என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
மத்தியப்பிரதேசம்
- மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் தக்கவைத்தது.
- தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றதை சமினா கொண்டாடியுள்ளார்.
போபால்:
மத்திய பிரதேச சட்டசபை தேர்தல் கடந்த மாதம் நடைபெற்றது. இந்த தேர்தலில் பா.ஜ.க. அபார வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் தக்கவைத்தது. பா.ஜ.க.வின் வெற்றியை அக்கட்சியினர் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.
இதற்கிடையே, அந்த மாநிலத்தின் சிஹோர் மாவட்டம் அகமத்பூர் பகுதியைச் சேர்ந்த சமினா (30). இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர்.
பா.ஜ.க. ஆதரவாளரான இவர், நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அக்கட்சிக்கு வாக்களித்துள்ளார். பா.ஜ.க. வெற்றி பெற்றதையும் சமினா கொண்டாடியுள்ளார்.
பா.ஜ.க.வுக்கு ஆதரவாக செயல்பட்ட சமினாவின் செய்கைகளை அவரது மைத்துனன் ஜாவித் கான் விரும்பவில்லை. இதனால் தகாத வார்த்தைகளால் திட்டிய ஜாவித் கான் சமினாவை சரமாரியாக தாக்கியுள்ளார். பா.ஜ.க.வுக்கு தொடர்ந்து ஆதரவாக வாக்களித்தால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்தார்.
இந்நிலையில், பா.ஜ.க.வுக்கு ஆதரவாக வாக்களித்த தன்னை சரமாரியாக தாக்கிய மைத்துனன் மீது சமினா போலீசில் புகார் கொடுத்தார்.
புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களை பின்னுக்கு தள்ளிவிட்டு 71 ஆயிரத்து 219 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
- மழை காலங்களில் ஒழுகும் தன்மையுள்ள மண் குடிசையில் வசித்து வரும் கமலேஷ்வருக்கு சொந்தமாக கார் எதுவும் இல்லை.
போபால்:
மத்திய பிரதேச சட்டமன்ற தேர்தலில் ஒழுகும் மண் குடிசை வீட்டில் வசிக்கும் தொழிலாளி சுயேட்சையாக நின்று எம்.எல்.ஏ.வாகி புதிய சாதனை படைத்துள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த மத்திய பிரதேச சட்டமன்ற தேர்தலில் ஆளும் பாரதிய ஜனதா அமோக வெற்றியை பெற்று மீண்டும் ஆட்சி பிடித்துள்ளது. இங்குள்ள 230 சட்டமன்ற தொகுதிகளில் பெருவாரியான தொகுதிகளை பாரதிய ஜனதா வெற்றி பெற்றாலும், 2-வது இடத்தில் முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.
இந்தநிலையில் இந்த மாநிலத்தில் ஒரே ஒரு சுயேட்சை எம்.எல்.ஏ. என்ற அங்கீகாரத்தை பழங்குடி சமுதாயத்தைச் சேர்ந்த கமலேஷ்வர் டோடியார் பெற்றுள்ளார். 33 வயதான இவர் தனது பள்ளி பருவ காலத்திலேயே கல்வி கற்க கடுமையான போராட்டங்களை சந்தித்தவர். அவரது தாயார் கூலி வேலைக்கு சென்றும், கோழி வளர்ப்பில் கிடைத்த முட்டைகளை விற்றும் அதில் கிடைத்த பணத்தில் படிக்க வைத்தார்.
ஆதிவாசி பழங்குடி இனத்தைச் சேர்ந்த கமலேஷ்வருக்கு மக்கள் பணியாற்ற வேண்டும், பிற்படுத்தப்பட்ட ஏழ்மை நிலையில் உள்ள பழங்குடியின, தாழ்த்தப்பட்ட பல்வேறு மக்களுக்கு தன்னால் இயன்ற சேவைகளை செய்ய வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாகவே இருந்தது. இதன் காரணமாக பொது சேவையில் ஆர்வத்துடன் பணியாற்றினார். இதனுடன் டிபன் டெலிவரி செய்யும் தொழிலையும் மனம் கூசாமல் செய்தார். டெல்லியில் சட்டப்படி பண்பை படித்த போதும் அங்கும் டிபன் டெலிவரி தொழிலாளியாகவே வலம் வந்தார் கமலேஷ்வர்.
ஆனாலும் அவரது உழைப்பு மற்றும் மக்கள் சேவைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காமலே இருந்தது. கடந்த இரண்டு முறை சட்டசபை மற்றும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தாலும் விடாமுயற்சியுடன் தனது சேவையை தொடர்ந்தார் கமலேஷ்வர் டோடியார்.
இந்த நிலையில் தான் கடந்த செப்டம்பர் மாதம் உருவாக்கப்பட்ட பாரத் ஆதிவாசி இயக்கத்தின் சார்பில் ரத்லாம் மாவட்டத்தில் உள்ள சைலானா சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டார் கமலேஷ்வர் டோடியார். இந்த தொகுதியில் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்கள் அதிக செல்வாக்குடன் களத்தில் இறங்கி பணியாற்றினர். ஆனாலும் கமலேஷ்வர் மனம் தளராமல் தனது ஏழ்மையை எண்ணி ஒதுங்கி விடாமல் தேர்தலில் புதிய சரித்திர சாதனையை படைத்துள்ளார்.
தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களை பின்னுக்கு தள்ளிவிட்டு 71 ஆயிரத்து 219 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளருக்கு 66 ஆயிரத்து 601 ஓட்டுகளும், பாரதிய ஜனதா வேட்பாளருக்கு 41 ஆயிரத்து 584 ஓட்டுகளும் கிடைத்துள்ளன.
இவர் சார்ந்துள்ள புதிய கட்சியான பாரத் ஆதிவாசி இயக்கம் ராஜஸ்தான் மாநிலத்தை மையமாக கொண்ட கட்சி. ஆனாலும் மத்திய பிரதேசத்தில் கமலேஷ்வரின் எளிமையான மக்கள் சேவையே அவரை எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்துள்ளது.
மழை காலங்களில் ஒழுகும் தன்மையுள்ள மண் குடிசையில் வசித்து வரும் கமலேஷ்வருக்கு சொந்தமாக கார் எதுவும் இல்லை. தேர்தலின் போது மோட்டார் சைக்கிளிலேயே தனது ஆதரவாளர்களுடன் சென்று மக்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். பணம் இல்லாததால் சாப்பிடாமல் பசித்த வயிற்றுடனே பிரசாரம் செய்து மக்களை சந்தித்துள்ளார்.
மேலும் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு கூட கார் வசதி இல்லாததால் சுமார் 300 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சட்டமன்ற செயலகத்திற்கு ஆவணங்களை சமர்ப்பிக்க மோட்டார் சைக்கிளிலேயே சென்றுள்ளார் கமலேஷ்வர் டோடியார். பழங்குடியின சமூக மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும், அவர்களுக்கு கல்வி, சுகாதாரம் மற்றும் பொருளாதாரம் வாய்ப்புகள் கிடைப்பதை உறுதி செய்வதுடன் அதற்கு தேவையான அர்ப்பணிப்புடன் பணியாற்ற இருப்பதாக கமலேஷ்வர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் சார்ந்துள்ள பாரத் ஆதிவாசி இயக்கம் பழங்குடியின மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும், அவர்களை பொருளாதார ரீதியில் உயர்த்தவும், சுற்றுச்சூழலில் மிகுந்த அக்கறையுடன் செயல்பட போவதாகவும் அறிவித்துள்ளது. மேலும் நமது இயற்கை உலகத்தை பாதுகாக்கவும், தூய்மையான ஆற்றலை ஊக்குவிக்கவும் மாசுபாட்டை குறைக்கும் கொள்கைகளை எங்கள் இயக்கம் ஆதரிக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.
தேர்தல் என்றாலே கோடிக்கணக்கில் பணம் கொட்டும் இந்த காலத்தில் கமலேஷ்வர் டோடியார் தனது ஏழ்மையையே மூலதனமாகக் கொண்டு சாதித்துள்ளார். ஆனால் மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பணக்கார எம்.எல்.ஏ.வாக ஸ்பெக்ட்ரம் என்பவர் உள்ளார். அவருக்கு 223 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் எளிய சாமானியராக, எவ்வித பணபலமும் இல்லாமல் தேர்தலில் போட்டியிட்டு பிரதான அரசியல் கட்சிகளை வீழ்த்தி அம்மாநிலத்தில் ஒரே சுயேட்சை எம்.எல்.ஏ. என்ற அந்தஸ்தை எட்டிப்பிடித் துள்ளார் கமலேஷ்வர் டோடியார்.
இவரது எளிமையான வாழ்க்கை, அவர் அரசியலில் சாதித்த வெற்றி, ஏழ்மையிலும் மக்கள் பணியாற்றினால் உரிய அங்கீகாரம் தேடி வரும் என்பதற்கு முக்கிய உதாரணமாக பேசப்படுகிறது.
- பா.ஜனதாவை சேர்ந்த 51 எம்.எல்.ஏ.-க்கள் கிரிமினல் வழக்கை எதிர்கொண்டு வருகிறார்கள்.
- காங்கிரஸ் எம்.எல்.ஏ.-க்கள் 38 பேர் கிரிமினல் வழக்கை எதிர்கொண்டுள்ளனர்.
230 தொகுதிகளை கொண்ட மத்திய பிரதேச மாநில சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை கடந்த 3-ந்தேதி நடைபெற்றது. பா.ஜனதா 163 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது.
இந்த நிலையில் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள 90 எம்.எல்.ஏ.-க்கள் கிரிமினல் வழக்கை எதிர்கொள்ள இருக்கிறார்கள் என ஜனநாயக சீரமைப்பு சங்கம் வெளியிட்டுள்ள தகவல் மூலம் தெரியவந்துள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு இந்த எண்ணிக்கை 94 ஆக இருந்த நிலையில், தற்போது அதில் நான்கு குறைந்துள்ளது.
இவர்களில் 34 பேர் அதிகபட்சமா ஐந்து ஆண்டுக்கு மேல் தண்டனை பெறும் வகையிலான வழக்கை எதிர்கொண்டு வருகிறார்கள். கடந்த 2018-ல் இந்த வகையிலான எம்.எல்.ஏ.-க்கள் எண்ணிக்கை 47 ஆக இருந்தது. தற்போது அதில் 13 எம்.எல்.ஏ.-க்கள் குறைந்துள்ளனர்.
ஷிவ்புரி மாவட்டத்தில் உள்ள பிச்சோர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ஜனதா எம்.எல்.ஏ. பிரதம் லோதி மட்டும் கொலை வழக்கை எதிர்கொண்டு வருகிறார். ஐந்து பேர் கொலை முயற்சி வழக்கை எதிர்கொண்டு வருகிறார்கள். மூன்று பேர் மீது பெண்கள் தொடர்பான கிரிமினல் வழக்கை எதிர்கொண்டு வருகின்றனர்.
கடந்த 2018 தேர்தலில் பா.ஜனதா 109 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், தற்போது 163 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. புதிதான தேர்வு செய்யப்பட்ட 163 பேர்களில் 51 பேர் கிரிமினல் வழக்கை எதிர்கொண்டு வருகிறார்கள். இதில் 16 பேர் கடுமையான தண்டனைக்குரிய குற்ற வழக்கை எதிர்கொள்கின்றனர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.-க்கள் 38 பேர் கிரிமினல் வழக்கை எதிர்கொண்டுள்ளனர். 17 பேர் கடுமையான குற்றவழக்கை எதிர்கொள்கின்றனர்.
பாரத ஆதிவாசி கட்சியை ஒரு தொகுதியை பிடித்துள்ளது. அந்த கட்சியின் எம்.எல்.ஏ.-வும் கிரிமினல் வழக்கை எதிர்கொண்டு வருகிறார்.
- 2013-ல் பா.ஜனதா 44.88 சதவீதம் வாக்குகளுடன் 165 இடங்களை பெற்றிருந்தது.
- காங்கிரஸ் 36.38 சதவீத வாக்குகளுடன் 58 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது
மத்திய பிரதேச மாநிலத்தில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் பா.ஜனதா மீண்டும் ஆட்சியை பிடிக்கும். அல்லது கடும் போட்டி நிலவும் என தெரிவிக்கப்பட்டது.
ஆனால், மூன்றில் இரண்டு பங்கு இடங்களில் வெற்றி வாகை சூடி அமோக வெற்றி பெற்றுள்ளது. 230 இடங்களில் 163 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 66 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
கடந்த தேர்தலில் பெற்ற வாக்குகளை விட பா.ஜனதா தற்போது அதிகமாக 7 சதவீதம் வாக்குகள் பெற்றுள்ளது. 2018-ல் பா.ஜனதா 41.02 சதவீதம் வாக்குகள் பெற்றிருந்தது. தற்போது 48.55 சதவீதம் வாக்குகள் அதிகமாக பெற்றுள்ளது.
காங்கிரஸ் கடந்த தேர்தலில் 40.89 சதவீத வாக்குகள் பெற்றிருந்தது, தற்போது 40.40 சதவீத வாக்குகள் பெற்றுள்ளது. ஏறக்குறைய ஒரே வாக்கு சதவீதமாக இருந்தாலும் 114 இடங்களில் இருந்து 66 இடங்களாக குறைந்துள்ளன.
2013-ல் பா.ஜனதா 44.88 சதவீதம் வாக்குகளுடன் 165 இடங்களை பெற்றிருந்தது. காங்கிரஸ் 36.38 சதவீத வாக்குகளுடன் 58 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது.
2008-ல் 37.64 சதவீத வாக்குகளுடன் 143 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. காங்கிரஸ் 71 இடங்களுடன் 32.39 சதவீத வாக்குகள் பெற்றிருந்தது.
2003-ல் பா.ஜனதா 173 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. அப்போது 42.50 சதவீதம் வாக்குகள் பெற்றிருந்தது. காங்கிரஸ் 38 தொகுதிகளுடன் 31.6 சதவீத வாக்குகள் பெற்றிருந்தது.
- பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கையை கடந்து பெரும் வெற்றியை பா.ஜ.க. பெற்றுள்ளது
- அனைத்து பிரிவை சேர்ந்த பெண்களும் இத்திட்டத்தில் இணைந்து பயன் பெற முடியும்
மத்திய பிரதேச சட்டசபையில் உள்ள 230 இடங்களுக்கு நவம்பர் 17 அன்று தேர்தல் நடைபெற்றது. இதில் வாக்களிக்க தகுதியுள்ள மக்களில் சுமார் 77 சதவீதம் பேர் வாக்களித்தனர்.
சட்டசபை தேர்தலின் முடிவுகள் இன்று வெளியாகியது.
இதில் பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கையான 116க்கும் மேலாக 160 இடங்களை கடந்து பா.ஜ.க. மகத்தான வெற்றியை பெற்றுள்ளது. மீண்டும் 5-வது முறையாக மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க. ஆட்சி அமைக்கிறது என்பது குறிப்பிடத்தக்க சாதனை.
ஆளும் கட்சிக்கு எதிரான மனநிலை மக்களிடையே நிலவுவதாகவும் அதன் பயன் காங்கிரஸ் கட்சிக்கு செல்லும் என்றும் பல அரசியல் விமர்சகர்கள் கணித்திருந்தனர். ஆனால், தேர்தல் முடிவுகள் அவை அனைத்தையும் பொய்யாக்கி விட்டது.
ம.பி.யில் பா.ஜ.க.விற்கு ஆதரவாக அதிகளவில் பெண்கள் வாக்களித்ததாகவும் அதற்கு காரணம் "லாட்லி பெஹ்னா யோஜனா" (ladli behna yojana) எனும் திட்டம்தான் என சில அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
"லாட்லி பெஹ்னா யோஜனா" திட்டம் என்றால் என்ன?
ம.பி.யில் 2023 மார்ச் 5 அன்று இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்மணிகள் ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் மாநில அரசாங்கத்தினால் ரூ.1000 வரவு வைக்கப்படும். இதன் நோக்கம். பெண்கள் தங்கள் உடல்நலம் மற்றும் தங்கள் குழந்தைகளின் உடல்நலத்தை மேம்படுத்த பால், கனி, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்க உதவுவதுதான். இத்திட்டத்திற்கு அடுத்த சில வருடங்களில் ரூ.60 ஆயிரம் கோடி வரை செலவிட போவதாக ம.பி. அரசு கூறியது.
யார் யார் இதில் சேரலாம்?
ம.பி.யில் நிரந்தரமாக வசிக்கும் பெண்மணிகள் மட்டுமே இதற்கு பயனாளியாக தகுதி பெறுவார்கள். இதற்கான மனுவளிக்கும் போது அப்பெண் 21 வயதிற்கு குறையாமலும் 60 வயதை கடக்காமலும் இருக்க வேண்டும். கல்லூரியில் படிக்கும் பெண்களுக்கு இத்திட்டம் பொருந்தாது. மேலும், பயனாளிகள் வருமான வரி செலுத்துபவராக இருக்க கூடாது. குடும்ப வருமானம் வருடத்திற்கு ரூ.2.5 லட்சத்திற்கு குறைவாக இருக்க வேண்டும். இத்திட்டத்தில் சேர்வதற்கு சாதி, மத, இன பேதங்கள் இல்லை. பொதுப்பிரிவினர், பின் தங்கிய வகுப்பினர், பட்டியலின பிரிவினர் உட்பட அனைவரும் இதில் இணைய தடையில்லை. திருமணமானவர்கள், கணவரை பிரிந்தவர்கள், விவாகரத்தானவர்கள் மற்றும் விதவைகளுக்கும் இத்திட்டம் பொருந்தும்.
மனுதாரர் தர வேண்டிய ஆவணங்கள் என்னென்ன?
ஆதார் அட்டை
மனுதாரரின் புகைப்படம்
வங்கி கணக்கு விவரம்
செல்போன் எண்
வசிப்பிட முகவரிக்கான ஆதாரம்
பிறப்பு சான்றிதழ்
இத்திட்டத்திற்கான உதவி தொகை மேலும் உயர்த்தப்படலாம் என தேர்தல் பிரச்சாரத்தில் அக்கட்சியினர் தொடர்ந்து அறிவித்துள்ளதால், அக்கட்சியின் வெற்றியில் பெண்கள் கூடுதல் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- பா.ஜ.க. 150 இடங்களுக்கு மேல் முன்னிலை பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கிறது.
- இரட்டை என்ஜின் மீது மக்கள் வைத்த நம்பிக்கையால் கிடைத்த வெற்றி என அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
போபால்:
மத்திய பிரதேசத்தில் கடந்த 17ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்றது. அன்று பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று நடந்து வருகிறது.
அதில், மொத்தமுள்ள 199 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பாஜக 160 இடங்களுக்கு மேல் முன்னிலை பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கிறது.
இந்நிலையில், இரட்டை என்ஜின் மீது மக்கள் நம்பிக்கை வைத்ததால் கிடைத்த வெற்றி இது என மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், இது மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க.வுக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும். பா.ஜ.க. அரசு வேலை செய்துள்ளது. இரட்டை என்ஜின் அரசு, பிரதமர் மோடியின் தலைமை மற்றும் முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகானின் செயல்பாடு ஆகியவற்றின் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். வெற்றி பெற்ற அனைவரையும் வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.
- கடந்த முறை 109 தொகுதிகளை பிடித்திருந்தது.
- தற்போது 150 இடங்களை தாண்டி பிடிக்கும் நிலையில் உள்ளது.
230 தொகுதிகளை கொண்ட மத்திய பிரதேச மாநிலத்தில் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த தேர்தலின்போது காங்கிரஸ் கட்சிதான் ஆட்சியை பிடித்தது. ஆனால், காங்கிரஸ் கட்சியின் ஜோதிராதித்யா சிந்தியா 20-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.-க்களுடன் பா.ஜனதாவில் இணைந்தார். இதனால் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது.
தற்போது எப்படியாவது ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில் கடும் தேர்தல் பிரசாரம் செய்தது. இருந்தபோதிலும், தேர்தல் முடிவில் அந்த கட்சிக்கு பின்னடைவுதான் ஏற்பட்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து பா.ஜனதா முன்னிலை வகித்தது. நேரம் ஆகஆக பா.ஜனதாவின் முன்னிலை அமோகமாக இருந்தது.
11 மணி நிலவரப்படி 155 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. கடந்த தேர்தலை விட 46 இடங்கள் அதிகமாக பெறும் நிலையில் உள்ளது. இதனால் சிவராஜ் சிங் சவுகான் மீண்டும் முதலமைச்சராவது உறுதியாகிவிட்டது.
- தெலுங்கானாவில் இன்று மாலையுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது.
- டிசம்பர் 3-ம் தேதி வாக்குகள் எண்ணும் பணி நடைபெறுகிறது.
போபால்:
மிசோரம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று மாலையுடன் நிறைவடைந்தது.
தெலுங்கானாவில் மாலை 5 மணி நிலவரப்படி 65 சதவீத வாக்குப்பதிவாகியுள்ள நிலையில் மொத்த வாக்குப்பதிவு விவரம் இன்னும் வெளியாகவில்லை.
இந்நிலையில், 5 மாநில தேர்தலில் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியானது. அதன் விவரம் வருமாறு:
மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க. காங்கிரஸ் கட்சி இடையே போட்டி நிலவுகிறது.
ரிபப்ளிக்: பாஜக 118-130, காங்கிரஸ் 97-107
டிவி 9: பாஜக 106-116, காங்கிரஸ் 111-121
ஜன் டிவி பாஜக: 100-123, காங்கிரஸ் 102-125
பி மார்க் பாஜக: 103-122, காங்கிரஸ் 103-122
சிஎன்என் பாஜக முன்னிலை
இதையடுத்து, மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க., காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது என கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.
- சிறுமிக்கு பேஸ்புக் மூலமாக ஏற்கனவே அறிமுகமானவர் என கூறப்படுகிறது.
- கற்பழிப்பு, போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குவாலியர்:
மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் கடந்த 21-ந் தேதி அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக காரில் இளைஞர்கள் சிலர் வந்துள்ளனர். அதில் ஒரு வாலிபர் அந்த சிறுமிக்கு பேஸ்புக் மூலமாக ஏற்கனவே அறிமுகமானவர் என கூறப்படுகிறது. அந்த வாலிபர் சிறுமியை காரில் ஏறுமாறு கூறியுள்ளார்.
அதை நம்பி காரில் ஏறிய சிறுமியை ஆள் நடமாட்டம் இல்லாத காட்டு பகுதிக்கு கடத்தி சென்று அந்த வாலிபரும், அவரது நண்பர்கள் 3 பேரும் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர்.
பின்னர் சம்பவத்தை வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார்.
அவர்கள் இதுபற்றி போலீசில் புகார் செய்துள்ளனர். அதன் பேரில் 4 வாலிபர்கள் மீதும் கற்பழிப்பு, போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த 17-ந்தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.
- பலத்த பாதுகாப்பை மீறி தபால் வாக்கு பெட்டியை திறந்துள்ளது அதிர்ச்சியளிப்பதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த 17-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று, வாக்கு எந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையத்தை சுற்றி போலீசார், பாதுகாப்புப்படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். வாக்கு எந்திரம் இருக்கும் மையத்தை யாரும் எளிதாக நெருங்கி விட முடியாது. உயர் அதிகாரிகள் இல்லாமல் திறக்க முடியாது.
மத்திய பிரதேசத்தில் 17-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற்ற போதிலும், வருகிற 3-ந்தேதிதான் வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. இதனால் முறைகேடு செய்ய வாய்ப்புள்ளதாக கருதி காங்கிரஸ் மற்றும் பா.ஜனதாவினரும் அங்கேயே முகாமிட்டுள்ளனர்.
இவ்வளவு பாதுகாப்பு ஏற்பாட்டுகளையும் மீறி, பாலகாட் மாவட்டத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் தபால் வாக்கு பெட்டி வைத்திருக்கும் அறையில் பலர் தபால் வாக்குகளை கட்டு கட்டுகளாக பிரித்து வைப்பது போன்ற வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பானது.
இதுதொடர்பான வீடியோவை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள காங்கிரஸ், "இது மிகவும் முக்கியமான விசயம். குற்றவாளிகளுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். காங்கிரஸ் தொண்டர்கள் விழிப்புடன் இருக்க வேணடும். இதுபோன்ற நிகழ்வுகள் நடக்க விடக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளது.
இதுகுறித்து தேர்தல் ஆணையத்திற்கு காங்கிரஸ் கடிதம் எழுதியுள்ளது. அதில் முறைகேடு நடைபெற வாய்ப்புள்ளதாக குற்றம்சாட்டியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த சட்டசபை தேர்தலின்போது காங்கிரஸ் கட்சிதான் அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது அதன்பின் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டு, ஜோதிராதித்யா சந்தியா 20 எம்.எல்.ஏ.க்களுடன் பா.ஜனதாவில் இணைந்தார். இதனால் காங்கிரஸ் ஆட்சியமைக்கும் வாய்ப்பை இழந்தது. இதனால் பா.ஜனதா ஆட்சியை பிடித்தது.
- வீடு திரும்பிய சிறுமி சம்பவம் குறித்து பெற்றோரிடம் அழுது கொண்டே தெரிவித்தார்.
- திண்டோரி மாவட்ட தலைமை போலீஸ் நிலையத்துக்கு சென்று உயர் அதிகாரிகளிடம் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர்.
திண்டோரி:
மத்திய பிரதேச மாநிலம் திண்டோரி மாவட்டம் பஜாக் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி ஒரு விழாவில் கலந்து கொள்வதற்காக நடந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக அதே பகுதியை சேர்ந்த 4 பேர் காரில் வந்தனர். சிறுமியை போகும் வழியில் விட்டுவிடுவதாக கூறி காரில் ஏறக்கூறினர். சிறுமியும் நம்பி காரில் ஏறினார்.
உடனடியாக காரை ஆட்கள் நடமாட்டம் இல்லாத காட்டை நோக்கி வேகமாக ஓட்டி சென்றனர். பின்னர் 4 பேரும் சிறுமியை கற்பழித்தனர். அவரது அழுகுரல் கேட்காமல் இருக்க காரில் சத்தமாக பாடல்களை ஒலிக்க செய்தனர். பின்னர் சிறுமியை அங்கேயே விட்டு விட்டு 4 பேரும் தப்பி சென்று விட்டனர்,
வீடு திரும்பிய சிறுமி சம்பவம் குறித்து பெற்றோரிடம் அழுது கொண்டே தெரிவித்தார். இதுகுறித்து புகார் அளிக்க சிறுமியின் பெற்றோர் உள்ளூர் போலீஸ் நிலையத்துக்கு சென்றனர். ஆனால் அங்கு அவர்களின் புகாரை ஏற்க போலீசார் மறுத்துவிட்டனர்.
பின்னர் திண்டோரி மாவட்ட தலைமை போலீஸ் நிலையத்துக்கு சென்று உயர் அதிகாரிகளிடம் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். அவர்கள் உடனடியாக வழக்கு பதிவு செய்தனர்.
இதுகுறித்து திண்டோரி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜெகநாத் மார்க்கம் கூறுகையில், "குற்றவாளிகள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்த வழக்கை விசாரிக்க டி.எஸ்.பி. தலைமையில் ஒரு தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. குற்றவாளிகளில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது" என்றார்.
சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரை வாங்க மறுத்து போலீசார் அலட்சியமாக நடந்து கொண்டது குறித்து கேட்டதற்கு அது குறித்து விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் உண்மையாக இருந்தால் அவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
- மத்திய பிரதேசத்தில் ஒரே கட்டமாக நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.
- சத்தீஸ்கரில் 2-ம் கட்டமாக 70 தொகுதிகளில் வாக்குப்பதிவு நேற்று நடந்தது.
போபால்:
மத்திய பிரதேச மாநிலத்தில் 230 தொதிகளுக்கு ஒரே கட்டமாக நேற்று காலை வாக்குப்பதிவு தொடங்கியது. மாநில முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான், காங்கிரஸ் தலைவர் கமல்நாத் உள்ளிட்ட தலைவர்கள் வாக்குச்சாவடி வந்து தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர்.
இதேபோல், சத்தீஸ்கரில் 2-ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு 70 தொகுதிகளில் நேற்று நடைபெற்றது.
இந்நிலையில், சத்தீஸ்கரில் இரண்டாவது கட்டமாக 70 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்ற நிலையில் அங்கு 70.60 சதவீத வாக்குகள் பதிவாகின.
மத்திய பிரதேசத்தில் 74 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்