search icon
என் மலர்tooltip icon

    நேபாளம்

    • நேபாளத்தில் இன்று அதிகாலை ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகி உள்ளது.
    • நேற்று காலை முதல் இன்று காலை வரை 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

    காத்மண்டு:

    நேபாள நாட்டில் இன்று அதிகாலை 1.57 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகி உள்ளது. இந்நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.

    நேற்று காலை நேபாள நாட்டின் தலைநகர் காத்மண்டுவில் ரிக்டரில் 4.5 அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது.

    டோட்டி மாவட்டத்தில் நிலநடுக்கத்தால் வீடு இடிந்து விழுந்ததில் 3 பேர் பலியாகினர் என முதல் கட்ட தகவல் வெளியானது.

    இந்நிலையில், நிலநடுக்கத்தால் வீடுகள் இடிந்து விழுந்ததில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது என போலீசார் தெரிவித்தனர்.

    • நேபாளத்தில் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகி உள்ளது.
    • தலைநகர் டெல்லியிலும் நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

    காத்மண்டு:

    நேபாள நாட்டில் இன்று அதிகாலை 1.57 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகி உள்ளது. இந்நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் மணிப்பூரிலும் இருந்துள்ளது. இதனால் ஏற்பட்ட பாதிப்பு விவரங்கள் உடனடியாக வெளிவரவில்லை.

    தலைநகர் டெல்லியிலும் நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

    நேற்று காலை நேபாள நாட்டின் தலைநகர் காத்மண்டுவில் ரிக்டரில் 4.5 அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது.

    • 100 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது.
    • இது ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவாகி உள்ளது.

    நேபாள நாட்டின் தலைநகர் காத்மண்டுவில் இருந்து வடகிழக்கே 155 கி.மீ. தொலைவில் இன்று காலை 4.37 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

    இது ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவாகி உள்ளது. இந்நிலநடுக்கம் 100 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது.

    இதனால் ஏற்பட்ட பாதிப்பு விவரங்கள் உடனடியாக வெளிவரவில்லை. கடந்த அக்டோபர் 19ம் தேதி நேபாள நாட்டின் தலைநகர் காத்மண்டுவில் ரிக்டரில் 5.1 அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது.

    அந்த நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதேபோன்று ஜூலை 31ம் தேதி காத்மண்டுவில் இருந்து தென்கிழக்கே 147 கி.மீ. தொலைவில் ரிக்டரில் 6.0 அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது.

    கடந்த ஏப்ரல் 25ம் தேதி ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் காத்மண்டு மற்றும் பொகாரா நகரங்களுக்கு இடையே கடுமையான தாக்கம் ஏற்பட்டது. அதில், அந்நாட்டு மக்களில் 8 ஆயிரத்து 964 பேர் உயிரிழந்தனர். 22 ஆயிரம் பேர் காயம் அடைந்தனர்.

    • சர்மா ஒலி தார்ச்சுலா மாவட்டத்தில் தனது கட்சியின் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வைத்து பேசினார்
    • இந்தியாவின் 3 பகுதிகளை நேபாளத்துடன் இணைத்து, சர்மா ஒலி தலைமையிலான அரசு வரைபடம் வெளியிட்டது.

    காத்மாண்டு:

    இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் இம்மாத இறுதியில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலி, தார்ச்சுலா மாவட்டத்தில் தனது கட்சியின் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    நமது நிலத்தில் ஒரு அங்குலத்தை கூட விட்டு கொடுக்க மாட்டோம். எங்கள் கட்சி தேர்தலில் வெற்றி பெற்றால், காலாபானி, லிபுலெக், லிம்புயதுரா (இந்திய பகுதிகள்) உள்பட ஆக்கிரமிப்பு பகுதிகளை மீட்டு கொண்டு வருவோம். எங்களது கட்சி, தேசத்தை பாதுகாப்பதில் உறுதியாக இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்தியா - நேபாள உறவுகள் நீண்ட காலமாக சுமூகமாகவே உள்ளது. ஆனால் நேபாளத்தின் பிரதமராக சர்மா ஒலி பதவியேற்ற பிறகு இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் சிறிது விரிசல் ஏற்பட்டது.கே.பி.சர்மா ஒலி பிரதமராக இருந்தபோது அவரது அரசாங்கம் இந்தியாவின் 3 பகுதிகளை நேபாளத்துடன் இணைத்து நாட்டின் புதிய வரைபடத்தை வெளியிட்டது.

    அப்பகுதிகளை இந்தியா ஆக்கிரமித்துள்ளதாக குற்றம் சாட்டினார் சர்மா ஒலி. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

    இந்த நிலையில் கே.பி.சர்மா ஒலி இவ்விவகாரத்தை மீண்டும் பேசி உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    அதே போல் நேபாள காங்கிரஸ் தலைவரும், பிரதமருமான ஷேர் பகதூர் தியூபா தனது தேர்தல் பிரசாரத்தில் கூறும்போது, ராஜதநதிர முயற்சிகள், பரஸ்பர உறவுகளின் அடிப்படையில் நேபாளத்தின் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்பதற்கான முயற்சிகள் நடந்து வருவதாக தெரிவித்தார்.

    நேபாளத்துக்கு இந்தியா பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. சமீபத்தில் நேபாள பொது தேர்தலின்போது போக்குவரத்து உள்ளிட்ட வசதிகளுக்காக 200 வாகனங்களை இந்தியா அன்பளிப்பாக நேபாளத்துக்கு வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

    • நேபாளத்திற்கு இதுவரை 2,400 வாகனங்களை அன்பளிப்பாக இந்தியா வழங்கியுள்ளது.
    • நேபாள நாட்டில் இம்மாத இறுதியில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது.

    காத்மண்டு:

    நேபாள நாட்டில் இம்மாத இறுதியில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அந்நாட்டுக்கான இந்திய தூதர் நவீன் ஸ்ரீவஸ்தவா, நேபாள நிதி மந்திரி ஜனார்தன் சர்மாவிடம் இந்தியா சார்பில் 200 வாகனங்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.

    பொதுத் தேர்தலின்போது, பல்வேறு நேபாள அமைப்புகளுக்கு, போக்குவரத்து உள்ளிட்ட விஷயங்களுக்கு ஆதரவாக இருக்கும் வகையில் இந்த அன்பளிப்பை இந்தியா வழங்கியுள்ளது என காத்மண்டுவில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

    நேபாளத்திடம் ஒப்படைக்கப்பட்ட இந்த 200 வாகனங்களில், தேர்தலின்போது பாதுகாப்பு பணி மேற்கொள்வதற்காக பாதுகாப்பு படைகளுக்கு 120 வாகனங்கள் வழங்கப்படும். மீதமுள்ள 80 வாகனங்களை தேர்தல் ஆணையம் பயன்படுத்திக் கொள்ளும். இதுவரை இந்தியா சார்பில் நேபாள நாட்டிற்கு 2,400 வாகனங்கள் பரிசாக வழங்கப்பட்டு உள்ளன என்று காத்மண்டு நகரில் உள்ள நேபாளத்திற்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது

    • நேபாள அதிபர் பித்யா தேவி பண்டாரிக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
    • இதையடுத்து காத்மண்டுவில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    காத்மண்டு:

    நேபாள நாட்டின் அதிபராக இருப்பவர் பித்யா தேவி பண்டாரி (61). இவருக்கு நேற்று திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

    இதையடுத்து, அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

    இதுதொடர்பாக, அதிபரின் செயலாளரான பேஷ் ராஜ் அதிகாரி செய்தியாளர்களிடம் கூறுகையில், நேபாள அதிபர் பித்யா தேவி பண்டாரிக்கு சுகாதார பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. அவருக்கு குளிர் ஜுரம், இருமல் மற்றும் காய்ச்சல் போன்றவை காணப்படுகின்றன. இதனால், அவர் காத்மண்டுவில் உள்ள மகாராஜ்கஞ்ச் பகுதியில் அமைந்த திரிபுவன் பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு அதற்கான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார்.

    • முதல்கட்ட விசாரணையில் பேருந்தை ஓட்டுனர் வேகமாக ஓட்டி சென்றதே காரணம் என தெரியவந்துள்ளது.
    • நேபாள நாட்டை பொறுத்தவரை அங்கு ரோடுகள் அனைத்தும் மோசமான நிலையில் உள்ளன.

    நேபாளம் பாரா மாவட்டம் நாராயன்காத் என்ற இடத்தில் இருந்து பிர்குஞ்ச் என்ற இடத்துக்கு பயணிகள் பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 50 பேர் பயணம் செய்தனர்.

    அப்போது பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென அங்குள்ள ஆற்றில் கவிழ்ந்தது. இதில் பேருந்துக்குள் சிக்கி கொண்ட பயணிகள் உயிர் பயத்தில் அலறினார்கள். இது பற்றி அறிந்ததும் போலீசார் மற்றும் மீட்பு படையினர் விரைந்து சென்று உயிருக்கு போராடி கொண்டிருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

    இந்த விபத்தில் 16 பேர் பரிதாபமாக இறந்தனர். 35 பேர் காயத்துடன் மீட்கப்பட்டனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

    முதல்கட்ட விசாரணையில் பேருந்தை ஓட்டுனர் வேகமாக ஓட்டி சென்றதே காரணம் என தெரியவந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. நேபாள நாட்டை பொறுத்தவரை அங்கு ரோடுகள் அனைத்தும் மோசமான நிலையில் உள்ளன.

    மேலும் பெரும்பாலான பகுதிகள் மலைத் தொடர்களால் சூழப்பட்டு உள்ளதால் ரோடுகள் வளைவாக அமைந்துள்ளது. இதனால் அடிக்கடி விபத்து நடைபெறுவது வாடிக்கையாகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    • உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று தகவல்.
    • காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    காத்மாண்டு:

    நேபாளம் நாட்டின் மேற்கு பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த கன மழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. சுதுர்பாசிம் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் குறைந்தது 17 பேர் உயிரிழந்துள்ளதாக அக்செம் மாவட்ட அதிகாரி திபேஷ் ரிஜாலின் தெரிவித்துள்ளார்.

    உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அவர் கூறியுள்ளார். இந்த மாகாணத்தில் உள்ள ஏழு மாவட்டங்களை இணைக்கும் பீம்டுட்டா நெடுஞ்சாலையும் இயற்கை பேரழிவால் பாதிக்கப்பட்டுள்ளது. தகவல் தொடர்பு சேவையும் துண்டிக்கப்பட்டுள்ளது.

    தலைநகர் காத்மாண்டுவில் இருந்து மேற்கே 450 கி.மீ. தொலைவில் உள்ள அக்செம் மாவட்டத்தில் நிலச்சரிவில் சிக்கி காயமடைந்த நிலையில் 11 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக சுர்கெட் மாவட்டத்திற்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

    நிலச்சரிவில் சிக்கி 3 பேர் காணாமல் போயுள்ளனர். அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நிலச்சரிவு நடைபெற்ற பகுதியில் நேபாள காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர் 

    • இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் உடல் நலக் குறைவால் காலமானார்.
    • ராணி எலிசபெத்தின் மறைவுக்கு 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பதாக நேபாள அரசு முடிவு செய்துள்ளது.

    காத்மண்டு:

    இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் உடல் நலக் குறைவால் காலமானார். 25வது வயதில் ராணியாக பதவியேற்ற எலிசபெத் ராணி சுமார் 70 ஆண்டுகாலம் ராணியாக பதவி வகித்துள்ளார். ராணியின் மறைவுக்கு உலக தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், நேபாள அரசின் அமைச்சரவைக் கூட்டத்தில் இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மேலும், செப்டம்பர் 10 முதல் செப்டம்பர் 12-ம் தேதி வரை துக்கம் அனுசரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    வெளிநாடுகளில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் நேபாள தூதரகங்களில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து மீண்டும் முதல்-மந்திரியாக பதவியேற்றார்.
    • பீகார் சட்டசபை இன்று காலை கூடியது.

    பாட்னா:

    பீகாரில் பா.ஜனதாவுடனான கூட்டணியை ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ்குமார் முறித்தார். அவர் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து மீண்டும் முதல்-மந்திரியாக பதவியேற்றார். ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் துணை முதல்-மந்திரியானார்.

    நிதிஷ்குமார் அரசும் இன்று சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

    இதற்காக பீகார் சட்டசபை இன்று காலை கூடியது. பீகார் சபாநாயகர் விஜய் குமார் சின்கா நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பு தனது பதவியை ராஜினாமா செய்தார். பா.ஜனதாவை சேர்ந்த அவர் பதவி விலகியதோடு அவையை 2 மணி வரை ஒத்திவைத்தார்.

    இதற்கு மந்திரி விஜய் குமார் எதிர்ப்பு தெரிவித்தார். இதன் காரணமாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவது தாமதமாகியது.

    • இந்தியாவில் இருந்து நேபாளம் சென்ற 4 சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
    • இந்தியாவில் இருந்து சுற்றுலா பயணிகள் நேபாளம் வருவதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

    காத்மாண்டு:

    அண்டை நாடான நேபாளத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

    இந்நிலையில் இந்தியாவில் இருந்து நேபாளம் சென்ற 4 சுற்றுலாப் பயணிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, இந்தியாவில் இருந்து சுற்றுலாப் பயணிகள் நேபாளம் வருவதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

    கொரோனா பாதித்த 4 இந்தியர்களையும் சொந்த நாடு திரும்பும்படி கேட்டுக்கொண்டுள்ளதாக அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • நில நடுக்கத்தை உணர்ந்த மக்கள் வீடுகளில் இருந்து வெளியே ஓடி வந்தனர்.
    • நில நடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த விவரங்கள் உடனடியாக வெளியாகவில்லை.

    காத்மாண்டு:

    நேபாளத்தின் நுவாகோட் மாவட்டம் பெல்கோட்கடி பகுதியில் இன்று காலை நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவானது என்று தேசிய நிலநடுக்க கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் தெரிவித்தது.

    நில நடுக்கத்தை உணர்ந்த மக்கள் வீடுகளில் இருந்து வெளியே ஓடி வந்தனர். நில நடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த விவரங்கள் உடனடியாக வெளியாகவில்லை.

    ×