search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குமாரசாமி முதல்வரானதால் மு.க.ஸ்டாலின் ஸ்ரீரங்கம் சென்றிருக்கலாம் - தமிழிசை பேட்டி
    X

    குமாரசாமி முதல்வரானதால் மு.க.ஸ்டாலின் ஸ்ரீரங்கம் சென்றிருக்கலாம் - தமிழிசை பேட்டி

    குமாரசாமி முதல்வரானதால் மு.க.ஸ்டாலின் ஸ்ரீரங்கம் சென்றிருக்கலாம் என பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் நிரூபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #Kumaraswamy #MKStalin

    கரூர்:

    கரூரில் பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக கவர்னருக்கு தனது அதிகாரம், ஆளுமை என்ன என்பது தெரியும். அந்த வகையில் தான் அவரது செயல்பாடு இருக்கிறது. ஒருவேளை அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக இருந்தால் அது மாநில அரசு தான் செய்ய வேண்டும். மாநில அரசின் அதிகாரத்தில் தலையீடு இருக்கிறதா? என முதல்-அமைச்சர் உள்ளிடோர் தான் கூற வேண்டும். இதைவிடுத்து ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவிக்க கூடாது. இதில் காழ்ப்புணர்ச்சி தான் இருக்கிறது.

    கவர்னர் நடவடிக்கையால் தமிழகத்தில் பிரச்சினை ஏதும் இல்லை. மாறாக ரூ.1½ கோடியாக இருந்த கவர்னர் மாளிகையின் செலவை அவர் ரூ.30 லட்சமாக குறைத்திருக்கிறார். மக்களின் வரிப்பணத்தை வீண் செலவு செய்யக்கூடாது என நினைப்பதிலேயே அவரது சேவை மனப்பாங்கு தெரிகிறது.

    சேலம்-சென்னை பசுமைவழி சாலை திட்டத்திற்கு விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்தை கொடுக்கின்றனர். எனவே இழப்பீட்டை இன்னும் அதிகப்படுத்த வேண்டும். எந்த விதத்திலும் விவசாயிகளும், பெண்களும் கைது செய்யப்படக்கூடாது என்பதை தமிழக அரசுக்கு கோரிக்கையாக வைக்கிறேன்.

    மு.க.ஸ்டாலின் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதன் கோவிலுக்கு வந்ததையும், கோவிலுக்குள் சென்று தரிசிக்காததையும் கேட்கிறீர்கள். இது அவரவர் கொள்கை. எனவே விமர்சிக்க விரும்பவில்லை. யாராக இருந்தாலும் இன்று கடவுளை நம்பி தான் ஆக வேண்டும். கோவிலுக்கு வந்து தான் ஆக வேண்டும். குமாரசாமி ரெங்கநாதரை தரிசனம் செய்ததால் கர்நாடக முதல்-அமைச்சர் ஆகிவிட்டார். அதனால் நாம் மக்களை நம்பினோம் முடியவில்லை. எம்.எல்.ஏ.க்களை நம்பினோம் முடியவில்லை.

    ரெங்கநாதரை நம்பினால் குமாரசாமிக்கு கொடுத்த அதே அருளை நமக்கும் கொடுப்பாரோ? என்று ஸ்டாலின் நினைத்திருக்கலாம். இந்துமத கடவுள் மீது அவருக்கு நம்பிக்கை வந்திருப்பதை பாராட்டுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #Kumaraswamy #MKStalin

    Next Story
    ×