என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
மத்தியப்பிரதேசம்
- பா.ஜ.க.வுக்கும், ஆர்.எஸ்.எஸ்.சுக்கும் நான்தான் கொரோனா வைரஸ் என்றார் திக்விஜய் சிங்.
- கொரோனா வைரசை விட மாநிலத்துக்கு அதிக சேதத்தை காங்கிரஸ் ஏற்படுத்தியுள்ளது.
போபால்:
மத்திய பிரதேச முன்னாள் முதல் மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான திக்விஜய் சிங், காங்கிரசின் கொரோனா வைரஸ் என மத்திய பிரதேச நீர்வளத்துறை மந்திரி துளசிராம் சமீபத்தில் கூறியிருந்தார். இதற்கு பதிலடி கொடுத்த திக்விஜய் சிங், பா.ஜ.க.வுக்கும், ஆர்.எஸ்.எஸ்.சுக்கும் நான்தான் கொரோனா வைரஸ் என தெரிவித்தார்.
இந்நிலையில், காங்கிரஸ் தலைவர்களின் கருத்தை மத்திய பிரதேச முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் கடுமையாக சாடியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், அவர் (திக்விஜய் சிங்) ஒரு சரியான ஒப்பீடு செய்துள்ளார். ஒப்பிடுவதற்கு அவர் வேறு எந்த வைரசையும் கண்டுபிடிக்கவில்லை. கொரோனா வைரசை மட்டுமே கண்டுபிடித்தது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. காங்கிரஸ் தலைவர்களான திக்விஜய் சிங் மற்றும் கமல்நாத் இருவரும் கொரோனா வைரஸை விட மாநிலத்துக்கு அதிக சேதத்தை ஏற்படுத்தி உள்ளனர் என தெரிவித்தார்.
- கடந்த 2 ஆண்டுகளாக தீபக் அவரை தினமும் பின் தொடர்ந்து சென்று தொந்தரவு கொடுத்து வந்தார்.
- தகராறு முற்றவே ஆத்திரம் அடைந்த தீபக் ரத்தோர் தான் மறைத்து வைத்து இருந்த துப்பாக்கியை எடுத்து பூஜாவை நோக்கி சரமாரியாக சுட்டார்.
போபால்:
மத்திய பிரதேச மாநிலம் தர் பகுதியை சேர்ந்தவர் பூஜா (வயது 22)இவர் அங்குள்ள ஒரு உணவகத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் தனது தாய் மற்றும் 2 சகோதரிகளுடன் வசித்து வந்தார்.
பூஜா வேலைக்கு செல்லும் போதும், திரும்பும் போதும் அதே பகுதியை சேர்ந்த தீபக் ரத்தோர் என்ற வாலிபர் பூஜாவிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தினார். இதனை பூஜா ஏற்கவில்லை. ஆனாலும் கடந்த 2 ஆண்டுகளாக தீபக் அவரை தினமும் பின் தொடர்ந்து சென்று தொந்தரவு கொடுத்து வந்தார். பொறுமை இழந்த பூஜா இதுபற்றி போலீசில் புகார் அளித்தார்.
இதனால் தீபக் ரத்தோர் அவரது குடும்பத்துக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.
இந்நிலையில் நேற்று பூஜா வேலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டு இருந்தார். அப்போது அவரை வழிமறித்த தீபக் என் கோரிக்கையை ஏற்கிறாயா? இல்லையா? என சண்டை போட்டார். தகராறு முற்றவே ஆத்திரம் அடைந்த தீபக் ரத்தோர் தான் மறைத்து வைத்து இருந்த துப்பாக்கியை எடுத்து பூஜாவை நோக்கி சரமாரியாக சுட்டார்.
இதில் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த அவர் நடுரோட்டில் இறந்தார். இது தொடர்பாக போலீசார் தீபக்கை தேடி வந்தனர். அவர் தர் பகுதியில் உள்ள வீட்டில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் அங்கு சென்று அவரை கைது செய்ய முயன்றனர். அப்போது போலீசாரை நோக்கி தீபக் துப்பாக்கியால் சுட்டான். சுதாரித்துக்கொண்ட போலீசார் திருப்பி சுட்டனர். இதில் தீபக் காலில் குண்டு பாய்ந்தது. உடனே போலீசார் அவரை கைது செய்தனர்.
பின்னர் அவர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- மணப்பெண்களுக்கு குறிப்பிட்ட நோய் பாதிப்பு தொடர்பான மருத்துவ பரிசோதனை மட்டுமே நடத்தப்பட்டது.
- கர்ப்ப பரிசோதனை நடத்துவதற்கு எந்த அறிவுறுத்தலும் வழங்கப்படவில்லை என திண்டோரி மாவட்ட கலெக்டர் விகாஸ் மிஸ்ரா மறுத்துள்ளார்.
போபால்:
மத்திய பிரதேசத்தின் திண்டோரி மாவட்டத்தில் மாநில அரசு சார்பில் 219 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. கடாசரை நகரில் நேற்று முன்தினம் நடந்த இந்த நிகழ்ச்சியில் திருமணம் செய்து கொண்ட ஜோடிகளுக்கு தலா ரூ.56 ஆயிரம் நிதியுதவியும் அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மணப்பெண்களுக்கு கர்ப்ப பரிசோதனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியானது. இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.
இது ஏழைகளை அவமதிக்கும் செயல் எனக்கூறியுள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஓம்கார் சிங், எந்த விதிமுறைகளின் கீழ் இந்த பரிசோதனை நடத்தப்பட்டது? என்பதை அரசு விளக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
ஆனால் கர்ப்ப பரிசோதனை நடத்துவதற்கு எந்த அறிவுறுத்தலும் வழங்கப்படவில்லை என திண்டோரி மாவட்ட கலெக்டர் விகாஸ் மிஸ்ரா மறுத்துள்ளார். அந்த மணப்பெண்களுக்கு குறிப்பிட்ட நோய் பாதிப்பு தொடர்பான மருத்துவ பரிசோதனை மட்டுமே நடத்தப்பட்டதாகவும் கூறினார்.
அப்போது சில பெண்கள் மாதவிலக்கு பிரச்சினை இருப்பதாக கூறியதால், மருத்துவக்குழுவினரே அந்த பெண்களுக்கு கர்ப்ப பரிசோதனை நடத்தியதாகவும், இதில் 4 பெண்கள் கர்ப்பமாக இருப்பது தெரியவந்ததால், அவர்களை திருமணத்துக்கு அனுமதிக்கவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார்.
- மத்தியப் பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சையின் போது உயிரிழந்துள்ளது.
- மாநில தலைமை வனப் பாதுகாவலர் (சிசிஎப்) ஜே.எஸ். சவுகான் நேற்று அறிவித்தார்.
பிரதமர் நரேந்திரமோடி கடந்த ஆண்டு செப்டம்பர் 17ம் தேதியில் தனது 72வது பிறந்தநாளை கொண்டாடியபோது நமீபியா நாட்டின் 8 சிறுத்தை புலிகளை மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் விடுவித்தார்.
தென் ஆப்பிரிக்காவில் இருந்து 5 பெண், 3 ஆண் சிறுத்தைகளை விமானம் மூலம் கொண்டு வரப்பட்டன.
தொடர்ந்து பிப்ரவரி 18ம் தேதி தென்ஆப்பிரிக்காவில் இருந்து விமானம் மூலம் 12 சிறுத்தைகள் குவாலியருக்கு வரவழைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்ட உதய் என்ற மற்றொரு சிறுத்தை, மத்தியப் பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சையின் போது உயிரிழந்துள்ளது.
இதுதொர்பாக மாநில தலைமை வனப் பாதுகாவலர் (சிசிஎப்) ஜே.எஸ். சவுகான் நேற்று தெரிவித்தார்.
- பெட்ரோல் பம்ப் ஊழியர்கள், பம்ப் அருகே வைக்கப்பட்டுள்ள தீயை அணைக்கும் கருவியைப் பயன்படுத்தி தீயை அணைத்தனர்.
- சம்பவம் தொடர்பாக அப்பகுதி போலீஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மத்தியப் பிரதேசம் மாநிலம் இந்தூரில் உள்ள பெட்ரோல் பம்பில் நேற்று பேருந்தில் எரிபொருள் நிரப்பிக் கொண்டிருந்தபோது திடீரென பேருந்து தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பேருந்தின் ஓட்டுனர் மற்றும் உதவியாளர் ஆகியோர் பேருந்தில் எரிபொருள் நிரப்பிக் கொண்டிருந்தனர். அப்போது, பெரிய நெருப்பு பந்து ஒன்று திடீரென தாக்கி தீப்பிடித்துள்ளது. இந்த காட்சி சிசிடிவியில் பதிவாகி உள்ளது.
இதைக்கண்டு பீதியடைந்த பயணிகள் பேருந்தில் இருந்து இறங்கி சாலையில் ஓடினர். தீப்பிடித்த சில நொடிகளில், பெட்ரோல் பம்ப் ஊழியர்கள், பம்ப் அருகே வைக்கப்பட்டுள்ள தீயை அணைக்கும் கருவியைப் பயன்படுத்தி தீயை அணைத்து, தனியார் பேருந்தில் பயணித்த பயணிகளின் உயிரைக் காப்பாற்றி உள்ளனர்.
தீ அணைக்கப்பட்டதை அடுத்து பேருந்து அங்கிருந்து இயக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் பலத்த தீக்காயம் அடைந்த பேருந்தின் ஓட்டுனர் மற்றும் உதவியாளர் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் தொடர்பாக அப்பகுதி போலீஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். பெட்ரோல் பம்பில் பேருந்தில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- டாக்டர் அம்பேத்கர் நகர் ரெயிலின் 2 பெட்டிகள் தீப்பிடித்து எரிந்தன.
- உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
போபால்:
மத்திய பிரதேச மாநிலம் ரத்லம் மாவட்டத்தில் இன்று காரில் ரத்லம்-டாக்டர் அம்பேத்கர் நகர் ரெயிலின் 2 பெட்டிகள் தீப்பிடித்து எரிந்தன. ரத்லமில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள பிரீதம் நகர் ரெயில் நிலையத்தில் இன்று காலை 7 மணிக்கு இந்த சம்பவம் ஏற்பட்டது.
இதில் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
- கட்லா வனப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போது நக்சலைட்டுகள் தாக்குதல் நடத்தினர்.
- சுனிதா, மாவோயிஸ்டுகளின் பிரிவான போராம் தேவ் கமிட்டியின் கமாண்டர் ஆவார். அவர் பகுதி கமிட்டி உறுப்பினராகவும் இருந்து வந்தார்.
போபால்:
மத்திய பிரதேசத்தின் பலங்ஹட் மாவட்டம் கட்லா வனப்பகுதியில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் உள்ளது. அவர்களை பிடிக்க பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள்.
இன்று அதிகாலை, கட்லா வனப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போது நக்சலைட்டுகள் தாக்குதல் நடத்தினர். இரு தரப்பினருக்கும் துப்பாக்கி சண்டை நடந்தது.
இதில் இரண்டு பெண் நக்சலைட்டுகள் சுட்டு கொல்லப்பட்டனர். அவர்கள் சுனிதா, சரிதா காதியா மோச்சா என்பது தெரிய வந்தது.
சுனிதா, மாவோயிஸ்டுகளின் பிரிவான போராம் தேவ் கமிட்டியின் கமாண்டர் ஆவார். அவர் பகுதி கமிட்டி உறுப்பினராகவும் இருந்து வந்தார்.
சரிதா பகுதி கமிட்டி உறுப்பினராக இருந்தார். அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள், தோட்டாக்கள், வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இவர்களின் தலைக்கு தலா ரூ.14 லட்சம் பரிசு தொகை அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கட்லா வனப்பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
- ரெயில்வே ஊழியர்கள் மீட்பு பணிக்காக சம்பவ பகுதிக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
- பிலாஸ்பூர் மற்றும் கத்னி வழியே செல்லும் ரெயில் போக்குவரத்து பாதிப்படைந்து உள்ளது.
மத்திய பிரதேசத்தின் ஷாதூல் நகரில் சிங்பூர் ரெயில் நிலையம் அருகே 2 சரக்கு ரெயில்கள் நேருக்கு நேர் இன்று மோதிக்கொண்டன. மோதிய வேகத்தில் ஒரு ரெயிலின் என்ஜின் மற்றொரு ரெயிலின் மீது ஏறியது. இந்த சம்பவத்தில் ஒரு எஞ்சின் தீப்பிடித்து எரிந்தது.
ரெயில் விபத்தில் இரு ரெயில்களின் ஓட்டுநர்களும் காயமடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. 2 ரெயில்வே பணியாளர்கள் விபத்தில் சிக்கி இருக்க கூடும் என அஞ்சப்படுகிறது.
இதுபற்றி தகவல் அறிந்து ரெயில்வே ஊழியர்கள் மீட்பு பணிக்காக சம்பவ பகுதிக்கு விரைந்து சென்றனர். இந்த விபத்து காரணமாக பிலாஸ்பூர் மற்றும் கத்னி வழியே செல்லும் ரெயில் போக்குவரத்து பாதிப்படைந்து உள்ளது.
விபத்து பற்றி தகவல் அறிந்த ரெயில்வே உயர் அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியை முடுக்கி விட்டனர்.
- ஜபல்பூர் மாவட்டத்தில் உள்ள நர்மதாபுரத்தை சேர்ந்த மூதாட்டி ஜோதி ரகுவன்ஷி.
- ஆற்றங்கரைகளில் தேவைப்படுவோருக்கு நாட்டு மருந்துகள் சிலவற்றை வழங்கியுள்ளார்.
மத்தியபிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தில் உள்ள நர்மதாபுரத்தை சேர்ந்த மூதாட்டி ஜோதி ரகுவன்ஷி. இவர் ஜபல்பூரில் உள்ள நர்மதா ஆற்றில் நடந்து செல்வது போல வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரலானது. இதனை வைரலாக்கிய நெட்டிசன்கள் ஆற்றில் தெய்வீக உருவம் காணப்படுவதாக தகவல் பரப்பினர். இதனால் ஆற்றங்கரையில் ஏராளமான மக்கள் திரண்டதால் அங்கு கூட்டம் அலைமோதியது. சிறிது நேரத்தில் ஆற்றில் இருந்து ஜோதிரகுவன்ஷி வெளியே வந்தார். அப்போது அவரை கடவுளாக (நர்மதா தாய்) வழிபட தொடங்கினர். இதனால் அங்கு போலீசாரும் விரைந்து சென்றனர். போலீசார் ஜோதி ரகுவன்ஷியிடம் விசாரித்த போது அவர் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறியவர் என்பது தெரியவந்தது. மேலும் வேண்டுதலுக்காக நர்மதா ஆற்றை சுற்றி வலம் வந்துள்ளார். ஆற்றங்கரையோரமாக அவர் நடந்து சென்ற போது சில இடங்களில் தண்ணீர் குறைவாக இருந்துள்ளது.
இதனால் அவர் ஆற்றில் இறங்கி நடந்து சென்றுள்ளார். சில இடங்களில் நீந்தி சென்றுள்ளார். ஆற்றங்கரைகளில் தேவைப்படுவோருக்கு நாட்டு மருந்துகள் சிலவற்றை வழங்கியுள்ளார். இதனை ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அது வைரலானதால் மக்கள் திரண்டதும் தெரியவந்தது. ஆனால் மூதாட்டி ஜோதிரகுவன்ஷி கூறுகையில் நான் தண்ணீர் மேல் நடக்கவில்லை. நான் பெண் தெய்வமும் அல்ல. வேண்டுதலுக்காக ஆற்றை சுற்றி வருகிறேன் என்றார். இதையடுத்து நர்மதாபுரத்தில் உள்ள ஜோதிரகுவன்ஷி உறவினர்களை போலீசார் தொடர்பு கொண்டு பேசினர். அவர்கள் வந்ததும் அவர்களுடன் ஜோதிரகுவன்ஷியை அனுப்பி வைத்தனர்.
- பள்ளியில் உள்ள உயிரியல் ஆய்வகத்தில் ஒரு குடுவையில் மனிதக் கரு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
- பள்ளிக்கு எதிராக மத்திய பிரதேச குழந்தை உரிமைகள் ஆணையம் போலீஸில் புகார்.
மத்தியப் பிரதேசம் மாநிலம் சாகர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் கடந்த 6ம் தேதி அன்று கிடைத்த தகவலை அடுத்து மத்திய பிரதேச குழந்தை உரிமைகள் ஆணையம் (எம்.பி.சி.ஆர்.சி) திடீர் ஆய்வு மேற்கொண்டது. அப்போது, பள்ளியில் உள்ள உயிரியல் ஆய்வகத்தில் ஒரு குடுவையில் மனிதக் கரு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மனித கரு எப்படி கிடைத்தது என்று கேட்டதற்கு பள்ளி நிர்வாகத்திடம் இருந்து திருப்திகரமான பதில் இல்லை. இதையடுத்து, பள்ளிக்கு எதிராக மத்திய பிரதேச குழந்தை உரிமைகள் ஆணையம் போலீஸில் புகார் அளித்தது.
இதைதொடர்ந்து, போலீசார் எப்ஐஆர் பதிவு செய்யவில்லை என்றாலும் பள்ளி நிர்வாகத்திடம் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
இதுகுறித்து எம்.பி.சி.ஆர்.சி உறுப்பினர் ஓம்கார் சிங் தாக்கூர் கூறுகையில், "மருத்துவக் கல்லூரிகளில் இதுபோன்ற பாதுகாக்கப்பட்ட கருக்கள் இருந்தாலும், அவற்றை வைத்திருக்க மற்ற அமைப்புகளுக்கு அனுமதி தேவை. ஆனால் இதுதொடர்பாக பள்ளி நிர்வாகம் சரியான விளக்கம் அளிக்காததால் அவர்களிடம் புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்" என்றார்.
- உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
- சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
புர்கான்பூர்:
மத்திய பிரதேச மாநிலம் புர்கான்பூர் மாவட்டத்தில் உள்ள நேபாநகர் காவல் நிலையம் மீது இன்று அதிகாலையில் ஒரு கும்பல் திடீரென தாக்குதல் நடத்தியது. காவலர்களை தாக்கியதுடன் வாகனங்களையும் அடித்து நொறுக்கினர். மேலும், காவல் நிலைய லாக்கப்பில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 3 குற்றவாளிகளை விடுவித்தனர்.
சுமார் 60 பேர் ஒன்றுதிரண்டு வந்து தாக்கியதால் காவலர்கள் திக்குமுக்காடினர். வன்முறைக் கும்பலை தடுக்க முடியாமல் திணறினர். இந்த தாக்குதலில் 4 போலீஸ்காரர்கள் காயமடைந்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி போர்க்களமாக காட்சியளித்தது.
மாவட்ட கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு மற்றும் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதுபற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு கூறுகையில், 'தலைக்கு 32 ஆயிரம் ரூபாய் அறிவிக்கப்பட்ட கொள்ளையன் ஹேமா மெக்வால் மற்றும் அவனது கூட்டாளிகள் இருவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு லாக்கப்பில் வைக்கப்பட்டிருந்தனர். அவர்களை இன்று ஒரு கும்பல் வந்து விடுவித்துள்ளது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.' என்றார்.
- கோவில் படிக்கிணற்றின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 36 பேர் உயிரிழந்தனர்.
- பழைய கோவில் அருகே புதிதாக சட்டவிரோதமாக கோவில் கட்டுமான பணிகள் நடைபெறுவது தெரியவந்தது.
இந்தூர்:
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் ராம நவமியையொட்டி பாலேஷ்வர் மகாதேவ் கோவிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அப்போது கோவில் படிக்கிணற்றின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 36 பேர் உயிரிழந்தனர்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பழைய கோவில் அருகே புதிதாக சட்டவிரோதமாக கோவில் கட்டுமான பணிகள் நடைபெறுவது தெரியவந்தது. இதையடுத்து அந்த கட்டுமானங்களை இடித்து அகற்றும்படி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இதையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் அந்த கோவில் கட்டுமானங்களை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து அகற்றினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கிணறுகளின் மீது கட்டப்பட்ட சட்டவிரோத கட்டிடங்களை அகற்றும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த கோவில் கட்டுமானம் இடிக்கப்பட்டதாகவும், இதுவரை நான்கு கட்டிடங்கள் இடிக்கப்பட்டுள்ளன என்றும், இந்தூர் கலெக்டர் இளையராஜா தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்