search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியாவில் யமஹா சிக்னஸ் ரே ZR ஸ்ட்ரீட் ரேலி வெளியனது
    X

    இந்தியாவில் யமஹா சிக்னஸ் ரே ZR ஸ்ட்ரீட் ரேலி வெளியனது

    யமஹா நிறுவனத்தின் சிக்னஸ் ரே ZR ஸ்ட்ரீட் ரேலி எடிஷன் ஸ்கூட்டர் இந்தியாவில் வெளியிடப்பட்டது. இதன் விலை மற்றும் அம்சங்களை தொடர்ந்து பார்ப்போம். #YAMAHA

     

    இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட யமஹா நிறுவனத்தின் சிக்னஸ் ரே ZR ஸ்ட்ரீட் ரேலி எடிஷன் ஸ்கூட்டர் ஒருவழியாக வெளியிடப்பட்டது.

    ஏற்கனவே ரே ZR 100 ஸ்ட்ரீட் ரேலி எடிஷன் ஸ்கூட்டரை யமஹா நிறுவனம் 2018 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்திருந்தது. அதன்படி புதிய ஸ்கூட்டரில் புதிய ஸ்போர்ட் கிராஃபிக்ஸ் மற்றும் தங்க நிற அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. 

    யமஹா வெளியிட்டிருக்கும் புதிய டீசர் வீடியோவில் ஸ்கூட்டர் பார்க்க ரே ZR போன்றே காட்சியளிக்கிறது, எனினும் கூடுதலாக வடிவமைப்பில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்ட்ரீட் ரேலி எடிஷனில் காஸ்மெடிக் மாற்றங்கள், புதிய டீக்கல்கள், கருப்பு நிற அலாய் வீல்கள் கொண்டிருக்கின்றன.



    யமஹா சிக்னஸ் ரே ZR 100 ஸ்ட்ரீட் ரேலி எடிஷன் மாடல் யமஹாவின் இரண்டு சர்வதேச மாடல்களை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதன் இறக்கை போன்ற ஃபேரிங் வடிவமைப்பு யமஹா MT-09 மாடலை தழுவி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுவே வின்ட்ஸ்கிரீன் போன்றும் இயங்குகிறது.

    யமஹா ரே ZR ஸ்ட்ரீட் ரேலி மாடலில் 113சிசி ஏர்-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 7.1 பி.ஹெச்.பி. பவர், 8.1 என்.எம். டார்கியூ செயல்திறன் மற்றும் சி.வி.டி. கியர்பாக்ஸ் கொண்டிருக்கிறது. மற்ற அம்சங்களை பொருத்த வரை முன்பக்கம் 170 மில்லிமீட்டர் டிஸ்க் பிரேக், அலாய் வீல்கள், சீட் கீழ் 21 லிட்டர் ஸ்டோரேஜ் உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கிறது.

    இந்தியாவில் யமஹா ரே ZR ஸ்ட்ரீட் ரேலி மாடலின் விலை ரூ.57,898 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. இது ரேலி ரெட் மற்றும் ரேசிங் புளு என இருவித நிறங்களில் கிடைக்கிறது. புதிய யமஹா ரே ZR ஸ்ட்ரீட் ரேலி விற்பனை இம்மாத இறுதி வாரத்தில் இந்தியாவின் அனைத்து யமஹா விற்பனையகங்களிலும் துவங்குகிறது. #YAMAHA #Cygnus
    Next Story
    ×