன்னிப்பு கேட்க மறுத்து விட்டனர்.
ஓ.பி.சி. சமூகத்தினரை அவர்கள் எந்த அளவிற்கு வெறுக்கிறார்கள் என்பதற்கு இது எடுத்துக்காட்டு. காங்கிரஸ் அம்பேத்கரை அவமதிக்கிறது. அம்பேத்கரின் அரசியலுக்கு முடிவு கட்ட சதி செய்தது காங்கிரஸ். வாக்கு வங்கிற்காகவும், சமரசம் செய்து கொள்வதற்காகவும் காங்கிரஸ் எதை வேண்டுமென்றாலும் செய்யும்.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.
- ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களில் வெற்றி பெற வேண்டியது அவசியம்.
- பிரதமர் மோடியின் நட்சத்திர பேட்சாளராக ED செயல்பட்டு வருகிறது.
சத்தீஸ்கர் மாநிலத்தின் பைகுந்த்பூர் மற்றும் கத்கோரா பகுதிகளில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு அமலாக்கத்துறை, சி.பி.ஐ. மற்றும் வருமான வரித்துறையை கொண்டு, காங்கிரஸ் கட்சி தேர்தல்களில் வெற்றி பெறுவதை தடுப்பதாக குற்றம்சாட்டி உள்ளார்.
பைகுந்த்பூர் பகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட கார்கே, பா.ஜ.க., பிரதமர் மோடி மற்றும் ஆர்.எஸ்.எஸ். ஆகியவை தொகுதியை மாற்ற முயற்சித்து வருகின்றன. அவர்களை தடுத்து நிறுத்த காங்கிரஸ் கட்சி சத்தீஸ்கர் உள்பட நடைபெற இருக்கும் ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களில் வெற்றி பெற வேண்டியது அவசியம் ஆகும்.
இதைத் தொடர்ந்து கத்கோராவில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய கார்கே, அமலாக்கத்துறை, சி.பி.ஐ. மற்றும் வருமான வரித்துறை உள்ளிட்டவை பிரதமர் மோடியின் நட்சத்திர பேட்சாளர்களாக செயல்பட்டு வருகின்றன என்று குற்றம்சாட்டியுள்ளார். இந்த அமைப்புகள் தொடர்ச்சியாக காங்கிரஸ் தலைவர்களின் வீடுகளில் சோதனை நடத்துகின்றன.
கடந்த செவ்வாய் கிழமை மிசோரம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலத்தில் முதற்கட்ட வாக்குப் பதிவு நடைபெற்றது. சத்தீஸ்கர் மாநிலத்தின் இரண்டாம்கட்ட வாக்குப்பதிவும், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் இம்மாத இறுதியிலும் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.
- சத்தீஸ்கரில் முதல் கட்டமாக 20 தொகுதிகளில் இன்று வாக்குப் பதிவு நடைபெற்றது
- மாலை 5 மணி நிலவரப்படி 70.87 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
ராய்ப்பூர்:
சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தம் 90 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இம்மாநிலத்தில் பெரும்பான்மைக்கு தேவை 46 இடங்கள். மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் உள்ளிட்ட காரணங்களுக்காக சட்டசபை தேர்தல் 2 கட்டங்களாக நடத்தப்படுகிறது.
முதல் கட்டமாக இன்று 20 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. எஞ்சிய 70 தொகுதிகளில் 2-வது கட்டமாக நவம்பர் 17-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும்.
முதல் கட்டமாக நடந்த தேர்தலில் இன்று காலை 7 மணிக்கு 10 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கி மாலை 3 மணி வரை நடைபெற்றது.
இதர 10 தொகுதிகளில் காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது. இந்த 20 தொகுதிகளுமே மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் உள்ள மாவட்டங்களில் உள்ளவை ஆகும்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் இருமுனைப் போட்டிதான் நிலவுகிறது. ஆளும் காங்கிரஸ் கட்சியும், பிரதான எதிர்க்கட்சியான பா.ஜ.க.வும் இடையே கடும் போட்டி உள்ளது. முதல் மந்திரியாக காங்கிரஸ் கட்சியின் பூபேஷ் பாகல் பதவியில் உள்ளார். வாக்குப்பதிவு காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்றது.
இந்நிலையில், சத்தீஸ்கரில் இன்று மாலை 5 மணி நிலவரப்படி 70.87 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
- சத்தீஸ்கரில் மாவோயிஸ்டை கட்டுப்படுத்த காங்கிரஸ் தவறிவிட்டது.
- காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சியில் இருந்தபோது, பழங்குடியினருக்கு செலவு செய்யும் பணம் வீண் என நினைத்தது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் 20 தொகுதிகளுக்கு இன்று முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 2-வது கட்டத்தேர்தல் 70 தொகுதிகளுக்கு வருகிற 17-ந்தேதி நடைபெற இருக்கிறது.
2-ம் கட்ட தேர்தல் நடைபெறும் சர்குஜா பகுதியில் பிரதமர் மோடி இன்று தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சியில் இருந்தபோது, பழங்குடியினருக்கு செலவு செய்யும் பணம் வீண் என நினைத்தது.
பழங்குடியின மக்களின் குடும்பத்தில் இருந்து ஒருவர் ஜனாதிபதியாக வரலாம் என யாராவது ஒருவர் நினைத்தார்களா?
நான் சேவை செய்வதற்காக பிறந்தவன். நான் சேவை செய்வதற்காக நீங்கள் எனக்கு பணியை கொடுத்துள்ளீர்கள்.
காங்கிரஸ் ஆட்சியில் மனித கடத்தல், போதைப்பொருள் தொழில் சர்குஜா பகுதியில் அதிகமாக இருந்தது.
காங்கிரசின் சமரசம் செய்துகொள்ளும் கொள்கையால், சத்தீஸ்கரின் சர்குஜா பகுதியில் பண்டிகைகளைக் கொண்டாடுவது கடினமாகிவிட்டது.
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டை கட்டுப்படுத்த காங்கிரஸ் தவறிவிட்டது.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
- கடந்த ஐந்து ஆண்டுகளில் நக்சலிசம் பெருமளவு பின்வாங்கியுள்ளது- பூபேஷ் பாகெல்
- பா.ஜனதா முழு மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்கும்- ராமன் சிங்
சத்தீஸ்கர் மாநிலத்தில் இன்று காலை 20 தொகுதிகளுக்கான முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. நக்சலைட் மற்றும் மாவோயிஸ்ட் அச்சுறுத்தல் அதிகமாக இருக்கும் இடங்கள் என்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இருந்த போதிலும் மாவோயிஸ்ட் தாக்குதலில் சிஆர்பிஃஎப் வீரர் ஒருவர் காயம் அடைந்தார்.
தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் பா.ஜனதா தலைவரும், சத்தீஸ்கர் முன்னாள் முதல்வருமான ராமன் சிங் கூறுகையில் ''முதற்கட்ட தேர்தலில் பா.ஜனதா குறைந்தது 14 இடங்களில் வெற்றிபெறும். இரண்டு கட்ட தேர்தலும் சிறப்பாக அமையும். முழு மெஜாரிட்டியுடன் பா.ஜனதா ஆட்சி அமைக்கும்'' என்றார்.
சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெல் கூறுகையில் ''கடந்த ஐந்து ஆண்டுகளில் எங்கள் முயற்சியால் நக்சலிசம்
பெருமளவு பின்வாங்கியுள்ளது. இதனால் கிராமத்திற்கு உள்ளே வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. கிராமத்தில் மக்கள் தானாக முன்வந்து வாக்களிப்பார்கள். நக்சலைட்டுகளால் பாதிக்கப்பட்ட பகுதியில் வாக்கு சதவீதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது" என்றார்.
- சத்தீஸ்கரில் 20 இடங்களில் முதற்கட்ட தேர்தல் நடைபெறுகிறது
- மிசோரம் மாநிலத்தில் 40 இடங்களுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது
சத்தீஸ்கரில் இரண்டு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி 20 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், 17-ந்தேதி 70 தொகுதிகளுக்கு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.
20 தொகுதிகளுக்கான தேர்தல் பிரசாரம் நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது. பிரசாரம் முடிவடைந்ததை அடுத்து தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவுக்கான வேலைகளை செய்து வந்தது.
இந்த நிலையில் இன்று காலை 7 மணிக்கு சத்தீஸ்கரில் முதற்கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. அதேபோல் 40 தொகுதிகளை கொண்ட மிசோரம் மாநிலத்திலும் வாக்குப்பதிவு தொடங்கியது. இங்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது.
சத்தீஸ்கரில் வாக்குப்பதிவு நடைபெறும் இடம் மாவோயிஸ்ட் நிறைந்த இடமாகும். இதனால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 10 தொகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 3 மணி வரையிலும், மீதமுள்ள 10 தொகுதிகளில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெறும் முதற்கட்ட தேர்தலில் 20 தொகுதிகளில் 223 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 25 பேர் பெண்கள். சுமார் 40,78,681 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இவர்களில் 19,93,937 பேர் ஆண்கள், 20,84,675 பேர் பெண்கள் மற்றும் 69 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள்.
கடந்த 2018 சட்டசபை தேர்தலில் 68 இடங்களை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியும், 15 இடங்களை பாரதிய ஜனதா கட்சியும் பெற்றன. தற்போதைய தேர்தலில் ஆட்சியை தக்க வைத்து கொள்ள காங்கிரஸ் கட்சியும், ஆட்சியை கைப்பற்ற பா.ஜ.க.வும் மும்முரமாக போராடி வருகின்றன.
- சத்தீஸ்கரில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது
- நக்சலைட்டுகள் மற்றும் மாவோயிஸ்ட்கள் அச்சுறுத்தல் அதிகம் உள்ளது
இந்திய பாராளுமன்றத்தின் 543 இடங்களுக்கு அடுத்த வருடம் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாக சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கும் இம்மாதம் பல்வேறு தேதிகளில் தேர்தல்கள் நடைபெற உள்ளது. இந்த 5 மாநில தேர்தல்களுக்கும் டிசம்பர் 3 அன்று முடிவுகள் அறிவிக்கப்படும்.
மத்திய இந்தியாவில் உள்ள அதிகளவு வனப்பிரதேசங்களை கொண்ட மாநிலமான சத்தீஸ்கரில் இரண்டு கட்டமாக தேர்தல்கள் நடத்தப்பட உள்ளது. அம்மாநில சட்டசபையில் மொத்தம் 90 இடங்கள் உள்ளன.
நாளை அங்கு 20 இடங்களுக்கு முதற்கட்ட தேர்தலும், மீதமுள்ள 70 இடங்களுக்கு வரும் 17-ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தலும் நடைபெறவுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் ஏற்கெனவே அங்கு அமலில் உள்ளது.
அம்மாநில பஸ்டார் (Bastar) பகுதியில் 12 சட்டசபை தொகுதிகள் உள்ளன. மாவோயிஸ்ட்கள் மற்றும் நக்சலைட்டுகளின் அச்சுறுத்தல் பெருமளவு உள்ள பகுதி என்பதால் சுமார் 60 ஆயிரம் சீருடை பணியாளர்களை காவலுக்கு தேர்தல் ஆணையம் பணியில் அமர்த்தி உள்ளது. இவர்களில் 40 ஆயிரம் மத்திய ஆயுத காவல் படையினர் (CAPF) மற்றும் 20 ஆயிரம் மாநில காவல்துறையினர் அடங்குவர். இப்பணியில் பெண் கமாண்டோ படையினரும், நக்சலைட்டு எதிர்ப்பு பிரிவு வீரர்களும் அடங்குவர்.
மொத்தம் 5304 வாக்குச்சாவடிகள் நாளைய தேர்தலுக்காக அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பாதுகாப்பு காரணங்களுக்காக 149 வாக்குச்சாவடிகள் காவல் நிலையங்களுக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ளன.
முதற்கட்ட தேர்தலில் 223 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 25 பேர் பெண்கள்.
சுமார் 40,78,681 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இவர்களில் 19,93,937 பேர் ஆண்கள், 20,84,675 பேர் பெண்கள் மற்றும் 69 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள்.
கடந்த 2018 சட்டசபை தேர்தலில் 68 இடங்களை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியும், 15 இடங்களை பாரதிய ஜனதா கட்சியும் பெற்றன. தற்போதைய தேர்தலில் ஆட்சியை தக்க வைத்து கொள்ள காங்கிரஸ் கட்சியும், ஆட்சியை கைப்பற்ற பா.ஜ.க.வும் மும்முரமாக போராடி வருகின்றன.
- 5 மாநில தேர்தலையொட்டி ஒவ்வொரு கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
- 40 தொகுதிகளை கொண்ட மிசோரம் மாநிலத்துக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது.
ராய்ப்பூர்:
மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை பதவி காலம் முடிவடைவதால் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.
மிசோரம் மாநிலத்தில் வருகிற 7-ந் தேதியும் மத்திய பிரதேசத்தில் 17-ந் தேதியும், ராஜஸ்தானில் 25-ந் தேதியும், தெலுங்கானாவில் 30-ந் தேதியும் தேர்தல் நடக்கிறது. சத்தீஸ்கரில் 2 கட்டங்களாக 7 மற்றும் 14-ந்தேதிகளில் வாக்குப் பதிவு நடக்கிறது. ஓட்டு எண்ணிக்கை டிசம்பர் 3-ந்தேதி நடக்கிறது.
5 மாநில தேர்தலையொட்டி ஒவ்வொரு கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. தலைவர்கள் வாக்குசேகரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
40 தொகுதிகளை கொண்ட மிசோரம் மாநிலத்துக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. இன்று மாலையுடன் அங்கு பிரசாரம் ஓய்கிறது. இதையொட்டி அங்கு தலைவர்கள் இன்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல் கட்டமாக 20 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நாளை மறுநாள் நடக்கிறது. இங்கு இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது.
இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் சத்தீஸ்கரில் நேற்று பிரசாரம் செய்து ஆதரவு திரட்டினர்.
- அன்னயோஜனா திட்டத்தின் கீழ் நபர் ஒன்றுக்கு 5 கிலோ உணவு தானியம் இலவசமாக வழங்கப்பட்டது.
- அன்னயோஜனா திட்டம் அடுத்த மாதத்துடன் நிறைவடைய இருந்தது.
ராய்ப்பூர்:
கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஏழைகளின் பசியை போக்குவதற்காக பிரதம மந்திரி கரிப் கல்யாண் அன்னயோஜனா என்ற திட்டத்தை கடந்த 2020-ம் ஆண்டு மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.
இந்த திட்டத்தின் கீழ் நபர் ஒன்றுக்கு 5 கிலோ உணவு தானியம் இலவசமாக வழங்கப்பட்டது. உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரேஷனுடன் கூடுதலாக இந்த உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டன.
இந்த திட்டம் அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வந்தது. இந்த திட்டம் அடுத்த மாதத்துடன் நிறைவடைய இருந்தது. இதை மேலும் நீட்டித்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது. இதை பிரதமர் மோடி நேற்று அறிவித்தார்.
சத்தீஸ்கரின் துர்க் பகுதியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசும்போது இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-
80 கோடி ஏழை மக்களுக்கு வழங்கப்படும் இலவச ரேஷன் டிசம்பர் மாதத்துடன் நிறைவடைய இருக்கும் நிலையில், அது மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும்.
இது வெறும் ஒரு தேர்தல் அறிவிப்பு அல்ல, இது மோடியின் உத்தரவாதம்.
தங்கள் குடும்பத்துக்காக வீட்டை விட்டு தொலைதூரத்தில் சென்று உழைக்கும் மக்களும் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் வழியாக இந்த இலவச ரேஷனை பெற முடியும்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
இந்த கூட்டத்தில் தொடர்ந்து உரையாற்றிய அவர் சாதிவாரி கணக்கெடுப்பு கோரிக்கையை வைக்கும் காங்கிரஸ் கட்சியையும், சூதாட்ட செயலி ஊழலில் சிக்கியிருக்கும் சத்தீஸ்கர் முதல்-மந்திரியையும் கடுமையாக சாடினார்.
- 'ஆதிவாசி'க்கு பதிலாக 'வனவாசி' என்ற வார்த்தையை பயன்படுத்தி வருகின்றனர்.
- வனவாசி மற்றும் ஆதிவாசி என இரண்டு வார்த்தைகளுக்கும் மிகப் பெரிய வித்தியாசம் உள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற இருக்கும் சட்டசபை தேர்தலை ஒட்டி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அங்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில், ஜதல்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பொது கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி பிரதமர் மோடியிடம் சரமாரி கேள்விகளை கேட்டார்.
"பா.ஜ.க. தலைவர்கள் தங்களது பேச்சுகளில் 'ஆதிவாசி'க்கு பதிலாக 'வனவாசி' என்ற வார்த்தையை பயன்படுத்தி வருகின்றனர். நரேந்திர மோடி மற்றும் ஆர்.எஸ்.எஸ். தான் வனவாசி என்ற வார்த்தையை உருவாக்கி உள்ளனர். வனவாசி மற்றும் ஆதிவாசி என இரண்டு வார்த்தைகளுக்கும் மிகப் பெரிய வித்தியாசம் உள்ளது."
"மத்திய பிரதேச மாநிலத்தில், பா.ஜ.க. தலைவர் ஒருத்தர், பழங்குடி இளைஞர் மீது சிறுநீர் கழித்து, அதே சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்து அதனை வைரலாக்கினார். இது தான் பா.ஜ.க.-வின் மனநிலை. அவர்கள் உங்களது பகுதியை விலங்குகள் வசிக்கும் காடாக நினைத்து, உங்களையும் விலங்குகளை போன்றே நடத்துகின்றனர்."
"நாட்டில் தலித், ஆதிவாசி மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் இருப்பது நம் அனைவருக்கும் நன்றாகவே தெரியும். நாட்டில் ஒரே ஒரு சாதி தான் இருக்கிறது என்றால், அவர் ஏன் தன்னை ஒரு பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவன் என்று கூறிக் கொள்கிறார்?," என்று ராகுல் காந்தி பேசினார்.
முன்னதாக நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, நாட்டில் உள்ள ஒரே சாதி ஏழ்மை தான் என்று தெரிவித்து இருந்தார். பிரதமர் மோடியின் இந்த கருத்துக்கு பதில் அளிக்கும் போது தான் ராகுல் காந்தி இவ்வாறு தெரிவித்தார்.
- ரூ.5 கோடியுடன் கைது செய்யப்பட்டவர் பாகேலுக்கு தர இருப்பதாக கூறினார்
- ஏமாற்ற கிடைக்கும் எந்த வாய்ப்பையும் காங்கிரஸ் விடாது என மோடி தெரிவித்தார்
சத்தீஸ்கர் மாநிலத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் பூபேஷ் பாகேல் தலைமையில் ஆட்சி நடைபெறுகிறது.
இம்மாதம் அங்கு நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில், ஆட்சியை தக்க வைக்க காங்கிரஸ் கட்சியும், அக்கட்சியை வீழ்த்த பா.ஜ.க.வும் தீவிரமாக முயன்று வருகின்றன. பா.ஜ.க. சார்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அங்கு பிரச்சாரம் செய்து வருகிறார்.
சத்தீஸ்கர் மாநிலத்தின் பிலாய் பகுதியை சேர்ந்த சவுரப் சந்திரகர் மற்றும் ரவி உப்பல் ஆகிய இருவர் துபாயில் இருந்தவாறு "மகாதேவ் இணையதள சூதாட்ட செயலி" என செயலி ஒன்றை வடிவமைத்தனர். இந்த சூதாட்டத்திற்கான செயலியில் எந்த நிலையிலும் நிறுவனம் பணத்தை இழக்காதவாறு மென்பொருள் வடிவமைக்கப்பட்டிருந்தது. புதிதாக விளையாட விரும்புவோர் முதலில் சிறு லாபம் பெறும் வகையிலும், அவர்கள் தொடர்ந்து ஆடும் போது பெரும் தொகையை வைத்து ஆட தொடங்கி அதில் பெரும் நஷ்டம் வரும் வகையிலும், இந்த செயலியை திட்டமிட்டு அமைத்திருந்தனர். இதன் மூலம் பல கோடிகள் லாபமடைந்தனர் இதன் நிறுவனர்கள்.
இந்நிலையில், அமலாக்க துறையினரால் ரூ.5 கோடியுடன் கைது செய்யப்பட்ட இந்நிறுவனத்திற்கு பணம் கொண்டு செல்லும் ஊழியர் ஒருவர் அதனை 'பாகேல்' எனும் ஒருவருக்கு தர இருப்பதாகவும், முன்னரே ரூ.508 கோடி அவருக்கு அளித்திருப்பதாகவும் தெரிவித்தார். இதையடுத்து சத்தீஸ்கர் முதலவர் பூபேஷ் பாகேல் அமலாக்க துறையின் விசாரணை வளையத்திற்குள் வந்துள்ளதாக செய்திகள் தெரிவித்தன.
இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தின் துர்க் மாவட்டத்தில் பா.ஜ.க. ஏற்பாடு செய்திருந்த ஒரு பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது:
உங்களை ஏமாற்றி பணம் பறிக்க காங்கிரஸ் எந்த வாய்ப்பையும் தவற விடாது. அவர்கள் 'மகாதேவ்' எனும் கடவுளை கூட விடவில்லை. சத்தீஸ்கர் மாநிலத்தை சுரண்டிய அனைவரும் பா.ஜ.க. ஆட்சி அமைந்ததும் தண்டிக்கப்படுவார்கள். அவர்கள் ஏமாற்றிய ஒவ்வொரு ரூபாய்க்கும் பதில் சொல்ல வைப்போம். இது போன்ற ஊழல்கள் தீவிரமாக விசாரணை செய்யப்பட்டு ஏமாற்றியவர்கள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என நான் உங்களுக்கு உறுதி அளிக்கிறேன்.
இவ்வாறு மோடி கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்