search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெட்ரோல், டீசல் விலையில் ரூ.1 குறைத்தாலும் அரசுக்கு ரூ.2,200 இழப்பு ஏற்படும் - மகாராஷ்டிரா அரசு
    X

    பெட்ரோல், டீசல் விலையில் ரூ.1 குறைத்தாலும் அரசுக்கு ரூ.2,200 இழப்பு ஏற்படும் - மகாராஷ்டிரா அரசு

    இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தற்போதைய விலையில் ரூ.1 குறைத்தாலும் அரசுக்கு ரூ.2,200 இழப்பு ஏற்படும் என மகாராஷ்டிரா மாநில அரசு தெரிவித்துள்ளது. #PetrolDieselPriceHike



    இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பெட்ரோல், டீசல் விலை தினமும் உயர்ந்து வருவதற்கு நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலையை ரூ.1 குறைத்தாலும், ஆண்டிற்கு ரூ.2,200 கோடி மாநில அரசுக்கு இழப்பு ஏற்படும் என மகாராஷ்டிரா மாநில அரசு தெரிவித்துள்ளது.

    மகாராஷ்ட்ரா மாநில நிதி அமைச்சர் சுதிர் முனிகன்டிவார் பெட்ரோல், டீசல் விலையை கட்டுக்குள் வைக்க ஏற்கனவே பெட்ரோல், டீசல் வரியை மாநிலத்திற்குள் குறைத்து இருப்பதாக தெரிவித்தார்.

    பெட்ரோல், டீசல் பொருட்களை ஜி.எஸ்.டி. வரிமுறைக்குள் கொண்டு வர அரசு தயாராக இருக்கிறது, எனினும் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. ஜி.எஸ்.டி. கவுன்சில் 30-வது கூட்டம் நாளை (செப்டம்பர் 28) நடைபெற இருக்கிறது.

    கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் பெட்ரோலுக்கான வரியில் ரூ.2 மற்றும் டீசலுக்கான வரியில் ரூ.1 குறைத்தது. சமீபத்தில் ராஜஸ்தான், கர்நாடகா மற்றும் ஆந்திர பிரதேச மாநிலங்களில் பெட்ரோல், டீசலுக்கான வரி குறைக்கப்பட்டது. 

    மகாராஷ்டிராவின் 36 மாவட்டங்களில் 20-க்கும் அதிகமான மாவட்டங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.90-ஐ கடந்துள்ளது. பெட்ரோல் விலை உயர்வு பொது மக்கள் மட்டுமின்றி அரசாங்கத்திற்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதாக அம்மாநில நிதி மந்திரி தெரிவித்தார்.
    Next Story
    ×