search icon
என் மலர்tooltip icon
    • சிறுபான்மை மக்கள் நலக் குழு சார்பில் கலெக்டர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • மணிப்பூர் மாநிலத்தில் நடைபெறும் வன்முறையை தடுக்க வேண்டும்.

    மதுரை

    மணிப்பூர் மாநிலத்தில் நடைபெறும் வன்முறையை தடுக்கவும், இங்கு சட்டம்- ஒழுங்கை பாதுகாக்க தவறியதாக மத்திய அரசை கண்டித்து மதுரை மாநகர் மாவட்ட சிறுபான்மை மக்கள் நலக் குழு சார்பில் கலெக்டர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    மாவட்ட தலைவர் அலாவுதீன் தலைமை தாங்கினார். செயலாளர் கணேசமூர்த்தி முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் லூர்து, அருட்தந்தையர்கள் பெனடிக் பர்னபாஸ், லாரன்ஸ் ஆகியோர் பேசினர்.

    இதில் கலந்து கொண்டவர்கள் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

    • வாளை காட்டி மிரட்டியவர் கைது செய்யப்பட்டார்.
    • கொள்ளையடிக்கும் நோக்கத்தில் முனீசுவரன் பதுங்கியிருந்தது தெரியவந்தது.

    மதுரை

    மீனாட்சிநகர் கேட்லாக்ரோடு ராஜீவ் காந்தி தெருவை சேர்ந்த அண்ணாதுரை மகன் சுந்தரபாண்டியன் (20). இவர் ஜெய்ஹிந்துபுரம் நேதாஜி தெரு 7-வது குறுக்கு தெருவில் சென்று கொண்டிருந்தார். அவரை 2 பேர் வழிமறித்து வாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்தனர்.

    இதுகுறித்த புகாரின்பேரில் ஜெய்ஹிந்துபுரம் போலீசார் ஜெய்ஹிந்துபுரம் நேதாஜி தெரு பாண்டி மகன் வீரபூமு, அதே பகுதியைச் சேர்ந்த வீராசாமி மகன் பாண்டி என்ற பாண்டியராஜன் (47) ஆகிேயார் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் பாண்டி என்ற பாண்டியராஜனை கைது செய்தனர்.

    கீரைத்துரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் ரோந்து பணியில் ஈடுபட்டார். அந்த பகுதியில் சந்தேகப்படும்படியாக பதுங்கிய வாலிபரை பிடித்தார். அவரிடம் விசாரித்தபோது மதுரை காமராஜர்புரம் குமரன் குறுக்கு தெரு குமரய்யா மகன் முனீசுவரன் (20) என்று தெரிய வந்தது.

    அவரிடம் இருந்து வாள் மற்றும் பைக் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த பகுதி வழியாக வருபவர்களை மிரட்டி கொள்ளையடிக்கும் நோக்கத்தில் முனீசுவரன் பதுங்கியிருந்தது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

    • வீடு புகுந்து நகை திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • காமிரா பதிவுகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மதுரை

    மதுரை ஆனையூர் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது54). சம்பவத்தன்று இவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த செயின் மற்றும் மோதிரம் உள்பட 8 பவுன் நகைகளை திருடிச் சென்று விட்டனர்.

    இதுகுறித்து முருகன் கூடல் புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். வீடு புகுந்து நகை திருடிய தெப்பக்குளம் மருது பாண்டியர் தெரு பாஸ்கரன், மகன் மருதுபாண்டி(28), அண்ணாநகர் யாகப்பா நகர் அம்மையப்பர் தெரு அம்மாசி கண்ணன் மகன் ராஜ்குமார்(28) ஆகியோரை ேபாலீசார் போலீசார் கைது செய்தனர்.

    மதுரை எஸ்.எஸ்.காலனி வடக்கு வாசல் அருணாசலம் தெருவை சேர்ந்தவர் கணேஷ் (52). இவர் தனது மகளை பின்னால் அமர வைத்து மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அரசரடி மகபூப்பா ளையம் பகுதியில் சென்ற போது மற்றொரு பைக்கில் பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் இளம்பெண் அணிந்திருந்த 4 கிராம் நகையை பறித்துக்கொண்டு தப்பினர்.

    இதுகுறித்த புகாரின்பே ரில் எஸ்.எஸ். காலனி போலீசார் வழக்குப் பதிவு செய்து கண்காணிப்பு காமிரா பதிவுகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றியுள்ள சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் கழிவு நீரால் கடும் துர்நாற்றம் பொதுமக்கள், பக்தர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
    • சுகாதார சீர்கேடுகள் நிலவுவது வேதனைக்குரிய விசயமாகும்.

    மதுரை

    மதுரை மாநகராட்சியில் வளர்ச்சி திட்டங்களுக்காக பல கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்றதாக கூறப்பட்டாலும், தற்போது பல பகுதிகளில் அடிப்படை வசதிகள் போதுமான அளவில் இல்லாமல் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.கடந்த 2 வாரங்களாக பெய்த கோடை மழையால் சாலைகள் மோசமாக காட்சியளிக்கிறது.

    நகரில் பாதாள சாக்கடை பராமரிப்பு பணிகளை சரியாக மேற்கொள்ளாததால் கழிவுநீர் வெளியேறுவது தொடர் கதையாக உள்ளது. பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றியுள்ள சித்திரை, மாசி விதிகளில் இந்த பிரச்சினை நீண்ட காலமாக உள்ளது.

    சமீபத்தில் நடந்த சித்திரை திருவிழாவின் போதுகூட கிழக்கு சித்திரை வீதியில் பாதாள சாக்கடை நிரம்பி கழிவு நீர் வெளியேறியது. தற்போது மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றியுள்ள சாலைகள், தெருக்களில் அடிக்கடி பாதாள சாக்கடை நிரம்பி கழிவுநீர் ஆறு போல் ஓடுகிறது. சாலைகளில் வடிகால் வசதி இல்லாததால் கழிவு நீர் ஆங்காங்கே தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.

    மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்ல வெளியூர் பக்தர்கள் நேதாஜி சாலை வழியாக வரவேண்டும். ஆனால் நேதாஜி சாலையில் உள்ள தண்டபாணி முருகன் கோவிலில் இருந்து சில மீட்டர் தூரத்தில் உள்ள பாதாள சாக்கடை அடிக்கடி நிரம்பி வெளியேறுகிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் கோவி லுக்கு வரும் வெளி மாநிலத்த வர்கள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் முகம் சுளிக்கின்றனர்.

    மேலும் மாதத்தில் ஒரு முறை பாதாள சாக்கடையை எந்திரம் மூலம் சுத்தம் செய்யும் ஊழியர்கள் அந்த கழிவுகளை உடனே அப்புறப்படுத்தாமல் ஒரு நாள் முழுவதும் நடு ரோட்டில் கொட்டி வைத்து விட்டு செல்கின்றனர். இதனால் அந்தப் பகுதியில் சொல்ல முடியாத அளவிற்கு துர்நாற்றம் வீசுகிறது.

    இது தொடர்பாக பலமுறை புகார் தெரிவித்தும் அதிகாரி கள் நடவடிக்கை எடுக்க அக்கறையும் காட்டவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இன்று காலையில் வடக்கு மாசி வீதி சாலையில் உள்ள பாதாள சாக்கடை நிரம்பி கழிவு நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதுபோன்று நாள்தோறும் கோவிலை சுற்றியுள்ள ஏதேனும் ஒரு பகுதியில் இந்த பிரச்சினை ஏற்படுகிறது.

    இதேபோல் ரெயில் நிலையத்தில் இருந்து வரும் வெளி மாவட்டத்தினர் மற்றும் மற்ற மாநில மக்கள் டவுன்ஹால் ரோடு வழியாக கோவிலுக்கு செல்கின்றனர். டவுன்ஹால் ரோடு பகுதியில் குப்பைகளும், கழிவுகளும் தேங்கி சுகாதார மற்ற முறையில் காட்சி யளிக்கிறது. இதனால் வெளியூர்களில் இருந்து நகருக்கு வரும் மக்களுக்கு மதுரையின் சுகாதாரம் குறித்து தவறான எண்ணம் ஏற்படும்.

    எனவே மதுரை மாநகராட்சி நிர்வாகம் கோவிலை சுற்றி சுகாதாரமாக இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

    உலக அளவில் பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி இது போன்ற சுகாதார சீர்கேடுகள் நிலவுவது வேதனைக்குரிய விசயமாகும்.

    • கருணாநிதி நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று தளபதி எம்.எல்.ஏ. கூறினார்.
    • வீடு தோறும் சென்று உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த வேண்டும்.

    மதுரை

    மதுரை பசுமலையில் மாநகர் மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. அவைத் தலைவர் ஒச்சுபாலு தலைமை தாங்கினார்.

    முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம், தணிக்கை குழு செயலர் வேலுச்சாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெயராமன் முன்னிலை வகித்தனர். இதில் மதுரை மாநகர் மாவட்ட செய லாளர் கோ.தளபதி எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    வருகிற ஜூன் 3-ந் தேதி தலைவர் கருணாநிதி பிறந்தநாளை அனைத்து வார்டு பகுதிகளிலும் பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும்.

    மேலும் கட்சிக்கு கூடுதலாக வலு சேர்க்கும் வகையில் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த வேண்டும்.

    தமிழக அரசின் நலத்திட்டங்களால் மக்கள் தங்களை தி.மு.க.வில் இணைத்துக் கொள்ள முன்வரும் நிலையில் வீடு தோறும் சென்று உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • அ.தி.மு.க. எதிரிகளின் முகமூடிகள் கிழிக்கப்பட்டு விட்டது என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
    • பொதுக்குழுவை எதிர்த்து சிலர் உச்சநீதிமன்றம் சென்றனர்.

    மதுரை

    அ.தி.மு.க. பொதுச்செய லாளர் எடப்பாடி பழனி சாமியின் 69-வது பிறந்த நாளை முன்னிட்டு, மதுரை மேற்கு-தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில். அன்ன தான நிகழ்ச்சி அலங்கா நல்லூர் அருகே உள்ள அரியூரில் நடை பெற்றது.

    அன்னதானத்தை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஆர்.பி. உதயகுமார் தொடங்கி வைத்தார். இதில் பேரவை மாநில துணைச்செயலாளர் வெற்றிவேல், முன்னாள் எம்.எல்.ஏ. கருப்பையா உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் உதயகுமார் பேசியதாவது:-

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, ஏழை-எளிய மக்கள் பயன்பெறும் விழாவாக அம்மா பேரவையின் சார்பிலும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பிலும் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    1½கோடி தொண்டர்க ளின் எண்ணத்தை நனவாக்கும் வண்ணம், அ.தி.மு.க. பொதுக்குழுவில் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து பொதுக்குழுவை எதிர்த்து சிலர் உச்சநீதிமன்றம் சென்றனர். அதில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றார்.

    தற்போது தேர்தல் ஆணையம் முழுமையாக பொதுக்குழு தீர்மா னங்களை அங்கீகரித்து ள்ளது. இதன் மூலம் எதிரிகளின் முகமூடிகள் கிழிக்கப்பட்டு விட்டது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா தொடங்குகிறது.
    • விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்து வருகிறது.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கொண்டா டப்படும் விழாக்களில் பிரசித்தி பெற்ற விழாவாக வைகாசி விசாக திருவிழா உள்ளது.ஆண்டுதோறும் வைகாசி மாசம் 10 நாட்கள் நடைபெறும். இந்த திருவிழா வருகின்ற 24-ந் தேதி (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    விழாவை முன்னிட்டு தினமும் இரவு 7 மணி அளவில் உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி-தெய்வானை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று கோவில் வளாகத்தில் உள்ள வசந்த மண்டபத்தில் எழுந்தருளுவார்கள். அங்கு கோவில் ஓதுவார் பாடல் பாடப் பெற்று சிறப்பு தீப, தூப, ஆராதனைகள் நடைபெறும்.

    முக்கிய நிகழ்ச்சியான வைகாசி விசாகம் ஜூன் 2-ந் தேதி நடைபெறும். இதற்காக சண்முக சன்னதியில் உள்ள சண்முகர் வள்ளி, தெய்வா னையுடன் கோவில் விசாக கொறடு மண்டபத்தில் எழுந்தருளுவார்.

    அங்கு பக்தர்கள் கொண்டு வரும் பால் கொண்டு சுவாமி களுக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடைபெறும். அதிகாலை முதல் மாலை வரை தொடர்ந்து பாலா பிஷேகம் நடைபெறும். இதனைத் தொடர்ந்து ஜூன் 3-ந் தேதி மொட்டை அரசு திருவிழா நடைபெறும்.

    இதில் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இருந்து புறப்பாடாகி மொட்டையரசு திடலில் எழுந்தருளுவார். அங்கிருந்து இரவு பூ பல்லக்கில் திருப்ப ரங்குன்றம் கோவிலை வந்து அடைவார். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்து வருகிறது.

    • கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் உண்ணாவிரதம் இருந்தனர்.
    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதம் நடந்தது.

    மதுரை

    மதுரை பழங்காநத்தம் ரவுண்டானா அருகே தமிழ்நாடு கேபிள் டி.வி.ஆபரேட்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாநிலத்தலைவர் ரமேஷ் தலைமையில் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். மாநிலத்தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் ஆறுமுகம், மகுடம் சக்தி, ஸ்டீபன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மத்திய அரசின் தொலை தொடர்பு ஆணையம் டிராய் அமைப்பு என்.டி.ஓ.3 பரிந்துரையின் பேரில் கட்டண சேனல்கள் மிக கடுமையான கட்டண உயர்வை அறிவித்தது. எம்.எஸ்.ஓ. நிறுவனங்கள் அதை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு கட்டணத்தை உயர்த்தி பொதுமக்களுக்கு கேபிள் டி.வி.கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

    இதனால் பொதுமக்களும், கேபிள் டி.வி.ஆபரேட்டர்களும் பாதிக்கப்பட்ட நிலையில் மத்திய அரசு தலையிட்டு என்.டி.ஓ.3 பரிந்துரையை நிறுத்திவைத்து கேபிள் டி.வி.கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும், எதிர்காலத்தில் இந்திய தொலைதொடர்பு ஆணையம் கொண்டுவரும் பரிந்துரையை பொதுமக்களும் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் தொழிலும் பாதிக்காத வண்ணம் இருக்கிறதா? என்று மத்திய அரசு தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். பின்னர் நடைமுறைப்படுத்த வேண்டும்.

    தமிழக அரசு கேபிள் டி.வி.ஆபரேட்டர்களுக்கு வாக்குறுதி அளித்தபடி நலவாரியம் அறிவித்திட வேண்டும், அரசு கேபிள் அனலாக் நிலுவை தட வாடகை குறித்து கூட்ட மைப்பு தலைவர்களிடம் பேசி தீர்வு காண வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதம் நடந்தது.

    • ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • இதில் 50-க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள் கலந்து ெகாண்டனர்.

    மதுரை

    மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று இந்து ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்து முன்னணி மாநில செயலாளர் சேவுகன் தலைமை தாங்கினார். பெட்ரோல், டீசல் வரியை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வரவேண்டும்.

    கட்டுமான தொழிலாளர்களுக்கு வீடு ஒதுக்குவதுபோல் ஆட்டோ தொழிலாளர்களுக்கு வீடு திட்டத்தில் அரசு முன்னுரிமை அளிக்க ேவண்டும். எப்.சி. கட்டணம், சாலைவரியை குறைக்க வேண்டும்.

    ஆட்டோ தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத்தை ரூ. 5 ஆயிரமாக உயர்த்த வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் 50-க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள் கலந்து கொண்டனர்.

    • மீனாட்சி அம்மன் கோவில் வசந்த உற்சவம் நடந்தது.
    • திருக்கல்யாணமும், ஜூன் 1-ந் தேதி தேரோட்டமும் நடக்கிறது.

    மதுரை

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வைகாசி வசந்த உற்சவம் வருகிற 24-ந்தேதி முதல் ஜூன் 2 வரை நடக்கிறது.

    திருவிழா நாட்களில் தினமும் மீனாட்சி- சுந்தரேசுவரர் பஞ்ச மூர்த்தி களுடன் மாலை 6 மணிக்கு கோவிலில் இருந்து புது மண்டபம் செல்வர். அங்கு பூஜை, தீபாராதனை முடிந்ததும் 4 சித்திரை வீதிகளில் வலம் வந்து கோவிலுக்கு வருவார்கள்.

    ஜூன் 3-ந் தேதி முதல் 5-ந் தேதி வரை திருஞான சம்பந்தர் திருவிழாவும், ஜூன் 5-ந் தேதி காலையில் திருஞானசம்பந்தர் தங்கப்பல்லக்கில் எழுந்த ருளும் நிகழ்ச்சியும், 63 நாயன்மார்களின் 4 ஆவணி மூல வீதி புறப்பாடும் நடக்கிறது.

    அன்றிரவு 8 மணிக்கு திருஞானசம்பந்தர் வெள்ளி கோ ரதத்தில் எழுந்தருளி 4 ஆவணி மூல வீதிகளிலும் வலம் வருவார். மே 24-ந் தேதி முதல் ஜூன் 5-ந் தேதி வரை வைகாசி வசந்த உற்சவம் நடப்பதால் உபய தங்கரதம், உபய திருக் கல்யாண நிகழ்ச்சிகள் நடைபெறா என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மீனாட்சி அம்மன் கோவிலின் உப கோவிலான திருமறைநாதர் சுவாமி கோவில் அமைந்துள்ள திருவாதவூரில் மாணிக்க வாசகர் பிறந்தார். இந்த கோவிலில் வைகாசி பிரமோற்சவ விழா வருகிற 23-ந் தேதி முதல் ஜூன் 2-ந் தேதி வரை நடக்கிறது.

    வருகிற 28-ந் தேதி பஞ்ச மூர்த்திகளுடன் மேலூருக்கு சுவாமி எழுந்தருளுகிறார். மே 31-ந் தேதி காலை 11.15 மணி முதல் 12 மணிக்குள் திருக்கல்யாணமும், ஜூன் 1-ந் தேதி தேரோட்டமும் நடக்கிறது.

    • தனியார் நிறுவனங்களில் இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளிக்கப்படுகிறது.
    • கலெக்டர் அனீஷ்சேகர் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சென்னை வாயிலாக மதுரை மாவட்டத்தில் ஆண்டுக்கு ரூ. 50 கோடிக்கு மேல் உற்பத்தி செய்து ஈட்டும் தனியார் தொழில் நிறுவனங்களில் இளைஞர்களுக்கு திறன் பயிற்சி திட்டம் வழங்க இணையதளம் வாயிலாக GREEN CHANNEL PARTNER REGISTRATION செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இந்த பயிற்சி வழங்கும் தனியார் தொழில் நிறுவனங்கள் தங்களின் தொழில் நிறுவனத்திற்கு தேவையான திறன் பயிற்சிகளை தாங்களே வழங்கி மேற்படி பயிற்சி பெற்றவர்களுக்கு அந்த நிறுவனத்தில் திறன்மிகு பணியாளர்கள் பணிபுரியமர்த்த வாய்ப்பும் கிடைக்கிறது.

    பயிற்சியின் போது பயிற்சி வழங்கும் நிறுவனத்திற்கு பயிற்சி கட்டணமும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தால் வழங்கப்படுவதால் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    மேலும், கூடுதல் விபரங்களுக்கு உதவி இயக்குநர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், மூன்று மாவடி, மதுரை-7 என்ற முகவரியில் இயங்கி வரும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலக அலைபேசி எண் (94990 55748)-க்கு தொடர்பு கொண்டு தகவலை பெற்றுக்கொள்ளலாம். மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் தெரிவித்துள்ளார்.

    • ரெயில்வே கிராசிங் விபத்து குறித்து விழிப்புணர்வு நடந்தது.
    • பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இரு புறமும் ரெயில் வருகிறதா? என்று கவனித்து செல்ல வேண்டும்

    மதுரை

    ரெயில்வே கிராசிங்கை (ரெயில்வே கேட்) பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் கடக்கும்போது கவனக்குறைவு காரணமாக விபத்துகள் ஏற்படுகின்றன.

    அதனை தவிர்க்கும் வகையில் மதுரை ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சையது குலாம் தஸ்தகீர் தலைமையில் ரெயில்வே போலீஸ்காரர்கள் செந்தில்குமார், சதீஷ்குமார் ஆகியோர் விளாங்குடி-கரிசல்குளம் ரெயில்வே கேட்டில் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை எடுத்துரைத்தனர்.

    ஆளில்லாத ரெயில்வே கிராசிங்கை கடக்கும் போது பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இரு புறமும் ரெயில் வருகிறதா? என்று கவனித்து செல்ல வேண்டும் என்றும் எடுத்து கூறினர்.

    ×