search icon
என் மலர்tooltip icon

    உத்தரகாண்ட்

    • ஸ்ரேயா ஜெயினின் தந்தை சஞ்சய் ஜெயின் குழந்தை நல மருத்துவராவார்.
    • சஞ்சய் ஜெயின் தனது மகளின் திருமணத்திற்காக ஆடம்பர ரிசார்ட்டை பதிவு செய்துள்ளார்.

    டெல்லியை சேர்ந்த 28 வயதான ஸ்ரேயா ஜெயினின் திருமண நிகழ்ச்சி உத்தரகாண்ட் மாநிலம் நைனிடால் நகரில் உள்ள ஆடம்பர ரிசார்ட்டில் நடைபெற இருந்தது. திருமண நிகழ்ச்சியில் அவருடைய உறவினர்கள் கலந்து கொண்டனர்.

    மணமகள் தனது மெஹந்தி விழாவில் நடனமாடும்போது சரிந்து விழுந்தார். அவரை மீட்ட உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    திருமணம் நடைபெற இருந்த நிலையில் மணப்பெண் திடீரென உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே பெரும் அதிர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    ஸ்ரேயா ஜெயினின் தந்தை சஞ்சய் ஜெயின் குழந்தை நல மருத்துவராவார். டெல்லியில் உள்ள துவாரகாவில் ஸ்ரேயா ஸ்பெஷலிஸ்ட் கிளீனிக் ஒன்றை நடத்தி வருகிறார். மணமகனும் அவரது குடும்பத்தினரும் லக்னோவை சேர்ந்தவர்கள்.

    ஸ்ரேயா எம்பிஏ முடித்துள்ளார். மணமகன் லக்னோவில் ஒரு ஐடி நிறுவனத்தில் வேலை செய்கிறார்.

    திருமணத்தில் ஸ்ரேயா ஜெயின் மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததாக அவரது தந்தை தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பிம்டால் இன்ஸ்பெக்டர் ஜக்தீப் நேகி கூறுகையில்,

    சஞ்சய் ஜெயின் தனது மகளின் திருமணத்திற்காக ஆடம்பர ரிசார்ட்டை பதிவு செய்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது, சனிக்கிழமை மாலை நடைபெற்ற மெஹந்தி விழாவில் நடனமாடும்போது மணப்பெண் ஸ்ரேயா சரிந்து விழுந்து உயிரிழந்தார்.

    மருத்துவர்கள் அவர் இருதய நுரையீரல் சிக்கல்களால் இறந்திருக்கலாம் என்பதை உறுதிப்படுத்தினர்.

    மேலும் ஜெயின் குடும்பத்தினர் சட்ட நடவடிக்கைகளை கோரவில்லை என்றும் அவரது தகனத்தை நடத்தினார்கள் என்றும் அவர் கூறினார்.

    • ஓட்டுநரின் கட்டுப்பாட்டை வாகனம் இழந்திருக்கலாம் என சந்தேகம்.
    • உயிரிழந்தவர்கள் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக சென்றபோது விபத்து.

    உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பவுரி மாவட்டத்தின் வெவ்வேறு பகுதிகளில் இரண்டு கார்கள் பள்ளத்தாக்குகளில் விழுந்து மூன்று குழந்தைகள் உள்பட ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

    இதில், ஒரு விபத்து கிர்சு சௌபட்டா என்கிற பகுதியிலும், மற்றொன்று சத்புலி பகுதியில் உள்ள துத்ராகல் அருகேயும் நிகழ்ந்துள்ளது.

    இதுகுறித்து மாநில பேரிடர் மீட்புப் படையிலிருந்து (SDRF) பெறப்பட்ட தகவலை மேற்கோள் காட்டி, "கிர்சு சௌபட்டாவில் கார் சாலையை விட்டு விலகி 200 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தாக்கில் விழுந்ததில் ஏழு பேரில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக" அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மேலும், விபத்துகான காரணம் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை வாகனம் இழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

    பாதிக்கப்பட்டவர்களை மீட்க மாநில பேரிடர் மீட்புப் படையிலிருந்து பணியாளர்கள் மற்றும் போலீசார் விபத்து நடந்த இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இந்த விபத்தில் 3 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இறந்தவர்கள் ஸ்ரீஷ்டி நேகி (15), ஆருஷி (9), சௌமியா (5) மற்றும் டிரைவர் மன்வர் சிங் என்ற சோனு என அடையாளம் காணப்பட்டனர்.

    காயமடைந்தவர்களில் ஸ்ரீஷ்டியின் சகோதரி சாக்ஷி நேகி (14), சமீக்ஷா ராவத் (15) மற்றும் கன்ஹா (11) ஆகியோர் அடங்குவர்.

    சாக்ஷியும், சமீக்ஷாவும் சிறப்பு சிகிச்சைக்காக ரிஷிகேஷில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்திற்கு (எய்ம்ஸ்) விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மற்றொரு சம்பவத்தில், சத்புலி பகுதியில் உள்ள துத்ராகல் அருகே கார் 150 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தாக்கில் விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் 5 பேர் காயமடைந்தனர்.

    உயிரிழந்தவர்கள் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக சத்புலிக்கு சென்று கொண்டிருந்தனன் என்பது தெரியவந்தது.

    • ருத்ரபிரயாக்கில் நடந்த சாலை விபத்து குறித்து சோகமான செய்தி கிடைத்தது.
    • விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்.

    உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் என்ற இடத்தில் சுற்றுலா வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பத்ரிநாத் கோவிலுக்கு சென்ற சுற்றுலா வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானத்தில் 12 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் படுகாயமடைந்த பலர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விபத்து குறித்து தகவல் அறிந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக்கில் நடந்த சாலை விபத்து குறித்து சோகமான செய்தி கிடைத்தது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல். உள்ளூர் நிர்வாகம் மற்றும் SDRF குழுக்கள் நிவாரணம் மற்றும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. மேலும் காயமடைந்தவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும்" என்று கூறியுள்ளார்.

    இதனிடையே, உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது, ருத்ரபிரயாக் சாலை விபத்தில் பலத்த காயம் அடைந்த பயணிகள் விமானம் மூலம் ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். காயமடைந்தவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார்.

    • அல்க்நந்தா ஆற்றில் டெம்போ வேன் சென்றபோது பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
    • பக்தர்கள் பலர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் என்ற இடத்தில் சுற்றுலா வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த சுற்றுலா வேனில் பத்ரிநாத் கோவிலுக்கு 17 பேர் சென்றனர்.

    அல்க்நந்தா ஆற்று பகுதியில் சுற்றுலா வேன் சென்றபோது பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 12 பக்தர்கள் உயிரிழந்தனர். மற்றவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இந்த விபத்தில் பக்தர்கள் பலர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சுற்றுலா பயணிகள் ராப்டிங் எனப்படும் நீர் சாகச விளையாட்டுகளிலும் ஈடுபடுவார்கள்.
    • ஒரு பயனர், சுற்றுலா பயணிகளை இவ்வாறு நடத்தக்கூடாது எனபதிவிட்டிருந்தார்.

    இந்தியாவில், ஜூன் மாதம் சுற்றுலாப் பயணிகளின் பரபரப்பான மாதம். நீதிமன்றங்கள், கல்லூரிகள் மற்றும் பிற கல்வி வசதிகள் மூடப்பட்டுள்ளதால், பலர் நாடு முழுவதும் நன்கு அறியப்பட்ட இடங்களுக்குச் செல்வார்கள். குறிப்பாக ரிஷிகேஷ் ஆன்மீக சுற்றுலா செல்வது மிகவும் விரும்பும் சுற்றுலா தலமாகும். இங்கே, பார்வையாளர்கள் வெள்ளை நீர் ராஃப்டிங் போன்ற உற்சாகமான உல்லாசப் பயணங்களை மேற்கொள்கின்றனர். கோயில்களைக் கண்டறியலாம் மற்றும் கண்கவர் கங்கா ஆரத்தி போன்றவற்றில் பங்கேற்பார்கள்.

    இந்நிலையில் உத்தரகாண்டில் உள்ள ரிஷிகேஷில் ஏராளமான பிரசித்தி பெற்ற கோவில்கள் உள்ளன. மேலும் அங்குள்ள ஆற்றில் படகு சவாரி செல்லவும் ஏராளமான சுற்றுலா பயணிகள் செல்வது வழக்கம். அவ்வாறு செல்லும் சுற்றுலா பயணிகள் ராப்டிங் எனப்படும் நீர் சாகச விளையாட்டுகளிலும் ஈடுபடுவார்கள். இந்நிலையில் ரிஷிகேஷில் சுற்றுலா பயணிகளுக்கும் ராப்டிங் வழிகாட்டிகளுக்கும் இடையிலான மோதல் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.

    அதில் சுற்றுலா பயணிகளும், ராப்டிங் வழிகாட்டிகளும் படகை நகர்த்தி செல்ல பயன்படுத்தப்படும் துடுப்புகளால் ஒருவரை ஒருவர் தாக்கும் காட்சிகள் உள்ளன. வைரலான இந்த வீடியோ 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றது. வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். ஒரு பயனர், சுற்றுலா பயணிகளை இவ்வாறு நடத்தக்கூடாது எனபதிவிட்டிருந்தார். அதே நேரம் சில பயனர்கள், வழிகாட்டிகளுக்கு ஆதரவாகவும் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.

    • சாஸ்திரா நதியானது கடல் மட்டத்தில் இருந்து சுமார் 15,000 அடி உயரத்தில் கர்வால் பகுதியில் உள்ளது.
    • சாஸ்திரா நதிக்கு சென்றுகொண்டிருந்த 22 டிரக்கர்கள் மோசமான வானிலையில் வழியிலேயே சிக்கிக்கொண்டனர்

    உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் சாஸ்திரா தல் நதியானது கடல் மட்டத்தில் இருந்து சுமார் 15,000 அடி உயரத்தில் கர்வால் பகுதியில் உள்ளது. இங்கு மலையேற்றத்தை விரும்பும் டிரக்கர்கள் பயணிப்பது வழக்கம். இந்நிலையில் நேற்று மலையேற்றத்தில் ஈடுபட்ட 9 டிரக்கர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

     

    நேற்று  சாஸ்திரா தல் நதிக்கு சென்றுகொண்டிருந்த 22 டிரக்கர்கள் மோசமான வானிலையில் வழியிலேயே தொலைந்த நிலையில் அவர்களை தேடும் பணியில் மீட்புப் படை தீவிரமாக ஈடுபட்டிருந்தது. மோசமான வானிலை காரணமாக அந்த பகுதிகளில் ஹெலிகாப்டர் செல்வதற்கு வழி இல்லாததால் மீட்டுப்பணியில் தொய்வு ஏற்பட்டது.

    சிக்கிய 22 பேரில் 18 பேர் கர்நாடகாவை சேர்ந்தவர்கள் ஆவர். ஒருவர் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர். மற்ற மூவர் உள்ளூர் வழிகாட்டிகள் ஆவர். இந்நிலையில் காட்டு இலாகா அதிகாரிகளுடன் நேற்று முதல் மாநில மீட்புப்படையினர் நடத்திவந்த தேடுதலில் 9 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். எஞ்சிய 13 பேரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

     

    • பதர்களை ஏற்றிக்கொண்டு வந்த பஸ் நேற்று (மே 26) இரவு ஷாஜஹான்பூர் அருகே சாலையோர உணவகத்தில் நிறுத்தப்பட்டிருந்தது.
    • பேருந்தில் பயணம் செய்த பக்தர்கள் அனைவரும் உத்தர்காண்டின் சீதாபூர் மாவட்டத்தில் உள்ள ஜெதா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

    உத்தரகாண்டில் உள்ள பிரசித்தி பெற்ற பூர்ணகிரி கோயிலுக்கு பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்தின் மீது டிரக் மோதியதில் 11 உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பக்தர்களை ஏற்றிக்கொண்டு வந்த பஸ் நேற்று (மே 26) இரவு ஷாஜஹான்பூர் அருகே சாலையோர உணவகத்தில் நிறுத்தப்பட்டிருந்தது.

    அப்போது அந்த வழியாக போலஸ்ட் கற்களை ஏற்றிக்கொண்டு வந்த லாரி நிலை தடுமாறி பஸ் மீது கவிழ்ந்ததில் பஸ்ஸின் உள்ளே அமர்ந்திருந்த பக்தர்கள் 10 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

     

    இந்த விபத்தில் மேலும் 10 பேர் காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பேருந்தில் பயணம் செய்த பக்தர்கள் அனைவரும் உத்தரகாண்டின் சீதாபூர் மாவட்டத்தில் உள்ள ஜெதா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். விபத்து தொடர்பாக காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

     

     

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி மற்றும் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களுக்கு வருடந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவது வழக்கம்.
    • பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால், யாத்ரீகர்கள் அனைவரும் பதிவு செய்வதை உத்தரகாண்ட் அரசு கட்டாயமாக்கியுள்ளது.

    கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களுக்கு வருடந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். இந்த சார்தாம் புனித யாத்திரையானது யமுனோத்ரியிலிருந்து தொடங்கி, கங்கோத்ரி, கேதார்நாத் வழியாகச் சென்று இறுதியாக பத்ரிநாத்தில் முடிவடைகிறது.

     

    இந்த பயணம் பொதுவாக ஏப்ரல்-மே முதல் அக்டோபர்-நவம்பர் வரை மேற்கொள்ளப்படும். இந்த இடங்களுக்கு மிகவும் ஆபத்தான வழிகளிலும் மோசமான வானிலையிலும் பயணம் செய்ய வேண்டி உள்ளதால் சார்தாம் புனித யாத்திரை மிகுந்த கட்டுப்பாடுகளுடன் கடந்த மே 10 அன்று தொடங்கியது. பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால், யாத்ரீகர்கள் அனைவரும் பதிவு செய்வதை உத்தரகாண்ட் அரசு கட்டாயமாக்கியுள்ளது.

    இந்நிலையில் இன்று (மே 24) பக்தர்களை கேதார்நாத்துக்கு ஏற்றி வந்த ஹெலிகாப்டர் ஒன்று அந்தரத்தில் நிலைதடுமாறி சுழன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிர்சி ஹெலிபேடில் இருந்து கேதார்நாத் தாமுக்கு விமானியுடன் 6 பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்த கெஸ்ட்ரல் ஏவியேஷன் கோ நிறுவனத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக காலை 7.05 மணி அளவில் கேதார்நாத் தாம் ஹெலிபேடுக்கு அருகில் கட்டுப்பாட்டை இழந்ததால் சுமார் 100 மீட்டர் முன்னதாக அவசரமாக தரையிறக்கப்பட்டது.

    ஹெலிகாப்டரில் இருந்த 6 பயணிகளும் விமானியும் பத்திரமாக உள்ளனர். இந்நிலையில் ஹெலிகாப்டர் தரையிறங்க முடியாமல் அந்தரத்தில் சுழலும் வீடியோ வெளியாகியுள்ளது. ஹெலிபேடில் நின்றுகொண்டிருந்த நபர்கள் மீது மோதுவதுபோல் ஹெலிகாப்டர் மிகவும் அருகில் வந்ததால் அவர்கள் அங்கிருந்து பயத்தில் ஓடுவது வீடியோவில் பதிவாகியுள்ளது. 

     

    • பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதற்கு உத்தரகாண்ட் மாநில மகளிர் ஆணையம் கண்டம் தெரிவித்துள்ளது.
    • சம்பவத்தில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஆணையத்தின் தலைவர் மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    டேராடூன்:

    ரிஷிகேஷில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (எய்ம்ஸ்) பெண் டாக்டரை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நர்சிங் அதிகாரியை கைது செய்ய போலீஸ் வாகனம் அம்மருத்துவமனையின் 6-வது மாடியில் உள்ள வார்டுக்கு வந்தது. இதனால் நோயாளிகள் அதிர்ச்சியடைந்தனர். போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் வாகனம் செல்ல வழி செய்தனர். இச்சம்பவம் செவ்வாய்கிழமை நடந்த நிலையில் இதுதொடர்பான வீடியோ நேற்று முதல் சமூக வலைத்தளங்களில் ஆக்கிரமித்துள்ளது.

    இச்சம்பவம் தொடர்பான முழு விவரம் வருமாறு:-

    எய்ம்ஸ் ஆபரேஷன் தியேட்டரில் பணிபுரியும் நர்சிங் அதிகாரி சதீஷ் குமார் மீது எய்ம்ஸ் பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் செய்தார். இதுதொடர்பாக வழக்கு மட்டுமே போலீசார் பதிவு செய்ததாக கூறப்படுகிறது. மேற்கொண்டு நடவடிக்கை எடுக்காததால் கோபமடைந்த மருத்துவர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து சதீஷ் குமாரை கைது செய்ய முடிவு செய்த போலீசார், அவர் பணிபுரியும் மருத்துவமனையின் 6-வது மாடியில் உள்ள வார்டுக்கு போலீசார் வாகனத்துடன் நுழைந்தனர். இருபுறமும் படுக்கைகளில் நோயாளிகள் வரிசையாக படுத்து இருந்தனர். அவசர சிகிச்சை பிரிவில் நுழைந்த போலீஸ் வாகனத்தை கண்ட நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் என்ன நடக்கிறது என்பது புரியாமல் திகைத்தனர். இதையடுத்து போலீஸ் வாகனம் செல்ல வழி சீர்செய்யப்பட்டது. 6-வது மாடிக்கு சென்ற போலீசார் சதீஷ் குமாரை கைது செய்து வாகனத்தில் ஏற்றினர்.

    இச்சம்பவங்கள் தொடர்பாக 26 வினாடிகள் கொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

    மேலும் பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதற்கு உத்தரகாண்ட் மாநில மகளிர் ஆணையம் கண்டம் தெரிவித்துள்ளது. இச்சம்பவத்தில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஆணையத்தின் தலைவர் மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் எழுதியுள்ளார்.


    • பதஞ்சலியின் சோன் பப்டி தரமில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
    • உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி இருந்தனர்.

    2019-ம் ஆண்டு உத்தரகாண்ட் மாநிலம் பித்தோராகர் மாவட்டத்தில் உள்ள பெரினாக் பகுதியில் லீலா தார் பதக் என்பவருக்கு சொந்தமான சூப்பர் மார்க்கெட்டில் பதஞ்சலி நிறுவனத்தின் சோன் பப்டி தரமில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

    இதனையடுத்து உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்த உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டது. பின்னர் பதஞ்சலி நிறுவனத்துக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

    சோதிக்கப்பட்ட சோன் பப்டி தரமானது இல்லை என்று ஆய்வில் தெரியவந்தது. இதையடுத்து, கடை உரிமையாளர் லீலா தர் பதக், விநியோகஸ்தர் அஜய் ஜோஷி, பதஞ்சலி உதவி மேலாளர் அபிஷேக் குமார் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

    பதஞ்சலி நிறுவனத்தின் சோன் பப்டி தரமில்லை என்ற அறிக்கையைத் தொடர்ந்து அந்நிறுவனத்தின் உதவி மேலாளர் உள்பட 3 பேருக்கு உத்தரகாண்ட் பித்தோராகர் நீதிமன்றம் 6 மாத சிறைத் தண்டனை விதித்துள்ளது.

    மேலும், கடை உரிமையாளர் லீலா தர் பதக்குக்கு 5000 ரூபாயும் விநியோகஸ்தர் அஜய் ஜோஷிக்கு 10,000 ரூபாயும், பதஞ்சலி உதவி மேலாளர் அபிஷேக் குமாருக்கு 25,000 ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டது.

    • சார் தாம் யாத்திரை செல்ல கட்டாயம் முன்பதிவு செய்திருக்க வேண்டும்.
    • கோவிலில் இருந்து 50 மீட்டர் சுற்றளவில் வீடியோ, ரீல்ஸ்கள் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    டேராடூன்:

    இந்துக்களின் நான்கு புனித தலங்களான பத்ரிநாத், கேதர்நாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி ஆகிய தலங்களுக்குச் செல்லும் யாத்திரையானது சார் தாம் யாத்திரை என அழைக்கப்படுகிறது.

    இந்த ஆண்டிற்கான சார் தாம் யாத்திரை பயணம் கடந்த 10-ம் தேதி தொடங்கியது. யாத்திரை தொடங்கிய முதல் நாளில் கேதர்நாத் கோவிலில் சுமார் 29,000 பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததாக உத்தரகாண்ட் அரசு தெரிவித்தது.

    தொடர்ந்து நாடு முழுவதிலும் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சார் தாம் புனித யாத்திரை மேற்கொள்வதற்காக உத்தரகாண்ட் மாநிலத்திற்கு வருகை தருகின்றனர்.

    இதற்கிடையே, சார் தாம் யாத்திரை செல்வதற்கு கட்டாயமாக முன்பதிவு செய்திருக்க வேண்டும் என உத்தரகாண்ட் மாநில அரசு அறிவித்துள்ளது.

    இந்நிலையில், சார் தாம் யாத்திரைக்கான பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் வரும் 31-ம் தேதி வரை விஐபி தரிசனத்துக்கு மாநில அரசு தடையை நீட்டித்துள்ளது.

    இதுதொடர்பாக உத்தரகாண்ட் மாநில தலைமைச் செயலாளர் ராதா ரடோரி கூறுகையில், யாத்திரை செல்லும் பாதைகளில் போலீசார் சோதனைச் சாவடிகள் அமைத்து சோதனை மேற்கொள்வார்கள். புனித தலங்களில் இருந்து 50 மீட்டர் சுற்றளவில் வீடியோ மற்றும் ரீல்ஸ்கள் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

    • கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரும் உத்தரகாண்டில் உள்ள கிர் கார்பெட் தேசிய பூங்காவுக்கு சென்றுள்ளார்.
    • சமூகவலைதளங்களில் லட்சக்கணக்கானோரின் விருப்பத்தை பெற்று உள்ளது.

    கோடை காலத்தை மகிழ்ச்சியுடன் களிப்பதற்காக பலரும் சுற்றுலா செல்வதை விரும்புவர். அந்தவகையில் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரும் உத்தரகாண்டில் உள்ள கிர் கார்பெட் தேசிய பூங்காவுக்கு சென்றுள்ளார்.

    இதுகுறித்த புகைப்படங்களை அவர் ஜிம் கார்பெட் பூங்காவில் நடப்பது காட்டில் சவாரி செய்வது போல உள்ளது என்ற குறிப்புடன் சமூகவலைதளத்தில் பதிவிட்டு உள்ளார்.

    இது சமூகவலைதளங்களில் லட்சக்கணக்கானோரின் விருப்பத்தை பெற்று உள்ளது.

    ×