search icon
என் மலர்tooltip icon

    இத்தாலி

    • அறுவை சிகிச்சைக்கு பிறகு எனக்கு உடல்நிலை நன்றாக இருக்கிறது.
    • ஒவ்வொருவரும் தேவாலயத்திற்குள் தங்கள் சொந்த வழியில் கடவுளை சந்திக்கிறார்கள்.

    வாடிகன்:

    போப் பிரான்சிஸ் கடந்த ஜூன் மாதம் குடல் இறக்கத்துக்கான அறுவை சிகிச்சை செய்து கொண்டார். பின்னர் அவர் உடல்நலம் தேறினார்.

    இந்த நிலையில் போர்ச்சுக்கல் நாட்டில் நடந்த உலக இளையோர் தின கத்தோலிக்க விழாவில் பங்கேற்று விட்டு ரோம் திரும்பினார். அப்போது போப் பிரான்சிஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அறுவை சிகிச்சைக்கு பிறகு எனக்கு உடல்நிலை நன்றாக இருக்கிறது. தையலும் அகற்றப்பட்டு விட்டது. ஆனால் தசைகள் வலுவாக்கும் வரை இன்னும் 2 அல்லது 3 மாதங்கள் வயிற்றில் பட்டை அணிந்திருக்க வேண்டும் என் டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர். ஒரே பாலின ஈர்ப்பு கொண்டவர்களையும் கடவுள் நேசிக்கிறார். ஓரினசேர்க்கையாளர்கள் உள்பட அனைவருக்கும் கத்தோலிக்க தேவாலயம் திறந்து இருக்கும். தேவாலயத்தில் ஒரே பாலின திருமணத்தையோ அல்லது ஒரே பாலின ஜோடிகளுக்கு ஆசீர்வாதங்களையோ அனுமதிப்பது இல்லை. சட்டத்தின்படி அவர்கள் ஒரு சில சடங்குகளில் பங்கேற்க முடியாது. விதிகளுக்கு உட்பட்டு அவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். ஒவ்வொருவரும் தேவாலயத்திற்குள் தங்கள் சொந்த வழியில் கடவுளை சந்திக்கிறார்கள்.

    இவ்வாறு போப் பிரான்சிஸ் கூறினார். பின்னர் அவர் வாடிகன் புறப்பட்டு சென்றார்.

    • சம்பிரதாயமான நடைமுறையாக இரு போட்டியாளர்களும் போட்டிக்கு பிறகு கைகுலுக்கி கொள்ள வேண்டும்.
    • இனி வரவிருக்கும் அணிகளுக்கான ஆட்டங்களிலும் ஓல்கா பங்கு பெற இயலாது.

    இத்தாலியில் உள்ள மிலன் நகரில், உலக பென்சிங் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது.

    நேற்று நடைபெற்ற போட்டியில் 4 முறை ஒலிம்பிக் பட்டம் வென்ற உக்ரைன் நாட்டு வீராங்கனை ஓல்கா கர்லான், ஒற்றையர் ஆட்டத்தில் ரஷிய வீராங்கனை அன்னா ஸ்மர்னோவா என்பவருடன் மோதினார்.

    ரஷிய- உக்ரைன் போர் 500 நாட்களுக்கும் மேல் நடைபெறும் பின்னணியில், இரு நாடுகளுக்கிடையேயான இந்த போட்டி மிகுந்த ஆர்வமுடன் பார்க்கப்பட்டது. இப்போட்டியில் உக்ரைன் வீராங்கனை ஓல்கா வெற்றி பெற்றார்.

    இந்த ஆட்டத்தின் சம்பிரதாயமான நடைமுறையாக இரு போட்டியாளர்களும் போட்டிக்கு பிறகு கைகுலுக்கி கொள்ள வேண்டும். ஆனால், ஓல்கா இதனை செய்ய மறுத்தார். இதற்கு பதிலாக தனது கத்தியால் அன்னாவின் கத்தியை தொட்டு கொள்ள முன்வந்தார்.

    அவரது இந்த நடத்தையால் இப்போட்டியிலிருந்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

    ரஷிய வீராங்கனை அன்னா, விளையாட்டு நடந்த இடத்திலேயே சுமார் அரை மணி நேரம் நின்றிருந்து அதிகாரிகளுடன் பேசிவிட்டு புறப்பட்டார்.

    பென்சிங் விளையாட்டில் இந்த கைகுலுக்கல் ஒரு கட்டாய நடைமுறையாகும். இதற்கு கட்டுப்பட மறுப்பவர்களுக்கு கருப்பு அட்டை (Black Card) வழங்கப்பட்டு, தகுதி நீக்க நடவடிக்கைக்கு ஆளாக வேண்டியிருக்கும். தற்போது கருப்பு அட்டை முறைப்படி ஒற்றையர் ஆட்டத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஓல்கா, இனி வரவிருக்கும் அணிகளுக்கான ஆட்டங்களிலும் பங்கு பெற இயலாது.

    "இந்த முடிவிற்கெதிராக நாங்கள் மேல்முறையீடு செய்வோம். ஏனெனில் தீர்ப்பளித்த நடுவர், நேரடியாக கருப்பு அட்டை கொடுக்கவில்லை" என ஓல்காவின் நடத்தையை ஆதரிக்கும் உக்ரைன் நாட்டு பென்சிங் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

    "நேர்மையான போட்டியில் தோல்வியடைந்த அன்னா, கைகுலுக்கல் நிகழ்ச்சியை வைத்து ஒரு மட்டமான விளையாட்டில் ஈடுபடுகிறார். இவரை போன்றுதான் ரஷிய ராணுவமும் நடந்து கொள்கிறது," என உக்ரைனின் வெளியுறவு துறை அமைச்சர் கூறினார்.

    சர்வதேச பென்சிங் கூட்டமைப்பு (FIE) இதுகுறித்து உடனடியாக கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

    • கப்பலிலிருந்து பெரிய பார்சல்கள் கடலில் வீசி எறியப்படுவதை ஒரு கண்காணிப்பு விமானம் கண்டறிந்துள்ளது.
    • போதைப்பொருள் கடத்தலை தடுத்த காவல்துறையினரை சிசிலி பிராந்திய தலைவர் வெகுவாக பாராட்டியுள்ளார்.

    இத்தாலியின் சிசிலி நகரின் தெற்கு கடல் பகுதியில் 5300 கிலோ (5.3 tons) கோகைன் போதைப் பொருளை ஒரு கப்பலிலிருந்து இன்னொரு கப்பலுக்கு மாற்றும் போது காவல்துறை கைப்பற்றியது. அவற்றின் மதிப்பு சுமார் ரூ.7700 கோடி ($946 million) ஆகும்.

    தென் அமெரிக்காவிலிருந்து பயணிக்கும் ஒரு கப்பலை காவல்துறை கண்காணித்து வந்தது. அப்போது சிசிலி ஜலசந்தி பகுதியில் இழுவை படகின் மூலம் எடுத்து செல்வதற்காக அந்த கப்பலிலிருந்து பெரிய பார்சல்கள் கடலில் வீசி எறியப்படுவதை ஒரு கண்காணிப்பு விமானம் கண்டறிந்துள்ளது.

    உடனே அந்த இழுவை படகை நிறுத்தி பரிசோதித்தபோது அதில் சில தடுப்புகள் அமைக்கப்பட்ட பகுதிகளில் பெருமளவில் போதை மருந்து மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர்.

    இச்சம்பவம் தொடர்பாக துனிசியாவை சேர்ந்த இருவர், ஒரு இத்தாலியர், ஒரு அல்பேனியர் மற்றும் ஒரு பிரெஞ்ச் நாட்டவர் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

    போதைப்பொருள் கடத்தலை தடுத்த காவல்துறையினரை சிசிலி பிராந்திய தலைவர் ரினாடோ ஸ்கிஃபானி வெகுவாக பாராட்டியுள்ளார்.

    "போதைப் பொருள் என்பது நமது சமூகத்தின் கேடு. நம்பிக்கைகளை சிதைத்து குடும்பங்களை அழித்து மரணத்தை விதைக்கும் இரக்கமற்ற நபர்களால் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுகிறது" எனவும் அவர் கூறியுள்ளார். 

    • உலகளவில் இதுவரை இல்லாத வகையில் வெப்பம் அதிகரிப்பு
    • இத்தாலி, கிரீஸ், ஸ்பெயின் நாடுகள் அதிக அளவில் பாதிப்பு

    முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ஐரோப்பிய கண்டத்திலுள்ள பல நாடுகள், அதிகரித்து வரும் வெயிலின் தாக்கத்தால் திணறி வருகின்றன. அங்கு இயல்பு வாழ்க்கை முடங்கி வருகிறது.

    வட இத்தாலியில் 47 டிகிரி செல்சியஸ் (116.6 டிகிரி ஃபாரன்ஹீட்) வெப்பம் பதிவாகியுள்ளது. கிரீஸ் நாட்டில் காட்டுத்தீ பரவி வருகிறது. ஸ்பெயின் நாட்டில் கடலோர பகுதிகளில் வெப்பம் இதுவரை இல்லாத அளவை தொட்டிருக்கிறது.

    இத்தாலியின் சிசிலி, ட்ரப்பானி, சியாக்கா மற்றும் சர்டீனியா பகுதிகளில் வெப்பம் 46 டிகிரிக்கு மேல் பதிவானது. ரோம் நகரில் அதிகரித்த ஏர்கண்டிஷனர்களின் பயன்பாட்டால், மின்சார 'கிரிட்'களில் ஏற்பட்ட அழுத்தத்தின் காரணமாக மின்சார வினியோகம் நேற்று முன்தினம் நிறுத்தி வைக்கப்படும் நிலை உருவானது.

    படுவா நகரில் ஒரு முதியவரும், மிலன் நகரில் ஒரு 44-வயது நபரும் வெப்பம் தாங்காமல் உயிரிழந்தனர்.

    இச்சம்பவங்களுக்கு பிறகு அதிகரித்து வரும் வெப்பம் குறித்த அச்சம் மக்களிடையே அதிகரித்துள்ளது.

    இத்தாலியில் தொழிற்சாலை பணியாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். கார் மற்றும் பேட்டரி தொழிற்சாலைகளில் பணியாற்றூம் பெரும்பாலான தொழிலாளர்கள் வெப்பம் தாக்குப்பிடிக்க முடியாமல் பணிக்கு செல்வதை தவிர்க்கின்றனர்.

    ஸ்டெலாண்டிஸ் எனும் கார் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். வேலை செய்யும் தொழிலாளர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளதால் மேக்னட்டி மரேலி தொழிற்சாலையில் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர்.

    விவசாயம், கட்டிட துறை போன்ற துறைகளிலும் பாதிப்பு அதிகம் உள்ளது. மார்சிகா, அப்ருஸோ ஆகிய இடங்களில் பண்ணை வேலையாட்கள் வெப்பத்தை தவிர்க்கும் விதமாக அதிகாலை 4 மணியிலிருந்து 11 மணி வரை மட்டுமே வேலை செய்கின்றனர்.

    வெப்பத்தின் தாக்குதலை சமாளிக்கும் வகையில் மக்களுக்கு உதவ ஒரு தகவல் தொடர்பு கட்டுப்பாட்டு அறை நிறுவப்படும் என அறிவித்துள்ள இத்தாலியின் சுகாதாரத்துறை அமைச்சர் ஒரேஸியோ ஷில்லாஸி "அதிகளவில் நீர் அருந்துவதும், காய்கறிகள் மற்றும் பழங்களை உண்பதும், கொழுப்புச்சத்து நிறைந்த உணவையும் மதுவையும் தவிர்ப்பதும், வெப்பத்திலிருந்து காத்து கொள்ள உதவும் என்றும் குழந்தைகள், முதியோர்கள், மற்றும் சுலபமாக பாதிக்கப்படக்கூடிய உடல்நிலை உடையவர்கள் ஆகியோரை காக்க சிறப்பு கவனம் செலுத்தப்படும்" என்றும் தெரிவித்தார்.

    மற்றொரு ஐரோப்பிய நாடான கிரீஸ் நாட்டில் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட அக்ரோபொலிஸ் சுற்றுலா தலத்தில் சென்ற வார இறுதியிலிருந்தே அதிக வெப்பம் காரணமாக அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. அங்கு பணியாற்றுபவர்கள் 4 மணி நேரம் மட்டுமே வேலை செய்கின்றனர்.

    ஏதென்ஸ் நகரை சுற்றி ஏற்பட்டிருக்கும் காட்டுத்தீ பரவலை தடுக்க இத்தாலி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் உதவி வருகின்றன.

    ஸ்பெயின் நாட்டின் கடலோர பகுதிகளில் கடற்கரை நீரின் வெப்ப அளவு 24.6 டிகிரி செல்சியஸ் அளவை தொட்டுள்ளது. இது இன்னும் அதிகரிக்கப்படலாம் என அந்நாட்டு வானிலை ஆய்வாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

    • பொது மக்களும், சுற்றுலா பயணிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
    • விமான நிலையங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட உள்நாட்டு, வெளிநாட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

    ரோம்:

    இத்தாலியில் ஊதிய உயர்வு கோரியும், ஒப்பந்தத்தை நீட்டிக்க வலியுறுத்தியும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமான நிலைய ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

    இதனால் ரோம், வெனிஸ், மிலன் நகரங்களின் விமான நிலையங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட உள்நாட்டு, வெளிநாட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

    இதனால் பொது மக்களும், சுற்றுலா பயணிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். கோடை விடுமுறை காலத்தில் சுற்றுலா பயணிகள் அதிகமாக கூடும் ரோம், வெனிஸ் போன்ற நகரங்களில் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளதால், சுற்றுலா பயணிகளும் சுற்றுலாவை நம்பி தொழில் செய்பவர்களும் சோகத்தில் உள்ளனர்.

    இதற்கிடையே இத்தாலியில் 2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் விமானத்தில் பயணம் செய்ய முடியாமல் தவித்து வருகிறார்கள்.

    ரோம் நகரில் மட்டும் 200-க்கும் மேற்பட்ட விமானங்களும் மிலன் நகரில் 150-க்கும் மேற்பட்ட விமானங்களும் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து அந்நாட்டின் போக்குவரத்து துறை மந்திரி கூறும்போது, விமான நிலைய பணியாளர்கள் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகளையும், மக்களையும் சிரமப்படுத்தாமல் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்றார்.

    • குற்றத்திற்கான அளவுகோல்களை பூர்த்தி செய்யவில்லை என்று கூறிய நீதிபதி, தனது தீர்ப்பை நியாயப்படுத்தினார்.
    • சமூக வலைத்தளங்களில் தீர்ப்பை விமர்சனம் செய்தும், கண்டனம் தெரிவித்தும் கருத்துக்களை பதிவிட்டவண்ணம் உள்ளனர்.

    இத்தாலியில் பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபரை நீதிமன்றம் விடுதலை செய்தது. விடுதலை செய்ததற்கு நீதிபதி சொன்ன காரணம் அனைவரையும் அதிருப்தியடைய வைத்துள்ளது.

    ரோம் நகரில் உள்ள பள்ளியில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 17 வயது சிறுமியை அந்த பள்ளியின் காப்பாளர் பாலியல் தொந்தரவு செய்துள்ளார். அந்த சிறுமி படிக்கட்டில் ஏறிக்கொண்டிருந்தபோது பின்னால் இருந்து அவரது பேண்டை பிடித்து இழுத்ததுடன், பின்பகுதியை தொட்டு, உள்ளாடையையும் பிடித்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பான வழக்கு விசாரணையின்போது அந்த நபர், சிறுமியை பிடித்து இழுத்ததை ஒப்புக்கொண்டார். ஆனால், கேலியாக இவ்வாறு செய்தேன் என கூலாக கூறியிருக்கிறார்.

    சிறுமியிடம் தவறாக நடந்துகொண்ட காப்பாளருக்கு மூன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கவேண்டும் என அரசுத் தரப்பு வழக்கறிஞர் வாதாடினார்.

    எனினும் விசாரணை முடிந்து சமீபத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டபோது குற்றம்சாட்டப்பட்ட காப்பாளரை விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார். அதற்கு அவர் சொன்ன காரணம் வினோதமாக இருந்தது. அதாவது இந்த சம்பவம் 10 வினாடிகளுக்கும் குறைவாகவே நடந்ததாம். 10 வினாடிகளுக்கும் குறைவான நேரமே நடந்ததால், குற்றத்திற்கான அளவுகோல்களை பூர்த்தி செய்யவில்லை என்று கூறிய நீதிபதி, தனது தீர்ப்பை நியாயப்படுத்தினார்.

    இந்த தீர்ப்பு இத்தாலி மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. சமூக வலைத்தளங்களில் இந்த தீர்ப்பை விமர்சனம் செய்தும், கண்டனம் தெரிவித்தும் கருத்துக்களை பதிவிட்டவண்ணம் உள்ளனர். சிலர் கேமராவை அமைதியாக உற்றுப் பார்த்தும், 10 வினாடிகள் தங்கள் அந்தரங்க பகுதிகளை தொட்டுப் பார்த்தும் வீடியோக்களை வெளியிடத் தொடங்கினர். இன்ஸ்டாகிராம், டிக்டாக் போன்ற தளங்களில் "brief groping" அல்லது "10 seconds" போன்ற ஹேஷ்டேக்குகளை பயன்படுத்தி தாறுமாறாக கருத்துக்களை பதிவிட, இந்த விவகாரம் டிரெண்ட் ஆனது.

    • இத்தாலி முன்னாள் பிரதமர் பெர்லுஸ்கோனி தனது 86 வயதில் காலமானார்
    • தனது சொத்துக்களை காதலி உள்பட பலருக்கு உயில் எழுதி வைத்துள்ளார்

    ஐரோப்பிய நாடான இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி. இவர் கடந்த மாதம் காலமானார். இறந்தபின் அவரது உயில் வாசிக்கப்பட்டபோது, அவர் தனது சொத்துக்களில் ரூ. 905,86,54,868 (100 மில்லியன் யூரோ) தனது காதலியான மார்டா ஃபாசினா (33) என்பவருக்கு விட்டுச் சென்றிருப்பது தெரிய வந்துள்ளது.

    பெர்லுஸ்கோனியின் சொத்து மதிப்பு, இந்திய பண மதிப்பில் சுமார் 54 ஆயிரம் கோடி ரூபாய் (6 பில்லியன் யூரோ) என மதிப்பிடப்பட்டுள்ளது.

    பெர்லுஸ்கோனி தொடங்கிய ஃபோர்சா இடாலியா (Forza Italia) கட்சியின் துணைத் தலைவரான ஃபாசினாவுக்கு, மார்ச் 2020-ல் பெர்லுஸ்கோனியுடன் தொடர்பு ஏற்பட்டது.

    இருவரும் சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொள்ளவில்லை என்றாலும், பெர்லுஸ்கோனி மரணப்படுக்கையில் அவரை தனது மனைவி என்று குறிப்பிட்டிருந்தார்.

    மேலும், 2018 பொதுத்தேர்தலிலிருந்து இத்தாலிய நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார்.

    பெர்லுஸ்கோனியின் சொத்துக்கள் மற்றும் நிறுவனங்கள் அவரது இரண்டு மூத்த குழந்தைகளான மெரினா மற்றும் பியர் சில்வியோவால் நிர்வகிக்கப்படும். நிர்வாகப் பதவிகளை வகிக்கும் இவர்கள் ஏற்கனவே குடும்ப பங்கில் 53% பங்கு வைத்திருக்கின்றனர்.

    இது மட்டுமன்றி தனது சகோதரர் பாவ்லோ என்பவருக்கு சுமார் 900 கோடி ரூபாய் (100 மில்லியன் யூரோ) மற்றும் அவரது கட்சியை சேர்ந்த செனட்டரும், மாஃபியா கும்பலுடனான தொடர்புக்காக சிறைவாசம் அனுபவித்தவருமான மார்செல்லோ டெல்'உட்ரி என்பவருக்கு சுமார் 270 கோடி ரூபாய் (30 மில்லியன் யூரோ) விட்டுச்சென்றிருக்கிறார்.

    ஊடக அதிபர், தொழிலதிபர் மற்றும் பிரதம மந்திரி என பல தசாப்தங்களாக இத்தாலிய பொது வாழ்வில் ஆதிக்கம் செலுத்திய கோடீசுவரரான பெர்லுஸ்கோனி, ஜூன் 12 அன்று தனது 86-வது வயதில் ரத்த புற்று நோயினால் காலமானார்.

    அவரது உயில் சென்ற வாரம் அவரது ஐந்து குழந்தைகள் மற்றும் பிற சாட்சிகள் முன்னிலையில் வாசிக்கப்பட்டது. உயிலில், அவர், "எனது மொத்த சொத்தில், பங்குகள் (Share) அனைத்தையும் எனது குழந்தைகள் மெரினா மற்றும் பியர் சில்வியோ ஆகியோருக்கு சமமாக விட்டுச்செல்கிறேன்.

    மீதமுள்ள அனைத்தையும் எனது 5 குழந்தைகளான மெரினா, பியர் சில்வியோ, பார்பரா, எலியோனோரா மற்றும் லூய்கி ஆகியோருக்கு சமமாக கொடுக்கிறேன். மிகுந்த அன்புடன், உங்கள் தந்தை" என எழுதியிருப்பதாக செய்திகள் கூறுகின்றன.

    பெர்லுஸ்கோனி 3 முறை இத்தாலியின் பிரதமராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • காரில் உள்ளே டிரைவர் படுத்துக்கொண்டு இயக்குவது வீடியோவில் தெரிகிறது.
    • காரின் மேல் பகுதி மட்டும் வெளியே தெரியும்.

    தொழில்நுட்பம் மிகவும் வளர்ந்து விட்ட இந்த காலக்கட்டத்தில் கார் தயாரிப்பிலும் பல்வேறு புதுமைகளை செய்து வருகிறார்கள். அந்த வகையில் இத்தாலியில் உருவாக்கப்பட்டுள்ள ஒரு கார் தொடர்பான வீடியோ டுவிட்டரில் வெளியாகி பயனர்களை வியப்படைய செய்துள்ளது.

    அந்த காரில் டயர்கள் கிடையாது. தரையில் பாம்பு போல ஊர்ந்து செல்லும் இந்த கார் உலகின் மிகச்சிறிய கார் என சமூக வலைத்தள பயனர்களால் அழைக்கப்டுகிறது. இந்த காரை உருவாக்கும் முழு செயல்முறையும் யூடியூப் சேனலான Carmagheddon-ல் காட்டப்பட்டுள்ளது. இந்த காரில் உள்ளே டிரைவர் படுத்துக்கொண்டு இயக்குவது வீடியோவில் தெரிகிறது.

    காரின் மேல் பகுதி மட்டும் வெளியே தெரியும். ஆனால் கண்ணாடியின் கீழ் பகுதி, என்ஜின் இருக்கும் முன் பகுதி மற்றும் பொருட்கள் வைக்கப்படும் பின் பகுதி என அனைத்தும் காணவில்லை. மேலும் டயர் கூட இல்லாமல் இயங்கும் இந்த காரை மக்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்க்கும் காட்சிகள் வீடியோவில் உள்ளது. இந்த கார் எப்படி இயங்குகிறது என்பது குறித்தும் வீடியோவில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த காரை வடிமைத்த வாலிபர்களுக்கு சமூக வலைத்தள பயனர்கள் பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

    • போப் பிரான்சிஸ் ஜெமெல்லி ஆஸ்பத்திரியில் கடந்த 7-ந் தேதி அனுமதிக்கப்பட்டார்.
    • செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் தனது வழக்கமான ஞாயிறு உரையை நிகழ்த்தினார்.

    வாடிகன்சிட்டி :

    குடல் அடைப்புகளாலும், வலியாலும் அவதிப்பட்டு வந்த போப் பிரான்சிஸ் (வயது 86) ரோமில் உள்ள ஜெமெல்லி ஆஸ்பத்திரியில் கடந்த 7-ந் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு குடல் அறுவை சிகிச்சை நடந்தது.

    இந்த அறுவை சிகிச்சைக்கு பின் வேகமாக குணம் அடைந்த அவர், கடந்த 16-ந் தேதி ஆஸ்பத்திரியில் இருந்து வாடிகன் திரும்பினார். அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்ததால், நேற்று வரை அவரது நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டிருந்தன. எனினும் நேற்று அவர் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். குறிப்பாக செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் தனது வழக்கமான ஞாயிறு உரையை நிகழ்த்தினார். இதில் கலந்து கொண்ட ஏராளமானோர், போப் ஆண்டவரை கைதட்டி வாழ்த்தினர். அப்போது ஆஸ்பத்திரியில் இருந்தபோது தனக்கு உதவிய மற்றும் தனக்காக பிரார்த்தனை செய்தவர்களுக்கு போப் ஆண்டவர் நன்றி தெரிவித்தார்.

    போப் ஆண்டவர் தனது உரையில் கிரீஸ் நாட்டு கடற்பகுதியில் சமீபத்தில் நடந்த படகு விபத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்தார். மேலும் உகாண்டாவில் பள்ளிக்கூடத்தில் நடந்த தாக்குதலையும் கண்டித்தார்.

    • போப் பிரான்சிஸ் குடல் அடைப்பு மற்றும் வலியால் அவதிப்பட்டு வந்தார்.
    • அவருக்கு ஆபரேஷன் செய்யப்பட்டது.

    ரோம் :

    போப் பிரான்சிஸ் குடல் அடைப்பு மற்றும் வலியால் அவதிப்பட்டு வந்தார். எனவே கடந்த 7-ந் தேதி இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள ஜெமெல்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆபரேஷன் செய்யப்பட்டது. இந்த ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்த நிலையில் அவரது உடல்நலம் வேகமாக தேறி வருவதாக டாக்டர்கள் கூறினர்.

    இந்தநிலையில் ஆபரேஷன் முடிந்த 9 நாட்களுக்கு பிறகு நேற்று அவர் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வாடிகன் திரும்பினார். அவர் முன்பை விட தற்போது நலமுடன் உள்ளதாக அவருக்கு சிகிச்சையளித்த டாக்டர் செர்ஜியோ அல்ச்பீரி தெரிவித்துள்ளார்.

    • போப் பிரான்சிஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை சந்தித்து பேசும் புகைப்படத்தை வாடிகன் வெளியிட்டுள்ளது.
    • ஆகஸ்ட் 2ம் தேதி முதல் ஆகஸ்ட் 6ம் தேதி வரை உலக இளைஞர்கள் தினத்தை முன்னிட்டு போர்ச்சுகல் செல்கிறார்.

    போப் பிரான்சிஸ் (வயது 86) குடல் அடைப்புகளாலும், வலியாலும் அவதிப்பட்டு வந்தார். எனவே அவர் ரோமில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் கடந்த 7ம் தேதி அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு அவருக்கு 3 மணி நேரம் குடல் அறுவை சிகிச்சை நடந்தது. அந்த அறுவை சிகிச்சை வெற்றி பெற்றதாகவும், அவர் வேகமாக குணம் அடைந்து வருகிறார் என்றும் வாடிகன் அறிவித்தது.

    போப் ஆண்டவரின் உடல்நிலை குறித்த விவரங்களை நேற்று செய்தியாளர்களிடம் வெளியிட்ட வாடிகன் செய்தி தொடர்பாளர் மாட்டியோ புரூனி, போப் பிரான்சிஸ் இரவில் நன்றாக ஓய்வெடுத்ததாகவும், பகலில் பணிகளை மேற்கொண்டதாகவும் கூறினார். சிக்கல்கள் எதுவுமின்றி போப் ஆண்டவர் தொடர்ந்து உடல் நலம் தேறி வருவதாக கூறிய புரூனி, மருத்துவமனையில் இருந்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவது குறித்து வருகிற நாட்களில் முடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

    இந்நிலையில், போப் பிரான்சிஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை சந்தித்து பேசும் புகைப்படத்தை வாடிகன் வெளியிட்டுள்ளது.

    அதில், போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அறையின் அருகே உள்ள குழந்தைகளுக்கான புற்றுநோய் வார்டை வீல் சேரில் சென்று பார்வையிட்டு குழந்தைகளிடம் பேசியது தெரிந்தது.

    டிஸ்சார்ஜ்க்கு பிறகு ஜூலை மாதம் முழுவதும் போப் ஓய்வில் இருக்க உள்ளார். அதன்பிறகு ஆகஸ்ட் 2ம் தேதி முதல் ஆகஸ்ட் 6ம் தேதி வரை உலக இளைஞர்கள் தினத்தை முன்னிட்டு போர்ச்சுகல் செல்லவுள்ளார். தொடர்ந்து, ஆகஸ்டு 31ம் தேதி முதல் செப்டம்பர் 4ம் தேதி வரை மங்கோல்யா செல்ல திட்டமிட்டுள்ளார்.

    • போப் பிரான்சிஸ் குடல் அடைப்புகளாலும், வலியாலும் அவதிப்பட்டு வந்தார்.
    • கடந்த 7-ந் தேதி அவருக்கு குடல் அறுவை சிகிச்சை நடந்தது.

    ரோம் :

    போப் பிரான்சிஸ் (வயது 86) குடல் அடைப்புகளாலும், வலியாலும் அவதிப்பட்டு வந்தார். எனவே அவர் ரோமில் உள்ள ஜெமெல்லி ஆஸ்பத்திரியில் கடந்த 7-ந் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு 3 மணி நேரம் குடல் அறுவை சிகிச்சை நடந்தது.

    அந்த அறுவை சிகிச்சை வெற்றி பெற்றதாகவும், அவர் வேகமாக குணம் அடைந்து வருகிறார் என்றும் வாடிகன் அறிவித்தது. போப் ஆண்டவரின் உடல்நிலை குறித்த விவரங்களை நேற்று செய்தியாளர்களிடம் வெளியிட்ட வாடிகன் செய்தி தொடர்பாளர் மாட்டியோ புரூனி, போப் பிரான்சிஸ் இரவில் நன்றாக ஓய்வெடுத்ததாகவும், பகலில் பணிகளை மேற்கொண்டதாகவும் கூறினார்.

    சிக்கல்கள் எதுவுமின்றி போப் ஆண்டவர் தொடர்ந்து உடல் நலம் தேறி வருவதாக கூறிய புரூனி, ஆஸ்பத்திரியில் இருந்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவது குறித்து வருகிற நாட்களில் முடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

    ×