search icon
என் மலர்tooltip icon

    தெலுங்கானா

    • புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
    • இதில் பெங்கால் வாரியர்ஸ் அணி முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

    ஐதராபாத்:

    11-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் , இந்த தொடரில் இன்று நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் - உபி யோதா அணிகள் மோதின. தொடக்கம் முதலே இரு அணிகளும் சிறப்பாக ஆடின.

    இறுதியில் இந்தப் போட்டியில் 32-29 என்ற புள்ளிக்கணக்கில் பெங்கால் வாரியர்ஸ் திரில் வெற்றி பெற்று முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

    மற்றொரு போட்டியில் அரியானா ஸ்டீலர்ஸ் அணி 37-25 என்ற புள்ளிக்கணக்கில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை வீழ்த்தியது.

    • தலைமை ஆசிரியையிடம் 15 நாட்களுக்கு முன்பு புகார் தெரிவித்தும் அவர் நடவடிக்கை எடுக்காமல் ஆசிரியருக்கு சாதகமாக மவுனமாக இருந்தார்.
    • தலைமை ஆசிரியை மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

    தெலுங்கானா மாநிலம் சிர்சில்லாவில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக சாரதா என்பவரும், தெலுங்கு ஆசிரியராக நரேந்தர் என்பவரும் பணியாற்றி வருகின்றனர்.

    இந்த பள்ளியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனியார் நிறுவனம் மூலம் மாணவிகளுக்கு நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

    அப்போது 8-ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் தெலுங்கு ஆசிரியர் நரேந்தர் தங்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு, தகாத முறையில் நடந்து கொண்டதாக புகார் தெரிவித்தனர்.

    தனியார் தொண்டு நிறுவனம் இது குறித்து போலீஸ் சூப்பிரண்டு அகில் மகாஜனக்கு புகார் அனுப்பினர். புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்க சிர்சில்லா போலீசாருக்கு உத்தரவிட்டார்.

    போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    மேலும் மாவட்ட கல்வி அலுவலர் ரமேஷ் குமார் நரேந்திர சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

    இந்த சம்பவத்தை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் பள்ளியின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிரியர் மாணவிகளிடம் தவறாக நடந்து கொள்வதாக தலைமை ஆசிரியை சாரதாவிடம் 15 நாட்களுக்கு முன்பு புகார் தெரிவித்தும் அவர் நடவடிக்கை எடுக்காமல் ஆசிரியருக்கு சாதகமாக மவுனமாக இருந்தார்.

    தலைமை ஆசிரியை மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

    • சிறுமியை வலுக்கட்டாயமாக படுக்கை அறைக்கு இழுத்துச் சென்று பலாத்காரம் செய்ய முயன்றார்.
    • ரவிக்குமார் மீது போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தெலுங்கானா மாநிலம், ஹனம் கொண்டா மாவட்டம், வாடே பள்ளியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் அங்குள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். அதே குடியிருப்பை சேர்ந்தவர் ரவிக்குமார். இவர் ஐதராபாத்தில் உள்ள போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக உள்ளார்.

    சிறுமி தன்னுடன் படிக்கும் நண்பருடன் குடியிருப்பு பகுதியில் பேசிக்கொண்டு இருந்தார். அங்கு வந்த இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் சிறுமியின் நண்பரை அங்கிருந்து விரட்டி அனுப்பினார். பின்னர் சிறுமியிடம் இது போல் தவறாக நடக்கக்கூடாது என அறிவுரை வழங்கினார். சிறுமியின் செல்போன் என்னை வாங்கினார்.

    இதையடுத்து சிறுமியை தனது அறைக்கு அழைத்துச் சென்றார். அப்போது சிறுமியை வலுக்கட்டாயமாக படுக்கை அறைக்கு இழுத்துச் சென்று பலாத்காரம் செய்ய முயன்றார்.

    இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சிறுமி இன்ஸ்பெக்டரிடம் இருந்து போராடி அங்கிருந்து தப்பி வீட்டிற்கு வந்தார். இதுகுறித்து பெற்றோர்களிடம் தெரிவித்தார்.

    இந்த நிலையில் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் சிறுமியை செல்போனில் தொடர்பு கொண்டு நடந்த சம்பவம் குறித்து வெளியில் சொல்லக்கூடாது என மிரட்டல் விடுத்தார்.

    இது குறித்து சிறுமியின் பெற்றோர் காசிபேட்டை போலீசில் புகார் செய்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மீது போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
    • இதில் தமிழ் தலைவாஸ் அணி 2வது வெற்றியைப் பதிவு செய்தது.

    புதுடெல்லி:

    11-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் , இந்த தொடரில் இன்று நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் - புனேரி பால்டன் அணிகள் மோதின.

    தொடக்கம் முதலே தமிழ் தலைவாஸ் அதிரடி ஆட்டத்தில் இறங்கியது. இறுதியில் இந்தப் போட்டியில் 35-30 என்ற புள்ளிக்கணக்கில் தமிழ் தலைவாஸ் அணி வென்று இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.

    மற்றொரு போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை 33-27 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி யு மும்பா அணி வெற்றி பெற்றது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தனது செல்போனில் படம் எடுத்துக்கொண்ட வெங்கடேஷ் அதனை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார்.
    • பயனர்களோ தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    ஐதராபாத்தை சேர்ந்த கார் டிரைவர் ஒருவர் தனது வாகனத்தில் இருக்கைக்கு பின் பின்னால் நோட்டீஸ் ஒட்டியுள்ளது தொடர்பான புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    வெங்கடேஷ் என்பவர் அந்த கேப் வண்டியில் ஏறிய போது டிரைவரின் இருக்கைக்கு பின்னால் ஒரு பேப்பர் ஒட்டப்பட்டிருந்ததை பார்த்தார். அதில் "எச்சரிக்கை!! நோ ரோமன்ஸ்... இது ஒரு வண்டி... இது உங்களின் தனிப்பட்ட இடம் அல்ல (OR) OYO அல்ல. எனவே இடைவெளிவிட்டு அமைதியாக இருங்கள்" என்று எழுதப்பட்டு இருந்தது.

    இதை தனது செல்போனில் படம் எடுத்துக்கொண்ட வெங்கடேஷ் அதனை சமூக வலைத்தளத்தில் பதிவிட, பயனர்களோ தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

    • மதுபான கூடத்தின் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
    • கைதானவர்களில் பலர் மது போதையில் இருந்தனர்.

    ஐதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் ஏராளமான மதுக்கூடங்கள் மசாஜ் சென்டர்கள் இயங்கி வருகின்றன.

    மது போதையில் பொழுதை கழிப்பவர்களுக்கு பஞ்சராஹில்ஸ் பகுதி சொர்க்க பூமியாக இருந்து வருகிறது. இங்குள்ள தனியார் மதுபான கூடத்தில் ஆண் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பெண்களை நடனமாடும் பணியில் அமர்த்தினர். இந்த பெண்கள் அரைகுறை ஆடையுடன் ஆபாச நடனங்களில் ஈடுபட்டு வந்தனர். இதனால் இந்த மதுபான கூடத்தில் கூட்டம் அலைமோதியது.

    நேற்று இரவு சனிக்கிழமை என்பதால் அதிகளவில் கூட்டம் இருந்தது. ஆபாசமாக நடனமாடிய பெண்களுடன் வாலிபர்கள் உற்சாகமாக ஆட்டம் போட்டு கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் போலீசார் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர்.

    ஆபாச நடனம் ஆடிக்கொண்டிருந்த 42 பெண்கள் உட்பட 140 பேரை போலீசார் கைது செய்தனர். மதுபான கூடத்தின் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    அந்த கட்டிடத்துக்கு போலீசார் சீல் வைத்தனர். கைதானவர்களில் பலர் மது போதையில் இருந்தனர். பெரும் பணக்கார வாலிபர்களும் அதில் இருந்தனர்.

    இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் நேற்று இரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • உரிமையாளர் பாலையா உட்பட 15 பேரை போலீசார் கைது செய்தனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், ஐதராபாத், பிரகாஷ் நகரை சேர்ந்தவர் பாலையா (வயது 40). இவர் கோழிக்கறி கடை நடத்தி வந்தார்.

    இவரது கடையில் இருந்து பல்வேறு முக்கிய நகரங்களுக்கு அழுகிய கோழிக்கறி விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    தகவலின் பெயரில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மற்றும் வடக்கு மண்டல அதிரடி போலீசார் பாலையா கடைக்கு சென்றனர். அப்போது கடையில் வைக்கப்பட்டிருந்த கோழிக்கறி துர்நாற்றம் வீசியதுடன் அழுகிய நிலையில் இருந்து நச்சுத் தண்ணீர் ஒழுகியபடி இருந்தது.

    இதனைக் கண்ட அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். கடையில் இருந்த 700 கிலோ அழுகிய கோழிக்கறிகளை பறிமுதல் செய்தனர். கடையில் இருந்த கடை உரிமையாளர் பாலையா உட்பட 15 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் பாலையா ஏற்கனவே ரசூல் புராவில் அழுகிய கோழிக்கறியை விற்பனை செய்ததால் கைதானவர் என்பது தெரியவந்தது.

    ஜெயிலில் இருந்து வெளியே வந்த பாலையா தனது கடையை பிரகாஷ் நகருக்கு மாற்றியது தெரிய வந்தது.

    பிரகாஷ் நகரில் இருந்து சென்னை, மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு அழுகிய நிலையில் உள்ள கோழிக்கறியை பிளாஸ்டிக் கவர்களில் அடைத்து கிலோ ரூ.30 முதல் 50-க்கு விற்பனைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

    சென்னையில் உள்ள சில மதுபான பார்கள், ஓட்டல்கள், சாலையோர கடைகள் பாஸ்ட் புட் சென்டர்களுக்கு அனுப்பி வைத்ததாக விசாரணையில் தெரிவித்துள்ளார்.

    • தொடக்கம் முதலே தமிழ் தலைவாஸ் அணி சிறப்பாக ஆடியது.
    • இறுதியில், தமிழ் தலைவாஸ் அணி 44-29 என்ற புள்ளிக்கணக்கில் வென்றது.

    ஐதராபாத்:

    11-வது புரோ கபடி லீக் போட்டி ஐதராபாத்தில் நேற்று தொடங்கியது. தொடக்க ஆட்டங்களில் தெலுங்கு டைட்டன்ஸ் 37-29 என்ற புள்ளிக் கணக்கில் பெங்களூரு புல்சையும், தபாங் டெல்லி 36-28 என்ற கணக்கில் மும்பை அணியையும் தோற்கடித்தன.

    இந்நிலையில், 2-வது நாளான இன்று இரவு 8 மணிக்கு நடைபெற்ற முதல் போட்டியில் தமிழ் தலைவாஸ்-தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின.

    தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய தமிழ் தலைவாஸ் அணி 44-29 என்ற புள்ளிக்கணக்கில் அபார வெற்றி பெற்றது.

    தமிழ் தலைவாஸ் அணி முதல் போட்டியில் வெற்றியுடன் தொடங்கியது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    • குளத்திற்குள் கார் மூழ்க தொடங்கியதை அடுத்து இருவரும் காரை விட்டு குளத்திற்குள் குதித்துள்ளனர்
    • இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    தெலுங்கானா மாநிலம் ஜங்கானில் குளத்தை ஒட்டிய வயல்வெளிக்கு அருகில் கார் ஓட்டுவதற்காக ஒருவர் பயிற்சியெடுத்து வந்துள்ளார். அப்போது அவருக்கு கார் ஓட்ட சொல்லிக்கொடுத்த நபர் பிரேக் போட சொல்லியுள்ளார். அப்போது பிரேக்கிற்கு பதிலா ஆக்சிலேட்டரை அந்த நபர் அழுத்தியுள்ளார்.

    இதனால் கார் பக்கத்தில் இருந்த ஒரு குளத்திற்குள் விழுந்துள்ளது. குளத்திற்குள் கார் மூழ்க தொடங்கியதை அடுத்து இருவரும் காரை விட்டு குளத்திற்குள் குதித்துள்ளனர். அப்போது அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களை காப்பற்றியுள்ளனர்.

    இருவருக்குமே நீச்சல் தெரியும் என்பதாலும், குளம் ஆழமாக இல்லாததாலும் இருவரும் உயிர் பிழைத்துள்ளனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அதிவேகமாகவும், கவனக்குறைவாகவும் வாகனம் ஓட்டியதாக போலீசார் அவர்கள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • சாலையில் 65 முதியவர் ஆஞ்சநேயலு நடந்து சென்று கொண்டிருந்தார்.
    • இதைக்கேட்டு ஆத்திரமடைந்த அந்த நபர் பைக்கை நிறுத்தி கீழே இறங்கி முதியவரைச் சரமாரியாகத் தாக்கியுள்ளார்.

    சாலையில் வண்டியில் சென்றவரை மெதுவாக போகும்படி அறிவுறுத்திய முதியவர் அடித்துக்கொல்லப் பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள அல்வால் [Alwal] பகுதியில் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி நடந்த இந்த சம்பவத்தின் சிசிடிவி வீடியோ தற்போது வெளியாகி இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

    அன்றைய தினம் அல்வால் சாலையில் 65 முதியவர் ஆஞ்சநேயலு நடந்து சென்று கொண்டிருந்தார். முதியவர் சாலையை கடக்க முயன்றபோது அவ்வழியாக பைக் ஒன்று வேகமாகச் சென்றுள்ளது. இதனால் பைக்கில் சென்றவரை மெதுவாக செல்லும்படி முதியவர்  கூறியுள்ளார். இதைக்கேட்டு ஆத்திரமடைந்த அந்த நபர் பைக்கை நிறுத்தி கீழே இறங்கி முதியவரைச் சரமாரியாகத் தாக்கியுள்ளார்.

    அந்த பைக்கில் வந்த நபருடன் அவரது மனைவியும், மகனும் உடன் வந்துள்ளனர். முதியவரைக் கீழ் தள்ளி அடித்துக்கொண்டிருந்த தனது கணவனை சமாதானப்படுத்தி மனைவி முயன்றுள்ளார். இருப்பினும் முதியவரைத் தாக்குவதை அந்த நபர் நிறுத்தவில்லை. சுற்றி இருந்தவர்கள் அவரை தடுக்காமல் வேடிக்கை பார்த்து நின்றுள்ளனர்.

    இறுதியில் தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்ட நிலையில் முதியவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி முதியவர் உயிரிழந்துள்ளார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் தாக்குதல் நடத்திய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். 

    • போலீசார் தனிப்படை அமைத்து தப்பி ஓடிய முதலைகளை தேடி வந்தனர்.
    • பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படாத வண்ணம் ஒலி பெருக்கி மூலம் போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.

    பீகார் மாநிலம், சஞ்சய் காந்தி உயிரியல் பூங்காவில் இருந்து பெங்களூர் பன்னர் கட்டா பூங்காவிற்கு புலிகள், 8 முதலைகள் மற்றும் பிற அரிய வகை உயிரினங்களை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டு இருந்தது.

    தெலுங்கானா மாநிலம், நிர்மல் மாவட்டம், தேசிய நெடுஞ்சாலையில் லாரி சென்று கொண்டு இருந்தது அப்போது திடீரென லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள தடுப்பில் மோதி கவிழ்ந்தது.

    அப்போது லாரியில் இருந்த 8 முதலைகளில் 2 முதலைகள் லாரியில் இருந்து வெளியேறியது. இதனைக் கண்ட லாரி டிரைவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார் போலீஸ் சூப்பிரண்டு ஜானகி சர்மிளா மற்றும் போலீசார் விபத்து நடந்த இடங்களை பார்வையிட்டனர்.

    பின்னர் போலீசார் தனிப்படை அமைத்து தப்பி ஓடிய முதலைகளை தேடி வந்தனர். தப்பி ஓடிய முதலைகளால் அப்பகுதியில் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படாத வண்ணம் ஒலி பெருக்கி மூலம் போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.

    நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு லாரியில் இருந்து தப்பிய 2 முதலைகளை போலீசார் மீட்டனர். இதையடுத்து மற்றொரு லாரியை ஏற்பாடு செய்து வனவிலங்குகளை ஏற்றி போலீஸ் பாதுகாப்புடன் பெங்களூருக்கு அனுப்பி வைத்தனர்.

    • சிறுவன் நிற்க முடியாமல் கீழே சரிந்து விழுந்தான்.
    • ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநில பத்ராத்திரி கொத்த குடேம் மாவட்டத்தில் மானச விகாசா பகுதியில் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் ஆசிரியர் ஒருவர் பள்ளி சிறுவனை கொடூரமாக தாக்கி உள்ளார்.

    ஆசிரியர் சிறுவனை பிடித்து முதுகில் பலமாக அடித்தார். சிறுவன் வலியால் கதறி அழுதபடி அவனது முதுகை இரு கைகளையும் பின்புறமாக வைத்து தடவினான்.

    அப்போது அவனது கைகளை பிடித்து ஆசிரியர் தர தரவென இழுத்துச் சென்று மாறி மாறி தாக்கி உள்ளார். அப்போது அவருடைய பாக்கெட்டில் இருந்து செல்போன் வெளியே வந்தது.

    அதை சரி செய்து கொண்ட ஆசிரியர் மேலும் சிறுவனை 4 முறை கைகளால் அடித்தார். அப்போது சிறுவன் நிற்க முடியாமல் கீழே சரிந்து விழுந்தான்.

    சிறுவன் கையில் வைத்திருந்த ஒரு நோட்டுப் புத்தகத்தை பிடுங்கி அதை வீசி எறிந்து அந்த புத்தகத்தை எடுத்து வருமாறு கூறினார்.

    கீழே விழுந்த சிறுவன் புத்தகத்தை எடுப்பதற்காக எழுந்ததும் மீண்டும் ஆசிரியர் சிறுவனை தரையில் இழுத்து போட்டு அடித்தார்.

    ஆசிரியரின் தாக்குதலில் இருந்து மீள முடியாத சிறுவன் அழுது கொண்டே வீட்டிற்கு சென்றான். நடந்த விஷயங்களை பெற்றோர்களிடம் தெரிவித்தான்.

    எந்தவித காரணமும் இல்லாமல் ஆசிரியர் தன்னை அடித்ததாக கூறினான். இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பள்ளியில் திரண்டனர். ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    அப்போது பள்ளியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் ஆசிரியர் சிறுவனை கொடூரமாக தாக்கும் காட்சிகள் இருந்தன. இதனை கண்டதும் பெற்றோர்களுக்கு கண்ணீர் பெருக்கெடுத்தது.

    இந்த வீடியோ பரவி வருகிறது. ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.

    ×