என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நேபாளம்
- நேபாளத்தில் வரும் நவம்பர் 20-ம் தேதி பொது தேர்தல் நடத்தப்பட உள்ளது.
- இதற்கான ஒப்புதலை நேபாள அரசு வழங்கியுள்ளது.
காத்மண்டு:
நேபாளத்தில் பொது தேர்தல் நடத்துவதற்கான தேதியை அந்நாட்டு தேர்தல் ஆணையம் அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது.
தேர்தலின்போது, நாடு முழுவதுமுள்ள வாக்காளர்கள் பாராளுமன்றத்தின் மத்திய மற்றும் மாகாண சட்டசபைக்கான தங்களது பிரதிநிதிகளை வாக்களித்து தேர்ந்தெடுப்பார்கள்
இந்நிலையில், நேபாள நாட்டில் வரும் நவம்பர் மாதம் 20-ம் தேதி பொது தேர்தல் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையம் பரிந்துரைத்த நாட்களுக்கு பதிலாக 2 நாட்கள் கழித்து தேர்தல் நடத்துவதற்கான நாட்களை அரசு அறிவித்துள்ளது.
தலைமை தேர்தல் ஆணையாளர் தினேஷ் குமார் தபலியா செய்தியாளர்களிடம் கூறுகையில், தேர்தல் தேதி மாற்றத்தினால் தேர்தலுக்கு தயாராவதில் எவ்வித பிரச்சனையும் இல்லை. அவை பிரதிநிதிகள் மற்றும் மாகாண சட்டசபையின் பதவிக்காலம் நவம்பர் இறுதியிலேயே நிறைவடைய உள்ளது. நாங்கள் தேர்தல் அட்டவணையை விரைவில் வரைவு செய்து அவற்றை வெளியிடுவோம் என தெரிவித்துள்ளார்.
- இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை வலுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை.
- சுகாதாரம் மற்றும் கல்வியில் நேபாள உள்கட்டமைப்பை வலுப்படுத்த இந்தியா ஆதரவு.
காத்மாண்டு:
அண்டை நாடான நேபாளத்திற்கு இந்தியா 75 ஆம்புலன்ஸ்கள் மற்றும் 17 பள்ளிப் பேருந்துகளை பரிசாக வழங்கி உள்ளது.நேபாள நாட்டின் கல்வி, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் தேவேந்திர பவுடல் முன்னிலையில் இந்தியா தூதர் நவீன் ஸ்ரீவஸ்தவா வாகனங்களின் சாவிகளை ஒப்படைத்தார்.
சுகாதாரம் மற்றும் கல்வியில் நேபாள உள்கட்டமைப்பை வலுப்படுத்த அந்நாட்டின் முயற்சிகளுக்கு இந்திய அரசு நீண்டகாலத் திட்டத்தின் கீழ் ஆதரவு வழங்கி அளித்து வருகிறது. இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில் 75 ஆம்புலன்ஸ்கள் பரிசாக வழங்கப்படுவதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
ஆம்புலன்ஸ்கள் மற்றும் பள்ளி பேருந்துகளை பரிசாக வழங்கப்படுவது இரு நாடுகளுக்கும் இடையே உறவை வலுப்படுத்தவும் வளர்ச்சி பாதைக்கு அழைத்து செல்லவும் உதவும் என்றும் ஸ்ரீவஸ்தவா கூறினார்.
அப்போது பேசிய நேபாள அமைச்சர் பவுடல், தங்கள் நாட்டில் இந்தியா மேற்கொண்டுள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைப் பாராட்டினார். இந்த முயற்சிகள் இரு நாட்டு மக்களிடையேயான தொடர்பை வலுப்படுத்தும் என்றும் இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியா வழங்கியுள்ள 75 ஆம்புலன்ஸ்கள் மற்றும் 17 பள்ளி பேருந்துகள் நேபாளத்தின் பல்வேறு மாவட்டங்களில் சுகாதார மற்றும் கல்வித் துறைகளில் பணிபுரியும் பல்வேறு அரசுத் துறைகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படும் என்று இந்திய மிஷன் அமைப்பு தெரிவித்துள்ளது.
- காத்மாண்டு பகுதியில் காலராவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
- பானிபூரி விற்பனைக்கு தடை விதிக்கும் முடிவுக்கு உணவு பிரியர்கள் எதிர்ப்பு.
காத்மாண்டு:
சிறுவர் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் நொருக்கு தீனி வகைகளில் பானிபூரி முக்கிய இடத்தை பிடித்துள்ளது. மாலை வேலைகளில் ஏராளமானோர் பானி பூரி கடைகளுக்கு படையெடுப்பது அதிகரித்து வரும் நிலையில், நேபாள நாட்டின் தலைநகர் காத்மாண்டுவில் பானி பூரி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
காத்மாண்டு பள்ளத்தாக்கைச் சுற்றியுள்ள பெரும்பாலான பகுதிகளில் ஏராளமான பானிபூரி விற்பனை கடைகள் உள்ளன. இங்கு அச்சுத்தமான தண்ணீர் பயன்படுத்தப்படுவதால் லலித்பூர் பகுதியில் காலாரா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 19ந் தேதி ஒருவருக்கு காலார பாதிப்பு நோய் ஏற்பட்ட நிலையில், தற்போது 12க்கும் மேற்பட்டோர் நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் எட்டு பேர் குணமடைந்த வீடு திரும்பினர். மேலும் நான்கு பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் பாக்பஜாரில் இருவர் காலராவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து ஒருவாரம் பானிபூரி விற்பனைக்கு தடை விதிக்க சுகாதார அதிகாரிகள் முடிவு செய்தனர். எனினும் இதற்கு உணவு பிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பானி பூரி விற்பனைக்கு தடை விதிக்கும் முடிவு முற்றிலும் பொருத்தமற்றது என்றும், இது சிறு வணிகம் மீது நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் எனறும், அதற்கு பதில் சுகாதாரமான தண்ணீரை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கலாம் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
முன்னதாக நேபாளம் முழுவதும் பாதுகாப்பற்ற குடிநீர் விநியோகம் மற்றும் சுகாதாரமற்ற சூழ்நிலைகள் காரணமாக 30,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் வரையில் 911 பேர் சுகாதார சீர்கேட்டால் இறந்துள்ளனர்.
- கடந்த 2015-ம் ஆண்டில் ஏற்பட்ட பேரழிவு நிலநடுக்கத்தை இது நினைவூட்டுவதாக பலர் சமூக வளைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
- இந்த சம்பவத்தில் உயிர் சேதமோ அல்லது பொருட் சேதமோ இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேபாள் தலைநகர் காத்மாண்டுவில் இருந்து கிழக்கே 15 கி.மீ தொலைவில் உள்ள பக்தபூர் மாவட்டத்தில் இன்று அதிகாலை 2.36 மணியளவில் நிலநடுக்கம் பதிவாகி உள்ளது.
இதன் எதிரொலி காத்மாண்டு பள்ளத்தாக்கு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த சம்பவத்தில் உயிர் சேதமோ அல்லது பொருட் சேதமோ இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2015-ம் ஆண்டில் ஏற்பட்ட பேரழிவு நிலநடுக்கத்தை இது நினைவூட்டுவதாக பலர் சமூக வளைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்