search icon
என் மலர்tooltip icon

    இஸ்ரேல்

    • மருத்துவமனையில் இருந்து வந்ததும் தனது திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகளை மேற்கொள்வதாக கூறி உள்ளார்.
    • நோயாளியின் இதயம் மிக மெதுவாகத் துடிக்கும்போது, இதயத்தை சீராக துடிக்கச் செய்வதற்காக பேஸ்மேக்கர் பொருத்தப்படுகிறது.

    இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் உடல்நிலை இன்று பாதிக்கப்பட்டதையடுத்து அவர் ரமத் கானில் உள்ள ஷேபா மருத்துவமனைக்கு சென்றார். அவரது இதயத்துடிப்பு சீரற்ற நிலையில் இருந்ததால் அவருக்கு உடனடியாக பேஸ்மேக்கர் கருவி பொருத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி ஆபரேசன் செய்து பேஸ்மேக்கர் பொருத்தப்பட்டது. ஆபரேசன் வெற்றிகரமாக முடிந்ததாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 

    இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் பிரதமர் நேதன்யாகு கொண்டு வந்த நீதித்துறை சீர்திருத்த திட்டங்களுக்கு எதிராக பொதுமக்கள் வீதியில் இறங்கி தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்த சீர்திருத்தம் ஜனநாயகத்தை சிதைக்கும் என அரசின் எதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர். பிரதமருக்கு எதிரான போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்துள்ளது.

    முன்னதாக நேதன்யாகு வெளியிட்ட வீடியோவில் எல்லாம் சிறப்பாக சென்றுகொண்டிருப்பதாகவும், மருத்துவமனையில் இருந்து வந்ததும் தனது திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகளை மேற்கொள்வதாகவும் கூறி உள்ளார். துணை பிரதமர் லெவின்தான் இந்த நீதித்துறை மாற்றத்தின் மூளையாக இருக்கிறார்.

    கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நீதித்துறை சீர்திருத்த திட்டம் தொடர்பான தீர்மானம் மீது பாராளுமன்றத்தில் நாளை வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இதனால் எதிர்ப்பாளர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளனர். நேற்று இரவு இஸ்ரேல் முழுவதும் பல்லாயிரக்கணக்கான மக்கள் தெருக்களில் இறங்கி போராட்டத்தி ஈடுபட்டனர். அதே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் ஜெருசலேமுக்குள் அணிவகுத்து சென்று பாராளுமன்றத்திற்கு அருகில் முகாமிட்டனர்.

    பாராளுமன்றம் சென்று தீர்மானம் மீது வாக்களிக்க ஏதுவாக சரியான நேரத்தில் பிரதமர் நேதன்யாகு மருத்துவமனையில் இருந்து டிஸ்சாஜ் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை காலையில் நடைபெறும் அமைச்சரவையின் வாராந்திர கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.

    நோயாளியின் இதயம் பலவீனமாகி மிக மெதுவாகத் துடிக்கும்போது மயக்கம் ஏற்படும். இதுபோன்ற சமயங்களில் இதயத்தை சீராக துடிக்கச் செய்வதற்காக பேஸ்மேக்கர் பொருத்தப்படுகிறது. இதய செயலிழப்புக்கு சிகிச்சையளிக்கவும் இதைப் பயன்படுத்தலாம். இதயத்திற்கு மின் துடிப்புகளை அனுப்புவதன் மூலம், இந்த சாதனம் ஒரு நபரின் இதயத் துடிப்பை சீரான நிலையில் வைத்திருக்கும். பேஸ்மேக்கர் பொருத்திக்கொண்ட நோயாளிகள், சில நாட்களுக்குள் வழக்கமான பணிகளை மேற்கொள்ளலாம். பேஸ்மேக்கர் பொருத்தும் செயல்முறைக்காக மருத்துவமனையில் குறைந்தது ஒருநாள் தங்கியிருக்க வேண்டும். பேஸ்மேக்கரின் செயல்பாடுகளை மருத்துவர்கள் கண்காணித்து உறுதி செய்தபின் வீடு திரும்பலாம்.

    • நீர்ச்சத்து குறைந்ததால் உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
    • சுட்டெரிக்கும் வெயிலில் தொப்பிகூட அணியாமல், தண்ணீர் குடிக்காமல் ஏரியில் நேரத்தை செலவிட்டதாக கூறினார்.

    இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் உடல்நிலை பாதிக்கப்பட்டதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    வடக்கு இஸ்ரேலின் பிரபலமான சுற்றுலா மையமான கலிலி கடலுக்கு நேதன்யாகு வெள்ளிக்கிழமை சென்றிருந்தார். கோடைகால வெப்ப அலை அதிகமாக இருந்த நிலையில், அங்கு சென்ற நேதன்யாகுவின் உடல் நிலை பாதிக்கப்பட்டிருக்கிறது.

    நேற்று அவருக்கு தலை சுற்றல் ஏற்பட்டதையடுத்து அவரை டெல் அவிவ் அருகே உள்ள ஷேபா மருத்துவ மையத்திற்கு சென்று பரிசோதனை செய்யும்படி அவரது மருத்துவர் அறிவுறுத்தியிருக்கிறார். இதையடுத்து மருத்துவமனைக்கு சென்ற அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், பரிசோதனைகள் தொடர்ந்து நடைபெறுவதாகவும் நேதன்யாகு அலவலகம் செய்தி வெளியிட்டிருக்கிறது. நீர்ச்சத்து குறைந்ததால் உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் முதற்கட்ட பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

    இதற்கிடையே, ஒரு வீடியோ பதிவில், சுட்டெரிக்கும் வெயிலில் நெதன்யாகு தனது மனைவியுடன் தொப்பிகூட அணியாமல், தண்ணீர் குடிக்காமல் ஏரியில் நேரத்தை செலவிட்டதாக கூறினார். எனினும் இது நல்லது அல்ல என்று கூறிய அவர், அனைவரும் வெயிலில் நிற்பதை குறைக்க வேண்டும் என்றும், நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

    பிரதமருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருப்பதால், வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் வாராந்திர இஸ்ரேலிய அமைச்சரவைக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இக்கூட்டம் திங்கட்கிழமை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அவன் தலை கழுத்தின் அடிப்பகுதியில் இருந்து கிட்டத்தட்ட முற்றிலுமாக பிரிந்துவிட்டது என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
    • சிறுவன் குணமடைந்திருப்பது ஒரு அதிசயம் என்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் நம்புகிறார்கள்.

    கார் மோதியதால் கழுத்து அறுபட்ட 12-வயது இஸ்ரேலி சிறுவனுக்கு இஸ்ரேல் மருத்துவர்கள் மிகவும் அசாதாரணமான மற்றும் சிக்கலான அறுவை சிகிச்சையை செய்து தலையை மீண்டும் கழுத்தில் வெற்றிகரமாக பொருத்தியுள்ளனர். அந்த சிறுவன் தற்போது நலமாக உள்ளான்.

    சுலைமான் ஹசன் எனப்படும் அந்த சிறுவன் சைக்கிள் ஓட்டிச் சென்றபோது அவன் மீது கார் மோதியிருக்கிறது. இதில் அவனது தலை மற்றும் கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. தசைநார்கள் கிழிந்து முதுகுத்தண்டின் மேற்பகுதியிலிருந்து அவரது மண்டை ஓடு பிரிந்து விட்டது. கிட்டத்தட்ட அவனது கழுத்து துண்டான நிலைதான் இருந்தது.

    விபத்து ஏற்பட்ட உடனேயே அச்சிறுவன் விமானத்தில் ஹடாசா மருத்துவ மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அவசர அறுவை சிகிச்சை பிரிவுக்கு அனுப்பப்பட்டான். மருத்துவர்கள் கடுமையாக முயற்சி செய்து மரணத்தின் விளிம்பில் இருந்து அந்த சிறுவனை காப்பாற்றி உள்ளனர்.

    அவன் தலை கழுத்தின் அடிப்பகுதியில் இருந்து கிட்டத்தட்ட முற்றிலுமாக பிரிந்துவிட்டது என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    சிகிச்சையை மேற்பார்வையிட்ட எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர். ஓஹட் எய்னவ் கூறியதாவது:

    இது பல மணிநேரம் நடந்த ஒரு அறுவை சிகிச்சை. சேதமடைந்த பகுதியில் புது பிளேட்டுகள் பொருத்த வேண்டியிருந்தது. எங்களின் திறமையாலும், புதுமையான தொழில்நுட்பத்தினாலும், எங்களால் சிறுவனை காப்பாற்ற முடிந்தது. மருத்துவர் குழு சிறுவனின் உயிரை காப்பாற்ற போராடியது.

    நரம்பு, உணர்திறன் மற்றும் அசைவில் எந்தவித செயலிழப்புகளும் இல்லாமல் அந்த சிறுவன் செயல்படுவதும், இந்த அரிய அறுவை சிகிச்சைக்கு பிறகு எந்தவித உதவியின்றி அவனால் நடக்க முடிவதும், ஒரு சாதாரண விஷயம் அல்ல. மிகவும் அரிதான அறுவை சிகிச்சைகளை செய்வதற்கு மிகவும் நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்கள் தேவை. இது ஒரு பொதுவான அறுவை சிகிச்சையும் அல்ல. குறிப்பாக குழந்தைகள் மற்றும் பதின் வயதினருக்கு இதை போன்ற அறுவை சிகிச்சையை செய்வது கடினம். இதை செய்வதற்கு ஒரு தேர்ந்த அறிவும் அனுபவமும் உள்ள அறுவை சிகிச்சை நிபுணர் குழு தேவை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சிறுவன் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு 50% மட்டுமே இருந்ததால், அவர் குணமடைந்திருப்பது ஒரு அதிசயம் என்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் நம்புகிறார்கள்.

    இந்த அறுவை சிகிச்சை கடந்த மாதம் நடந்திருக்கிறது. ஆனாலும் இம்மாதம் வரை மருத்துவர்கள் முடிவுகளை வெளியிடவில்லை.

    அந்த சிறுவன், கழுத்தை முதுகெலும்புடன் நேராக வைப்பதற்கான அசையாமல் இருப்பதற்கான பிரத்யேக சாதனம் (cervical splint) பொருத்தப்பட்டு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டான். அவன் உடல்நிலையை தொடர்ந்து கண்காணிப்பதாக மருத்துவமனை கூறியிருக்கிறது.

    அந்த சிறுவனின் தந்தை எந்த நேரத்திலும் மகனை விட்டு செல்லவில்லை. தனது ஒரே மகனை காப்பாற்றியதற்காக மருத்துவர்களுக்கும், மருத்துவமனை ஊழியர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

    • போராட்டம் தீவிரமடைந்ததால் அந்த மசோதாவை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக கடந்த மார்ச் மாதம் அறிவித்தார்.
    • இஸ்ரேல் பாராளுமன்றம் கூடிய முதல் அமர்வில் நீதிமன்ற அதிகாரங்களை கட்டுப்படுத்தும் மசோதா ஒப்புதலுக்கு முன்மொழியப்பட்டது.

    ஜெருசலேம்:

    இஸ்ரேலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இதற்கிடையே அங்கு நீதிமன்ற அதிகாரங்களை கட்டுப்படுத்தும் மசோதாவை அரசு சில மாதங்களுக்கு முன்பு கொண்டு வந்தது.

    இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இப்போராட்டம் தீவிரமடைந்ததால் அந்த மசோதாவை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக கடந்த மார்ச் மாதம் அறிவித்தார்.

    ஆனாலும் போராட்டங்கள் தொடர்ந்தபடி இருந்தது. இந்நிலையில் போராட்டங்களுக்கு மத்தியில் நீதிமன்ற அதிகாரங்களை குறைக்கும் மசோதா இஸ்ரேல் பாராளுமன்றத்தில் நிறைவேறியது.

    இஸ்ரேல் பாராளுமன்றம் கூடிய முதல் அமர்வில் நீதிமன்ற அதிகாரங்களை கட்டுப்படுத்தும் மசோதா ஒப்புதலுக்கு முன்மொழியப்பட்டது. இங்கு மசோதா மீது விவாதம் நடத்தப்பட்டது. பின்னர் நடந்த வாக்கெடுப்பில் மசோதாவுக்கு ஆதரவாக 64 வாக்குகள் கிடைத் தன. எதிராக 56 வாக்குகள் பதிவானது. இதற்காக மசோதா பாராளுமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

    முன்னதாக பாராளுமன்றம் முன்பு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கணக்கானவர்கள் போராட்டம் நடத்தினார்கள். அப்போது சில எதிர்ப்பாளர்கள் பாராளுமன்றத்துக்குள் நுழைந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி வெளியே இழுத்து வந்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

    நீதிமன்ற அதிகாரங்களை குறைக்கும் மசோதாவை திரும்பப்பெறக் கோரி போராட்டங்கள் நடந்து வந்த நிலையில் அம்மசோதாவை பாராளுமன்றம் ஏற்றுக் கொண்டதால் மக்களின் போராட்டம் தீவிரமடைய வாய்ப்பு உள்ளது.

    • இஸ்ரேல் ராணுவத்துக்கும், பாலஸ்தீனிய போராளி குழுவுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது.
    • துப்பாக்கி சண்டையில் இரண்டு போராளிகள் உள்பட 3 பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் ராணுவம் சுட்டுக்கொன்றது.

    ஜெருசேலம்:

    இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே மோதல் இருந்து வருகிறது. மேலும் இஸ்ரேல் மீது ஹமாய் அமைப்பினர் மற்றும் பாலஸ்தீனிய போராளி குழுக்கள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    பாலஸ்தீனியத்தின் மேற்கு கரையில் சில பகுதிகள் இஸ்ரேல் கட்டுப்பாட்டில் உள்ளது. அங்குள்ள ஜெனின் நகரில் ஆயுதக்குழுவினர் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து இஸ்ரேல் ராணுவம் கடந்த 4 நாட்களுக்கு அதிரடி சோதனை நடத்தினர். அப்போது இரு தரப்புக்கும் துப்பாக்கி சண்டை நடந்தது.

    டிரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பாலஸ்தீனியர்கள் 12 பேர் பலியானார்கள். இதற்கு பதிலடியாக இஸ்ரேலில் பாலஸ்தீனியர் ஒருவர் நடத்திய கார் மற்றும் கத்திக்குத்து தாக்குதலில் 8 பேர் காயம் அடைந்தனர். அதன்பின் ஜெனின் நகரில் இருந்து இஸ்ரேல் ராணுவம் வெளியேறியது.

    இதனால் பதட்டம் சற்று தணிந்து இருந்தது. இந்த நிலையில் மேற்கு கரையில் மீண்டும் சண்டை ஏற்பட்டது. நாப்லஸ் அருகே இஸ்ரேல் ராணுவத்துக்கும், பாலஸ்தீனிய போராளி குழுவுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. இந்த துப்பாக்கி சண்டையில் இரண்டு போராளிகள் உள்பட 3 பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் ராணுவம் சுட்டுக்கொன்றது. இதனால் மீண்டும் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.

    • பாலஸ்தீனத்தின் காசா முனையை ஹமாஸ் அமைப்பு ஆட்சி செய்கிறது.
    • இந்த அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத இயக்கமாக கருதுகிறது.

    ஜெனின்:

    இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் காசா முனையை ஹமாஸ் அமைப்பு ஆட்சி செய்கிறது. இந்த அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத இயக்கமாக கருதுகிறது.

    ஹமாஸ் அமைப்பை போன்று மேலும் சில ஆயுதமேந்திய குழுக்கள் காசா முனை, மேற்கு கரையில் செயல்பட்டு வருகின்றன. அதேவேளை பாலஸ்தீனத்திற்கு மேற்கு கரையின் சில பகுதிகள் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளது.

    இந்தப் பகுதிகளில் இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினருக்கும், பாலஸ்தீனிய ஆயுதக் குழுக்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.

    இந்நிலையில், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. நூற்றுக்கணக்கான வீரர்களை கோட்டைக்குள் அனுப்பியது.

    இந்தத் தாக்குதலில் குறைந்தது 8 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். மேலும் 12 பேர் படுகாயம் அடைந்தனர்.

    • பல இஸ்ரேலிய துருப்புக்கள் காயமடைந்திருப்பதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கிறது.
    • பாலஸ்தீனத் தாக்குதல்களில் இந்த ஆண்டு குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர்

    இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே 20-ம் நூற்றாண்டின் மத்தியிலிருந்து இன்று வரை, பல வருடங்களாக எல்லை பிரச்சினை காரணமாக போர் நடைபெற்று வருகிறது. இஸ்ரேல் மீது பாலஸ்தீனியர்கள் தாக்குதல்கள் நடத்துவதும், இதற்கெதிராக இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்துவதும் வழக்கமான ஒன்றாகி விட்டது.

    இன்று நடைபெற்ற ஒரு தாக்குதலில், மேற்குக்கரை (West Bank) நகரமான ஜெனின் தெருக்களில், இஸ்ரேல் ராணுவம் நடத்திய மிகப்பெரிய துப்பாக்கி சூட்டில் 3 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாகவும் மற்றும் 29 பேர் காயமடைந்ததாகவும், பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

    உயிரிழந்தவர்கள் கலீத் அசாசா (21), கஸ்ஸாம் அபு சரியா (29), மற்றும் அகமது சக்ர் (15) ஆகியோர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. 

    இந்த சம்பவம் குறித்து இஸ்ரேல் ராணுவம் உடனடியாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. இருப்பினும், இந்த சண்டையில் பல இஸ்ரேலிய துருப்புக்கள் காயமடைந்திருப்பதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கிறது.

    ஜெனின் நகரிலிருந்து வெளியிடப்பட்ட ஒரு வீடியோ காடசி, இஸ்ரேலிய ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று, ராணுவ நடவடிக்கையின்போது அப்பகுதியில் ஒரு ராக்கெட்டை ஏவுவதைக் காட்டுகிறது.

    ஜெனின் நகரம், வட மேற்குக்கரையில் உள்ள பாலஸ்தீனியத்தின் ஒரு முக்கிய நகரம். பாலீஸ்தீன போராளிகள் நிறைந்த பகுதி. இஸ்ரேலும் பாலஸ்தீனியர்களும் பல மாதங்களாக வன்முறையில் சிக்கித் தவிக்கின்றனர். குறிப்பாக, மேற்குக்கரை பகுதியில் நடந்த வன்முறைகளில் இந்த ஆண்டு, கிட்டத்தட்ட 120 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

    கடந்த ஆண்டு தொடக்கத்தில் பாலஸ்தீன வன்முறை வெடித்ததற்கு பதிலளிக்கும் விதமாக இஸ்ரேல் மேற்குக்கரையில் இரவு நேர திடீர் சோதனைகளை நடத்தி வருகிறது. அவ்வாறான காலங்களில், இஸ்ரேலியர்களுக்கு எதிரான பாலஸ்தீனத்தின் தாக்குதல்களும் அதிகரித்து வருகின்றது.

    இறந்தவர்களில் பெரும்பாலானோர் போராளிகள் என்று இஸ்ரேல் கூறுகிறது. ஆனால் ஊடுருவல்களை எதிர்த்து கல் எறிந்த இளைஞர்கள் மற்றும் மோதலில் ஈடுபடாத மற்றவர்களும் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

    இஸ்ரேலியர்களுக்கு எதிரான பாலஸ்தீனத் தாக்குதல்களில் இந்த ஆண்டு குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இஸ்ரேல் நாட்டில் வெயில் மண்டையை பிளக்கிறது.
    • இஸ்ரேல் அரசாங்கம் பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

    ஜெருசலேம் :

    இஸ்ரேல் நாட்டில் வெயில் மண்டையை பிளக்கிறது. அங்கு மத்திய மற்றும் தெற்கு பகுதிகளில் வெப்பநிலை 43 டிகிரி செல்சியசை தாண்டியது. இது இஸ்ரேல் வரலாற்றில் ஜூன் மாதத்தில் பதிவான அதிகபட்ச வெப்ப அளவாகும் என அந்த நாட்டின் வானிலை ஆய்வு மைய தரவுகள் கூறுகின்றன.

    இந்த வெப்பக்காற்று காரணமாக மின்துறையின் உள்கட்டமைப்பு சேதம், மின்சார தடைகள் போன்றவற்றை இஸ்ரேல் எதிர்கொண்டது. இதன் காரணமாக பல இடங்களில் தீ விபத்துகளும் ஏற்பட்டன. எனவே இதன் பாதிப்புகளில் இருந்து தப்பிக்க இஸ்ரேல் அரசாங்கம் பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

    அதன் ஒருபகுதியாக அங்கு குளிர்காய்வதற்காக தீ மூட்டுவதால் வெப்பநிலை மேலும் அதிகரித்ததையடுத்து அங்கு காலை 8 மணி முதல் நள்ளிரவு வரை தீ மூட்டுவதற்கு தடை விதித்து அந்த நாட்டின் தீயணைப்பு ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கிடையே வெப்ப அலை காரணமாக இஸ்ரேல் நாட்டில் சுமார் 220 திறந்தவெளி பகுதிகளில் தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு துறை தெரிவித்தது. இதனால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் இன்னும் தெரியவில்லை. எனினும் தீயணைப்பு துறையினரின் துரிதமான நடவடிக்கையால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டதாக இஸ்ரேல் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

    • பாலாட்டா அகதிகள் முகாமில் இன்று அதிகாலை இஸ்ரேல் ராணுவம் அதிரடி சோதனை நடத்தினர்.
    • 3 பாலஸ்தீனர்களை இஸ்ரேல் ராணுவம் சுட்டுக் கொன்றதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு இருந்து வருகிறது. இதில் இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் போராளி அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரை பகுதியில் உள்ள பாலாட்டா அகதிகள் முகாமில் இன்று அதிகாலை இஸ்ரேல் ராணுவம் அதிரடி சோதனை நடத்தினர்.

    அவர்கள் முகாமுக்குள் புல்டோசர் களுடன் புகுந்தனர். இதனால் இஸ்ரேல் ராணுவத்துக்கும்-பாலஸ்தீனர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் 3 பாலஸ்தீனர்களை இஸ்ரேல் ராணுவம் சுட்டுக் கொன்றதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.

    • இரு தரப்புக்கும் 5 நாட்களாக சண்டை நடந்து வந்த நிலையில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
    • சண்டையை முடிவுக்கு கொண்டு வர இஸ்ரேலுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.

    இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. இதற்கிடையே பாலஸ்தீனிய ஆயுத குழுவின் தலைவர் காதர் அதானென், கடந்த 2-ந் தேதி இஸ்ரேல் சிறையில் உயிரிழந்தார். இதையடுத்து காசா முனையில் இருந்து இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் ஆயுதக் குழுவை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் 30 பேர் உயிரிழந்தனர். இரு தரப்புக்கும் 5 நாட்களாக சண்டை நடந்து வந்த நிலையில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து காசாமுனை பகுதியில் உள்ள போராளி குழுவின் தலைவர் ஒருவர் கூறும்போது, 5 நாட்கள் கடுமையாக நடந்த சண்டையை முடிவுக்கு கொண்டு வர இஸ்ரேலுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. எகிப்தின் தொடர்ச்சியான முயற்சியால் இந்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இந்த முயற்சியை நாங்கள் பாராட்டுகிறோம் என்றார்.

    • காசா முனை மீது இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது.
    • இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையேயான பதற்றம் நீடித்து வருகிறது.

    ஜெருசலேம்:

    இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. பாலஸ்தீனத்தின் காசா முனையை ஆட்சி செய்யும் ஹமாஸ் அமைப்பினர் அடிக்கடி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துகிறார்கள். பதிலுக்கு இஸ்ரேலும் வான்வழி தாக்குதல் நடத்துகிறது.

    இஸ்ரேலின் ஆக்கிரமிப்பில் உள்ள மேற்கரை பகுதியில் சில நாட்களுக்கு முன்பு அல்-அக்சா மசூதிக்குள் இஸ்ரேல் போலீசார் நுழைந்து பாலஸ்தீனர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக ஹாஸ் போராளிகள் இஸ்ரேல் நகரங்கள் மீது குண்டுகளை வீசினர்.

    இதனால் காசா முனை மீது இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது. மேலும் லெபனானில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பினர் அங்கிருந்து இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தினர். இதனால் இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையேயான பதற்றம் நீடித்து வருகிறது.

    இந்நிலையில் சிரியாவில் இருந்து இஸ்ரேல் மீது இன்று அதிகாலை ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. 6-க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகள், இஸ்ரேலின் வடகிழக்கு பகுதி நோக்கி வீசப்பட்டது. இஸ்ரேல் வான்பாதுகாப்பு அமைப்பு நடுவானில் சுட்டு வீழ்த்தியது. ஒரே ஒரு ஏவுகணை மட்டும் இஸ்ரேலிய எல்லைக்குள் நுழைந்து கோலன் குன்றுகளில் உள்ள ஒரு வயலில் விழுந்தது.

    இதில் உயிரிழப்புகளோ அல்லது பொருட்சேதமோ ஏற்படவில்லை. இந்த தாக்குதலுக்கு உடனடியாக யாரும் பொறுப்பேற்கவில்லை. ஆனால் சிரியாவில் இருந்து செயல்பட்டு வரும் பயங்கரவாத குழு தாக்குதல் நடத்தி இருக்கலாம் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

    சிரியாவில் இருந்து ஏவுகணைகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பதிலடியாக இஸ்ரேல் பீரங்கி மூலம் தாக்குதல் நடத்தியது.

    இதற்கிடையே மேற்கு கரையில் இஸ்ரேலிய பாதுகாப்பு படைகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 20 வயது பாலஸ்தீனியர் கொல்லப்பட்டதாக பாலஸ்தீனிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இஸ்ரேல் ராணுவத்தினர் மீது கற்கள், வெடிபொருட்களை வீசிய பாலஸ்தீனியர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

    • இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையே நீண்டகாலமாக மோதல் இருந்து வருகிறது.
    • சுற்றுலா பயணிகள் மீது அவன் அதிவேகமாக காரை ஏற்றி பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்ட திடுக்கிடும் தகவலும் தெரியவந்தது.

    டெல்அவிவ்:

    இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையே நீண்டகாலமாக மோதல் இருந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜெருசேலத்தில் உள்ள மசூதி ஒன்றில் தொழுகைக்கு கூடியிருந்த முஸ்லீம்கள் மீது இஸ்ரேல் படையினர் தாக்குதல் நடத்தி விரட்டி விட்டனர்.

    இதனால் ஆத்திரம் அடைந்த பாலஸ்தீன பயங்கரவாத குழுக்கள் இஸ்ரேலை நோக்கி சரமாரியாக ராக்கெட் குண்டுகளை வீசினார்கள். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் படையினர் காசா நகரத்தின் மீதும், அண்டை நாடான தெற்கு லெபனானிலும் வான்வெளி தாக்குதலை நடத்தியது.

    குண்டுகளை வீசியதால் காசா நகர கட்டிடங்கள் தீப்பிடித்து எரிந்தது. இந்த நிலையில் மேற்கு கரை பகுதியில் காரில் சென்று கொண்டு இருந்த 2 பெண்களை மர்ம நபர்கள் சுட்டுக் கொன்றனர். இதனால் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

    இந்த பதற்றத்திற்கு மத்தியில் இஸ்ரேல் டெல்அவிவ் நகரில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.அங்குள்ள காப்மண் கடற்கரை பகுதி சிறந்த சுற்றுலா தலமாக திகழ்ந்து வருகிறது. தினமும் இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள். நேற்று இந்த கடலோர பகுதியில் பல்வேறு நாடுகளில் இருந்து வந்திருந்த சுற்றுலா பயணிகள் நடந்து சென்று கொண்டு இருந்தனர்.

    அப்போது அதிவேகமாக வந்த கார் சுற்றுலா பயணிகள் கூட்டத்தில் புகுந்தது. இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இது பற்றி அறிந்த போலீசார் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் சுற்றுலா பயணிகள் மீது காரை ஏற்றிய மர்ம நபரை பிடிக்க முயன்றனர்.

    அப்போது அவன் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டான். இதையடுத்து போலீசார் அவனை சுட்டுக் கொன்றனர். விசாரணையில் அவன் பயங்கரவாத கும்பலை சேர்ந்தவன் என்பது தெரியவந்தது.

    சுற்றுலா பயணிகள் மீது அவன் அதிவேகமாக காரை ஏற்றி பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்ட திடுக்கிடும் தகவலும் தெரியவந்தது. இந்த சம்பவம் இஸ்ரேலில் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ×