என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
மத்தியப்பிரதேசம்
- மழைநீர் தேங்கிய பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து
- இரண்டு பேர் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்
மத்திய பிரதேச மாநிலம் விடிஷா மாவட்டத்தில் உள்ள ஹெய்டார்கார் கிராமத்தில் ஒரு குடும்பத்தினர் விவசாய நிலத்தை பார்வையிட காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஒரு வளைவில், காரை பின்னோக்கி (ரிவர்ஸ்) எடுக்க டிரைவர் முயன்றார்.
அப்போது கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. அந்த பள்ளம் மழைநீரால் நிரம்பியிருந்தது.
இதனால் காரில் இருந்த ஷகீலா பி (30), நிகாட் (13), அயன் (10), ஷாத் (7) ஆகியோர் உயிரிழந்தனர். கார் பள்ளத்தில் கவிழ்ந்ததும், கிராமத்தினர் உடனடியாக விரைந்து, மூன்று பேரின் உடலை மீட்டனர். காருக்குள் சிக்கி உயிரிழந்த ஒருவரின் உடல், மாநில பேரிடர் மீட்புப்படை அணியால் மீட்கப்பட்டது.
காரில் பயணம் செய்த மேலும் இருவரை கிராமத்தினர் உயிருடன் மீட்டனர். அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
- விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விபத்தில் 8 பயணிகள் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மத்தியப் பிரதேசம் மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் இன்று அதிகாலை 40 பயணிகளுடன் சென்றுக்கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தூரில் இருந்து ஜோத்பூருக்கு சென்றுக் கொண்டிருந்த பேருந்து ஒன்று கனமழை காரணமாக வளைவு ஒன்றில் திரும்பியபோது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
மாவட்டத் தலைமையகத்திலிருந்து 80 கி.மீ தொலைவில் உள்ள ஃபர்னாகேடி கிராமத்திற்கு அருகில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக கச்ரோட் காவல் நிலையப் பொறுப்பாளர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.
இந்த விபத்தில் நடத்துனர் உட்பட இருவர் பேருந்தின் அடியில் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்றொரு பயணி சிகிச்சை பலனின்றி இறந்தார். மேலும், இந்த விபத்தில் 8 பயணிகள் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பொதுக் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக முன்னாள் முதல்வர் கமல்நாத் அறிவித்துள்ளார்.
- பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டதற்கான காரணம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற இருந்த இந்தியா கூட்டணியின் பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்தியபிரதேச மாநிலத்தின் தலைநகர் போபாலில் வரும் அக்டோபர் மாதம் 2ம் தேதி அன்று இந்தியா கூட்டணியின் பொதுக் கூட்டம் நடைபெறும் என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், அக்டோபர் மாதம் 2ம் தேதி நடைபெற இருந்த பொதுக் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக முன்னாள் முதல்வர் கமல்நாத் அறிவித்துள்ளார்.
பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டதற்கான காரணம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
- மதுரையில் ஜான்மோசஸ் நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது.
- சின்மயா பைனான்ஸ் நிறுவன தலைமை நிர்வாகிகள் பாக்யராஜ், குருசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மதுரை
மதுரை ஆரப்பாளை யத்தில் முன்னாள் மத சார்பற்ற ஜனதா தளம் பிரமுகர் ஜான்மோசஸ் நினைவு நாள் நிகழ்ச்சி நடந்தது.
மதசார்பற்ற ஜனதாதளம் செயலாளர் செல்லப்பாண்டி தலைமை வகித்தார். ஆசிரியர் லூர்து மேரி ஜான் மோசஸ், ஜான்நோயல் ராஜா, ஜான் மணி பாரத், இனியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் கிரம்மர் சுரேஷ், முன்னாள் எம்.எல்.ஏ. ராஜேந்திரன், முன்னாள் துணை மேயர் மன்னன், தி.மு.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெயராம், காங்கிரஸ் நிர்வாகி காந்தி, சமூக நீதி கட்சி மாநில தலைவர் பால்ராஜ், மதுரை மாநகர் காங்கிரஸ் தலைவர் கார்த்தி கேயன், காங்கிரஸ் தலைவர் சிதம்பர பாரதி, தி.மு.க தலைமைக்கழக பேச்சாளர் மார்சல் முருகன்,
சமூக நீதி கட்சி தலைவர் கூடலிங்கம், வி.சி.க. மாலின், தமிழர் தேசிய முன்னணி தலைவர் கணேசன், கவிஞர்கள் ெபாற்கை பாண்டியன், ரேவதி அழகர் சாமி, பொயட் ரவி, சேகர் மருது, ஈஸ்வரராஜா, துளிர், மதசார்பற்ற ஜனதாதளம் லிங்கம், ஜெயப்பிரகாசம், அவனி மாடசாமி மற்றும் முக்கிய பிரமுகர்கள் பேசினர்.
ஜான்மோசஸ் அறக்கட் டளை சார்பில் கிருஷ்ணா புரம் காலனி மாநகராட்சி பள்ளிக்கு எல்.இ.டி டி.வி. வழங்கப்பட்டது. மேலும் பள்ளி மாணவ- மாணவி களுக்கு கல்வி ஊக்கதொகை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் முத்துசாமி, நாராயணன், ரவீந்திரன், ஜெயம் பாண்டியன், புதூர் சுகுமாரன், ரங்கராஜன், மற்றும் சின்மயா பைனான்ஸ் நிறுவன தலைமை நிர்வாகிகள் பாக்யராஜ், குருசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- விவேக் மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
- தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமை குறித்து அந்த மாணவி பெற்றோரிடம் தெரிவித்தார்.
இந்தூர்:
மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் தனியார் நீட் பயிற்சி மையம் உள்ளது. இந்த மையத்தில் விவேக் என்பவர் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.
சம்பவத்தன்று இவர் அங்கு படித்து வரும் 17 வயது மாணவியை படிப்புக்கு உதவுகிறேன் என கூறி காபி சாப்பிட அழைத்தார். இதை நம்பி அந்த மாணவியும் அவருடன் ஓட்டலுக்கு சென்றார். அப்போது விவேக் மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் அந்த மாணவி அதிர்ச்சி அடைந்தார். விவேக்குடன் பணியாற்றும் மற்றொரு ஆசிரியரான சைலேந்திரா என்பவர் மாணவியை செல்போனில் தொடர்பு கொண்டு இது பற்றி வெளியில் சொல்லக்கூடாது என மிரட்டினார்.
தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமை குறித்து அந்த மாணவி பெற்றோரிடம் தெரிவித்தார். இதையடுத்து மாணவியின் உறவினர்கள் நீட் பயிற்சி மையத்துக்கு திரண்டு வந்தனர். அவர்கள் அங்கிருந்த ஆசிரியர் விவேக்கை பிடித்து அவர் அணிந்து இருந்த ஆடையை களைந்தனர். பின்னர் அவரை நிர்வாணமாக ரோட்டில் ஊர்வலமாக அழைத்து சென்று போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சனாதனத்தை பின்பற்றுபவர்கள் இந்தியா கூட்டணியிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
- உலக நாடுகளின் நண்பனாக இந்தியா வளர்ந்து வருகிறது.
போபால்:
மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலுங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறுகிறது.
இந்த நிலையில் தேர்தல் நடைபெற உள்ள பா.ஜனதா ஆளும் மாநிலமான மத்திய பிரதேசத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை சென்றார். அங்குள்ள பினா பகுதிக்கு சென்ற அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பினா சுத்திகரிப்பு நிலையத்தில் பெட்ரோ கெமிக்கல் வாரியம் மற்றும் மாநிலம் முழுவதும் 10 புதிய தொழில்துறை திட்டங்கள் உள்பட ரூ.50,700 கோடிக்கும் அதிகமான திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:-
இந்தியா கூட்டணியினர் இந்து மதத்துக்கு எதிரான கொள்கையை கொண்டவர்களாக உள்ளனர். இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் நம்பிக்கையை ஒழிக்க எதிர்க்கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி செயல்படுகிறது. சனாதன தர்மத்தை ஒழிப்பதே இந்தியா கூட்டணியின் நோக்கமாக உள்ளது.
பாரதம் ஒன்றுபட்டு இருக்க சனாதன தர்மமே காரணமாகும். விவேகானந்தர், லோக்மான்யா திலக்கிற்கு உத்வேகம் அளித்த சனாதனத்தை இந்தியா கூட்டணி அழிக்க நினைக்கிறது. இந்தியாவின் கலாச்சாரத்தை தாக்க ஒரு மறைமுக செயல் திட்டத்துடன் எதிர்க்கட்சிகள் களம் இறங்கி உள்ளது.
இவர்கள் சனாதனத்தையே குறிவைக்கிறார்கள். சனாதனம் மீதான தாக்குதல் நாட்டின் கலாச்சாரம் மீதான தாக்குதல். சனாதனத்தை எவ்வளவு தாக்கி பேசினாலும் அது வளர்ந்து கொண்டேதான் இருக்கும்.
ஆண்டாண்டு காலமாக சனாதன தர்மம் இந்திய மக்களை ஒருங்கிணைத்து வருகிறது. இந்தியா கூட்டணியின் அவதூறு கருத்துக்களுக்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும். அமைப்பு மற்றும் ஒற்றுமையின் பலத்துடன் அவர்களின் திட்டங்களை முறியடிக்க வேண்டும்.
சனாதனத்தை பின்பற்றுபவர்கள் இந்தியா கூட்டணியிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இன்றைய இந்தியா உலகை இணைக்கும் திறனை வெளிப்படுத்தி வருகிறது. உலக நாடுகளின் நண்பனாக இந்தியா வளர்ந்து வருகிறது. மறுபுறம் சில கட்சிகள் நாட்டையும், சமூகத்தையும் பிளவுபடுத்த முயற்சிக்கின்றன.
இந்தியா கூட்டணியில் தலைவர் முடிவு செய்யப்படவில்லை. அவர்களின் தலைமைத்துவத்தில் குழப்பம் நிலவுகிறது. எதிர்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் உள்ளவர்கள் தலைகணம் கொண்டவர்கள்.
ஜி-20 மாநாட்டை இந்தியா வெற்றிகரமாக நடத்தியது என்பதை நீங்கள் அனைவரும் அறிந்திருப்பீர்கள். ஜி-20 மாநாட்டின் வெற்றிக்கான பெருமை நாட்டு மக்களையே சாரும். இது 140 கோடி மக்களின் வெற்றியாகும்.
மத்திய பிரதேசத்தை முன்பு ஆட்சி செய்தவர்கள் இந்த மாநிலத்துக்காக ஒன்றும் செய்யவில்லை. ஊழல் மற்றும் குற்றங்களை தவிர அவர்கள் எதுவும் செய்யவில்லை. தற்போது பா.ஜனதா அரசு மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
சனாதன தர்மம் ஒழிக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இதற்கு மத்திய மந்திரிகளும், பா.ஜனதா மூத்த தலைவர்களும் ஆவேசமாக கருத்துக்களை கூறி வந்தனர்.
இந்த நிலையில்தான் பிரதமர் மோடியும் முதல் முறையாக சனாதன தர்மத்துக்கு எதிராக பேசுபவர்களை கடுமையாக விமர்சித்து இன்று கருத்துக்களை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய பிரதேசத்தில் இருந்து இன்று பிற்பகல் பிரதமர் மோடி காங்கிரஸ் ஆளும் சத்தீஸ்கர் மாநிலத்துக்கு செல்கிறார் அங்கு பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
- மத்திய பிரதேச மாநிலத்தில் இந்த வருட இறுதிக்குள் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது
- சத்தீஸ்கர் சென்று பொதுக்கூட்ட பேரணியில் கலந்து கொள்ள இருக்கிறார்
பிரதமர் மோடி இன்று மத்திய பிரதேசம் செல்கிறார். அப்போது 50,700 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட இருக்கிறார். மாநிலங்கள் முழுவதும் 10 புதிய தொழிற்சாலை திட்டங்கள், பினா சுத்தகரிப்பு நிலையத்தில் பெட்ரோகெமிக்கல் காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட திட்டங்கள் அதில் அடங்கும்.
பாரத் பெட்ரோலியம் லிமிடெட்டின் பினா சுத்திகரிப்பு நிலையம் 49 கோடி ரூபாயில் உருவாக்கப்பட இருக்கிறது, சுமார் 1,200 KTPA (ஆண்டுக்கு கிலோ-டன்கள்) பார்மா போன்ற பல்வேறு துறைகளுக்கான முக்கிய கூறுகளை உற்பத்தி செய்யும்.
இது இந்தியாவின் இறக்குமதியை குறைக்க பயனுள்ளதாக இருக்கும். பிரதமர் மோடியின் சுயசார்பு பாரத் திட்டத்தை நிறைவேற்றுதாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மத்திய பிரதேச மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறார்.
அதன்பின், சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ரெய்கார் மாவட்டத்தில் நடைபெறும் பொதுக்கூட்ட பேரணியில் கலந்து கொண்டு பேச இருக்கிறார். அங்கு 6350 கோடி ரூபாய் மதிப்பிலான ரெயில் திட்டத்தை நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார்.
- டாடியா மாநில உள்துறை அமைச்சரின் தொகுதிக்கு உட்பட்டது
- பலியானவர்களில் 4 பேர் 30 வயதுக்கு உட்பட்டவர்கள்
மத்திய பிரதேசத்தின் வட மத்திய பகுதியில் உள்ளது டாடியா மாவட்டம். இது அம்மாநில உள்துறை அமைச்சர் டாக்டர். நரோத்தம் மிஷ்ராவின் தொகுதிக்கு உட்பட்ட மாவட்டமாகும். இங்கு டாங்கி மற்றும் பால் எனப்படும் இரு பிரிவினர் வசிக்கின்றனர். இந்த இரு பிரிவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் அடங்கும்.
அங்குள்ள நிலங்களில் ஆடுகள் புல் மேய்வது தொடர்பான விஷயங்களில் இந்த இரு பிரிவினருக்குமிடையே அவ்வப்போது வாக்குவாதம் நடப்பதுண்டு.
நேற்று இரு பிரிவை சேர்ந்தவர்களும் இது சம்பந்தமான ஒரு பிரச்சனையை தீர்த்து வைக்க ஒன்று கூடி பேசி வந்தனர். அப்போது அவர்களின் வாக்குவாதம் சண்டையாக மாறியது.
இதனையடுத்து ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். அது வன்முறையாக மாறியதில் அவர்கள் இரு பிரிவினரிடையே துப்பாக்கிகளை மறைத்து வைத்திருந்தவர்கள், அதனை வெளியில் எடுத்து சுட்டனர்.
இதில் 30 வயதுகளில் உள்ள 4 பேர்களும், 70 வயதுக்கு மேற்பட்ட ஒருவரும் கொல்லப்பட்டனர். மேலும் 2 பேர் தீவிர காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பலியான 5 பேரில், 3 பேர் (பிரகாஷ், ராம்நரேஷ், சுரேந்திரா) டாங்கி வகுப்பையும், 2 பேர் (ராஜேந்திரா, ராகவேந்திரா) பால் வகுப்பையும் சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவரும் துப்பாக்கி குண்டுக்கு பலியானவர்கள்.
மேலும் வன்முறை வெடிக்காமல் இருக்க ஏராளமான காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, இதுவரை 6 பேரை காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
- தாதியா மாவட்டத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
மத்தியப் பிரதேசம் மாநிலம் தாதியா மாவட்டத்தில் டாங்கி மற்றும் பால் சமூகத்தினருக்கு இடையே நிலத்தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதை அடுத்து அங்கு துப்பாக்கிச் சண்டை நடந்தது.
இதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தை ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும், துப்பாக்கிச் சூடு நடத்திய நபர்கள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தேர்தலை சந்திக்க ஆளும் பாரதியஜனதா கட்சி ஏற்கனவே தயாராகிவிட்டது.
- தேர்தலுக்கு இன்னும் 3 மாதகாலம் இருக்கும் சூழ்நிலையில் பாரதியஜனதா தேர்தல் வேலைகளை தொடங்கி உள்ளது
போபால்:
230 உறுப்பினர்களை கொண்ட மத்தியபிரதேச மாநில சட்டசபையின் பதவி காலம் முடிவடைய இருப்பதையொட்டி இந்தாண்டு இறுதியில் அம்மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த தேர்தலை சந்திக்க ஆளும் பாரதியஜனதா கட்சி ஏற்கனவே தயாராகிவிட்டது. தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாகவே கடந்த மாதம் 17-ந்தேதி 30 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பாரதியஜனதா வெளியிட்டு அந்த தொகுதிகளில் தேர்தல் பிரசாரத்தையும் தொடங்கிவிட்டது.
பாரதிய ஜனதாவை வீழ்த்த காங்கிரசும் தயாராகிவிட்டது. கடந்த 2018-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று கமல்நாத் முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். இந்த ஆட்சி 2 ஆண்டு காலமே நீடித்தது. 2020-ம் ஆண்டு காங்கிரசை சேர்ந்த ஜோதிர் ஆதித்ய சிந்தியா 22 எம்.எல்.ஏக்களுடன் அக்கட்சியில் இருந்து வெளியேறினார். இதனால் மத்திய பிரதேச மாநிலத்தில் அரசியல் குழப்பம் ஏற்பட்டது.
இதனால் காங்கிரஸ் ஆட்சியும் கவிழ்ந்தது.
இதையடுத்து சிவராஜ் சிங் சவுதான் தலைமையில் பா.ஜனதா ஆட்சி அமைந்தது. தொடர்ந்து அக்கட்சி ஆட்சியில் நீடித்து வருகிறது. இதனால் வருகிற சட்டசபை தேர்தலில் எப்படியும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் பாரதியஜனதா உள்ளது.
அதே சமயம் இழந்த ஆட்சியை மீண்டும் மத்தியபிரதேச மாநிலத்தில் மலர வைப்பதில் அக்கட்சி தலைவர்கள் மும்முரமாக உள்ளனர். இதற்கு பலனாக சமீபத்தில் பல பாரதியஜனதா தலைவர்கள் அக்கட்சியில் இருந்து விலகி மறுபடியும் காங்கிரசில் இணைந்து வருகின்றனர். மத்திய மந்திரி ஜோதிர் ஆதித்ய சிந்தியாவின் தீவிர ஆதரவாளரான ராஜேஷ் குப்தா ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் காங்கிரசில் சேர்ந்தார். இது காங்கிரஸ் கட்சிக்கு பலமாக பார்க்கப்படுகிறது.
அதே சமயம் சில தலைவர்கள் விலகியதால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை மக்கள் ஆதரவுடன் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என அக்கட்சியினர் நம்பிக்கையுடன் உள்ளனர்.
இந்த நிலையில் பாரதிய ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் அவரது இல்லத்தில் நேற்று பாரதியஜனதா ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டார். இதில் மத்திய பிரதேச சட்டசபை தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. தேர்தல் வெற்றி வியூகம் குறித்தும், பாரதிய ஜனதா வெற்றிக்காக பாடுபடுவது குறித்தும் அமித்ஷா ஆலோசனை நடத்தினார். தேர்தலுக்கு இன்னும் 3 மாதகாலம் இருக்கும் சூழ்நிலையில் பாரதியஜனதா தேர்தல் வேலைகளை தொடங்கி உள்ளது அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
- ஓட்டல் அதிபரான இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
- போலீசார் இந்த கடிதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தூர்:
மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் ஹீராநகர் பகுதியில் வசித்து வந்தவர் சித்து ( வயது 30) ஓட்டல் அதிபரான இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. கடந்த 9 ஆண்டுகளுக்கும் மேலாக இவர் தனிமையில் வாடி வந்தார். இதனால் அவருக்கு மன அழுத்தமும் ஏற்பட்டது. நேற்று இவர் தனது வீட்டில் தனக்கு தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவர் 7 பக்க உருக்கமான கடிதம் எழுதி இருந்தார். அதில் தான் சாவுக்கு யாரும் காரணம் இல்லை என்றும் தனிமையில் வாழ்ந்து வந்ததால் இந்த முடிவை மேற்கொண்ட தாகவும் எழுதி உள்ளார். போலீசார் இந்த கடிதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நாங்கள் ஆறு மாதங்களுக்கு முன் தேர்தலை அறிவிக்க முடியும்
- குறிப்பிட்ட நேரத்திற்குள் தேர்தலை நடத்த வேண்டும். இதுதான் எங்கள் பணி
மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் நவம்பர் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் சென்று தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது.
அந்த வகையில் இந்திய தேர்தல் ஆணையம் தலைவர் ராஜிவ் குமார் இன்று மத்திய பிரதேசம் சென்றுள்ளார்.
மத்திய பிரதேசம் சென்றுள்ள அவர் தேர்தல் குறித்து கூறுகையில் ''அரசியலமைப்பு வழங்கியுள்ள விதிகளின்படி நாங்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் தேர்தல் நடத்த வேண்டும். இதுதான் எங்களது பணி. பாராளுமன்ற பதவிக்காலம் ஐந்தாண்டு. நாங்கள் ஆறு மாதத்திற்கு முன் தேர்தலை அறிவிக்க முடியும். அதேபோன்றுதான் சட்டமன்ற தேர்தலுக்கும். சட்ட விதிகளின்படி தேர்தலை நடத்த நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம்'' என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்